Primary tabs


இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீடப் பொழி கவுள்,
தறுகண் பூட்கைத் தயங்கு மணி மருங்கின்,
சிறு கண் யானையொடு பெருந் தேர் எய்தி;
யாம் அவண் நின்றும் வருதும், நீயிரும்,
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு, செல்குவிர்ஆயின்,
அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடுங் கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர,
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி,
மணி நீர் வைப்பு, மதிலொடு பெயரிய,
பனி நீர்ப் படுவின், பட்டினம் படரின்
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்குதிரை கொணர்ந்த