தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


சுமார் மூன்றாண்டுகளுக்கு முன் இந்நூலிற்கான கைப்பிரதிகளைப்
பார்வையிட்டனர். சிறிய அளவில் அமைய இருந்த நூலை மேலும் 
விரிவாக்கி, நன்முறையில் அமைக்க அவர்கள் பல நல்ல யோசனைகள்
கூறினர்.

இந்நூலில் குறிப்பிடப்படும் தலங்களில் பெரும்பாலானவை
இந்நூலாசிரியரால் நேரில் பார்வையிடப்பட்டவை. பல தலங்களுக்குச்
செல்லுகையில் அவருடன் சென்று அவரது பணிக்குத் துணையாக
இருந்தவர்கள் அவர் நண்பர்களான திரு. V . சுருளிநாதன், M.A., MEd.
(ஆசிரியர், M.N.U.J.N . மேல்நிலைப்பள்ளி, நாகமலை) திரு, A . சண்முகம்
(தலைமையாசிரியர், M.A.V.M.M . மேல்நிலைப்பள்ளி, மதுரை), 
திரு. A , ஆனந்தராஜ் (தமிழ்ப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை)
ஆகியோர் ஆவர்.

மதுரைத் தல வரலாறுபற்றிய கைப்பிரதிகள் முழுவதையும் 
பார்வையிட்டு, அவை செம்மையுடன் அமைய நல்ல கருத்துகளை
வழங்கியவர் டாக்டர் திரு நம்பி ஆரூரன், (தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்) ஆவார்.

பழனித் திருக்கோவில்பற்றி எழுதுவதற்காக முக்கிய ஆதார 
நூலை வழங்கியவர் இத்திருக்கோவிலின் முன்னாள் அறங்காவலர்
குழுத்தலைவராக விளங்கிய திரு P . மனோகரன் (வணிகத்தலம், 
கீழமாசி வீதி, மதுரை) ஆவார்.

இந்நூலுக்கான கைப்பிரதிகள் முழுவதையும் ஓராண்டிற்கு முன்
பார்வையிட்டு அவற்றுடன் பல கல்வெட்டுச் செய்திகளையும், 
இதர சில முக்கியக் குறிப்புகளையும் சேர்க்க உதவியவர் 
திரு. R . சதாசிவம் (வரலாற்றுத்துறை விரிவுரையாளர், அஞ்சல்வழிக்
கல்வித்துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம்) ஆவார்.
நாகர்கோவில்பற்றிய முக்கியத் தகவல்களையும், அதங்கோடு, 
ன்சிறைபற்றிய முழுத் தகவல்களையும் இவர் வழங்கியுள்ளார்.

பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோவிலைப்பற்றிய குறிப்புகள் 
செம்மையுற அமைய உதவியவர் மேற்கூறிய கோவிலைப் பற்றி ஆய்வு
நடத்தியுள்ள பேராசிரியர் திரு, V . கந்தசாமி (இந்தியப் பண்பாட்டுத்துறை,
அருள்மிகு பழனியாண்டவர்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:58:59(இந்திய நேரம்)