தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


சனத்தார் அறியாங்க

இஞ்சி இலுமிச்சங்கா
எளங்கொடி நார்த்தங்கா-நா
எளப்பமாப் போறேண்ணு
எனத்தார் அறியாங்க
எம்பொழப்பைக் காணுங்க !
தண்ணி எலுமிச்சங்காய்
தனிக்கொடி நார்த்தங்காய்
சனத்தாரு கண்ணெதிரே
தனியாப் போனேன்னு
சனத்தார் அறியாங்க
தாம நிலை காணாங்க

குறிப்பு : எளங்கொடி,எனத்தார்,எளப்பம்-முதல் ஒலி ‘இ என்று கொள்க.

உதவியவர் : நல்லம்மாள்
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி

இடம்:
மாடகாசம்பட்டி,
சேலம் மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:01:53(இந்திய நேரம்)