தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

அறிமுகம் தமிழ்ப்பெருங்களஞ்சியம்

தமிழ்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரை அலகான கணித்தமிழ்ப் பேரவை உருவாக்கிவரும் பல்துறைக் களஞ்சியமே தமிழ்ப்பெருங்களஞ்சியம் ஆகும். அனைத்துத் துறைகளிலும், தமிழ் உள்ளடக்கங்களை கலைக்களஞ்சிய வடிவில் உருவாக்குவது இத்திட்டத்தின் முதன்மைப்பணி ஆகும். இத்திட்டம் இணையப்பரப்பில் தமிழை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் விரும்பும் தன்னார்வலர்களின் உறுதுணையுடன் செயல்படுகின்றது. தமிழ்ப்பெருங்களஞ்சியத்தில் உள்ள ஆக்கங்கள், படைப்பாக்கப் பொதுமங்கள் (CC BY-SA 4.0) என்னும் உரிமத்தின் கீழ் அளிக்கப்படுகின்றன. தன்னார்வலர்கள் தங்களின் விருப்பத்துறையில் புதிய கட்டுரைகளை உருவாக்கலாம், முன்னமே உள்ள கட்டுரைகளைத் திருத்தி செம்மைப்படுத்தலாம், கட்டுரைகளுக்குப் பொருத்தமான ஒளிப்படங்கள், காணொலிகள், ஒலிக்கோப்புகள், அசைவூட்டப் படங்கள் போன்றவற்றினைச் சேர்க்கலாம்.

தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் என்பது தமிழில் அனைத்துத் துறைகளுக்கும் கலைக்களஞ்சியங்களை உருவாக்கும் திட்டம் ஆகும். இணையப்பரப்பில் தமிழை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் விரும்பும் தன்னார்வலர்களே இத்திட்டத்தின் அடிப்படை ஆவார்கள். தமிழ்ப்பெருங்களஞ்சியத்தில் உள்ள ஆக்கங்கள் படைப்பாக்கப் பொதுமங்கள் (CC BY-SA 4.0) என்னும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகின்றது. தமிழ்ப்பெருங்களஞ்சியத்திட்டத் தின் நோக்கங்கள் பின்வருமாறு,

  • 210க்கும் மேற்பட்ட துறைகளில் CC BY-SA 4.0 என்னும் உரிமத்தின் கீழ் கட்டுரைகளை உருவாக்க உறுதுணைச்செய்வது.
  • கட்டற்ற அறிவுப் பண்பாட்டை வலுப்படுத்துவது.
  • தமிழில் கட்டற்ற முறையில் அறிவுப் பரவலுக்கு வழிவகுத்து தமிழை இணையவெளியில் வலுப்படுத்துவது.

மீன்வளம்

புதுப்பிக்கபட்ட நாள் : 02-06-2017 15:10:34(இந்திய நேரம்)