தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பறச்சி-தமிழ்நாட்டு விவசாயத் தொழிலாளரில் ஒரு பிரிவினர்.

தாய் இறந்துவிட்டதால் இனிப் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும், கீழ்ச்சாதிப் பெண்களைப் போல் அடிமை வேலை செய்தால் தான் இவளுக்குப் பிழைப்புண்டு என்று இவள் கூறுகிறாள்.

அன்னா-அதோ !

சிறையிருக்க-பிறந்த வீட்டில்தான், பெரியவளான பெண், வெளிவராமல் கலியாணமாகும் வரை இருப்பாள். இதை சிறையிருத்தல் என்பர்.

முதல் அடியில் தாயின் பெருமையைச் சொல்லுகிறாள். பெருத்தா-பெருத்தவள். மூன்றாவது அடியில் தாய் பெருமையுடையவளாக, சிறப்புமிக்க ஆண் மக்களைப் பெற்றும் அவளது சவ அடக்கச் சடங்கை விமரிசையாகத் தன் சகோதரர்கள் செய்யவில்லையென்று குத்திக் காட்டுவதற்காக, தாயாரை, ‘சந்தையில் கிடந்தவள்’, ‘சத்திரம் தூத்துப் பிழைத்தவள்’ என்று இழிவாகக் கூறுகிறாள்.

ஆத்தா-சில சாதியில் தாயாரை இவ்வாறு அழைப்பதுண்டு.

தெற்கே அனுப்பி வைத்தேன்-பழந் தமிழர்கள் இறந்தவர் உயிர் தெற்கே சென்று இருப்பதாக நம்பினார்கள். இதனாலேயே உயிர்த்த முன்னோர்களை “தென்புலத்தார்” என்றார் வள்ளுவர். சைவம் பரவிய காலத்தில் கைலாசம் புனித ஸ்தலமாக கருதப்பட்டது. எனவே உயிர்கள், உடலைப் பிரிந்து வடக்கே செல்வதாகவும் கூறப்படுகிறது.

எமதூதுவர், தன் தாயார் உயிரைக் கொள்ளையிட்டதைக் கூறுகிறாள்.

பிறந்த வீட்டிற்கு வருவதிலுள்ள தடைகளையும் குறிப்பிடுகிறாள்.

சேகரித்தவர் :
குமாரி P. சொர்ண
ம்

இடம்:
சிவகிரி,நெல்லை.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:06:13(இந்திய நேரம்)