﻿உள் ள ம் கு ளி ர் ந் த து
(சொற்பொழிவுகள்)
கி. வர. ஜகந்நாதன்
௮முத நிலையம் லிமிடெட்
1145, இராயப்பேட்டை ஹைரோடு, சென்னை -14

==#==
உரிமை ப Bey
அமுதம்--221
அலங்கார மாலை__19
முதற் பதிப்பு-~௩வம்பர், 1963
விலை ரூ. 3-50
நண்பர்கள் அச்சகம்
சென்னை -18

==#==
முன்னுரை
௯குணைக் கடலாகிய முருகப்பெருமான் திருவருளால் இந்தப்
புத்தகத்தோடு கக்தர் அலங்கார விரிவுரைகள் கிறைவு பெறு
கின்றன. அலங்காரம் என்ற பெயரோடு முதல் புத்தகம் மலர்ந்தது;
உள்ளம் குளிர்ந்தது என்ற பத்தொன்பதாம் புத்தகமாகிய இதனோடு
விரிவுரை முடிகிறது. ’ இனி இருபதாவது புத்தகத்தில், சுந்தரலங்
காரம் முழுவதையும் ஒருங்கே -பார்த்துத் தோன்றும். கருத்துக்
களையும், அருணூரியாருடைய சொல்லமைப்பிலும் பொருளமைப்
பிலும் . ,உள்ள சிறப்புக்களையும், அவர் சுவையாகக் . கருத்தைச்
சொல்லும் முறைகளையும், பிறவற்றையும் எழுதலாம் என்று எண்ணி
யிருக்கிறேன். ஒரு வகையில் அந்தப் புத்தகம் முழுவதும் கந்தர்
அலங்காரத்தின் ஆராய்ச்சியாக அமைய வேண்டும் என்பது
எனியேன் ஆசை. முருகன் திருவருள் சன்கு கிழைவேற்று மென்று
நம்புகிறேன்.
இந்தப் புத்தகத்தை வெளியீடுவதற்குமுன். நிகழ்ந்த துயர
நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லாமல் இருக்க ’முடியவில்லை.. 17-ஆம்
மலராகிய இரு விலங்கு என்பதன் முகவுரையில், சிறக்த அநுபூதி
மானாகிய ஸ்ரீ வடகுமரை அப்பண்ண சுவாமிகளைப் பற்றி. எழுதியிருக்
தேன். அவர்கள் மிக்க ஆர்வத்தோடு: இந்த விரிவுரைகளைப்
படித்து இன்புற்று ஆசி கூறுவார்கள்); . வாயார வா ற்த்துவார்கள்.
ஆகவே இந்த வரிசை நிறைவேறுவது கண்டு மிகவும் ஆனந்தம்
அடைவார்கள் என்று கம்பியிருக்தேன். ஆனால் இறைவன் தரு
வுள்ளம் வேறுக இருக்கிறது. அவர்கள் சென்ற 1962.ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி இறைவனோடு இரண்டறக்
கலந்தார்கள்.
சல்ல பாட்டு, நல்ல. உரை, மல்ல பண்டம் ஆகியவற்றில், அவர்
களுக்கு ஈடுபாடு அதிகம், எல்லோரிடமும் எளிமையாகப். பழகும்
அவர்களிடம் குழந்தைத். தன்மை மலர்க்திருச்தது.”’ எத்தனை
சமயங்களில் வஞ்சகமின்றி, .” இந்த விளக்கம் அருமையாக இருக்

==#==
iv
கிறது ”, ” இக்த உவமை அற்புதமாக இருக்கிறது”, ” இந்த
நுட்பத்தை மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் ” என்று
பாராட்டிப் பேசுவார்கள் 1 எழுதுவார்கள்! அருளநுபவத்தில்
குனிந்த அவர்கள் அருள்மயமாக விளங்கினார்கள். சோதியை
உள்ளே. வைத்து வழிபட்ட அவர்கள், *’ ஓங்காரத்து உள்ஒளிக்
குள்ளே முருகன் உருவங் கண்டு தூங்கார் ”என்பதைக் கேட்டால்
போதும்} தம்மை மறந்து அமர்ந்து விடுவார்கள். சிலசமயம்
அலங்காரப் பாடல்களைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் சொரி
வார்கள். திடீரென்று எதையோ கண்டவர்கள் போல வாய்விட்டு
ஹஹ்ஹஹ்ஹா என்று சிரிப்பார்கள். அந்த மாதிரிச் சிரிப்பை
எங்கும் கேட்க முடியாது. அவர்கள் உள்ளத்தில் படர்ந்த ஒளி
அவர்களுடைய கண் வழியே சடர்வீடும். அந்தக் கண்களைக்
கண்டு அடிமையானவர் பலர். கவிமணி தேசிகவிராயகம்பிள்ளை
யவர்கள் அவர்களுடைய குழந்தைத் தன்மையைக் கண்டு சில
கீர்த்தனங்களைப் பாடித் தந்திருக்கிறார். கவியுள்ளம் அறிந்து இன்
புறும் ஆற்றல் அவர்களிடம் பொருக்தியிருக்த து. வண்டின் ரீங்காரம்,
குயிலின் இன்னிசை, பறவைகளின் ஒலி இவற்றைக் கூர்ந்து
கவனித்து இன்புறுவார்கள்,. அழக©ய மலரும் அழகிய வானமும்
அவர்களுடைய உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். அவற்றிலே
இறையொனியைக் கண்டு கூத்தாடுவார்கள்.
அவர்கள் இவ்யப் பிரபந்தப் பாடல்களை இசையுடன் சொல்லிக்
கேட்டவர்களும், அபிராமி அந்தாதியை உரத்த குரலோடு
உலகன்ளையீடம் முறையீடுவதைப் போலவே எண்ணிப் பாடு
வதைக் கேட்டவர்களும் அந்தக் குரலில் இழைக்த உணர்ச்சியை
உணர்க்து தாமும் அந்த உணர்ச்சியிலே கரைவார்கள், அந்த
உணர்ச்சியை ரசிகருடைய உணர்ச்சியென்று சொல்வதா ? அழ
குணர்ச்சி என்பதா ? அருளுணர்ச்சி என்பதா?
ஒன்றை சல்லதென்று எண்ணினால் அதை வாயாரப் பாராட்டும்
வள்ளலாக அவர்கள் விளங்கினார்கள்.  கல்லதை சல்லதென்று:
சொல்லத் தியங்கும் லோபத் தன்மை அவர்களிடம் அணுவளவும்
இல்லை; ல்ல பாட்டைக் கண்டால் அதைச் சுவைத்துச் சுவைத்துத்
தாம். snags முறையைச் சொல்வார்கள்) கடிதத்தில்,
எழுதுவார்கள்:

==#==
இப்போது?
இதுதான் உலகம் !
இந்தப் புத்தகத்தைக் காண அவர்கள் இல்லை. பாடல்களின்
விளக்கவுரைகள் முடிந்ததற்காக வாழ்த்துக் கூற அவர்கள் இல்லை,
ஆனாலும் எளியேனுடைய உள்ளத்தில் அவர்கள் இருக்கத்தான்
இருக்கிறார்கள். இதோ அவர்கள் sar@enef சுடர் வீசுகிறது.
இதோ அவர்கள் சிரிப்பொலி கேட்கிறது. ஆம்! அவர்கள் ஆசி
எப்போதும் என் உள்ளத்தை கிறைவாக்கி வைக்கும்: என்பதில்
ஐயம் இல்லை,
%
௯ந்தர் அலங்காரம் நூறு என்ற வரையறை இருக்தாலும்
ஏட்டூச்சுவடிகளில் அதிகமாக ஆறு பாடல்கள் கிடைத்தனவென்று
இந்நூலை முதலில் அச்சிட்ட கராலம்தொடங்கியே சொல்லி அவற்
றையும் சேர்த்தே பதிப்பித்து வந்திருக்கிறார்கள். இந்த ஆறு
பாடல்களின் சொற்பொருளமைதி, இவையும் அருணகிரியார்
வாக்கு என்பதைப் புலப்படுத்துகின்றன. இவற்றின் விளக்கச்
சொற்பொழிவுகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. நூறு பாடல்கள்
ஆனவுடன் காணப்படும் பயனுக்கு, இந்த ஆறு பாடல்களுக்குப்
பின்னே . விளக்கம் கூறியிருக்கிறேன். காப்பு, நூல், அதிகப்
பாடல்கள், பயன் ஆகிய எல்லாம் சேர்ந்து ஓர் அழ்கிய கணக்காக
அமைந்திருக்கின்றன. நூற்றெட்டுப் பாடல்களாக இருப்பது
பாராயணம் செய்பவர்களுக்கு அஷ்டோத்தர சத நாமங்களை
நினைவூட்டும் அல்லவா ?
ங்
பயனைத்தவிர மற்ற ஆறு பாடல்களில் மூன்று முன்னிலைப்
பரவலாகவும் மூன்று படர்க்கைப் பரவலாகவும் உள்ளன. முருகன்
திருவுருவம் உள்ளத்தில் குதி கொண்டதை ஒரு பாடலும் (1), அத்
தோற்றமே ’எந்த இடத்திலும் வெளியே தோற்றுவதை ஒரு
யாடலும் (8) சொல்கின்றன. ,
”இல்லிடத்தீல்

==#==
vi
பச்சைமயில் வாகளமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும்_கச்சைத்
திருவரையும் சீறடியும் செய்கையும் ஈரா
pose of Puy td மாமுகங்கள் ஆறும்--விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர் தோன்ற **
என்று கந்தம் கல்வெணியாவில் - குமரகுருபரர் விண்ணப்பித்துக்
கொள்கிறார். அருணகிரி மாதரோ, ”எங்கே கிளைப்பீனும் அங்கே
என் முன் வந்து எதிர் கிற்பனே” என்று அந்த அநுபவம் தமக்
குக் கைவந்ததென்று சொல்கிறார். யமன் வந்தாலும் அஞ்சாமல்
கிற்கும் உறுதிப்பாடு தமக்கு இருப்பதை ஒரு பாட்டில் சொல்
கரூர் (6.) அந்தப் பாடல் இறுதிப்பாடலாக அமைநக்திருப்பது
ஒரு . வகையில் பொருத்தமாக இருக்கிறது, . இப்படி முன்று.
பாடல்கள் அருணகிரீகாதர் பெற்ற உயர்ந்த அநுபவத்தைப்
பேசுகின்றன (1, 3, 6.) மற்ற மூன்று பாடல்கள் மமக்காகப் பாடி
யவை: மாம் இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்ளவேண்டி
௰வை. இராப்பகல் அற்ற இடம் காட்டி அருள வேண்டும்’,
”ஆவிக்கு மோசம் வரும் என்பதை உணர்ந்து மீன் திருவடியைச்
சேவிக்க வேண்டும்’, ’உள்ளத்துயரை ஒழித்தருள வேண்டும்’
என்று அந்த மூன்று பாடல்களிலும் மூன்று வகை வேண்டுகோள்
கள் இருக்கின்றன (2, 4, 5.)
முருகன் திருவடியில் தண்டையும் சிலம்பும் ஒளிர்கின்றன.
குராமலரையும் அத் திருவடிகள் யுனைக்திருக்கின்றன. அவை அருள்
மயமாக உள்ளன. அவனுடைய தடம்புயங்கள் ஆறிரண்டிலும்
கடம்பமாலை புரள்கின்றது. அந்தப் பன்னிரு தோள்களும்
வரிசையாக இருபக்கங்களிலும் இருக்கின்றன. அவனுடைய
திருக்கை ஒன்று அபயத்தைக் காட்டுகிறது. ஒருகை லேலைப் பற்றி
யிருக்கிறது. அந்த வேல் மலையை ஊடுருவப் பொருத வடிவேல்;
பராக்ரமவேல்; சிவந்த கிறம் வாய்ந்த சினவடிவேல், sag
டைய திருமுகங்கள். ஆறும் மணம் வீசுகின்றன. கண்கள்
தாமரை மலரைப் போல விளங்குகின் றன.
முருகன் குருவடிவாய் வருகிறவன்} திருமால் மெச்சும் , வீரம்
உடையவன்; கிருதசங்கார பயங்கரன்; சேவல் கொடி உடைய:

==#==
vii
aes; அமரசிகாமணி; . வீரமுடைய Ceraser; வள்ளிக்கு
வாய்த்தவன்; மயிலேறிய மாணிக்கம்; சிவ குமாரன்; ஆறுமுக
வன்டி நம்பினவருக்கு மெய்த்துணையாக வருபவன்,
இந்தப் பாடல்களில் திருச்செங்கோடு, திருத்தணிகை,
திருச்செந்தில் என்னும் மூன்று தலங்களைப்பற்றிய செய்திகள்
வருகின் றன . பதுமமலர் வாசளையையும் முத்துக்களையும்
சொரியும் காட்சியைத் திருச்செங்கோட்டில் வைத்துக் காட்டு
கிறார். திருத்தணிமாமலையில் வாவித் தடவயல் சூழ்க்திருப்பதைச்
சொல்கிறார். திருச்செந்தூர்க் கடல் ஒரு கோடி முத்தம் தெள்ளிக்
கொழிப்பதைப் பாடுகிறார்.
திருமால்  கசேந்திரன் அழைக்க முதலையைக் கொன்று
அதற்கு அருள் செய்தவராக மிற்கிறுர். சிவ பெருமான் கடல்
மீது எழுக்த ஆலம் குடித்த பெருமானாக விளங்குகிறார்.
பயபக்தி என்ற தொடருக்குப் பொருள் விளக்குவது போல
அமைந்திருக்கிறது. ”ஆவிக்கு மோசம் வருமா றறீந்துள் அருட்
பதங்கள், சேவிக்க என்று கிளைக்கின் நிலேன்” என்பது,
*’திருவடியும் தண்டையும்” என்று தொடங்கும் பாடல் முருகனை
உள்ளக்கிழியில் உருவெழுதிப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில்
அமைந்திருக்கிறது. ஈம் உள்ளத்துக்கு உறுதியை ஊட்டி அஞ்சா
மையை ஒழிக்கும் மந்திரமாக விளங்குகிறது, ”குலம் பிடித்து”
என்று வரும் பாடல்.
*
வழக்கம் போல இந்தப் பாடல்களை வைத்துக்கொண்டு
உரையாற்றும் போது சுருதி, »க்தி, அநுபவம் என்ற மூன்றையும்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். பழைய அருளாளர்களின்
இருவாக்குகள், பல நுட்பங்களை விளக்க ஒப்புமையாக வந்து உதவு
கின்றன. உலகவாழ்வில் நாம் சுண்ட அறுபவங்களிலிருந்து
கூத்து »க்தியினுல் பல செய்திகளை உணர முடிகிறது. அத்த
கைய இடங்களில் உவமைகளும் உதாரணங்களும் கருத்துக்களை த்
தெரிக்துகொள்ள உதவியாக இருக்கின்றன. முருகளை நம்பி
வாழும் எளியேன் வாழ்வில் பெற்ற சில அநுபவங்களை இடையிலே

==#==
Viii
சொல்லிச் சில குருத்துக்களை விளக்க முயன்றிருக்கிறேன்.
இந்தப் பத்தொன்பது புத்தகங்களில் நூற்றெட்டுப் பாடல்
கனின் விரிவுரையும் கிறைவேற அருள் பாலித்த சண்முகசதன்
கருணையை என்னென்பது ! அருணூரியாருடைய அருள் வாக்குத்
தொட்ட தொட்ட இடமெல்லாம் இனிப்பது, அவர் பாடிய
பாடல்களின் ஆழம் முழுவதையும் காணமுடியுமா ? முழுவதும்
கண்டால் சொல்லத்தான் முடியுமா ? *
”அவ்வா றறிவார் அறிகின் றதலால்
எவ்வா நெருவர்க் கிசைவிப் பது வே”!
என்று கரைந்து மிற்கத்தான் தோன்றும்.
இவற்றை உருவாக்கியதற்குத் துணையாக இருந்தவர் அன்பர்
சிரஞ்சீவி அளந்தன்; = புத்தசுமாக்க உதவியவர் அன்பர்
ஸ்ரீ ரா. ஸ்ரீ. Gama அவர்கள். இந்த இருவருடைய உதவியையும்
ஏளியேன் பெற வைத்தது ஆண்டவன் அருள். அந்த அருள்
வாழ்க 1
கி. வா. ஜகந்நாதன்
11168
**காச்தமலை!?
சென்னை 2 8 }

==#==
உள்ளுறை
1. உள்ளம் குளிர்ந்தது 1—22
உண்டமுக தரிசனம் ve 1
உருவமும் பாடலும் 2
குருவின் பெருமை .- &
அழுபவமும் குருவும் <<< 5
தெய்வீகக் குருகாதர் += 7
குமர குருபரன் <= 8
உள்ளம் குளிர்தல் 8
திருவடி 9
தண்டையும் சிலம்பும் ப 10
வடிவேல் . 12
கிரெஞ்ச வதம் >= 18
பழைய வரலாறு . 18 -
கடம்பும் தடம்புயமும் + 16
ஆறுமுகம் 19
கண்கள் 19
குருவடிவு 20
2. இராப்பகல் அற்ற இடம் 2845
அதுபவமும் கருணையும் + 28
தீராசின் நிலை , * 24
சுவரும் சித்திரமும் ++ 25
சுகமும் துக்கமும் . +.+ 26
BO aa» oes 26
அக இருளும் புற இருளும் .. -- 28
மூன்று மனமிலை tee 29
சினிமாவும் மனநிலையும் ae 30
கானல் உவமை .* 81
மெய்யும் பொய்யும் -= 32

==#==
அறிவும் அறியாமையும் .. 82
இரண்டு விதத் தடை 33
தூக்கம் 34
சகல கேவலம் அற்ற மலை * 35
துதித்தல் ++ 35
பற்றுக்கோடு aes 36
தாள் அருளாய் ஃ 37
இருமால் முருகனைப் புகழ்தல் 88
இருமாலின் பெருமை ae 39
கசேக்திரன் வரலாறு $ 41
படியின்மேற் படி 48
பராக்கிரமம் 48
கிருத சங்கார பயங்கரன் 44
3. கண்ணாரக் காணும் காட்சி 46--62
புறத்தோற்றமும் அகத்தோற்றமும் .. 46
உருவெளித் தோற்றம் <-- 48
மனோபாவம் ” 46
இராமாயணக் காட்சி ஃ 49
அருணூரியார் அறுபவம் an 50
மூன்று மிலை aes 51
கனவுக் காட்சி aes 52
லீங்கமும் வேலும் vee 58
திருமுசும் முதலியன vee 56
செங்கோட்டு வேலன் wee 56
கவிஞர் கற்பனை - oie 56
அபிராமிபட்டர் அநுபவம் <- 57
அறுபவம் வர வழி ல 59
பிடித்த படமும் காட்டும் படமும் vos 60
4. பயபக்தி 68—75
பயம் ஓரிடம் பக்தி வேறு இடம் -+ 68
மரண பயம் wee 64

==#==
5.
அறிவும் உணர்வும்
என்று வருமோ?
ஆவிக்கு மோசம்
முன்னை விளை
இருத்தணி
துவஜம் கட்டினவன்
இருதலைக் கொள்ளி எறும்பு
வாழ்க்கைச் சித்திரம்
நட்டும் பகையும் ’
பற்றின்றி வாழ்தல்
பற்றினால் அமைதியின்மை
இருதலைக்கொள்ளி எறும்பு
முத்தொள்ளாயிரப் பாடல்
மணிவாசகர் வாக்கு
அருணகிரியார் பாடல்
இருதலை
தர்ம சங்கடங்கள்
பல இரட்டைகள்
பற்று சீங்க வழி
இருச்செந்தூர்
-சேவகளன் .
மர்ணீக்கம்
மெய்த்துணை
அஞ்சாமையும் அச்சமும்
மரணம்
அஞ்சாமைப் பயிற்சி
அருணூநியார் செய்த உபகாரம்
மனஇயல் அறிஞர் கருத்து
காலன்
அஞ்சாமைக்குக் காரணம்
ஆலம் குடித்த பெருமான்
69
71
72
78
76—82
76
76
17
78
80
81
82
88
88
85
88
87
88
90
91
28108
98
94
95
86 ’
97
98
100
200

==#==
xii
அறுமுகவன்
வேலும் கையும்
பயன்
வாக்கினால் வரும் குற்றம்
வாக்கின் பெருமை
பெரியவர்கள் திருவாக்கு
திருவாக்கின் பயன்
அலங்காரத்தின் பயன்
மூன்று வகைப் பயன்
சமக்குப் பயன்
அருணகிரியார் கால கலை
வேக்தரால் வரும் அச்சம்
மரண பயம்
ஈரகத் துன்பம்
கோயால வரும் துன்பம்
விலங்கின் அச்சம்
கற்று அறிந்தவர்
’ ஒரு கவி
முடிக்த பயன்
அபய வரதம்
உண்மை நிகழ்ச்சி
வாழ்வில் அமையும் பயன்
101
101
104—182
104.
104
106
106
108
108
110
110
111
112
118
114
116
116
118
119
120
122
130

==#==
உள்ளம் குளிர்ந்தது
கீந்தர்அலங்காரம் நூறு பாடல்களை உடையது என்று
அதன் நூற்பயன் சொல்கிறது. ஆனாலும் மேலே ஆறு
பாடல்கள் குந்தர் அலங்காரப் பிரதிகளில் சேர்ந்தே
எழுதப்பட்டிருக்கின்றன. அந்தப் பாடல்களின் சொல்
லமைப்பு, பொருள் அமைப்பு முதலியவற்றைப் பார்த்தால்
அவைகளும் அருணகிரியாரின் திருவாக்கு என்று தோன்று
கிறது.; கந்தர் அலங்காரத்தோடு சேர்த்து அந்தப்
பாடல்களையும் பாராயணம் பண்ணுவது தமிழ் நாட்டில்
வழக்கமாக இருக்கிறது. இதுவரையில் சாம் கந்தர்
அலங்காரம் நூறு பாடல்களைப் பார்த்தோம். இனிமேல்,
பொங்கி வழிந்து ததும்பும் ஆறு பாடல்களையும் பார்த்து
வீட்டு, பிறகு சடைசியில் உள்ள நூற்பயனைப் பார்க்க
லாம் என்று நினைக்கிறேன்.
உண்டமுக தரிசனம்
இப்போது பார்க்கப் போகிற பாட்டு ஒரு வகையில்
நமக்கு இடையமுது வழிகாட்டும் பாட்டு. இறைவனுடைய
திருவருளில் ஈடுபடுகிற முயற்சி நம்மிடத்தில் இருக்க
வேண்டும். எத்தனைதான் சாம் உடம்பினுல் வணங்கி
வாயினால் பேசினாலும், மனம் இறைவனுடைய வசம்
ஆகாதவரையில் அறுபவம் என்பது துளியும் கிடைக்காது.

==#==
a உள்ளம் குளிர்ந்தது
கண் முதலிய இந்திரியங்களால் இறைவனுடைய திருத்
தொண்டுகளில் ஈடுபடுவதன் பயன், sb மனம்
அவனோடு ஒன்றுபடுவதுதான். இறைவனை மனத்தில்
நினைப்பதைத் தியானம் என்று சொல்வார்கள். உள்
முகத்தில் தியானம் பண்ணப் பண்ண werGerref
உண்டாகும். புறத்தில் லட்ச தீபம் போட்டுக் கண்டாலும்
அதனால் அப்போதைக்கு ஒரு கிளுகிளுப்பு உண்டாகுமே
யன்றித் தனித்துக் கண் மூடிக் கண்டால் இருட்டுத்தான்
உண்டாகும். கூட்டத்தில் கூடி ரின்று இறைவனைக்
காணும்போது சிறிது கண்மூடி அவன் உருவத்தை
உள்ளே காணப் பயிலவேண்டும். அப்பால் உள்ளத்
தில் அவன் உருவத்தைத் தனித்து இருந்து காணப்
பழகினால் உள்ளனொனியைத் தரிசித்து அதனிடையே
இறைவன் திருவுருவத்தை காணலாம். இப்படிப் பல
காலம் பயிற்சி செய்தாலன்றிக் கண்ணை முடியவுடன்
இறைவன் திருவுருவம் காண முடியாது. உள்முகமாக
இறைவன் திருவுருவத்தைப் பார்ப்பதுதான் இறைவனோடு
நாம் ஒன்றுபட வழியாகும். அதற்காகவே ஆண்டவனை
உருவம் உடையவனாகத் தியானிக்கிறோம். மனம் ஏதை
யாவது நினைக்க வேண்டுமானால் அதற்கு ஏதேனும்
உருவம் இருக்கவேண்டும். உருவம் இல்லாத பொருளை
மனம் பற்றிக்கொள்ள இயலாது. ஆண்டவன் பல
வடிவங்களை எடுத்துக்கொண்டு அருள் செய்வதற்குக்
காரணம், அடியார்கள் மனத்தில் புகவேண்டும் என்பது
தான்.
உருவமும் பாடலும்
அருணகிறியார் முருகனுக்கு அன்பு செய்து அவனு
டைய திருவுருவத்தை ஈன்கு தரிசித்தவர். வெளியே தரி
சித்த திருவுருவத்தை, உள்ளே கண்டு அதன் பெருமையை
உணர்ந்து இன்புற்றவர். நாம் அந்த நிலையை அடைய

==#==
உள்ளம் குவிர்ந்தது 8
வேண்டுமானால் மெல்ல மெல்லக் சாதனை செய்து பயிற்
பெறவேண்டும். இறைவனுடைய திருவுருவத்தை ஈன்முக
உள்ளத்தில் உணர வேண்டும். அப்படி உணர்வதற்கு
நமக்கு உபயோகமாக இருப்பவை இரண்டு பொருள்கள்.
ஓன்று இறைவனுடைய திருவுருவம்; மற்றொன்று அந்தத்
இருவுருவத்தைப் பற்றிச் சொல்லும் பாடல். ஒரு
குழந்தையைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தால்
அந்தச் குழந்தையின் உருவம் ஈம் மனத்தில் பதியும்.
குழந்தை ஊருக்குப் போய் இருக்கும்போது அதனை
நினைத்தால் அதன் உருவம் உள்ளத்தில் வரும், அதுபோல்
இறைவனுடைய உருவங்களைக் கோயில்களில் பார்க்கி
நோம்} படத்தில் பார்க்கிறோம். அவற்றை எல்லாம்
நெஞ்சில் நிறுத்திக் கண் மூடித் தியானம் செய்து பழகி
யிருக்கிறோம். அந்த உருவம் உள்ளத்தில் நன்கு பதிந்து
நிற்க, திருப்பித் திருப்பி அந்த உருவத்தை உள்ளத்தில்
கொண்டுவந்து நிறுத்த முயலவேண்டும். பெரியவர்க
HMw பாடல்களில் ஆண்டவனுடைய திருவுருவத்தை
வருணிக்கும். இடங்களை நினைவுபடுத்திக்கொண்டு, அவற்
நைச் சொல்லிக்கொண்டே. வந்தால் அப்போது ஆண்டவ
னுடைய வடிவத்தை உள்ளத்தில் ஓரளவு பதித்துக்
கொள்ளலாம்.
மந்திர உபதேசம் செய்து கொள்கிறெவர்கள் அந்த
மந்திரத்தின் தேவதையைத் தியானம் செய்வதற்கு
உதவியாக ஒரு சுலோகம் இருக்கும். அதைத் தியான
அலோகம் என்று சொல்வார்கள். மந்திரம் எந்த
மூர்த்தியைக் குறிக்கிறதோ அந்த மூர்த்தியின் உரு
வத்தைத் தியான சுலோகம் வருணிக்கும்; தியான சலோ
சத்தைச் சொல்லிக்கொண்டு அந்த வடிவத்தை மெல்ல
மெல்ல உள்ளத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்,
அப்படிப் பதித்துக் கொண்டு மந்திரத்தை ஜபித்தால்
மெல்ல மெல்ல ஒளி பரவி அந்தத் திருவுருவமும் ஒருவாறு:

==#==
# உள்ளம் குளிர்ந்தது
உள்ளத்தே நிலை கொள்ளத் தொடங்கும். இந்த அநுப
வத்தில் வல்லவராகிய அருணகிரியார் தம்முடைய அநுபவம்
ஈமக்கும் வரவேண்டுமென்,ற கருணையினால் நமக்கு வழி
காட்டத் தொடங்குகிறார்.
அருணகரிராதர் முருகனைக் குருவாகக் கொண்டவர்.
முருகன் குருவாய் எழுந்தருளி அவ்வப்போது அவருடைய
பக்குவத்திற்கு ஏற்றபடி பல்வேறு உபதேசங்கள்
செய்தான் என்பதை அவருடைய பாடல்கள் நமக்குக்
காட்டுகின்றன.
குருவின் பெருமை
எந்தக் காரியமானாலும் குரு இல்லாமல் கைகூடாது.
வித்தியாகுரு, ஞானகுரு என்று குருமாதர்களை இரண்டு
விதமாகப் பிரீப்பார்கள். ஈல் வி யை க் குற்பிக்கும்
ஆசிரியரை வித்தியா குரு என்றும், ஞான உபதேசம் செய்
கின்றவரை ஞானகுரு என்றும் சொல்வது வழக்கம். கல்வி
கற்பிக்கும் ஆசிரியர்கள் எப்படி வெவ்வேறாக இருக்கிறார்
களோ, அதுமாதிரியே ஞானஉபதேசம் செய்யும் குருமார்
களும் படிப்படியாகப் பலர் இருப்பது உண்டு, பழைய
காலத்தில் ஒரே ஆசிரியரிடம் எல்லா நூல்களையும் குற்றுக்
கொள்ளும் வழக்கம் இருந்தது. அதேபோல் ஒரு ஞான
குருவை அண்டி ஈல்லுபதேசம் பெற்றுச் சாதனம் செய்து
அதனால் அறுபவம் பெற்றவர்கள் பலர். -
இறைவனுடைய திருவருளைப் பெற விரும்பு:
கிறவர்கள் அதற்கு முன்பு கு ௫ ஈர தனு டை ய
திருவருளைப் பெற வேண்டும். - குருராதன் அருள்
இல்லாமல் இறைவன் அருள் கிட்டாது. சூரிய காந்த
மும், சூரியன் ஒளியும், பஞ்சும் சேரும்போது சூரிய காந்தம்
பஞ்சைச் ௬ட்டுவீடுகிறது. . சூரிய காந்தத்திற்குப்
பஞ்சைச் சுடும் ஆற்றல் இருந்தாலும் சூரீயனுடைய சந்நிதி
யில்தான் அது சுடும். வீட்டுக்குள்ளே பஞ்சை வைத்
லுக் கொண்டு அதற்கு அருகில் மணிக்கணக்காகப் பூதக்.

==#==
உள்ளம் குளிர்ந்தது 5
கண்ணாடியை வைத்தாலும் அது ௬டாது. இறைவன்
ஆரு யி ர் சுளு க்கு அருள் செய்கிறான். பாசத்தை
கீக்கி என்றும் பொன்றுத பேற்றை அருளுகிறான். ஆயி
னும் குருராதனுடைய கிருபையினால்தான் ஆன்மாச்கள்
இறைவனுடைய திருவருளைப் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும். சூரியனுடைய சதூர்களால் சூரிய குரந்தத்தின்
ஆற்றல் பஞ்சை எரிப்பதற்குப் பயன்படுவது போல், குரு
நாதனுடைய உபதேசத்தால் இறைவனுடைய திருவருள்
ஆன்மாக்களுக்குப் பலீக்கிறது.
அறுபவமும் குருவும்
அநுபவம் உடையவர்கள் குருசாதர் ஆகிருர்கள்.
அநுபவம் என்பது காலத்தினால் முதிர்வது. மனீதன் வளர
வளர அவனுடைய அநுபவம் மீகுதியாகிறது. மனித
வாழ்க்கையில் ஒரு காலம் வரையில் வளர்ச்சியும், அப்பால்
இளர்க்கியும் உடலுக்கு உண்டாகும். ஆனால் அறிவுக்கோ
சாளாச கசாளாக வளர்ச்கியே உண்டாகிறது. இளமை
உடையவர்களிடத்தில் பலமும், :- முதுமை உடையவர்சு
விடத்தில் அறிவும் சிறந்து நிற்கும், பிராயத்தில் முதிர்ந்த
வர்களாக மாத்திரம் இருப்பதில் பயன் இல்லை; அறிவிலும்
முதிர்ந்தவர்களாகவேண்டும். அதனால் வயோ விருத்தர்,
ஞான விருத்தர் என்று இருவேறு வகையாகச் சொல்வது
வழக்கம். சிறிய பிள்ளையாக இருந்தாலும் ஞானத்தில்’
கிறக்திழுந்தால் அவன் கும்பிடத் தகுந்தவன்.
பொதுவாக ஆசிரியர்களாக இருப்பவர்கள் மாணாக்கர்
களைவீட வயசு முதிர்ந்தவர்களாக இருப்பது உலக வழக்
கம். பல காலம் கல்வித் துறையில் ஈடுபட்டுப் பலவற்றைத்
தெரிந்து கொண்டு ஞான அறுபவத்தைப் பெற்ற பிறகே
மற்றவர்களுக்குப் போதிக்கும் ஆற்றலைப் பெறுகிறுர்கள்
ஆகிரியர்கள். அதனால் பிறருக்குப் பயிற்றுவிக்கும் தகுதி
யைப் பெறுவதற்குப் பலகாலம் ஆகிறது. அவர்கள் பெரிய

==#==
6 உள்ளம் குளிர்ந்தது
வர்களாக, வயதில் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்,
சில துறைகளில் வயசானவர்களே கிறப்படைவார்கள்.
காரணம்: வெறும் படிப்பு மாத்திரம் போதாது: அநுபவம்
உடையவராக இருக்க வேண்டுமென்பதுதான். பால
ஜோஸ்யன், விருத்த வைத்தியன் என்ற பழமொழியுண்டு.
நீண்டகால அநுபவம் உடைய வைத்தியர்கள் மருந்து
கொடுத்தால் நோயாளிக்கு நன்மை உண்டாகும். வெறும்
வைத்திய நூல் படிப்பு மாத்திரம் இருந்தால் அவனால்
சன்மை உண்டாகாது. ஆகையால், கல்வி அறிவோடு
அறுபவம் வேண்டுமென்று கருதி விருத்த வைத்தியனாக
இருக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
உடலுக்கு வரும் ரோயைத் தீர்ப்பதற்கு அநுபவ
முதிர்ச்சி இருக்கவேண்டும் என்று சொன்னால், அதைவிட
அவசியம் உள்ளத்தின் கோயைத் தீர்ப்பதற்குரிய தகுதி.
உள்ள மயக்கத்தை நீக்கி ஞானத் தெளிவு அடையச்
செய்யும் ஆசிரியர்கள் பல காலம் பல நூல்களைப் பயின்று,
பலர் வாயிலாகக் கேள்வி பெற்று, பல சாதனைகளைப்
புரிந்து, தம்முடைய அறுபவத்திலும் வளர்ச்சி பெற்றிருக்க
வேண்டும், கல்வி, கேள்வி ஆகிய இரண்டும் அறுபவத்
தினால்தான் நிறைவு பெறும், கல்வி, கேள்வி இல்லாத
வர்களும் அநுபவத்தினால் சிறந்து நிற்பதைப் பார்க்
கிறோம். மகா ஞானியாகத் திகழ்ந்த இராமூருஷ்ண
பரமஹம்சர் கல்வி கேள்வி மிக்கவர் அல்லர், ஆயினும்
அவருடைய அற்புதமான உபதேசங்கள் வேதாந்த
உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
அவை அறுபவத்தால் உணர்ந்தவை.
ஆகவே ஞானோபதேசத்திற்கு அடிப்படையாக நிற்பது
அநுபவம். அந்த அநுபவம் எளிதில் மனீதனுக்கு வராது
பலகாலம் சாதனம் செய்து இடையிலே வரும் தடைகளை
வென்று வென்று தெளிவு பெற்று அப்பால் பெறவேண்டும்.

==#==
உள்ளம் குளிர்ந்தது 7
அறுபவம் பெருதவர்கள் குருவாக இருந்தால் மாணாக்கர்
களுக்கு ஐயம் ரீகழும்போது அதைத் தீர்க்கும் வன்மை
அவர்களுக்கு இராது, அநுபவம் உள்ளவர்களாலேயே
எல்லா வகையான ஜயத்தையும் போக்க முடியும்.
அநுபவம் என்பது பல கால முயற்சியின் பயனாக வருவது.
அதனால் சிறந்த ஆசிரியர்கள் பலகாலம் சாதனை செய்த
வர்களாக, வயசில் மிகுந்தவர்களாக இருப்பது
இயற்கை.
தெய்விகக் குருநாதர்
இது உலக இயலோடு ஓட்டிய குருமார்களுக்கு
அமைந்தது. ஆனால் தெய்வீகக் குருராதர்களுக்கு இந்த
விதி ஓவ்வாது. தட்சிணாமூர்த்தியைக் குருமூர்த்தி என்று :
சொல்வார்கள். பொதுவாகக் குரு என்று சொன்னால்
அது தட்சிணாமூர்த்தியைத்தான் குறிக்கும். குருநாதன்
என்னும்போது அது மேலான குருவாகிய முருகப்
பெருமானைக் குறிக்கும். தட்சிணாமூர்த்தியைப்பற்றி ஒரு
சுலோகம் வட மொழியில் உண்டு. ” ஆல மரத்தினடியில்
Csr Gants திருமுகத்துடன் தென்முகக் கடவுள்
வீற்றிருக்கிறுர். அவருக்குக் கீழ் நான்கு மானுக்கர்கள்
அமர்ந்திருக்கிறார்கள். என்ன ஆச்சரியம்.! குருநாதர்
இளையவராக இருக்கிறார்; மாணாக்கர்கள் கிழவர்களாக
இருக்கிறார்கள்!’ என்று அந்தச் சுலோகம் சொல்கிறது.
உலக இயலுக்கு மேற்பட்ட அநுபலத்தில் சிறந்த முனி
வர்கள் மாணுக்கர்களாகவும் இளமையுடைய தட்சிணா
மூர்த்தி குருகாதனாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
தோற்றத்தில் தட்சிணாமூர்த்தி இளமை உடையவரானா
லும் அவர் காலம் கடந்த பேராளர், அவர் தோற்றத்
தில் இளமையுடையவர்; அகராதி காலமாக இளமையோடு
இருக்கிறவர் அவர்.

==#==
8 உள்ளம் குளிர்ந்தது
குமர குருபரன்
அத்தகையவனே முருகப் பெருமானும். அவன் பின்னும்
இளமையுடையவன். சின்னஞ்சிறு வடிவுடன் மெய்ஞ்ஞான
உபதேசம் செய்கின்ற குருமூர்த்தி. குருநாதர்களுக்குள்
சிறந்த குருகாதன், ஆகையால் அவனைக் குருபரன் என்று
சொல்வார்கள். பரன் என்பது மேலானவன் என்னும்
பொருளை உடையது. எல்லாக்’ குருநாதர்களுக்கும்
மேலான குருநாதனாகையால் அவன் அந்தத் திருகாமத்தைப்
பெற்றான். குமர குருபரன் என்று நாம் அடிக்கடி கேள்
லிப் பட்டிருக்கிறோம். அந்தக் குமர குருபரனே அருண
கிரியாருக்கு உபதேசம் செய்தான். பிராயத்தில் முதிர்ந்த
குருமாதர்கள் நிதானமாக மெல்ல மெல்ல உபதேசம் செய்
வார்கள், அவர்கள் மானணாக்கனை நோக்கி வரும்போது
நிதானமாக வருவார்கள். இங்கே குழந்தைக் குருமா தனாகிய
முருகன் அருணகிரியார் திருவுள்ளத்தில் கருணை வேகத்
தோடு வந்து குதித்தானாம். அவனுடைய திருவுருவம்
எளிதிலே உள்ளத்தில் வந்து ரின் றதாம்.
குருவ்டிவாய் வந்து என் உள்ளம்
குளிரக் குதிகொண்டவே
என்று பாடுகிறார்.
உள்ளம் குளிர்தல்
முருகப் பெருமானுடைய உருவம் திருவுள்ளத்தில்
வந்து நின் றவுடன் மனத்தில் ஒரு குளிர்ச்சி உண்டாயிற்று.
மழை பெய்தால் உடனே வெப்பம் மாறிக் குளிர்ச்சி
உண்டாவது போல், கருணையே உருவாகிய முருகப்
பெருமான் மனத்தில் வந்து காட்சி கொடுத்தவுடன் அங்கே
யுள்ள தாபங்கள் மாஜி ஒரே குளிர்ச்கி உண்டாகி
விட்டது. மனத்தில் மூன்று வகையான தாபங்கள் உண்டு.

==#==
உள்ளம் குளிர்ந்தது 9
அவற்றைத் தாபத்திரயம் என்று சொல்வார்கள். ஆதியாத்
மிகம், ஆதிபௌதிகம், ஆதிதெய்விகம் என்பவை அவை.
இறைவனுடைய திருவுருவம் உள்ளத்தில் குதிகொண்ட
வுடன் அங்கே அருள் மழை பொழிந்தது. அதனால்
தாபங்கள் எல்லாம் போய்வீட்டன.
” திருவீழி மிமலைவிற்றிருந்த .
கொற்றவன் றன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிர௭ன் கண் குளிர்ர்தளவே!**
என்று திருவிசைப்பாவில் ஒரு பாட்டு வருகிறது.
திருவடி
முருகப் பெருமான் குருநாதனாக எழுந்தருளினான்
என்று சொல்லும்போது அவன் அடையாளங்களை விரி
வாகச் சொல்ல வருகிறார் அருணகிரியார். திருவடிமுதல்
திருமுடிவரையில் சொல்வதைப் பாதாதிகேசம் என்று
சொல்வார்கள். மனிதர்களை வருணிக்கும்போது சேசாதி
பரதமாக வருணிப்பதும், தெய்வங்களை வருணிக்கும்போ து
பாதாதிகேசமாக வருணிப்பதும் முறை, அந்த வகையில்
இங்கே குமரகுருபரனுடைய பாதாதிகேச வருணனையைச்
செய்கிறார்.
தெய்வத்தையும் பெரியவர்களையும் காணும்போது
அவர்கள் முன் விழுந்து திருவடியைப் பற்றிக் கொள்ள
வேண்டும். குழந்தை தாயோடு விளையர்டும்போது பல
வகையில் விளையாடும். தாயின் முகத்தோடு முகம் சேர்த்து
விளையாடும். கழுத்தைக் கட்டிக்கொண்டு விளையாடும்.
சில சமயங்களில் தோளில் ஏறும்: இடுப்பிலும் ஏறும்,
ஆனால் அதற்குப் பசி மீகும்போது அதனுடைய சரோக்கம்
எல்லாம் பால் தரும் அவயவத்தில் இருக்கும். அதுபோல்
இறைவனுடைய அருளுக்காகப் பசித்த அடியார்கள்
அவனுடைய திரு வ டி டைய ப் பற்றிக்கொண்டிருப்

==#==
20 உள்ளம் குளிர்ந்தது
பார்கள். இறைவனுடைய திருவுருவப் பேரழகு முழு
வதையும் கண்டு இன்புற்றாலும், ஈம்மை ஆட்கொள்ளும்
புகலிடம் அவனுடைய திருவடியே என்பதைக் கருதி
அதையே முதலில் பற்றிக் கொள்ளவேண்டும்.
தண்டையும் சிலம்பும்
அருணகரிகாதப் பெருமான் முதலில் முருகனுடைய
திருவடியைக் காட்டுகிறார். அந்த அடி சின்னஞ்சிறு ops
தையின் அடி. அதனை எப்படித் தெரிந்துகொள்வது?
அடுத்தபடி சொல்லும் அடையாளத்தால் அது புலனாகும்.
திருவடியும் தண்டையும் சிலம்பும்.
முருசப்பெருமானுடைய திருவடி தண்டையும், சிலம்பும்
அணிந்திருக்கிறது. குழந்தைத் திருவுருவத்தில் எழுந்
தருளுவான் அவன். ஆதலின் அந்த அணிகள் அமைந்
இருக்கின்றன. ஈடராஜப்பெருமாலுக்கும் சிலம்பு உண்டு.
அவன் ஈடனம் ஆடுகின் றவன்; ஆகையினால் அதற்கேற்ற
படி தாளம் அமைவதற்குச் சிலம்பை அணிந்திருக்கிறான்.
* மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவரம் ”
என்பது பெரியபுராணம். அடியார்களுக்கு அருள்
வழங்கும்போது தான் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்கு
அடையாளமாகச் சிலம்பை அணிந்திருக்கிறான். காதினால்
ஓவியைக் கேட்டு, அது எங்கிருந்து வருகிறதென்று
ஆராய்ந்த பிறகு திருவடியைக் காணலாம். அதுபோல்
முருகன் எழுந்தருளும்போது, ”யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே” என்பதுபோலத் தண்டையும்
சிலம்பும் ஒலிக்கின்றன. அந்த ஓலி எம்பெருமான் எழுந்
தருளுகிறான் என்பதைக் காட்டி, அவன் திருவடி எங்கே
என்ற ஆராய்ச்சியை உண்டாக்குகிறது.

==#==
உள்ளம் குளிர்ந்தது it
இறைவனுடைய திருவடியில் தண்டையாசகவும், சிலம்
பாகவும் இருப்பது வேதந்தான். இறைவனைக் காட்டு
வதற்கு அராதிகாலமாக ஈமக்கு உதவியாக இருக்கும் நூல்
வேதம், அது நேர்முகமாகக் காட்டாவீட்டாலும் உண்மை
யான தத்துவத்தை எடுத்துச் சொல்லும் அரிய நூல்.
எல்லா நூல்களுக்கும் ஆதியாகவும், தனக்கு ஆதி இல்லா த
தாகவும் இருப்பது வேதம். ஆண்டவனுடைய திருவடி
யைக் காட்டுவதற்கு அது நமக்குத் துணைசெய்கிறது.
இறைவனுடைய திருவடிக்கு அணியாக நின்று தம்
முடைய ஓலியினால் தண்டையும் சிலம்பும் அந்தத் திருவடி
யைக் காட்டுகின்றன. வேதம் செய்கிற காரியத்தைக்
காலில் அணிந்திருக்கும் அவ்விரண்டும் செய்கின்றன;
ஆகையினால் வேதமே தண்டையாகவும், சிலம்பாகவும்
இருக்கின்றது என்று சொல்வார்கள்.
இறைவனுடைய திருவடியைக் கண்ட பிறகு ஈம்
முடைய பார்வை மேலே எழும்புகிறது. மனீதனுடைய
பார்வை வரவர மேலே போகவேண்டும். முறையாக
அடியிலிருந்து போனால்தான் உச்சி வரையில் எட்டும்.
ஆண்டவனுடைய திருவடி எல்லாவற்றுக்கும் ஆதாரமாக
இருப்பது.
** பாதாளம் ஏழினும்கீழ் சொல்கழிவு பாதமலர் ”
என்று மணிவாசகப்பெருமான் பாடுவார். எல்லாவற்றை
யும் திருவடி தாங்கிக்கொண்டிருக்கிறது என்று திருமுரு
காற்றுப்படை சொல்கிறது. எல்லாவற்றுக்கும் ஆதாரமாக
இருந்தாலன்றித் தாங்குவது என்பது அமையாது. ஆகை
wra பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் தனக்கு
மேல் வைத்துத் தான் எல்லாவற்றுக்கும் கீழாக நின்று
தாங்கும் திருவடி அது. அப்படியுள்ள ஆதாரப் பொருளை
முதலில் கண்டு, அப்பால் ஈம் கண்ணையும் கருத்
தையும் மேலே எழுப்ப வேண்டும்,

==#==
28 உள்ளம் குளிர்ந்தது
வடிவேல்
முதலில் திருவடியைக் கண்டு, பின்பு ஒலியை விளை
விக்கும் தண்டையையும் சிலம்பையும் கண்டு நிற்கும் ஈரம்,
அந்தத் திருவடிக்கு அருகில் வேலின் ஒரு முனை அமைநர்
திருப்பதைப் பார்க்கிறோம். முருகப்பெருமானது திருக்
கையில் ஞானசக்தியாகிய வேல் இருக்கிறது. அது
அவனுடைய திருவுருவத்தை ஓட்டி அமைந்து விளங்கு’
கிறது. திருவடிமுதல் திருமுடிவரையில் அது செல்கிறது.
அது அவன் திருவுருவ எல்லையைக் காட்டுகிறது. வேலையே
எணீயாகக் கொண்டு நம்முடைய கண் மெல்ல மெல்ல
ள.றினால் முருகப்பெருமான் திருவுருவம் முழுவதையும் ஒரு
வரறு பார்த்துவிடலாம்.
இதுவும் ஒரு குறிப்பை உடையது: வேலே ஞானம்
என்று சொல்வார்கள். இறைவனுடைய தரிசனம் பெற
வேண்டுமானால் ஞானத்தை அடையவேண்டும். ஞானம்
என்பது ஒரேமாதிரி இருப்பது அல்ல. வரவர அறிவு
மிகுதியாகும்போது தெளிவும் மிகுதியாகிறது. தெளிவு
என்பது பொருள்களைப் புலப்படுத்தும். ஐயம் நீங்கிப்
பொருள் புலப்படும் தெளிவு மிகுதியாக ஆக இறுதியில்
எல்லா ஐயங்களும் நீங்கிப் பொருள்கள் யாவும் தெளி
வாகும்; முடிந்த முடிவில் கடவுளை த் தெளிந்து அநுபவிக்
கும் நிலை வரும். அதுவரைக்கும் ஞானம் படிப்படியாக
எறி வரும். ஞான சக்தியாகிய வேலைக் காணும்போது சரம்
மெல்ல மெல்லக் கீழே இருந்து படிப்படியாக ஏறுகிறோம்.
ஆண்டவனுடைய திருவடியை ஆதாரமாகக் கொண்டு,
பி.றகு ஞானம் என்னும் ஏணியில் மெல்ல மெல்ல ஏறு
கிறோம். இறைவனுடைய திருவடியே ஞானமாக நிற்பது
தான். அது ஞானப் யொய்கையானால் வேலை ஞான ஆறு
என்று சொல்லலாம்.

==#==
உள்ளம் குளிர்ந்தது 18
”தொண்டர்கண்டு அண்டிமொண்டு உண்டு இருக்கும்
சுத்த ஞானம் எனும், தண்டையம் புண்டரீகம் தருவாய் ”
என்று கந்தர் அலங்காரத்தில் வந்ததை நாம் முன்பு
பார்த்தோம்.
முருகப் பெருமானுடைய திருவடியைத் தரிசித்து,
அதன்அருகில் தோன்றும் வேலைப் பற்றிக்கொண்டு மெல்ல
நம்முடைய கண்ணையும் கருத்தையும் ஏறவிடுவோம். அதன்
வழியே செல்லும் கண் முதலில் அவன் திருவடியைக்
கண்டு, பின்பு அவன் இடையைக் கண்டு, பின்பு அவன்
திருக்கரத்தில் வந்து நிற்கும். முருகள் எப்பொழுதும்
வேலைத் தன் கையில் பற் றியிருக்கிறுன்.
”வேலே விளங்கு கையான்.”
கிரெஞ்ச வதம்
அவன் திருக்கரத்தில் பற்றிக்கொண்டிருக்கும் அந்த
வேலைப் பார்க்கும்போது பழைய கதை நினைவுக்கு வரு
கிறது’ அதே திருக்கரத்தினால் முருகப்பெருமான் வேலை ஓச்
கிப் பல பராக்கிரமச் செயல்களைக் காட்டினான். அவற்றுள்
கிரியார் இங்கே ஒன்றை நினைப்பூட்டுகிறுர்.
சிலம்பு ஊடுருவப் பொரு வடி வேலும்,
முருகப்பெருமான் வேலினால் அசுரர்களை மாய்த்தான்..
கிரெளஞ்சாசுரன் என்பவன் மலை வடிவில் இருந்தவன்.
அவன் சூரனுக்குப் பக்கபலமாக இருந்து தேவர்களுக்குப்.
பல துன்பங்களைச் செய்தவன். அசலமாக இருக்கும் மலை
அன்று அது. இறகுகளைக் கொண்டு பறந்து கொண்டே
இருந்தது அது. அதனால் அசலம் என்னும் பெயர்
கிரெளஞ்ச கிரியைப் பொறுத்தவரையில் செல்லாது..
பல இடங்களுக்குப் பறந்து சென்று அங்கங்கே திடும்

==#==
14 உள்ளம் குளிர்ந்தது
எனக் கீழே வந்து படிந்து, அடியில் அகப்பட்டுக் கொண்ட
மக்களை எல்லாம் நசுக்கி நாசம் செய்கின்ற கடுமையான
செயலைக் கிரெளஞ்சாசரன் செய்து வந்தான். அந்தச்
சிலம்பை முருகப்பெருமான் திருக்கையில் உள்ள வடிவேல்
பொடியாக்கிவீட்டது.
சூரபன்மா அகங்கார மயமானவன். அவனுக்கு
உறவாகிய கிரெளஞ்சாசுரன் மமகார மயமானவன். மலை
போல நின்று எல்லா வளங்களும் தன்னுடையன என்று
செருக்கு அடைவது மக்களுடைய இயல்பு. சூரனும்”நான்”
என்ற உணர்வோடு கிரெளஞ்சாசுரனைத் தனக்குக் கவச
மரசக் கொண்டிருந்தான். . இறைவன் முதலில் மமகா
ரத்தைப் போக்கிப் பின்பு அகங்காரத்தைப் போக்குவான்.
* எல்லரம் அற என்னை இழந்த ஈலம் ”
என்று கந்தர் அநுபூதியில் வந்த பாட்டுக்கு, மமகாரம்
அற்று, அகங்காரம் அற்ற ரீலை என்று பொருள் கொள்ள
வேண்டும். சூரபன்மாவை இறைவன் முதலில் அழிக்க
வில்லை. அவனோடு தொடர்புடைய படைகளையும், பின்பு
அவனுடைய தம்பிமார்களையும், கிரெளஞ்சாசுரனையும்
முன்னே அழித்துவிட்டு அப்பால் தனியாக ரீன்ற குரனை
அழித்தான். = கப்பும் கிளையுமாக இருக்கும் மரம்
சாலையில் நிற்கும்போது அதை வெட்டவேண்டுமானால்
முதலில் கிளைகளை வெட்டிவிட்டு அப்பால் மரத்தை
வெட்டுவது வழக்கம். அதுபோல் படர்ந்திருக்கும்
மமகாரத்தைப் போக்கி, அது கிளைத்தற்கு மூலமான
அகங்காரத்தை இறைவன் போக்குவான். இதைத்தான்
அந்தச் சங்காரமுறை காட்டுகிறது. முருகன் மமகாரத்
தைப் போக்குவான் என்பதை உணர்த்துவதற்கு,
சிலம்பு ஊடுருவப் பொரு வடிவேலும்
என்று சொன்னார் அருணகிரியார்.

==#==
உள்ளம் குளிர்ந்தது 15
பழைய வரலாறு
மற்றொரு செய்தியும் இங்கே ரிளைப்பதற்குரியது. நாம்
படிக்கிற சந்த புராணத்தில் கிரெளஞ்சாசுரன் மலைவடி
வாக இருந்தான் என்பதும், தேவர்களுக்குப் பல துன்பங்
களைச் செய்தான் என்பதும் வருகின் றன. பழைய வரலாறு
ஒன்று உண்டு. அதை முன்பும் நாம் நினைப்பூட்டிக்
கொண்டிருக்கிறோம். சூரபன்மாவுக்குச் கிரெளஞ்சம் என் ற
மலை அரணாக இருந்தது என்றும், அது பறக்கும்போது
அவன் உள் இருந்தான் என்றும், முருகப்பெருமான்
வேலை ஓச்சியபோது அந்த வேல் கிரெளஞ்ச மலையை
ஊடுருவி. அதன் உள்ளே இருந்த சுரனையும் ஊடுருவிக்
கொள்றது. என்றும் பழைய காலத்தில் வரலாறுகள்
வழங்க வந்தன. தக்கயாகப் பரணியில் அதனை
ஒட்டக்கூத்தர் பாடுகிறார்.
”ஒருதோகை மிசையேறி உழல்குரும் மலைமார்பும் உடனூடறப்
பொருதோகை சுரராச புரமேற வீடுகாளை புகழ்பாடுவாம்”
என்பது அந்தப் பாட்டு: அருணகிரிசாதப் பெருமானும்
இந்த வரலாற்றைப் பலவீடங்களில் சொல்லியிருக்கிறார்.
”இசைபட்டு எழுகூர் உரமும் கரியும்
தொளைபட்டு உருவத் தொடுவே லவனே”**
என்பது கந்தர் அறுபூதி. ஆகவே இங்கே, ’சிலம்பு
ஊடுருவப் பொருவடிவேலும்’ என்று சொன்னாலும் Haid
புக்குள் இருந்த சூரனையும் ஊடுருவிப் புகுந்து அழித்தது
வேல் என்ற பொருளும் குறிப்பாக இருக்கிறதென்று
கொள்ளலாம். கிரெளஞ்சாசுரனுக்குள் சூரன் மறைந்
திருப்பது போல, சிலம்பு ஊடுருவப் பொருவடிவேல்
சூரனையும் ஊடுருவிக் கொன்றது என்பது இதில் மறைநர்
திருக்கிறது என்று கொள்ளலாம். ”

==#==
16 உள்ளம் குளிர்ந்தது
இப்போது ஈம் ஆண்டவனுடைய திருக்கரத்தையும்,
அது பற்றியிருக்கும் வேலையும் பார்த்தோம். ஆண்ட
வன் பெருவீரம் உடையவன். வேலாயுதம் அவனுடைய
வீரத்தினால் சிறப்பு அடைகிறது.
வீரவேல் தாரைவேல் விண்ணேர் கிறைமீட்ட
தீரவேல்’ *
என்று வேலைச் சொல்வது வழக்கம்.
என்ன இருந்தாலும் வேல் சகருவீதான். அதனை
உடையவனுக்கு வீரம் இருந்தாலன்றிப் படைக்கலம்
வீரம் உடையது ஆகாது,
”வானொடென் வள்கண்ண ரல்லார்க்கு”?
என்பது குறள். படையை யார் விடுகிறுர்களோ
அவர்களுடைய வீரத்தைப் படையின்மேல் ஏற்றிச் சொல்
வது வழக்கம். அதை இலக்கணை என்று சொல்வார்கள்.
அந்த வகையில் வேலை வீரவேல் என்று சொல்வர்.
முருகன் வீரர்களில் சிறந்த வீரன். அவனுடைய கைப்
பட்டது எதுவும் பெருமை அடைகிறது. ஆயுதங்களில்
கிறந்ததாகிய வேல் வீரர்களில் சிறந்தவனாகிய முருகன்
திருக்கரத்தில் இருந்து மிக்க புகழை அடைந்தது.
கடம்பும் தடம்புயமும்
பொதுவாக வீரனைப் பற்றிச் சொல்லும்போது
அவன் தோள் வலியை உடையவன் என்பார்கள், தோள்,
ஆண்மைக்கு இருப்பிடம்.
”நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை -
குடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே ”
என்று கம்பன் இராமனுடைய வீரத்தைப் புலப்படுத்து
Raper. ”

==#==
உள்ளம் குளிர்ந்தது 17
முருகப்பெருமானுடைய வீரத்துக்கு அடையாளமாக -
இருப்பன அவனுடைய திருத்தோள்கள். அந்தத் திருத்
தோளுக்கு அலங்காரமாக இருப்பது கடம்பமாலை. அந்த
இரண்டையும் இப்போது நமக்குக் காட்டுகிறார்.
கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்.
முருகனுக்குக் கடம்ப மலர் மிகவும் பிரியமானது. அவன்
திருத்தோனில் கடம்ப மலர் மாலை இருக்கிறது. அவன்
கடம்ப மலரில் இருக்கிறான். கடம்ப மரத்தின் அடியிலும்
அவன் எழுந்தருவியிருப்பான். திருமுருகாற்றுப்படை,
””புதுப்பூம் கடம்பும்”
என்று முருகன் இருக்கும் இடங்களில் கடம்ப மலரையும்
ஒன்றாகச் சொல்கிறது.
”கடம்பமர் காளை”
என்பது தேவாரம். முருகன் அணிகின்ற மலர்களில்
சிறந்தது. கடம்ப மலர். அதனால் கடம்பன் என்ற
திருகாமத்தைப் பெற்றுன்.
”காரலர் கடம்பன்”
என்று மணிமேகலையில் வருகிறது. அதனை எப்போதும்
அவன் அணிந்துகொண் டிருக்கிறுன். அது போகத்திற்
குரிய மாலை என்று ஈச்சினார்க்கினியர் திருமுருகாற்றுப்படை
உரையில் எழுதுகிறார். போர் செய்யும்போது அணிகின்ற
மாலை வேறு, மற்றக் காலங்களில் அணிகின்ற மாலை
வேறு, முருகன் போர் செய்யும் காலத்தில், காந்தளை
அணிவான். அது அவனுக்குரிய கண்ணி. மற்றச் சமயங்
களில் கடம்ப மாலையை அணிந்து கொள்வான்.
தண்டையின் ஒலியைக் கேட்டுத் திருவடியைக்
கண்டது போலக் கடம்ப மலரின் மணத்தை நுகர்ந்து
2

==#==
18 உள்ளம் குளிர்ந்தது
அப்பால் தோளை ஈம் காண்கிறோம். முருகப்பெருமாள்
பன்னிரண்டு தோள்களை உடையவன்.
”முன்பு செய்த பழிக்குத் துணை அவள் பன்னிரு தோஜும்”
என்று அந்தப் பன்னிரு தோள்களைத் துணையாக முன்
ஒரு பாட்டில் சொன்னார்.
இறைவனுடைய புஜபல பராக்கிரமம் ஆருயிர்க்
கூட்டங்களுக்குப் பகையானவர்களை மாய்ப்பதற்காக
அமைந்தது. முருகனுக்கு என்று பகை யாரும் இல்லை.
எல்லோரும் நண்பர்கள், அல்லது குழந்தைகள். ஆயினும்
மல்லவர்களுக்குத் இங்கு செய்யும் பொல்லாதவர்களை
அவன் தண்டித்து ஒறுக்கிறுன். ஒரே தாயின் வயிற்றில்
பிறந்த பிள்ளைகள் தமக்குள் சண்டை பிடிக்கும்போது,
கொடியவனாக இருக்கும் பிள்ளையைத் தந்தை ஓறுத்து
அடக்குவது போல, முருகன் சுரர்களுக்கும் மனிதர்
களுக்கும் தீங்கு புரிந்த அசுரர்களை அடக்கி ஓடுக்கினான்.
அப்படி ஓடுக்கும்போது அவனுடைய புய வலிமை பயன்
பட்டது. தன்னுடைய பகையை மாற்றுவதற்காக அந்த
வலிமையை அவன் கொள்ளவில்லை. தன்னுடைய குழந்
தைகள் பகை தீர்ந்து இன்பத்தோடு வாழவேண்டு
மென்பதற்காக அவன் பன்னிரு தோள்களை உடையவனாக
இருக்கிறுன். இரண்டு தோள்களை உடையவர்களுக்கு
ஆண்மை உண்டு. பன்னிரண்டு தோள்களை உடைய
வன் எல்லோரிலும் பேராண்மை உடையன் என்பதைச்
சொல்ல வேண்டியதில்லை. தோள் வீரத்திற்கு அடையாள
மானால் மிகுதியான தோள் மிகுதியான வீரத்திற்கு அடை
யாளம் என்பதில் ஐயம் ஏது ?
கண்ணபிரான் கீதையில்,  ”வீரர்களுக்குள் நான்
முருகனாக இருக்கிறேன்”! என்று சொல்லியிருக்கிறான்.
அவனுடைய வீரமிகுதியை, வீரத்தின் இருப்பிடமாகய

==#==
உள்ளம் குளிர்ந்தது 19
பன்னிரண்டு தோள்களும் விளக்குகின்றன. அவற்றையும்
தரிசித்தோம்.
ஆறுமுகம்
தோள்களைக் கண்ட பிறகு அடுத்தபடி நம்முடைய
பார்வை உயர்ந்தால் அவனுடைய திருமுகங்கள் ஆறும்
தோன்றும், அந்த ஆறு முகங்களும் மணம் பொருந்திய
தாமரை போல ஒளிர்கின்றன. மணம் மனத்தை லயப்
படுத்தும். அதனால்தான் பூசை செய்கிறவர்கள் மெல்லிய
மணமுள்ள ஊதுவத்தியை ஏற்றி வைத்துக் கொள்கி
ருர்கள். கெடியான மயக்க மருந்தால் மனம் நின்று
விடுகிறது. மென்மையான மணத்தினால் மனம் அமைதி
பெறுகிறது. முருகப் பெருமானுடைய திருமுகம் மனத்தில்
அமைதியை உண்டாக்கும் மணம் பொருந்தியது.
மருவடிவான வதனங்கள் ஆறும்.
மருவைப் பெற்ற வடிவையுடைய ஆறுமுகீங்களும் என்று
பொருள் கொள்ளவேண்டும்.
கண்கள்
திருமேனியில் முகம் முக்கியமானது. ஆண்டவ
னுடைய திருவடியைப் பற்றிக் கொண்டு மெல்ல மெல்ல
நம்முடைய பார்வையை உயர்த்தி ஏற்றிக்கொண்டு
வந்தோம். இப்போது திருமுகத்தில் வந்து ரிற்கிறோம்.
முகத்தில் முக்கியமானது கண். இறைவனுடைய
அருளைப் புறப்படவிடுகின்ற பொய்கைகள் அவை. அவ
னுடைய் திருக்கண் பார்வை பட்டால் நம்முடைய
இங்குகள் எல்லால் . அழியும். அருள் கொப்புளிக்கும்
இருக்கண்களைப் பார்த்த பிறகு வேறு எதையும் பார்க்க
முடிகிறது இல்லை. ஈம்முடைய சுண்ணும், அவனுடைய

==#==
20 உள்ளம் குளிர்ந்தது
கண்ணும் ஒன்றுபட்டால் பேரின்பம் தானே வந்து அமை
யும். காதலனும் காத்லியும் ஒருவரை ’ஒருவர் சோக்கு
வார்கள் என்றும், கண்வழி உள்ளே புகுவார்கள் என்றும்
காவியங்கள் பாடுகின்றன.
”கண்ணெடு சுண்இணை கோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல?’
என்பது திருக்குறள். கண்ணும் கண்ணும் பார்ப்பதில்
மிக்க இன்பம் உண்டாகுமாம்.
இங்கே ஆண்டவனுடைய தருவிழிகளை நம்முடைய
கண்கள் பார்க்கின்றன. அப்போது உண்டாகும் இன்பம்
ளல்லா இன்பங்களையும்வீடப் பெரிதாக இருக்கும், முருகப்
பெருமானுடைய கண்கள் தாமரை மலரைப் போல அமை
இன்றன. அவற்றில் விரிவு உண்டு; ஓனி உண்டு,.
குரு வடிவு
திருவடி முதல் மலர்க்கண்கள் வரையிலுள்ள உறுப்
புக்களையுடைய திருக்கோலத்தோடு முருகனே குருவாக
எழுக்தருனினான் என்று அருணகிரியார் கூறுகிறார். நாம்
பற்றிக்கொள்வதற்கு ஆதாரமாகத் திருவடி தோன்றியது.
பின்பு மெல்ல மெல்லத் தெளிவு பிறக்கும் வண்ணம் ஞான
சக்தியாகிய வேல் தோன்றியது. அப்பால் நம்முடைய
துன்பங்களை எல்லாம் போக்கிக்கொள்வதற்கு முருகப்
பெருமானுடைய வீரத்தை வெளிப்படுத்துகிற  தீருத்
தோள்கள் தோன்றின.. பிறகு கம்முடைய உள்ளம்
அமைதி அடையத் திருமுகம் தோன்றியது. பின்பு
இருவருள் அநுபவத்தை உண்டாக்கும் திருக்கண்கள்.
, தோன்றின. இப்படிப் படிப்படியாக முருகப் பெருமா
னுடைய திருவுருவத் தோற்றம் ஆனந்த அநுபவத்தை
உண்டாக்கியது. இவை எல்லாம் சேர்ந்து உள்ளத்தில்

==#==
உள்ளம் குளிர்ந்தது a1
புதைந்து அறியாமையைப் போக்கவும் மெய்ஞ்ஞானத்தை
வளர்த்து என்றைக்கும் மாருத பேரின்பத்தை அநுபவிக்
சவும் உதவின: இறைவனே குருவாக எழுந்தருளி அருள்
புரிந்தான். அருணகிரியார் இதனை அநுபவத்தில் கண்ட
வர் ஆதலின், நாமும் முருகப் பெருமானைத் தியானம் பண்
ணும் வகையில் இந்தப் பாடலைச் சொன்னார்.
முன்பு சொன்னபடி, பாடலைப் படிப்பவர்கள் உறுப்
பைச் சுட்டும் சொற்கள் வரும்போதெல்லாம் அந்த அந்த
அங்கத்தை மனத்தில் நிறுத்தித் தியானம் பண்ண
வேண்டும், திருவடியும், தண்டையும் என்று சொல்லும்
போது நமக்கு அவை அகக்கண்ணில் வரவேண்டும்.
தண்டையின் ஓவியும், சிலம்பின் ஓலியும் காதில் கேட்க
வேண்டும். இப்படி நிறுத்திப் பயின்றுல் இந்தப் பாடல்
ஈம் மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்ய உதவும்
என்பது உறுதி,
}
திருவடி யும்தண்டை யும்சிலம்
பும்சிலம்பு ஊடுருவப்
பொருவடி வேலும் கடம்பும்
தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்கள்
ஆறும் மலர்க்கண்களும்
குருவடி வாய்வந்தென் உள்ளம்
குளிரக் குதிகொண்டவே.
[முருகப்பெருமானுடைய . திருவடிகளும், அவற்றில் அணிக்த
தண்டையும் சிலம்பும், கிரெளஞ்சமாகிய மலையை உள்ளே புகுக்து
உருவும்படி போர் செய்த கூர்மையான வேலும், கடம்பமாலையும்
விசாலமான தோள்கள் பனள்னீரண்டும், மணத்தையுடைய வடிவ

==#==
22 உள்ளம் குளிர்ந்தது
மாக உள்ள திருமுகங்கள் ஆறும், தாமரை போன்ற கண்களும்.
ஒன்றுபட்டுக் குருவடிவாக எழுந்தருளி அடியேனது. உள்ளம்
தாபங்கள் அற்ற அமைதியான குளிர்ச்சியைப் பெறும்படியாக வந்து
குதித்தன.
பொரு - போர் செய்யும்.]
மு௫ருகனுடைய திருவுருவத் தியானம் செய்யச் செய்ய
அவனே குருவாகி வந்து உண்மையை உணர்த்தியர௫ளினான்
என்பது கருத்து.

==#==
இராப்பகல் அற்ற இடம்
1
அநுபவமும் கருணையும்
கந்தர் அலங்கார மாலையின் குஞ்சமாக ஆறு பாடல்
கள் கிடைத்திருக்கின்றன. அவற்றையே இப்போது நாம்
பார்க்கிறோம். அதன் முதல் பாடல் எம்பெருமானுடைய
சொருபத் தியானத்திற்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது»
அதைப் பார்த்தோம். அருணகிரிநாதப் பெருமான் தம்மு
டைய அநுபவமாக அதைச் சொன்னார். அவனுடைய திரு
வடி முதலியன தம்முடைய உள்ளம் குளிரக் குதிகொண்
டன என்று சொன்னார். அப்படிச் சொன்னவுடன் திரும்
பிப் பார்த்தார். ஆயிரக்கணக்கான மக்கள் எம்பெருமா
னுடைய நிலையை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கள். இன்னும் சிலபேர் அவனுடைய திருவடித் தியானம்
கைகூட வேண்டுமென்று ஏங்கிக் கொண்டிருக்கிறுர்கள்);
எது வழி என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள். அதைப்
பார்த்தவுடன் அவர்களுக்கு வழிசொல்லிக் கொடுக்க
வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. ’நாம் பெற்ற
இன்பத்தை மாத்திரம் சொல்லி அந்த எக்களிப்பில் பேசிக்
கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு வழி காட்ட
வேண்டாமா? என்ற நினைவு வந்தது. அந்தக் கருணை
யினால், ””இறைவனே, உன்னுடைய அற்புதமான வடி
வத்தை உள்ளத்தில் வைத்துத் தியானம் பண்ணுவதற்கு
எனக்கு ஆசையாக இருக்கிறது” என்று நினைக்கிறவர்
களுக்கு ஏற்றபடி , ஒரு விண்ணப்பத்தை அமைத்தார்.

==#==
24 உள்ளம் குளிர்ந்தது
அதுதான் இப்போது பார்க்கப் போகிற பாட்டு. ”௭ம்
பெருமானே, உன்னுடைய அழகிய உருவத்தை ஈல்ல
வகையில் இருந்து தியானம் பண்ணுகின்ற பக்குவத்தை
எனக்குத் தா” என்ற வேண்டுகோளை உடையது இந்தப்
பாட்டு.
இராப்பகல் அற்ற இடங்காட்டி யான்இருத் தேதுதிக்கக்
குராப்புளை தண்டையநற் தாள்அரு ளாய்கரி கூப்பிட்டநாள்
சுராப்படக் கொள்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும்
பராக்ரம் வேல நிருதசங் கார யயங்கரணே,
இது இறைவனுடைய தியானத்தில் சடுபடவேண்டு
மென்ற ஆசை உடையவர்களுக்குச் சொல்கிற பாட்டு.
அவர்களே பகவானிடத்தில் சொல்லி வேண்டிக் கொள்வது
போல அருணகிரியத சுவாமிகள் இந்தப் பாட்டை
அமைத்திருக்கிறார்.
தராசின் நிலை
எம்பெருமானுடைய திருவுருவத் தியானம் செய்
வதானால் மனத்திற்கு ஒரு பக்குவம் வேண்டும். தராசின்,
நிலைபோல அந்தப் பக்குவம் இருக்கும். தராசில் இரண்டு
பக்கமும் தட்டுகள் இருக்கும். நுட்பமான பொருள்களை
நிறுக்கவேண்டுமானால் நுட்பமான தராசில் ரிறுக்கிறோம்.
தங்கம் வைரம் முதலியவற்றைச் சின்னத் தராசில் வைத்து
ரிறுப்பார்கள். நிறுப்பதற்கு முன்னால் தராசைத் தூக்கிப்
பார்ப்பார்கள். அது சமமாக இருக்கிறதா. என்று தெரிந்து
கொண்ட பிறகே நிறுக்கத் தொடங்குவார்கள். இதை
வள்ளுவர் சொல்கிறார்;
*”சமன்செய்து சீர்றூக்கும் கோல்போல்”
என்று உவமையில் வைத்து அந்த வழக்கத்தைக் காட்டு
Gai. போட்ட பொருளின் எடையைச் சரியானபடி
காட்டவேண்டுமானால் எடையைப் போடுவதற்கு முன்பு
தராசைத் தூக்கினால் இரண்டு பக்கத்துத் தட்டும்

==#==
இராப்பகல் அற்ற இடம் 25
சமமாக இருக்கவேண்டும்,. முதலில் சமமாக இருக்
கிறதா என்று பார்த்த பிறகே பொருளையும் எடை
யையும் போட்டு நிறுப்பார்கள். அதுபோல் இறை
வனுடைய திருவருளை ஈம் உள்ளத்தில் தாங்கிக் கொள்ள
வேண்டுமானால் நம்முடைய உள்ளம் நடுநிலையில் இருக்க
வேண்டும். பிற பொருள்களை நாடி அலைந்து கொண்டிருந்
தால் இறைவனுடைய உருவத்தைப் பதித்துக் கொள்ள
முடியாது.
சுவரும் சித்திரமும்
அழுக்கு அடைந்த சுவரில் சித்திரங்களைத் தீட்ட
முடியாது. ஓவியர்கள் முதலில் சுவர் முழுவதும் சண்ணாம்பு
அடிப்பார்கள். சுவர் ஒரே வெள்ளையாக ஆனபிறகு
அதில் தாம் எழுத வேண்டிய வண்ணச் சித்திரங்களை
எழுதுவார்கள். நம்முடைய மனமாகிய சுவரில் இறைவ
Mow திருவுருவத்தை எழுதவேண்டுமானால் முதலில்
அங்குள்ள அழுக்கைப் போக்கிக் கொள்ளவேண்டும்.
“ துணிவெளுக்க மண்உண்டு
எங்கள் முத்து மாரியம்மா
தோல்வெளுக்கச் சாம்பல்உண்டு
எங்கள் முத்து மாரியம்மா
மணிவெளுக்கச் சாணையுண்டு
எங்கள் முத்து மாரியம்மா
மனம்வெளுக்க வழியில்லை
எங்கள் முத்து மாரியம்மா”
என்று சொல்வார் பாரதியார். ஈம்முடைய மனத்தில்
எத்தனையோ நிறங்கள் ஏறியிருக்கின்றன. சிவப்பும்,
கறுப்பும் ஈடமாடிக் கொண்டிருக்கின்றன. சிலருடைய
மனத்தில் பச்சைவண்ணம் நிரம்பியிருக்கும். மனத்தில்
தோன்றுகிற எண்ணங்களுக்கு வண்ணம் உண்டென்று
மேல் நாட்டினர் கண்டு பிடித்திருக்கிறுர்கள். அதைப்
பற்றி விவரமான புத்தகம் ஒன்றை அடையாற்றில் வெளி

==#==
26 உள்ளம் குளிர்ந்தது
யிட்டிருக்கிறுர்கள். மனம் வண்ணங்கள் நிறைந்ததாக
இருந்தால் புதிய சித்திரத்தை எழுத முடியாது. எழுதி
னாலும் மங்கிப் போய்வீடும். ஆதலால் முதலில் மனத்தை
எந்த வண்ணமும் இல்லாமல் சுத்த சத்துவமாக அமையும்
படி வெள்ளை அடிக்கவேண்டும். வெள்ளை அடிப்பதாவது
என்ன? மனம் விருப்பு வெறுப்பு இல்லாமல், எதனையும்
சாராமல் அமைதியாக, மெளனமாக, நஈடுறிலையில் இருக்க
வேண்டும்.
சுகமும் துக்கமும்
இப்போது ஈம்முடைய மனம் சுகம் வந்தால் துள்ளிக்,
குதிக்கிறது; துக்கம் வந்தால் சோர்ந்துவீடுகிறது. ஒரு
நாள் மிகவும் உற்சாகமாகவும், மற்றொரு நாள் மீகவும்
வாட்டமாகவும் இருக்கிறோம். இப்படி இருப்பதற்குக்
காரணம் மனந்தான். சுகமும் துக்கமும் மாறி மாறி
வரும் உலகத்தில் நம்முடைய மனம் அலைபோல அலைகிறது;
மேடுபள்ளத்தோடு இருக்கிறது. ஏழையானாலும், பணச்
கரரஞனாலும் சுகதுக்கம் என்பவை பொதுவானவையே.
மனம் அந்த இரண்டுக்கும் ஏற்றபடி மேலேறிக் கீழே
இறங்குகிறது. இப்படி இரண்டு விதமான அலைகள் மனத்
தில் மிதந்து கொண்டிருக்கின்றன. களர்ச்சியும் தளர்ச்சி:
»ம் இல்லாமல், அலையற்ற கடல்போல மனம் அமைந்து
கிடக்க வேண்டும். அப்போதுதான் இறைவனுடைய.
இருவுருவத்தை எழுதலாம்.
” உயிரா வணம்இருர் துற்று நோக்கி
உள்ளக் கிழியின் உரு எழுதி”
என்று பாடுகிறார் அப்பர்.
நடுநிலை
பெரியவர்களுக்கு மனம் நடுநிலையில் நிற்கும். அலை
ய௰ற்ற கடல்போல அமைதியாக இருக்கும். ஒருவன்
பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறுன். உச்ச ஸ்தாயியில்:

==#==
இராப்பகல் அற்ற இடம் ar
பாடுகிறுள். பின்பு கீழ் ஸ்தாயிலில் பாடுகிறுன். அவன்
எப்படிப் பாடினாலும் அந்தப் பாட்டுச் சுருதியோடு ஓட்டி
யிருக்கும். ஆரோகணம், அவரோகணம் ஆகிய இரண்டுக்
கும் பொதுவாக ஓடிக்கொண்டிருப்பது சுருதி. ஞானி
களுடைய மனம் எப்போலும் சுருதி போடுவது போல
இறைவனை நினைத்துக்கொண்டிருக்கும். அவர்கள் நம்மைப்
போலவே பல காரியங்களைச் செய்தாலும் மனம் நடுநிலையி
லிருந்து மாறுவது இல்லை. இறைவனுடைய நினைப்பு
எல்லாக் காலத்திலும் சுருதி போட்டுக்கொண்டிருக்கும்.
அந்த நிலையைச் சமகிலை என்று சொல்வார்கள். அது
வரவேண்டுமானால் எத்தனையோ காலம் சாதனம் செய்ய
வேண்டும்.
” எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கும் மோன த்தே~-மெத்தனமாய்க்
காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் கீர்க்குடத்தே தான்”
என்று ஞானிகளுடைய மன ரிலையைப்பற்றி ஒரு பாட்டு
வருகிறது. கிராமங்களில் குளத்திற்கோ, ஆற்றுக்கோ
சென்று தாய்மார்கள் நீர் எடுத்து வருவார்கள். தலையின்
மேலே ஒரு குடமும், அதன்மேல் ஒரு தோண்டியும், அதன்
மேல் ஒரு செம்பும், இடையில் ஒரு குடமும் வைத்துக்
கொண்டு வருவதைப் பார்க்கலாம். இடுப்பிலே இல்லா
விட்டாலும் தலையில் ஒன்று இரண்டு வைத்துக்கொண்டு
வருவார்கள். இம்படி ராலுபேர் சேர்ந்துவரும்போது சும்மா
வர முடியுமா? ஊர் விவகாரங்களை எல்லாம் பேசிக்
கொண்டு வருவார்கள்; கையை வீசிப் பேசுவார்கள்.
அப்படி அவர்கள் கையை வீசிக்கொண்டும், பேசிக்
கொண்டும் வந்தாலும் தலையில் இருக்கும் குடத்தை மறந்து
விட மாட்டார்கள். அது கீழே விழும்படி தலையை அசைக்க
மாட்டார்கள். அவர்களுடைய நடையிலே ஒரு நிதானம்

==#==
28 உள்ளம் குளிர்ந்தது
இருக்கும். ஈமக்கு அது தெரியாது. ஞானிகளுடைய மனம்
அப்படிச்தான் ஈடுகிலையில் இருக்குமாம். உலகத்தில்
மற்றவர்களைப் போல ஒரு தொழில் செய்து வந்தாலும்
அவர்கள் உள்ளம் சம நிலையிலிருந்து ஏரமுமல் இறங்கா”’
மல் நிற்குமாம். இது ஒருநாள் இரண்டு நாளில் உண்டாகிற
நிலை அன்று. பல பிறப்புக்களிலே முயன்று முயன்று
கிடைக்க வேண்டிய அமைதி. ஒரு பிறவியால் ஒருவன்
ஞானியாகிவீடலாம் என்று எண்ண. முடியாது. அந்த
நிலை வருவதற்கு முன் ஜன்மங்களில் அவன் உழைத்திருக்க
வேண்டும். அந்த உழைப்பின் நிறைவை அவன் இந்த
ஜன்மத்தில் அடைவான். அப்படி வருகிறவர்களை யோகப்
பிரஷ்டர்கள் என்று சொல்வார்கள். அவர்களுடைய
உள்ளம் துலாக்கோலைப் போலவே இருக்கும்.
ஈம்முடைய உள்ளமோ அதற்கு நேர்மாமுக ஓரேயடி
யாக மேலே போகிறது; அல்லது ஒரேயடியாகக் கீழே
போகிறது.
அக இருளும் புற இருளும்
ம் முன்னால் எத்தனை பொருள்கள் இருந்தாலும்
அந்தப் பொருள்களின் வண்ணத்தையும், வடிவத்தையும்
காணாமல் மறைப்பது இருள். கண் இருந்தாலும்,
இனி இருந்தாலன்றி அதனால் பார்க்க முடியாது. இருட்டு,
கண்ணைப் பயனற் றதாகச் கெய்கிறது. பொருள் இன்ன
இடத்தில் இருக்கிறது, இன்ன வண்ணத்தோடு இருக்கிறது
என்று தெரிந்துகொள்ள முடியாமல் செய்வது இருட்டு.
புமத்தில் உள்ள இந்த இருள் வெளியில் உள்ள பொருள்
களை அறிந்துகொள்ள முடியாமல் செய்வது போல
அகத்தில் உள்ள இருள் பொருள்களின் உண்மையிலையைச்
காணாமல் செய்கிறது. அந்த இருளுக்கு அறியாமை என்று
பெயர். மனத்தில் தெளிவு இல்லாதபடி செய்து, எந்தப்

==#==
இராப்பகல் அற்ற இடம் 29.
பொருள் எப்படி இருந்தாலும் அதன் உண்மையான உரு
வத்தைத் தெரிந்துகொள்ள முடியாமல் செய்துவிடுகிறது..
அறியாமையை இருள் என்று சொல்வது வழக்கு. இருட்
டில் இருப்பவர்களுக்குத் தம் முன் உள்ள பொருள்களின்
நிலை தெரியாதது போல அறியாமை உடையவர்களுக்குப்:
பொருள்களின் உண்மையான ரிலை தெரியாது. புறத்தில்
உள்ள இருளைப் போக்கி, பொருள் களின் வண்ணம் வடிவம்
முதலியவற்றைத் தெரிந்துகொள்ளக் ௧ ௫ வி க ள £ ௧ .
இருப்பவை சூரியன்), சந்திரன், அக்கினியாகிய மூன்றும்,
உள்ளே இருக்கிற இருளைப் போக்குவதற்கு இறைவ
னுடைய அருள் தான் வன்மையுடையது.
மூன்று மன நிலை
நாம் விழித்துக் கொண்டிருக்கிறோம்; அல்லது தூங்கு
கிறோம். தூங்கும்போது இரண்டு நிலை ஈமக்கு வருகின்றன.
ஓன்று சொப்பன லை; மற்றொன்று எல்லாவற்றையும்
மறந்து தூங்கும் தூக்கநிலை. விழித்துக் கொண்டிருப்பது
தான் ஜாக்கிரம். சொப்பனம் காண்பது கனவுநிலை அல்லது
சொப்பனாவஸ்தை. நன்றாக அயர்ந்து தூங்குவது சுஷாப்தி.
யவஸ்தை, இந்த மூன்று நிலைகளிலும் நாம் தடுமாறிக்
கொண்டிருக்கிறோம். ஈமக்குப் பகல் நேரத்தில் விழித்துக்.
கொண்டிருக்கத் தெரியும். இரவு நேரத்தில் தூங்கத்
தெரியும். தூக்கத்தில் சொப்பனம் காணவும் தெரியும்.
இராத்திரி பகல் ஆகிய இரண்டுக்கும் நடுவில் சாயங்
காலம் இருக்கிறது. அதுபோல் விழிப்பு நிலைக்கும்
தூக்க நிலைக்கும் நடுவில் கனவு நிலை இருக்கிறது. கன
வீலே காண்பது முற்றும் உண்மை அன்று. ஆனால்
உண் டை யா க ஈ ட ந் தர ல் எவ்விதம் இன்ப
துன்ப உணர்ச்சி உண்டாகுமோ அதுபோன்ற அறு
பவத்தை அப்போதைக்குப் பெறுகிறோம். புலி வருவது:

==#==
80 உள்ளம் குளிர்ந்தது
போலக் கனவிலே காண்கிறோம். அதன் பயனாக
உண்மையிலேயே உடம்பில் வேர்வை வருகிறது. லூக்
சுத்தில் குழந்தைகள் பயந்து கொண்டு சிறுநீர் வீட்டுவீடு
வதைப் பார்க்கிறோம்.
சாயங்கால வேளையில் ஒளியும் இருளும் கலந்திருக்
கின்றன. அதுபோல் கனவில் பொய்யான Babs Pub
மெய்யான அநுபவமும் கலந்திருக்கின் றன. அந்தக் கனவு
விழிப்பு நிலையும் அன்று; தூக்க நிலையும் அன்று. gre
கினால் எல்லாவற்றையும் மறந்து தூங்குகிறோம்.
விழித்தால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்
கிறோம். அப்படி விழித்துக் கொண்டு பார்க்கிற பார்வை
உண்மையான பார்வை என்று சொல்ல முடியாது.
கண்ணால் காண்பது எல்லாம் மெய் அல்ல; காதால் கேட்
பது எல்லாம் உண்மை அல்ல என்ற பழமொழி உண்டு.
சினிமாவும் மனநிலையும்
ஒரு சினிமாப் படத்தைப் பார்க்கிறோம். பல பேர்கள்
பல விதமாக ஓடியாடிக் காரியங்கள் செய்வதைக் காண்
கிறோம். நாம் பார்க்கும் ஆளுக்கு உயரம், பரிமாணம்
ளல்லாம் இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால்
உண்மையில் அங்கே ஷ ப ரி மா ண 6 மார கனமோ
இலலை. அகல நீளம் மாத்திரம் இருக்கின் றன.
திரையில் படம் ஓடிக் கொண்டிருக்கும்போது பரிமாணம்
உள்ள பொருள்களைப் போலவே எல்லாம் தோன்று
கின்றன. ஆனாய் அந்த ஆட்டம் ரின்றவுடன் விளக்குப்
போட்டால் நிற்கிறது வெறும் திரைதான் என்பது தெரிய
வரும். படம் ஓடும்போது கூட அகல நீளப் படந்தான்
இருக்கிறதே தவிரப் பரிமாணப் படம் இல்லை. தோற்றம்
மாத்திரம் பரிமாணத்துடன். தோன்றுகிறது. சினிமாப்
படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒருவர் திரையைப் பார்த்

==#==
’ இராப்பகல் அற்ற இடம் 31
தால் படம் ஓடிக்கொண்டிருக்கிறபோது திரையில் ஈடக்
கிறது தோற்றந்தான் என்பதைத் தெரிந்து கொள்ள
லாம். அல்லது படம் முடிந்த பிறகு பார்த்தாலும்
திரைதான் உண்மையாக இருக்கும் பொருள் என்று
தெரிய வரும். உலகத்திற்கு ஆதியும் அந்தமும் ஆகிற
நிலையில் யாராவது இருந்து பார்த்தால் மற்றவை எல்லாம்
சினிமா ஓட்டம் போலப் பொய்யானவை என்று தெரிய
வரும்.
. கானல் உவமை
உலகம் தோற்றுகிற தோற்றத்திற்குக் கானல் நீரை
உவமையாகச் சொல்வது வழக்கம். வெப்பம் மிகுந்து
இருக்கும்போது அலை அலையாக நீர் ஓடுவது போலத்
தோற்றும்; அதுதான் கானல், கானலைப் பார்க்கிறவர்
கனில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். கானலை
கீராகக் கண்டு ஏமாந்து போகிறவர்கள் ஒரு வகை: அது
கானல்தான் என்று தெரிந்துகொண்டபிறகும் அதைப்
பார்க்கிறவர்கள் ஒரு வகையினர். இரண்டு பேருக்கும்
கானல் தோற்றம் இருக்கும். அவர்கள் கண் பார்வையில்
வேறுபாடு இல்லை. ஆனால் அவர்களுடைய கருத்தில்தாள்
வேறுபாடு இருக்கிறது. கானல் என்று உணராதவன் நீர்
என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பான். கானல்
என்று தெரிந்துகொண்டவன் அது வெறும் கானல்
என்பதை உணர்ந்திருப்பான். இரண்டு பேருடைய கண்
ணுக்கும் தோன்றும் தோற்றம் ஒன்றுதான். ஆனால்
உணர்விலே வேறுபாடு உண்டு. அதுபோல் உலகத்தில்
வளைய வருகின் ற ஈமக்கு ஈடக்கின்றன எல்லாம் உண்மை
என்று தோற்றும். அதே உலகத்தில் இருக்கும் ஞானிக்கும்
அந்தத் தோற்றம் உண்டு. ஆனால் அவை யாவும் வெறும்
தோற்றந்தான் என்ற தெளிவு அவனிடம் இருக்கும்.

==#==
82 உள்ளம் குளிர்ந்தது
மெய்யும் பொய்யும்
நாம் ஒரு சினிமாப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்
கிறோம்., சினிமாக் கதையில் சண்டை நடக்கிறது.
அதைப் பார்த்துக் குழந்தை வீல் என்று அழுகிறது.
யாரோ கதையில் இறுந்து போகிருள். நாலு பேர்
சேர்ந்து அழுகிறருர்கள். ஈமது குழந்தையும் அழுகிறது.
அதற்கு அங்கே ஈடப்பது வெறும் தோற்றம் என்ற
அஸிவு இல்லை. நமக்கோ அது ஈன்றுகத் தெரியும்.
சண்டை நடந்தாலும், சாவு ஈடந்தாலும் நாம் அஞ்சுவதும்
இல்லை; அழுவதும் இல்லை. நாம் எப்பொழுதும் போலவே
அமர்ந்திருக்கிறோம். உலக இயலில் குழந்தையைப் போல
இருப்பவர்கள் நாம். பெரியவர்களைப் போல இருப்பவர்
கள் ஞானிகள். அவர்கள் எப்போதும் நடுநிலையில்
இருப்பார்கள்.
அறிவும் அறியாமையும்
நாம் தூங்கும்போது ஒன்றும் அறியாமல் தூங்கு
கிறோம். விழித்திருக்கும்போது எல்லாவற்றையும் கண்டு
உவகையால் துள்ளி, துக்கத்தால் சாம்பிக் கொண்டிருக்
கிறோம். ஞானிகளுக்கோ தூக்கம், விழிப்பு இரண்டும்
ஒன்றுதான். தூக்க நிலையைக் கேவலம் என்றும், விழிப்பு
நிலையைச் சகலம் என்றும் சொல்வார்கள். அவர்கள்
இந்த இரண்டு அவஸ்தைகளையும் கடந்தவர்கள். தூக்
சுத்தில் எப்படி இந்திரியங்கள் எல்லாம் அடங்கி ராம்
தூங்குகறோமோ அப்படி அவர்கள் விழித்துக்கொண்
டிருக்கும்போது இருக்கிறார்கள். விழித்திருந்தாலும்
அவர்கள் மனம் அலையாது. அவர்களுக்குத் தூக்கமும்
இல்லை; விழிப்பும் இல்லை. இரவும் இல்லை; பகலும்
இல்லை.

==#==
இராப்பகல் அற்ற இடம் 83
அறிவு, அறியாமை என்ற இரண்டு வேறுபாடுகள்
நம்மிடத்தில் இருக்கின்றன. இந்திரியங்களால் ஒன்றை
அறிந்துகொள்வதுகூ.ட ஒருவகை அறிவுதான். அறிவும்
அறியாமையும் அற்ற இடத்தில் இருப்பவர்கள் பெரிய
வர்கள்.
* அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே ”
என்று குந்தர் அறுபூதியில் அருணகிரியார் பாடுகிறார்.
அறிவு என்பது சகலம்; அறியாமை என்பது கேவலம்.
அறிவு என்பது பகல்; அறியாமை என்பது இரவு. அறிவு
என்பது தெளிவு; - அறியாமை என்பது மயக்கம்.
இந்த இரண்டும் இல்லாத நடுநிலை இரவும், பகலும் அற்ற
நிலை, அந்த நடு நிலையில்தான் மனம் அடங்கி இருக்கும்.
கடவுளுடைய திருவுருவம் ஈன்றுகப் பதியும். ’அத்தகைய
இடம் ஒன்றை எனக்குக் காட்டி, தியானம் பலிக்கும்படி
யாகச் செய்யவேண்டும்’ என்ற விண்ணப்பத்தை அருண்
கிரியார் சொல்கிறார்.
இராப்பகல் அற்ற இடம் காட்டி யான் இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டையந் தாள் அருளாய்.
இரண்டு விதத் தடை
தியானம் பண்ண உட்கார்ந்தால் ஈமக்கு இரண்டுவித
மான தடைகள் வரும்.பெரும்பாலான தடைபுறத்திவிருந்து
வருவது. பூசை பண்ண உட்காருவான். வாசலில் செருப்
புத் தைக்கிறவன் பேசுகிற பேச்சும், உள்ளே குழந்தை
விளையாடுகிற விளையாட்டு ஒலியும், அழமுகைச் சத்தமும்
வந்து பாதிக்கும். அது ஏன், இது என் என்று கேட்டுக்
கொண்டே ஜபம் செய்வான். புறத்திலிருந்து வருகிற
ஓலிகள் நம்முடைய மன ஒருமைப்பாட்டைக் குலைக்கும்.
இவைகள் எல்லாம் காதில் படாமல் ஏதாவது ஒரு தனி
அறையில் போய் உட்கார்ந்தால் அப்போது பல ரீனைவுகள்
உள்ளிருந்து தோன்றும், மனம் எங்கேயாவது போய்
8

==#==
84 உள்ளம் குளிர்ந்தது
நிற்கும். யாரோ ஒருவரிடம் கடன் வாங்கினது அப்போது
தான் நினைவுக்கு வரும். பத்து வருஷங்களுக்கு முன்பு
நிகழ்ந்த நிகழ்ச்சி திடீரென்று வந்து நிற்கும். முதல்
நாள் போயிருந்த வீட்டின் முற்றத்தில் போய் மனம்
நிற்கும். இப்படிப் புறத்திலிருந்தும், உள்ளத்தி
லிருந்தும் பலபல தடைகள் வந்து தாக்கும். மனம் ஒரு
மைப்படுவது மிகவும் அருமையாக இருக்கும்.
தூக்கம்
எப்படியோ இந்த எண்ணங்களை எல்லாம் மாற்றி,
காதில் சப்தம் விழுந்தாலும் கேட்காதபடி . மனத்தை
ஒருமைப்படுத்துகிறோம். அப்போதும் ஓர் ஆபத்து இருக்
கிறது. மனம் ஒருமைப்படுவது போலத் தோன்றிப் பிறகு
தூக்கம் வந்துவிடும். தூங்குகிறவனுக்கு எந்த விதமான
சப்தமும் கேட்காது. உட்கார்ந்தபடியே தூங்கத் தலைப்
பட்டால் தியானம் எங்கே உருப்படப்போகிறது? ஆண்ட.
வனுடைய திருவுருவத்தைப் பற்றிக் கொண்டு மற்ற
வற்றை எல்லாம் மறந்து நின்றுல் மட்டுமே எவ்விதத்
தடையும் வராது; தூக்கமும் வராது. ஆனால் அந்த நிலை
வருவது மிகவும் கடினமானது. பல பல எண்ணங்களை
எண்ணுவதும், புறத்திலிருந்து வருகிற ஒலிகளைக் கேட்ப
தும் ஆகிய இவைகள் உள்ள லை ஜாக்கிர நிலை, தூக்கம்
வருவது கேவலநிலை. இந்த இரண்டையும் சகலகேவலம்
என்று சொல்வார்கள். ஒன்றையே பற்றி erp
தியானிக்கும்போது சகல கேவலம் அற்ற நீலை உண்டாகும்.
அதையே இரவு பகல் அற்ற இடம் என்று அருணகிரியார்
சொல்கிறார். அந்த இடத்தில் வெளியிலிருந்து வரும்
தடைகளும் இரா. உள்ளே இருந்தும் எந்தத் தடையும்
வராது.: தூக்கமும் வராது: மனம் ஒருமைப்பட்டு இறை
வனுடைய திருவருள் தியானத்தில் ஈடுபட்டால் தூக்கத்
திற்கு இடம் இல்லை.

==#==
இராப்பகல் அற்ற இடம் 88
சகல கேவலம் அற்ற நிலை
அந்த மாதிரி ஒரு ரிலையை எதையேனும் உபமானம்
சொல்லி விளக்க முடியாது. அதை அதுபவித்துத்தான்
தெரிந்துகொள்ள முடியும். ஒரு பெரிய சொத்தை எளி
தில் பெற்றவனுக்கு இராத்திரியில் தூக்கம் வருவது
இல்லை. ஆனால் அவன் மனம் மிகவும் உற்சாகத்தோடு
இருக்கும். அதைப் போன்ற லை என்று சொல்லலாம்.
ஆனால் அதுகூடச் சரியான உபமானமாகாது. மன நிறைவு
பெற்றபோது அதிக அலைச்சல் இல்லாத நிலையில் மனம்
இருக்கும். அது போன்றது என்று சொல்லலாம். அது
கூடச் சரியான உவமையாகாது. மனம் அலையாமல்,
எதையும் நீனையாமல், தூக்கம் கொள்ளாமல் ஒன்றையே
பற்றிக்கொள்ளும் ரலை அது. இரவு பகல் அற்ற அந்த
இடத்தை நீ எனக்குக் காட்டவேண்டுமென்று அருண
கிரியார் பிரார்த்திக்கிறார்.
இராப்பகல் அற்ற இடம் காட்டி.
துதித்தல்
அந்த இடத்தை அவன் காட்டிஞல் போதுமா? அந்த
இடத்தில் நின்று என்ன செய்ய வேண்டும்?
யான் இருந்தே துதிக்க,
இரவும் பகலும் அற்ற இடத்தைக் காட்டி, நான் அந்த
இடத்தில் இருந்து உன்னைத் துதிக்கும்படியாகச் செய்ய
வேண்டும் என்கிழமுர். இறைவன் திருவருளால் கிடைக்கிற
இரவும் பகலும் அற்ற இடத்தில் மயக்கம் இராது. புற
எண்ணங்கள் மோதா, சகல கேவலம் கடந்த நிலை உண்
டாகும். அந்த இடத்தில் ஈம் நிற்க வேண்டுமானால் எதை
யாவது பற்றிக் கொள்ள வேண்டும்.

==#==
86 உள்ளம் குளிர்ந்தது
பற்றுக்கோடு
இராப்பகல் அற்ற இடம்காட்டி
யான்இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டையதந் தாள் அருளாய்.
எம்பெருமானுடைய திருவடியைப் பற்றிக் கொண்டால்,
இராப்பகல் அற்ற இடத்தில் நெடுகேரம் இருக்கலாம்.
முருகனுடைய பாதம் குரா மலரையும், தண்டையை
யும் அணிந்திருக்கி றது. குரா முருகப்பெருமானுக்குறிய மலர்.
தண்டை உமா தேவியார் தன் குழந்தைக்கு அணிந்த
ஆபரணம். அவன் தன்னுடைய அன்னை சூட்டிய தண்
டையை மாத்திரம் அணிந்திருக்கவில்லை; அதோடு
அன்பர்கள் பூசிக்கின்ற குரா மலரையும் அணிந்திருக்
கிருன், அன்னை புனைந்த தண்டை மிகச் சிறந்தது. அத
னுடன் அன்பர் புனைந்த குரா மலரையும் அணிந்திருக்
கிருன். அத்தகைய திருவடியை நீ தரவேண்டுமென்று
பிரார்த்திக்கிறுர்.
அந்தத் திருவடி எதற்காக? மனம் பற்றிக் கொள்
வதற்காக. மனம் ஒரிடத்தில் நிற்கவேண்டும். ஏதையும்
பற்றிக்கொள்ளாமல் அது நிற்காது. ஒன்றையும் பற்றிக்
கொள்ள முடியவில்லையென்றால் தூக்கம் வந்துவீடும். அல்
லது பலவற்றைப் பற்றிக் கொண்டு வீதியில் போய்க்
குறும்பு செய்யும்.. இந்த இரண்டு நிலையும் இல்லாமல்
கட்டுப்பட வேண்டுமானால் அதை ஒன்றோடு சேர்க்க
வேண்டும். அது ஆண்டவனுடைய திருவடி, *உன்
திருவடியை என் உள்ளத்தைக் கட்டும் தறியாக ஆக்கிக்
கொள்ள வேண்டும்” என்பது போலச் சொல்கிறார்.
இராப்பகல் அற்ற இடம் கிடைத்தால் மட்டும்
போதாது. அங்கே இருக்கவேண்டும்.  இருப்பதாவது
உடம்பும் உள்ளமும் அலையாமல் அமைந்திருப்பது. பின்பு

==#==
இராப்பகல் அற்ற இடம் at
துதிக்க வேண்டும். இங்கே, துதித்தல் என்பது தியா
னத்தைக் குறிப்பது. அமைதியாக இருந்து தியானம்
செய்ய வேண்டும். அப்படித் தியானம் செய்வதற்கு ஒரு
பற்றுக் கோடு வேண்டும்.
நல்ல இடத்தில் உட்கார வைத்து, அமருவதற்கு ஏற்ற
வசதியும் செய்து, துதிப்பதற்கு முயற்சியும் செய்யச் செய்து
விட்டால் பயன் இல்லை. இவ்வளவுக்கும் லட்சியமாகிய
அல்லது பற்றுக்கோடாகிய ஒரு பொருள் வேண்டும். அது
தான் குராப்புனை தண்டையந்தாள்.
நான். இருந்தே துதிக்க
என்று சொல்கிறார். இருத்தல் என்பதற்கு உடம்பு அசை
யாமல் இருப்பது என்பது மாத்திரம் பொருள் அன்று.
மனத்தாலும் சஞ்சாரம் செய்யாமல் அமைதியாக இருத்தல்
என்று பொருள் கொள்ளவேண்டும்.
” மனம் அடங்கும் தஇறத்தினில் ஓரிடத்தே இருக்தறியேன் ”
என்று இராமலிங்க சுவாமிகள் இந்த நிலையைச் சொல்
AG.
மனம் அடங்கும் வகையில் ஏதாவது ஓரிடத்தில்
அமர்ந்திருக்க வேண்டும். அட்டாங்க யோகத்தில் மூன்றா
வது பயிற்சியாக ஆசனத்தைச் சொல்வார்கள். இயமம்,
நியமம், ஆசனம் என்று வரும், மனம் சூட்சுமமாக இருப்
பது, அதைப் பக்குவப்படுத்தி ஒரு நிலையில் வைப்பதற்குச்
சாதனம் செய்ய வேண்டும். அமைதியாக அமர்ந்து பயிற்சி
செய்ய வேண்டும்.
தாள் அருளாய்
குழந்தையிடத்தில் காகிதம் கொடுத்தாலும் கிழித்து
எறிந்துவீடும்; நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தாலும்
கிழித்துவீடும். வெறும் காகிதத்திற்கும், நூறு ரூபாய்

==#==
88 உள்ளம் குளிர்ந்தது
நோட்டுக்கும் உள்ள வேறுபாடு அதற்குத் தெரியாது.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரிந்து நூறு ரூபாய்
சோட்டின் மதிப்பை உணரச் செய்த பிறகு கொடுத்தால்
அது அதனை மிகவும் அக்கறையோடு பாதுகாக்கும். அவ்
வாறு, அமைதியற்ற மனத்தோடு இருக்கும்போது இறை
வன் இருத்தாளைக் கொடுத்தால் அதனால் பயன் வராது,
அந்தத் தாளின் மதிப்பை உணர்ந்து பயன்படுத்திக் கொள்
ளாமல் போய்வீடுவோம். ஆகவே, முதலில் மனத்தில்
அமைதியைத் தந்து அப்புறம் இறைவன் திருத்தாளைத்
தரவேண்டும். அமைதி உண்டாகக் கூடிய இடர்தான்
இராப்பகல் அற்ற இடம். அதனைத் தந்து, பின்பு அமைதி
யாக இருந்து துதிக்கச் செய்து, அப்புறம் தண்டையர் தாள்
தரவேண்டுமென்று முறைப்படுத்தி விண்ணப்பம் செய்
கிருர்.
””௭ன் மனம் ஈடுகிலையை அடைந்திருக்கும் இராப்பகல்
அற்ற இடத்தை நீ காட்ட வேண்டும். இடம் காட்டினால்
மட்டும் போதாது, அந்த இடத்தில் செய்வதற்குரிய செயல்:
வேண்டும். அந்தச் செயலுக்குப் பற்றுக் கோடாக உன்
திருவடியையும் # தந்து அருளவேண்டும்” என்கிறார்.
இவ்வாறு சகல கேவல கலையின்றி அமைதியான பாங்
கில் ஆண்டவனை த் தியானித்து அவன் திருவடியைப் பற்றிக்
கெரள்ளுதல் பேரின்பத்திற்கு வாயில். இதனைப் பெற
வேண்டுமென்று பிரார்த்தித்த அருணகிறியார் அடுத்தபடி
யாக முருகப்பெருமானைப் புகழ்கிறார்.
2
திருமால் முருகனைப் புகழ்தல்
சரி கூப்பிட்ட நாள்
கராப்படக் கொண்று அக் கரி போற்ற நின்ற

==#==
இராப்பகல் அற்ற இடம் 39
கடவுள்மெச்சும்
பராக்ரம் வேல, நிருத சங்கார, பயங்கரனே!
ஆண்டவனை த் தரிசனம் பண்ணப் போகமுர் அருண
கிரியார். அங்கே ஒரு தனிக் கோயிலில் முருகள் எழுந்
தருளியிருக்கிறுன். அவர் கோயிலுக்குள் நுழையும்போது
உள்ளே இருந்து பேச்சுக் குரல் வெளியே கேட்கிறது.
அது அவர் காதிலும் விழுகிறது. ’ஈமக்கு முன்னே யாரோ
ஒருவர் வந்து எம்பெருமானுடன் பேசிக் கொண்டிருக்கிறார்
போல இருக்கிறது’ என்று சற்றுத் தயங்கித் தயங்கி ரிற்
கிருர். உள்ளேகுரல் கேட்கிறது. ”ஏம்பெருமானே, உலகத்
தினர் விஷயம் தெரியாமல் உலகத்தை எல்லாம் காப்
பாற்றுகிறவன் நான் என்று என்னைப் புகழ்ந்து கொண்
டிருக்கிறுர்கள். ஆதிமூலமே என்று கதறிய யானைக்கு
நான் உயிர்ப்பிச்சை அளித்தேன் என்று அந்த உலகத்தார்
சொல்கிறார்கள். அந்த யானை என்னை நினைந்து அழுதது.
என் பெருமையைவிடப் பெரியது உன் பெருமை
என்று எனக்குத் தெரியாதா? இன்று மூன்று உலகமும்
நிலைபெற்று நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிற
தென்முல் அது உன் பராக்கிரமச் செயலால் அல்லவா?
நானும், பிரம்மாவும், மற்றவர்களும் சூர பன்மனுக்கு
வரம் கொடுத்து அவனைப் பலசாவியாக்கினோம். ary
அவன், தீட்டிய கட்டையிலேயே at பார்க்கிறது
போல, எங்களையே எதிர்த்தான். இந்திரன் ஈடுகடுங்கிப்
போனான். எங்களால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.
௩ உன்னுடைய பெரு வீரத்தினால் சூரபன்மனைச் சங்காரம்
செய்து மீட்டும் அமராவதியை அமராவதியாக்கிஞாய்.
இமையவர் நாட்டினில் நிறைகுடி ஏற்றி உன் வெற்றிக்
கொடியை ராட்டினாய். இந்தப் பெருமையை நான் அறிய
மாட்டேனா ?” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்
சொல்கிற  வார்த்தையிலிருந்து உள்ளே இருக்கிறவர்

==#==
40 உள்ளம் குளிர்ந்தது
இருமால் என்று தெரிகிறது. தம்முடைய மாப்பிள்ளையை
அவர் ஈன்கு அறிந்து புகழ்ர்து கொண்டிருக்கிறார். அந்தத்
திருமால் எத்தகையவர் ?
திருமாலின் பெருமை
குரி கூப்பிட்ட நாள்
கராப்படக் கொன்று அக் கரிபோற்ற நின்ற கடவுள்.
இருமால் மிகச் சிறந்தவர். உலகத்திற்கு ஆதியாகிய
கடவுள் யரர் என்ற கேள்விக்குத் திருமால் என்று சிலர்
விடை சொல்வார்கள். சிவபெருமான்தான் என்று வேறு
சிலர் சொல்வார்கள். ஆதி மூலமே என்று அழைத்த
யானைக்கு முன்னே திருமால் வந்து நின்முர். அவரே
எல்லாவற்றுக்கும் மூலமான பரம்பொருள் என்று
கசேந்திரன் கதையைச் செரல்லித் திருமாலின் பெருமையை
எடுத்துக் காட்டுவார்கள். ’யானையே சாட்சி சொல்லி
யிருக்கிறதே!; ஆதிமூலமே என்று அது கூறும்போது
பிரம்மா காப்பாற்ற வக்தானா? ருத்திரன் வந்தானா? அந்தப்
பெயருக்கு உடையவன் நான்தான் என்று திருமால்
எழுந்தருளிக் காப்பாற்றினார். அவரே எல்லோருக்கும்
மூலக் கடவுள் என்று பக்தர்கள் சொல்கிறுர்கள். இதைக்
கம்பன் பாடுகிறான்.
”கடுத்தகரராம் சுதுவமிமிர் கையெடுத்து மெய்கலங்கி
உடுத்ததிசை அனைத்தினுஞ்சென்
ஜெலிகொள்ள உறு துயரால்
அடுத்தபெகருர் தனிமூலத் தரும்பரமே பரமேஎன்று
எடுத்ததொருவா ரணம் அழைப்ப நீயோவந் தேனென்றாய்.”
*ஒரு வாரணம் அழைப்ப கீ தானே வந்தாய்!” என்று
கேட்கிறார். இப்படி விராதன் துதித்ததாகக் கம்ப ராமா
யணத்தில் வருகிறது. யானையின் புலம்பல் எட்டுத் திசை
களிலும் எதிரொலித்ததாம். எல்லாத் தேவர்களுடைய

==#==
இராப்பகல் அற்ற இடம் 42
காதிலும் கேட்டிருக்கும். ஆனாலும் அப்போது வந்து
காப்பாற்றினவர் - திருமாலே. இந்தக் கதையை
மனத்தில் கொண்டு,
கரி கூப்பிட்ட நாள்
கரரப்படக் கொன்று
என்று அருணகிரியார் சொல்கிறார். அதனைக் காப்பாற்றிய
திருமாலை நன்றி உணர்வு பொங்க அந்த யானை போற்றி
நின்றதாம். அது போற்றும்படி செய்து உலகுத்திற்குக்
கருணை புரிந்து நிலை நிற்கிற கடவுள் திருமால்.
அக் கரி போற்ற நின்ற கடவுள்.
கசேந்திரன் வரலாறு
அந்த யானை எது தெரியுமா? பாண்டி நாட்டில்
திருமாலிடத்தில் பக்தி உடையவனாக இந்திரத்யும்சன்
என்ற அரசன் இருந்தான். அவன் அகத்தியர் சாபத்தால்
யரனையானான். ஒவ்வொரு ராளும் ஆயிரம் தாமரையைப்
பறித்து வர்ஜ திருமாலை வழிபடும் வழக்கம் உடையது
அந்த யானை. அதற்குத் திருமாலை வழிபடவேண்டு மென்ற
அறிவு இருந்தது. அதனை முதலை பற்றிக்கொண்டவுடன்
திருமாலை. எண்ணி ஆதி மூலமே என்று கூப்பிட்டது.
அப்போது திருமால் ஓடி வந்தார். முதலையைச் சங்கரித்து
யானையை மீட்டார். முதலையின் வாயிலிருந்து விடுதலை
பெற்ற யானை திருமாலைத் தோத்திரம் செய்தது. இப்படி
ஆபத்தில் இருந்த யானையைக் காத்து அதுசெய்த துதிகளைக்
கேட்டுப் பெருமையோடு நிற்கி றவர் திருமால். *’அவ்வளவு
பெருமையுடைய திருமாலே மெச்சும்படியாக விளங்கு
கிறவன் எங்களுடைய வேலாயுதக் கடவுள்” என்று சொல்
கிருர் அருணகிரியார்.
கரி கூப்பிட்ட நாள்
கராப்படக் கொன்று அக் கரியோற்ற நின்ற

==#==
42 உள்ளம் குளிர்ந்தது
கடவுள் மெச்சும்
௰ராக்ரம வேல !
படியின்மேற் படி
இங்கே அருணகிரியார் திருமாவின் புகழை இவ்வளவு
சொல்கிறுரே! ஏன் ஒருவனை லட்சாதிபதி என்று சொல்
கிறோம். அதனால் அவன் புகழ் தெரிகிறது. அவன்
பெருமையை முதலில் சொல்லிவிட்டு, ”அவனைவீட இவன்
பணக்காரன்” என்று இவனைச் ௬ட்டினால் பின்னும் இவன்
பெருமை விட்டு விளங்கும். ஒரு பொருளின் உயர்வை
மிகவும் எடுத்துச் சொல்லி, அதைவிட உயர்ந்தது இது
என்றால் பின்னதன் உயர்வைச் சொல்லாமலே தெரிந்து
கொள்ளலாம். இது ஒருவகையான உத்தி. கம்பர் இந்த
உத்தியைப் பல விடங்களில் ஆளுகிறார். கோசலையின்
பெருமையைக் குகன் தெரிந்துகொள்ள வேண்டுமென்று
பரதன் பேசுகிறான். ”உலகம் பெரியது. அதை உண்டாக்கிய
பிரமன் அதைவிடப் பெரியவன். அந்தப் பிரமனைத் தந்த
திருமால் அவளனைவிடப் பெரியவன். அவனைப் பெற்ற
கோசலை பின்னும் பெரியவள்” என்று அடுக்கடுக்காகச்
சொல்கிறான்.
” கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல்தெவி, மூவுலகு மீன்றுனை
முன்னீன் முனைப்
பெற்றத்தாற் பெறுஞ்செல்வம் யான்பிறத்த
லால்துறந்த பெரியாள்.”
பல பெரிய பொருள்களை முதலீல் காட்டி அவற்
றுக்கெல்லாம் மேலான பெருமை உடையவள் என்று
பரதன் குறிப்பிக்கிறுன். இவ்வாறு படியின் மேல் படியாக
உயர்த்தி வைத்துக் காட்டுவது ஓர் அழகு. அந்த வகை
யில் அருணகிரியார். திருமாவின் பெருமையைக் கூறி

==#==
இராப்பகல் அற்ற இடம் 43
அதற்குமேல் ஒரு படி கட்டி, முருகப் பெருமானுடைய
புகழை வைத்துக் காட்டுகிறார்.
ஏதேனும் ஒன்றைப் பாராட்ட வேண்டுமானால்அந்தத்
துறையில் வல்லவர்கள் தாம் பாராட்டவேண்டும். சங்கீதம்
தெரியாதவன் கழுத்துச் சுளுக்கத் தலையை ஆட்டினாலும்
அதனால் பயன் இல்லை. உண்மையாக இசையின் சுவை
தெரிந்தவன் ஈயம் தெரிந்து தலையை ஆட்டினால் அதற்குப்
பொருள் உண்டு. கலைஞர்களுக்கும் மகிழ்ச்சி உண்டாகும்.
முதலையைக் கொன்று கசேந்திரனைக் காப்பாற்றிய பெரு
வீரராகிய திருமால் முருகப்பெருமானுடைய பராக்கிர
மத்தைப் போற்றுகிறார். இதனால் முருகப்பெருமானுடைய
பராக்கிரமத்தின் பெருமை ஈன்கு விளங்குகிறது.
பராக்கிரமம்
இறைவனுக்கு இரண்டு வகை ஆற்றலுண்டூ: அருள்
நிரம்பிய பல திருவிளையாடல்களைச் செய்வது: வீரம்
காட்டி அல்லாதவர்களை அழிப்பது. முதலில்சொன்னதைத்
திருவிளையாடல் அல்லது லீலை என்றும், பின்னால்
சொன்னதைப் பராக்கிரமம் என்றும் சொல்வார்கள்.
இரண்டும் ஆண்டவன் அருட் செயல்களே. ஆனால்
முன்னது ஈயமாகத் தோன்றுகிறது; பின்னது பயமாகத்
தோன்றுகிறது. இரண்டையும் முறையே அறக் கருணை,
மறக்கருணை என்று சொல்வார்கள். அறக் கருணை அறுக்
கிரகம்; மறக்கருணை ரிக்கிரகம். அநுக்கிரக நிக்கிரகுமாகிய
இரண்டும் ஒரு வகையில் இறைவன் பராக்கிரமத்தைச்
சொல்லும். இங்கே முருகப்பெருமான் எல்லோரையும்
விடச் சிறந்த பராக்கிரமம் உடையவனாக இருக்கிறுன்.
அவன் கையில் அவன் பராக்கிரமத்திற்கு அடையாளமாக
வேல் விளங்குகிறது.

==#==
44 உள்ளம் குளிர்ந்தது
நிருத சங்கார பயங்கரன்
அசரர்களைச் சங்காரம் செய்தவன் அவன். அவர்
களுக்குப் பயத்தைத் தோற்றுவிக்கிறவன். உலகத்தவருக்
குப் பயத்தை உண்டாக்கி ஞானிகளுக்கும், - தேவர்
களுக்கும் துன்பத்தை அளித்தவன் சூரன், தன்னுடைய
உமவினர்களாகிய அசுரர்களைப் படையாகக் கூட்டிச்
கொண்டு எப்போதும் துன்பம் செய்து கொண்டிருந்தான்.
அவன் பேரைக் கேட்டாலே இந்திரன் முதலிய தேவர்கள்
பயந்தார்கள். எல்லோருக்கும் பயத்தை உண்டாக்கித்
தாம் மட்டும் பயப்படாமல் இருந்த நிருதர்களும் பயம்
கொள்ளும்படி செய்தவன் முருகள்.
நிருதசங் கார பயங்கரனே!
”சிறந்த வீரராகிய திருமால் போற்றுகின்ற பெரு
வீரனே, உண்மையான வீரத்தை உணர்ந்த அக் கடவுள்
மெச்சிப் பேசுகின்ற பராக்கிரமத்தையுடைய வடிவேற்
பெருமானே, அசரர்கள் பயம் கொள்ளும்படியாகச் செய்து
அவர்களைச் சங்காரம் செய்த பெருமானே, நீ எனக்கு
இராப்பகலற்,ற இடத்தைக் காட்டி நான் அமைதியாக
இருந்து தியானம் செய்து உய்வதற்குரிய உள்லுடைய
தண்டையர் தாளைத் தரவேண்டும்” என்று இந்தப்
பாட்டில் அருணகரியார் பிரார்த்தனை செய்கிறார்.
*
இராப்பகல் அற்ற இடம்காட்டி
யான்இருந் தேது திக்கக்
குராப்புளை தண்டையந் தாள்அரு
ளாய்: கரி கூப்பிட்டநாள்
கராப்படக் கொன்றுஅக் கரிபோற்ற
நின்ற கடவுள்மெச்சும்

==#==
இராப்பகல் அற்ற இடம் 45.
பராக்ரம் வேல, நிருதசங்
கார, பயங்கரனே.
[இரவும் பகலுமாகிய சகல கேவலம் கடக்த ஈடுகிலையான
இடத்தைக் காட்டி யான் அங்கே கிலையாக அமர்ந்து துதிக்கும்
படியாகக் குராமலரை அணிந்த தண்டையோடு கூடிய அழகூய
நின் திருவடியை அருள்வாயாக; ஆதிமூலமே என்று கசேந்திரன்
அழைத்தபோது அதன் காலைப் பற்றி இழுத்த முதலையைக்
கொன்று, அழைத்த குசேக்திரன் துதிக்கும் வண்ணம் அதன்
முன்னே நின்று காட்சிதந்த கடவுளாகிய திருமால் புகழுகின்ற
பராக்கிரமத்தை உடைய வடிவேற் பெருமானே, அசரர்களைச்
சங்கார... செய்தவனே, அவர்களுக்குப் பயத்தை உண்டாக்கு
பவனே!
இராப்பகல்-சகல கேவல அவஸ்தைகள். இடம் என்றது
நிலையை, இருக்து-அமைதியாக இருந்து. கரா-முதலை. பட-இறக்க,
கடவுள்-திருமால். மிருதர்-அசரர்.
வேல, சங்கார, பயங்கரனே, தாள் அருளாய் என்று முடித்துப்:
பொருள் கொள்க.]
முருகன் திருவருளால் தியானம் பலிக்க வேண்டும்
என்பது கருத்து.

==#==
கண்ணாரக் காணும் காட்சி
நமக்காக அருணகிரிநாதர், ”நான் தியானம். பண்ணும்
படி உன் திருவடியைத் தரவேண்டும்” என்று பிரார்த்
தித்த பாட்டைப் பார்த்தோம். மறுபடியும் அருணகிரியார்
தாம் பெற்ற அறுபவத்தைச் சொல்ல வருகிறார். முதல்
பாட்டில். இறைவன் கோலம் தம் உள்ளம் குளிரக் குதி
கொண்ட அதிசயத்தைச் சொன்னார். அதற்கு மேற்பட்ட
அறுபவம் ஒன்றை இப்போது சொல்லப்போகிறார்.
புறத்தோற்றமும் அகத்தோற்றமும்
நாம் கண்ட கண்ட பொருளைப் பாராமல் இறைவன்
திருவுருவத்தைக் கண்ணால் ஈன்றுகக் காணவேண்டும்.
திருக்கோயிலுக்குச் செல்லும்போது இறைவனோடு
தொடர்புள்ள பொருள்களைப் பார்க்கிறோம். புறத்தில்
உள்ள தெய்வங்களைப் ’பார்த்துக் கொண்டு உள்ளே
இருக்கும் மண்டபத்திற்குள் நுழைந்து, கடைசியில்
இறைவன் திருமுன் நிற்கிறோம். அவனுடைய திருவுரு
வத்தைத் தீபாராதனை செய்யும்போது பார்க்கிறோம்.
அப்படிப் பார்க்கும்போது அந்த உருவம் நம்முடைய உள்
ளத்தில் நிற்கும்படி பார்க்கவேண்டும். புறத்தில் காணும்
போதே கண்ணை மூடிக்கொண்டு அந்த உருவத்தைஉள்ளே
பதித்துக் கொள்ளப் பழக வேண்டும். இப்படி நாளடை
வில் பழகப் பழகக் கண்ணை மூடிக் கொண்டால் அந்தத்
இருவுருவம் உள்ளே தோன்றும் நிலை உண்டாகும்.
ஏதோ ஒருயாள் பார்த்துவிட்டு வந்த மாத்திரத்தில் ஈம்
உள்ளத்தில் அந்த உருவம் நில்லாது, நம்முடன் மிகவும்’

==#==
கண்ணூக் காணும் காட்சி 42
நெருங்கி வாழுகின்ற மனைவியைக் கூடத் தனியே இருந்து
நினைத்தால் அவள் உருவம் அப்படியே தோன்றுவது
இல்லை. மனத்திற்குத் தெளிவாகக் காணும் நிலை கிடை
யாது என்று சொல்ல முடியாது. கனவில் அதே மனம் பல
பொருள்களைக் காணும்போது அவை மீகத் தெளிவாகவே
தோற்றுகின் றன. அதற்குக் காரணம்: மற்ற இந்திரியங்கள்
வேலை செய்யாமல் மனம் அப்போது தனி Borg ster
கிறது. அப்படித்தான் புறத்திலுள்ள ஒலி முதலியவற்றில்
உள்ளத்தைச் செலுத்தாமல், மனத்திலே வேறு எண்ணங்
களைக் கொள்ளாமல், புறத்தில் கண்ணால் கண்ட திருவுரு
வத்தை உள்ளத்தில் பதித்துக் கொள்ளப் பழகவேண்டும்.
அப்படிப் பழகினால் ஆண்டவன் கோயிலை வீட்டு வெளியே
வந்து வேறு ஓரிடத்தில் தனியே உட்கார்ந்து கண்ணை
மூடிக் கொண்டால், அந்த உருவத்தைப் பார்க்கலாம்.
பலகாலப் பழக்கத்தினால் உள்ளக் கிழியில் அந்தத்
தோற்றம் வரும்படி செய்து கொள்ளலாம். அந்த நிலை
வந்ததைத்தான், ’எம்பெருமான் தன்னுடைய திருவடி
முதலியவற்றோடு வந்து குருவடிவாக என் உள்ளம் குளிரக்
குதி கொண்டான்’ என்று முதல் பாட்டில் சொன்னார்.
இது உள்முகத்தில் தோற்றுகின்ற தோற்றம். அந்தத்
தோற்றம் வெளியிலும் தோற்றும் ஒரு தனி அறுப
வத்தை இப்போது சொல்ல வருகிறார்.
அதைப் படித்தால் முதலில் நமக்கு விளங்காது. சில
உதாரணங்களைக் கொண்டு பார்த்தால்தான் விளங்கும்.
பசி மிகுதியாக இருக்கிறவனுக்குக் கண் இருட்டிக்
கொண்டு வருகிறதென்று சொல்கிறோம். இங்கே வெளியில்
இருட்டு இல்லை; ஒளி நிரம்பியிருக்கிறது. இருந்தாலும்
உடம்பில் உள்ள பலவீனம் மனத்திலுள்ள சோர்வு
எல்லாம் சேர்ந்து வெளியில் உள்ள பொருள்கள்
மறைந்து போகும்படி கண்ணில் வந்து தாக்குகின்றன.

==#==
48 உள்ளம் குளிர்ந்தது
வெளியில் ஒளி சூழ்ந்திருக்கும்போது கூட உள்முகத்தில்:
ஏற்படும் மாறுதல்களினால் கண் மறைந்து வெளியில்
இருள் சகப்பீக் கொண்டிருப்பது போலத் தோற்றும்.
இப்படியே, வெளியில் இருள் கப்பீக்கொண்டிருக்கும்
போது சிலருக்குக் கருத்தில் உள்ள ஒளியினால் புறத்தில்
எல்லாம் ஒளிமயமாகத் தோற்றுவதும் உண்டு.
உருவெளித் தோற்றம்
ஏதாவது ஒரு பொருளிடத்தில் நமக்கு மிக்க ஆசை
உண்டானால் அந்தப் பொருள் ஈம் மனத்தில் தோற்றும்.
அந்த ஆசை முறுகினுல் மனத்திலே தோற்றுவதோடு
நீல்லாமல் புற வெளியிலும் தோற்றும். அப்படித்
தோற்றும் தோற்றத்தை உருவெளித் தோற்றம் என்று
புலவர்கள் சொல்வார்கள். அகத்தில் உள்ள காதல் மிகுதி
யாக ஆக அகத்தில் தோற்றும் தோற்றமே புறத்திலும்
வந்து தோற்றுமாம்.
நாம் கூடச் சில சமயங்களில் சிலவகையான காட்சி
களைக் காணுகிறோம். சுவரில் ஏதாவது ஒரு மூளி இருந்
தால் அந்த இடம் ஓட்டகமாகத் தோன்றும்; பெண்
மாதிரித் தோன்றும். மற்றவர்களுக்கு அது தோன்று.
ஓரிடத்தில் அழுக்குப் படிந்திருக்கும்; வட்டமாக இருக்கும்.
அதில் கண், காது, மூக்கு எல்லாம் ஈன்றுகத் தோன்றும்;
ஒரு சித்திரம் போலவே தோற்றமளிக்கும். எல்லோருக்கும்
அது தோன்றாது. நம்முடைய மனோபாவமே அப்படிக்
காண்பதற்குரிய காரணம்.
காதல் மிகுந்தவர்களுக்கு உருவெளித் தோற்றம்
தோன்றும் என்பதைப் பழைய இலக்கியங்கள் சொல்
கின்றன. இணை பிரியாமல் வாழ்ந்த காதலனும், காதலியும்
ஒருவரையொருவர் உருவெளியில் பார்க்கிறார்கள். காதலன்
பொருளைத் தேடிக் கொண்டு போகிறான். அந்தக்

==#==
கண்ணூரக் காணும் காட்சி 49
காலத்தில் பிரிவினால் இரண்டு பேரும் வாடுவார்கள்.
காதலன் காதலியை மினைப்பான். காதலி காதலனை கிளைப்
பான். அப்படி  கினைக்கும்போது அவரவர்களுக்கு
மற்றவரது உருவம் வெளியில் தோன்றுமாம்.
மனோ பாவம்
யாரோ ஒருவரை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்
போம். வீதியில் செடுக்தூரம் ஈம் பார்வையைச் செலுத்திக்
கொண்டிருப்போம். யாரோ ஓருவர் வந்து கொண்டிருப்
பார். அவருடைய தோற்றம் நாம் பார்க்கிற ஆசாயியே
என்று நினைக்கும்படியாக இருக்கும். ஆனால் பக்கத்தில்
வந்தால் உண்மை புலனாகும். நாம் யாரை எதிர் பார்த்துக்
கொண்டிருக்களறேமோ அவருடைய பாவம் ஈம் மனத்தில்
உறைந்திருப்பதனால் நாம் செடுர்தூரத்தில் பார்க்கிறவரை
நம்முடைய அன்பராகக் காண்கின்ற லை உண்டாகிறது.
மனத்தில் உள்ள பாவந்தான் அதற்குக் காரணம். அது
போலவே பரியூரணமான அன்பு இருக்குமானால் ஒன்றும்
இல்லாத இடத்திலும் நம்முடைய அன்புக்குப் பாத்திர
மானவருடைய உருவம் தோன்றும். கம்பராமாயணத்தில்
இப்படி ஒரு காட்சி வருகிறது.
இராமாயணக் காட்சி
சூர்ப்பணகையின் வாயிலாகச் . சீதாபிராட்டியின்
எழிலை இராவண்ணன் கேட்டான். கேட்டவுடன் அந்தப்
பிராட்டியீடம் ஆசை கொண்டான். அவன் சிதையைப்
பார்த்ததில்லை.. ஆனாலும் சூர்ப்பணகை வருணித்த வரு
ணனையைக் கொண்டு எப்போதும் பிராட்டியின் ரீனை
வராசகவே இருந்தான். ஒரு நாள் அவனுக்குத் திடீரென்று
வெளியில் ஒரு பெண்ணின் தோற்றம் தோன்றியது. அந்த
அழகிய தோற்றத்தைக் கண்டவுடன், அவள்தான் சீதை
4

==#==
50 உள்ளம் குளிர்ந்தது
யாக இருக்கு வேண்டுமென்று எண்ணினான். சிதையை
நகேரிலே கண்ட தன் தங்கையை அழைத்துக் காட்டவேண்டு
மென்று நினைத்தான். உடனே சூர்ப்பண்கையை வரவழைத்
தான். ”இவள்தான் நீ சொன்ன சீதையா? பார்” என்று புற
வெளியைக் காட்டினான். அங்கே இருந்தது வெறும் வெளி
தான். ஆனால் அவனுடைய உள்ளத்தில் இருந்த முறுகிய
காதலால் சீதையாகத் தோற்றியது. சூர்ப்பணகைக்கோ
இராமன்மேல் நினைவு இருந்தது. அந்தப் பெருமானைக்
கண்ணாரக் கண்டு’ அவனிடத்தில் முறுகிய ஆசையைக்
கொண்டிருந்தாள். தன்னுடைய உள்ளத்தில் அவனுடைய
உருவத்தை எப்போதும் எண்ணிக்கொண்டு அவன் அருள்
கிட்டவில்லையே என்று வாடிக் கிடந்தாள். அவளை இரா
வணன் இப்படி அழைத்துக் கேட்டவுடன், அவள் தன்
உள்ளத்திலுள்ள பாவத்தின். விளைவாக, ””இவன்தான்
அந்த வல்லில் இராமன் *’ என்முள். வெறும் வெளியில்
அவரவர்களுடைய மனோபாவத்திற்கு ஏற்றபடி உருவம்
தோன்றியது என்று கம்பர் பாடுகிறார்.
அருணகிரியார் அநுபவம்
உருவெளித் தோற்றம் என்பது காண்பவருடைய
பாவத்தினால் உணர்வதேயன்றி உண்மையானது அன்று.
உள்ளத்தில் தோற்றுகிற தோற்றம் எதுவோ, அதுவே
ஆர்வம் முறுகியிருப்பதனால் புறவெளியிலும் தோற்று
கிறது. வெறும் காமத்திற்கே இப்படி உருவெளித் தோற்
ஐம் தோன்றும் என்றால், உயிரோடு ஓட்டிய அன்புக்கு
அத்தகைய தோற்றம் வருவது வியப்பு அன்று. உள்ளத்
தில் எப்போதும் தியானம் பண்ணிக்கொண்டு இறைவ
னுடைய உருவத்தைக் காணும் இயல்புடைய பக்தர்
களுக்குப் புறத்திலும் அந்தத் திருவுருவம் தோற்றும்,
இந்த அநுபவத்தைப் பெற்றவர் அருணகிரியார்.

==#==
கண்ணூக் காணும் காட்சி 7
மூன்று நிலை
இறைவனைத் தியானிப்பதில் மூன்று வகையான நிலை
உண்டு. முதலாவது, இறைவனுடைய திருவுருவத்தைக்
கோயிலில் காணும்போதே மனத்திலும் பதிவு கொள்ளும்
படி காண்பது. அப்பொழுது கண்ணை மூடிக்கொண்டும்
திறந்து கொண்டும் பார்ப்பதனால் இது சாத்தியமாகிறது.
இது முதல் நிலை, அடுத்தது, கண்ணுக்கு முன்னால் எம்
பெருமானின் திருக்கோலம் இல்லாதபோதும், கோயி
லுக்குப் புறம்பே கெடுக்தூரத்தில் இருக்கும்போதும்
கோயிலில் கண்ட திருவுருவத்தை அகக் கண்ணில் கண்டு
நிற்பது. புறத்தில் முன்பு கண்ட திருவுருவமே இப்போது
ஒளிபெற்று அகத்தில் தோற்றும். இது இரண்டாவது
நிலை, பின்பு அகத்திலே கண்ட அந்த ஒளி மயமான
திருக்கோலத்தை எங்கே நினைத்தாலும் அங்கே புறவெளி
யில் காண்பது. உள்ளத்தில் காணுகின்ற காட்சியே இப்
போது புறத்திலும் தோன்றும். இது மூன்றாவது நிலை.
இதைச் சொல்கிறார் அருணகிரிநாதர்.
செங்கேழ் அடுத்த சினவடி வேலும் திருமுகமும்
பங்கே நிரைத்த நல் பன்னிரு தோகளும் பதுமமலர்
கொங்கே தரளம் சொரியும்செங் கோடைக் குமரன்ளன
எங்கே நினைப்பினும் அங்கேளன் முன்வந்து
எதிர்நிற்பனே.
”எங்கே நினைத்தாலும் அவன் என் முன்னால் வந்து நிற்
பான்” என்கிறார். முதல் பாட்டில் கூறிய அநுபவம்,
”என் உள்ளம் குளிரக் குதிகொண்டவே ”
என்பது. அது உள்ளத்தில் தோன்றிய காட்சி,
எங்கே நினைப்பினும் அங்கேளன் முன்வந்து
எதிர் நிற்பனே
என்பது புறத்தில் தோன்றிய காட்சி,

==#==
82 உள்ளம் குளிர்ந்தது
கனவுக் காட்சி
நமக்கோ உள்ளத்தில் கூடச் சரியானபடி காட்சி
கிடைக்கிறதில்லை. உள்ளத்தில் நினைந்து பழகினால் அது
கனவில் மிகத் தெளிவாகக் காணும், ஆசார்ய சுவாமிகள்
ஓரிடத்தில், ”ஆண்டவனிடத்தில் பக்தி இருக்கிறதா என்
பதைச் சோதித்துக் கொள்ளச் சொப்பனம் இருக்கிறது.
சொப்பனத்தில் இறைவன் திருவுருவம் தோன்றினால் ஈம்
முடைய பக்தி சிறந்தது என்று தெரிந்து கொள்ளலாம் ”
என்று சொல்லியிருக்கிறுர்கள். நிறையப் பணம் வைத்துக்
கொண்டிருப்பவர்கள். ”எங்கே திருடன் வந்துவீடு
வானோ?” என்று பகல் எல்லாம் பயந்து கொண்டிருக்
கிருர்கள். அவர்களுக்குக் கனவில் திருடன் வருவான்.
எப்போதும் மீனைவில் எது மிகுதியாக இருக்கிறதோ அது
கனவில் வரும். அதுபோலவே எது இல்லை என்ற குறை
யுண்டோ அதுவும் கனவில் வரும். அதிகமாகப் பழகுகின் ற
பொருளும் வரும்; எது கிடைக்கவில்லை என்று நினைந்து
ஏங்கி இருக்கிறோமோ அதுவும் வரும்.
இந்த இரண்டு வகையினால் ஆண்டவனுடைய சொரு
பத்தை நாம் கனவில் காணலாம். அடுத்தடுத்து அவன்
திருக்கோயிலுக்குச் சென்று அவன் திருவுருவ தரீசனம்
செய்திருக்க வேண்டும். அல்லது, !”எம்பெருமானே ! உன்
னுடைய திருவருள் கிடைக்க வில்லையே” என்று ஏங்கிக்
கொண்டிருக்க வேண்டும். . அப்படிச் செய்தால் அவ
னுடைய காட்சி கனவில் தோன்றும். இவ்வாறு தோன்று
வது ஒரு வகை அநுபவம்.
இதை இராமலிங்க சுவாமிகள் ஒரு பாட்டில் சுட்டு
இறருர் }
” பண்ணேறும் மொழிஅடியார் பரவி ஏத்தும்
பாதமலர் அழகினை இப் பாவி பார்க்கின்
கண்ணேறு படும்என்றோ கனவி லேனும்
காட்டென்றால் காட்டுகிலாய் ; கருணை ஈதோ !”

==#==
கண்ணூக் காணும் காட்சி 58
இதில் இராமலிங்க சுவாமிகள், எஏங்கினால் கனவில்
காணலாம் என்ற உண்மையைப் புலப்படுத்துகிறார்.
ஈன்றுகக் கண்டு, நன்றாக உள்ளத்தில் வைத்துக் கனவிலும்
கண்டு, பின்பு நினைக்கும்போது அதனைப் புறத்திலும்
கண்டு ஆனந்தம் அடைவது சிறந்த பக்தர்களுடைய
இயற்கை, மூன்றாவது நிலைதான் புறக் காட்சி. அதை
இந்தப் பாட்டில் சொல்கிறார் அருணகிரியார்.
லிங்கமும் வேலும்
தன்னைக் கண்டு மனசில் கொள்ளவேண்டுமென்று
கருதியே சிவலிங்கம் முதலிய எளிய உருவத்தை ஆண்ட
வன் எஏற்றருஸியிருக்கிறுன்.. இறைவன் திருக்கரத்தில்
மானும் மழுவும்,  திருமுடியில் பிறையும் கங்கையும்
கொண்ட திருக்கோலத்தைக் கண்ட பிறகு மனசில் ரினைத்
ணுப் பார்த்தால் எளிதில் அந்தக் கோலம் பதியாது. அப்படி
யின் றிச் சிவலிங்கத்தையே பார்த்தால் அது எளிதில் பதி
»ம். அதனைச் சோதிமயமாகப் பார்க்கிற நிலை வந்துவிட்
டால் பின்னும் சிறப்பாக இருக்கும். சிவலிங்கம் அருவுருவம்
என்று சொல்வார்கள். அதாவது முழு உருவமும் அன் று;
முழு அருவமும் அன்று. இரண்டு தன்மையும் ஒருங்கே .
கொண்டது என்று பொருள். கால், கண் முதலிய இல்லா
மல் இருத்தலால் முழு உருவம் என்பதற்கில்லை; கண்ணால்
காணும்படி இருப்பதனால் முழு அருவம் என்று சொல்வதற்
கும் இல்லை. ஆகையால் இரண்டுக்கும் ஈடுவில் அருவுருவம்
என்று சொல்கிறார்கள். அந்த லிங்கம் மிக எளிதில்
தியானத்தில் வைப்பதற்குரியது.
அப்படி முருகப்பெருமானை வழிபடுகிறவர்களுக்குத்
தியானத்திற்கு எளிதாக இருக்கிற பொருள் ஒன்று
உண்டு. அவன் திருக்கரத்தில் மின்வெட்டைப் போலத்
தோற்றும் வேல் இருக்கிறது.  திருவடியிலிருந்து திரு

==#==
54 உள்ளம் குளிர்ந்தது
முடி வரைக்கும் தொடர்புடையது அது. அது மிகவும்
எனிதில் நினைப்பதற்குரியது. முதலில் நினைவுக்கு வரு
வது அதுதான். முதலில் அது தோன்றுகிறது. என்று
அருணகிரியார் பாடுகிறார்.
செங்கேழ் அடுத்த சின வடிவேலும்.
செங்கேழ் - செய்ய நிறம். அதனைக் கொண்ட சினம்
பொருந்திய வேல் அது. முருகனுக்கு உள்ளதை வேலின்
மேல் ஏற்றிச் சொன்னபடி. உலகத்தினருக்குத் துன்பத்
தைத் தரும் அசுர சக்தியிடம் உள்ள கோபம் அது.
அப்படியின்றீச் சின்னமான வடிவேல் என்றும்
பொருள் கொள்ளலாம். முருகப் பெருமானுக்குரிய சின்ன
மாக அமைகின்ற வேல் என்பது அதற்குப் பொருள்.
முருகப் பெருமானுக்குப் பிரதிரிதியாக எழுந்தருளுக௰ற
சின்னம் வேல், Cada முருகனை ஆவரசனம் பண்ணிப்
யூசை பண்ணுவது பழங்கால முதல் உள்ள வழக்கம்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் முருகனுடைய திருக்
கோயிலை வேற்கோட்டம் என்று குறிப்பிடுகிறார்.
வேலையே முருகனாக வைத்துக் கும்பீடும் வழக்கத்தை அது
காட்டுகிறது. இன்றும் யாழ்ப்பாணத்தில் சில கேர்யில்
கனில் வேலை ஈட்டு முருகளாக வழிபட்டு வருகிறார்கள்.
இப்படி எம்பெருமானுக்குச் சின்னமாக இருக்கும்
ஞானசொருபமாகிய வேலை, சிவந்த ரிறத்தையுடைய
வேலை எளிதில் தியானப் பொருளாக மினைத்தால் அது
உள்ளத்தில் வந்து தோன்றும். அந்த வேலைப் பற்றிக்
கொண்டால் முருகனுடைய திருக்கோலம் தொடர்ந்து
காட்சியனிக்கும். இவற்றை எல்லாம் நன்கு உணர்த்து
வரர்போன்று, புறத்தில் தோன்றும் காட்சியில் முதலில்
தோற்றுவது வேல் என்று சொல்கிறார்.
செங்கேழ் அடுத்த சினவடி வேலும்.

==#==
கண்ணூரக் காணும் காட்சி 52
திருமுகம் முதலியன
பின்பு தோன்றுவது எது? முருகப்பெருமான் BE
, முகம் தோன்றுகிறதாம்.
இருமுகமும்.
எம்பெருமான் ஆறு திருமுகம் உடையவன். அவை
தோன்றுகின்றன. அந்த முகங்களுக்கு இரண்டு பக்கமும்
வரிசையாக உள்ள பன்னிரண்டு தோள்களும் தோன்று
கின் றன.
பங்கே நிரைத்தல் பன்னிரு தோளும்,.
எம்பெருமானுடைய வேல் தோன்றுகிறது. அறு முகங்
களும் தோன்றுகின்றன. பின்பு பன்னிரு தோள்களும்
தோன்றுகின்றன. *எங்கே நினைப்பினும் இவைகள்
ளல்லாம் தோன்றுகின்றன” என்கிறார்.
செங்கோட்டு வேலன்
அருணகிரிகாத சுவாமிகளுக்குத் திருச்செங்கோட்டு
வேலனிடம் தனி அன்பு உண்டு. இதனை முன்பும் பல
முறை பார்த்திருக்கிறோம். எந்தத் தலத்தையும் நினைக்
காத அறுபூதியில் ’ஈரகாசல வேலவனை’ நினைக்கிறார்.
’செங்கோட்டில் உள்ள எம்பெருமானைக் காண்பதற்கு
நான்முகன் நாலாயிரம் கண் படைத்திலனே’ என்று குறை
பட்டதையும் ஈரம் கேட்டோம். அந்தச் செங்கோட்டு
வேலனை இப்போது சொல்கிறார். அவர் மனம் அந்தத்
தலத்தில் மிகவும் ஈடுபட்டிருக்கிறது. ’செங்கோட்டிலே
எழுந்தருளியிருக்கும் முருகனை எங்கே நினைத்தாலும் ௮வ
னுடைய வேல் முதலியன தோற்றும்’ என்று இந்தப்
பாட்டில் சொல்கிறார்.
பதுமமலர்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன்ளன
எங்கே நிளைப்பினும் அங்கே என்முன் வித்து
எதிர்நிற்பனே.

==#==
56 உள்ளம் குளிர்ந்தது
திருச்செங்கோட்டைச் சொல்லும்போது அங்கே நீர்வள
மும், நிலவளமும் நிறைந்து நின்ற காட்சியையே சொல்
Ber. முன்பும் அப்படிச் சொல்லியிருக்கிறுர். நீர்வளம்
நிரம்பிய பொய்கையில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்
கின் றன. முத்துக்கள் பிறக்கும் இடங்களில் தாமரையும்
ஒன்று. கரும்பிலும், யானையின் தந்தத்திலும், சிப்பி
யிலும், மேகத்திலும் முத்துக்கள் தோன்றும் என்று
சொல்வார்கள். முத்துவகைகளில் ஒன்று தாமரை மலர
லிருந்து தோன்றுவது. திருச்செங்கோட்டிலுள்ள பொய்
கையில் தாமரையிலிருந்து முத்துக்கள் பிறக்கின்
மனவாம்.
பதும மலர் கொங்கே தரளம் சொரியும் செங்கோடை.
கொங்கு - வாசனை. தரளம் - முத்து. தாமரை மலர்கள்
வாசனையையும் முத்துக்களையும் சொரிகின் ற திருச்செங்
கோடு என்கிறுர். ஆண்டவனுக்கு முத்தையன், முத்துக்
குமாரசுவாமி என்ற பெயர்கள் உண்டு. முத்துச் சொரி
யும் இடங்களில் எல்லாம் அவன் இருப்பான்.
”ஒருகோம முத்தம் தெள்ளிச் கொழிக்கும்
கடற்செக்தில் மேவிய சேவகனே”
என்று பின்னே ஒரு பாட்டில் வருகிறது.
இருச்செந்தூரில் கடல் முத்துச் சொரிகிறது. திருக்
செங்கோட்டிலோ பதும மலர் முத்தைச் சொரிகிறது.
கவிஞர் கற்பனை
“Stier மலர்களிலிருந்து முத்துக்கள் விழுவ
தாவது! அவற்றை அருணகிரியார் பார்த்தாரா ?” என்ற
கேள்வி தோன்றலாம். புலவர்கள் எதையேனும்
சிறப்பிக்க வேண்டுமானால் அதைப் பெரிதாக்கிச் சொல்
வது ஒரு சம்பிரதாயம். அருணகிரீநாதர் பெரும் புலவர்.

==#==
கண்ணூரக் காணும் காட்சி 57
கற்பனையாகவும் மிகைப்படுத்தியும் சொல்வது அவருக்கு
உரிமை, நாம் கண்ணிலே காணுகின்ற பொருளைவிட
அவர் கற்பனையில் காணுகின்ற பொருள் பல காலத்திற்கு
நிற்றது ; சொல் வடிவிலே நிற்கிறது. தாமரை மலர்கள்
முத்துக்களைச் சொரிகின் றன என்று சொல்வதனால் ராம்
தெரிந்துகொள்ள வெண்டிய கருத்து என்ன? அங்கே
sages தாமரை மலர்கள் மலர்கின்றன என்பதுதான்.
நீர்வளம் உடைய இடம் என்பதைக் கற்பனையால் சற்று’
உயர்த்திச் சொல்கிறார்.
*அங்கே குமரன் இருக்கிறான். தாமரை மலர் மலர்ந்த
இடத்தில், செங்கோட்டின்மேல் மாரனைக்  குற்சிதம்
செய்யும் பேரழகுடைய முத்துக்குமாரன் எழுந்தருளியிருக்
கிறருன், அவனை அந்தக் கோயிலுக்குச் சென்று காண
வேண்டுமென்பதே இல்லை. எங்கேயாவது தனியே ஆசனம்
போட்டு ரினைக்கவேண்டும் என்பதும் இல்லை. எந்த இடத்
இல், எந்தக் காலத்தில் நினைத்தாலும் அங்கே வந்து என்
எதிரிலே தோன்றுகிறுன்’ என்கிருர். பக்குவம் முதிர்ந்து
விட்டமையினால் முன்னாலே சொன்ன அப்பியாசங்கள்
இல்லாமலேயே, எங்கே நினைத்தாலும், எப்போது நீனைத்
தாலும் பார்க்குமிடம் எல்லாம் அவனைக் காண்கிறவர்
அருணகிரி நாதர்.
அபிராமி பட்டர் அநுபவம்
இப்படி அருணகரிசாத சுவாமிகள் மட்டும் சொன்னால்
கம்மைப் போன் றவர்களுக்குக் கொஞ்சம் சந்தேகம்
உண்டாகும். இந்த அநுபவம் உண்மையாக இருந்தால்
வேறு பக்தர்களுக்கும் இது கிடைத்திருக்க வேண்டும்.
அப்படி யர்ராவது கிடைத்ததாகச் சொல்லியிருக்கிறார்
களா? அறுபூதிமான்களுக்கு இந்த அநுபவம் கிடைக்கும்.
அப்படிப் பெற்ற அருயபூதிமான்களில் ஒருவர் அபிராமி

==#==
58 உள்ளம் குளிர்ந்தது
பட்டர். அவர் பார்க்கின்ற திசை எல்லாம் எம்பெரு
மரட்டியைக் காணும் அநுபவத்தைப் பெற்றவர். அவர்
”பார்க்கும் திசைதொறும் பாசாய் குசமும்
பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்என்
அல்லலெல்லாம்
தீர்க்கும் திரிபுரை யாள்திரு மேனியும்
சிற்றிடையும்
வார்க்குங் குமமூலை யும்மூலை மேல்முத்து
மாலையுமே”
என்று பாடுகிறார். பாட்டுக்கு ஒரு முடிவு இருப்பதாகத்
தோன்றவில்லை. ’பாரர்க்கும் திசைகளில் எல்லாம் இப்படி
இப்படி’ என்று அலங்காரத்தோடு சொல்லிக்கொண்டே
வருகிறவர் அப்படியே மெய் மறந்து அஆனந்தவசப்பட்டு
விடுகிறார். ஆனந்த அதிசயம் வரும்போது அப்படித்தான்
வார்த்தை முடிவடையாமல் இருக்கும். ’ஒரு கையில் பாசம்,
ஒரு கையில் அங்குசம், ஒரு கையில் சரும்பு வில், ஒரு
கையில் மலர்ப் பாணங்கள், என் மனத்தில் தோற்றுகிற
இன்பங்கள் எல்லாவற்றையும் நீக்குகிற மகா செந்
தர்யம் நிரம்பிய திருமேனி, சிறிய இடை, கச்சைக் சட்டிய
நகல், திருமேனியில் தோன்றும் முத்து வடம் இவை
எனக்குத் தோற்றுகின் றன” என்று சொல்ல வந்தவர்,
அப்படியே எம்பெருமாட்டியின் திருமேனி லாவண்யத்தில்
சொக்கி வாக்கியத்தை முடிக்காமல் விட்டுவிடுகிறார்.
அவருக்குப் பார்க்கும் இசைதோறும் அபிராமியின்
திருவுருவம் தோன்றியது.
செங்கோடைக் குமரன் என”
எங்கே நிளைப்பினும் அங்கேயென் முன்வந்து
எதிர்நிற்பனே .
என்கிறார் அருணகிரீராத சுவாமிகள்,

==#==
கண்ணூரக் காணும் காட்சி 58
அதுபவம் வர வழி
இவர்கள் அநுபவிக்கின் ற அநுபவம் நமக்குக் கிடைக்
இது இல்லையே. ஏன்? பார்க்கும் திசைதொறும் எம்பெரு
மாட்டியின் எழில் உருவத்தைக் காணவேண்டுமானால்
அதற்கு இரு பக்குவம் வேண்டும். அருணகிரிப்பெருமான்,
”என் உள்ளம் குளிரச் குதிகொண்டவே” , என்று
முன்பு சொன்னார். அந்த நிலையே நமக்கு வரவில்லை. அதற்கு
மேற்பட்ட நிலையை அல்லவா இப்போது சாம் கேட்
கிறோம்? இத்தகைய நிலைகள் ஈமக்கு வரவேண்டுமானால்
என்ன செய்ய வேண்டும்? அதை அபிராமிபட்டர் வேறு
ஒரு பாட்டில் சொல்கிறார்.
”வெளியின்ற மின்திரு மேனியைப் பார்த்தென்
விழியும்செஞ்சம்
களியின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை;
கருத்தினுள்ளே
தெளிகின்ற ஞான் திகழ்கின்றது; என்ன ’
திருவுள மோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி
உறைபவளே.”
”’ஆகாசமாக இருந்த இடத்தில் உன் திருமேனி தோன்றி
யது. அதைக் கண்டு முதலில் என் விழியும், என்
நெஞ்சும் நிரம்பி ஆனந்தம் பொங்கி வழிகிறது. அதற்கு
ளல்லையே இல்லை. அந்த ஆனந்த வெள்ளத்திற்குக் கரை
கட்ட முடியவில்லை. நீ என் கருத்தில் நிறைந்திருந்தாய்.
இப்போது புறவெளி எல்லாம் காட்சி அளிக்கிறாய்.
அப்படி வெளி நின்ற திருமேனியைப் பார்க்கும்போது
என் விழியும், நெஞ்சும் ஆனந்தம் நிரம்புகிறது. அந்த
ஆனந்தத்திற்குக் காரணம் என்ன தெரியுமா?’
”கருத்தினுள்ளே
தெளிரின் ற ஞானம் இகழ்கின் றது; என்ன தருவுளமோ?”

==#==
60 உள்ளம் குளிர்ந்தது
’”என்  மனத்திற்குள்ளே தெளிவுபெறுகின்ற ஞானம்
விளங்குகிறது. புறவெளியில் உன் திருமேனி தோன்று
வதற்குக் காரணம் என்ன என்று பார்த்தேன்; என்
உள்ளம் தெளிந்திருக்கிறது. இந்தத் தெளிவு ஞானத்தால்
வந்தது. என் கருத்துத் தெளியும்படி ஞானம் உண்டாகச்
செய்த உன் திருவருளை என்ன என்று சொல்வேன்!”
இவ்வாறு அபிராமிபட்டர் அதிசயப்படுகிறார். ஒன்பது
கோணங்களில் எழுந்தருளி ஈலம் செய்கின்ற பெரு
மாட்டியைப் பார்த்து அவர் பாடுகிறார்.
அருணகிரி srg சுவாமிகளும், அபிராமிபட்டரும்
அறுபூதியில் ஓரே நிலையில் இருந்தவர்கள்; உள்ளம்
தெளிவு பெற்று, அந்த உள்ளத்தில் இறைவனுடைய
திருவுருவத்தைக் கண்டு, பின்பு முறுகிய பேரன்பினால்
உள்ளே கண்டதை வெளியில் காணப் பயின்றவர்கள்.
பிடித்த படமும் காட்டும் படமும்
ஓரிடத்தில் ஒருவன் இருந்து படம் பீடிக்கிறூன்.
அப்படிப் பிடித்த படத்தைத் தனியாக வேறு ஓர் இருட்
பறையில் கொண்டு வந்து கழுவுகிறான். கழுவீன
பிறகு படம் உருவாகிறது. அதன் பின்பு திரை கட்டி
அந்தப் படத்தை வைத்துச் காட்டினால் திரையில் அந்த
உருவம் தெரிகிறது. சினிமாத் திரையில் தெரிகிற உருவம்,
முன்னாலே தோன்றிய உருவத்தை எடுத்த பட வரிசையில்
லிருந்து விளைந்த விளைவு. நடித்த காட்சியை முதலில்
படம் பிடிப்பது. அதன் பின்பு பீடித்த படத்தைக்
கழுவித் தெளிவாக்குவது, பின்பு அந்தப் படத்திலிருந்து
திரையில் காட்சியைத் தோற்றச் செய்வது ஆக மூன்று
நிலையைக் சினிமாவில் பார்க்கிறோம். அவ்வாறே கோயிலிலே
ஆண்டவனைச் காண்பது, பின்பு உள்ளத்தில் தெளிவாகக்
காண்பது, பின்பு புறத்தில் காண்பது என்ற மூன்று

==#==
கண்ணூரக் காணும் காட்சி 61
நிலைகளை இங்கே பார்க்கிறோம். நாள்தோறும் ஆண்டவன்
திருக்கோயிலுக்குச் சென்று ஒரு பயிற்கியும் இல்லாமல்
கும்பிட்டு வருவதில் பயன் இல்லை. அந்தக் கோயிலையே
உள்ளத்தில் கொண்டுவந்துவீட வேண்டும். ஈம் உள்ள த்
தில் கர்ப்பக்கிருகத்தைச் சிருஷ்டி பண்ண வேண்டும். உள்
ளம் எம்பெருமானுடைய தரீசனத் தில் ஈடுபடவேண்டும்.
இப்படிப் பலகாலம் பயின்று, எப்போது நினைத்தாலும்
தெளிவாக அந்தத் திருவுருவத்தைக் காணும் நிலை வந்து
வீட்டால், அதற்கப்பால் புறத்தில் காணும் நிலையும் உண்
டாகும். இந்த அநுபவத்தை அருணகிறியாரும், அபிராமி
பட்டரும் சொல்கிறார்கள்.
%
செங்கேழ் அடுத்த சினவடி
வேலும் திருமுகமும்
பங்கே நிரைத்தநல் பன்னிரு
தோளும் பதுமமலர்
கொங்கே தரளம் சொரியும்செங்
கோடைக் குமரன்என
எங்கே நினைப்பினும் அங்கேளன்
முன்வந்து எதிர் நிற்பனே.
[செம்மையான கிறத்தைக் கொண்ட சினமுள்ள கூர்மையான
முருகனது வேலும், அவனுடைய திருமுகங்களும், பக்கத்தில் வரிசை
யாக உள்ள கல்ல பன்னிரண்டு திருத்தோள்களுமாக, தாமரை
மலரானது மணத்தையும் முத்தையும் சொரிகின்ற திருச்செய்
கோட்டில் எழுக்தருளியிருக்கும் குமரன் என்று எங்கே கிளைத்
தாலும் அங்கே அடியேனுடைய முன்னாலே வந்து எதிரே காட்சி
தந்து கற்பான்.
கேழ்-மிறம், அசரரின் இரத்தம் தோய்தலால் செக்கிறம்
பெற்றது. மாணிக்கம் பதித்த வேலாதலின் செக்கிறமுடையதாயிற்று

==#==
62 உள்ளம் குளிர்ந்தது
என்பதும் ஆம். சினவடிவேல்: உடையானது சினம் கருவியின் மேல்
ஏற்றப்பட்டது, சின்னமாகிய வடிவேல் என்றும் கொள்ளலாம்.
வடி - கூர்மை, பங்கு - பக்கம். கிரைத்த - வரிசையாக அமைந்த,
பதுமமலர்: எழுவாய். *பதுமமலர்க் கொங்கே * என்றும் பாடம்.
கொங்கு - மணம் ; பூக்தாதுமாகும். தரளம் - முத்து. செங்கோடை~
இருச்செங்கோடு. எங்கே என்றது  திருச்செங்கோடல்லாத பிற
இடங்களை, எங்கே என்றதனோடு எப்பொழுது நினைத்தாலும் என்
பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிற்பன் என்றது, மின்
னலைப் போலே தோன்றி மறையாமல், சன்றுகத் தரிசித்து இன்
புறும்படி நிற்பான் என்ற கருத்தை உடையது.]

==#==
பய பக்தி
பக்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபக்தி என்ற
தொடரை அடிக்கடி ஈம் உபயோகிப்பது உண்டு. ஆனால்
அதன் சரியான பொருள் இன்னதென்று பலருக்குத்
தெரிவது இல்லை. யாரிடத்தில் பயம் உண்டாகிறதோ
அவரிடத்தில் பக்தியும் உண்டாகவேண்டுமென்றே பலர்
கிணைத்துக் கொண்டிருக்கிறுர்கள். தந்தையினிடம் பய
பக்தியாக ஈடந்து கொண்டான் என்பதுபோல உதாரணத்
தையும் காட்டுகிறுர்கள். மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் சிலர்,
கடவுனீடம் பக்திகொண்டு வழிபடுவதற்கு மூலகாரணம்
பயம் என்று எழுதியிருக்கிறார்கள். ஆதி மனிதன் இடி
யைக் கண்டு பயந்தானாம். அதையே கடவுள் என்று
போற் றினானாம். இவ்வாறு பயமும் பக்தியும் ஒரே
பொருளிடத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு பய
யக்இ என்பதற்குப் பொருள் சொல்வார்கள். அது அவ்
வளவு பொருத்தம் என்று எனக்குத் தோன்றவில்லை.
பயம் ஓரிடம் பக்தி வேறு இடம்
பியமுள்ள இடத்தில் போலிப் பக்தி தேரன்றுமே
யொழிய உண்மையான பக்தி தோன்றாது. முரட்டு ஆள்
ஒருவன் நம்மை அடிக்க வருகிறான். அப்போது அவனிடத்
இல் காம் பயந்து போகிறோம். ஈயமாக அவனிடம் பேசு
கிறோம். அந்தப் பயமும், ஈயமும் சேர்ந்து : வருவதால்
இரண்டும் உண்மையென்று எண்ணக் கூடாது. ஆள்
முன்னால் இருக்கிற வரைக்கும் பயத்துடன் - இருந்து
நயந்து போவதுபோல் காட்டிச் கொள்வோம். அவன்
அந்தப்புறம் நகர்ந்த பிறகு சிறப்போம். பயம் உள்ள

==#==
64 உள்ளம் குளிர்ந்தது
இடத்தில் உண்மையான பக்தி இருப்பது மன இயல்புக்கு
ஒத்தது அன்று.
பசியிடம் பயம் இருந்தால் சோற்றினிடம் பக்தி
உண்டாகும். பூச்சாண்டியிடம் பயம் உண்டாகும் குழந்
தைக்கு அம்மாவிடம் அன்பு உண்டாகிறது. Garuda
பயம் உண்டாகும்போது அதைத் தீர்க்கும் மருத்துவனிடம்
பக்தி உண்டாகிறது. ஆகவே பயம் ஓரிடத்திலும் பக்தி
அதைத் தீர்க்கின் ற இடத்திலும் இருப்பது முறை, அந்த
வகையில் பார்த்தால் இறைவனிடம் பக்தி வரும்போது
அது பயபக்தியாக இருக்கவேண்டும். அதற்கு முன்பு பயம்
உண்டாகவேண்டும்; அந்தப் பயம் வேறு ஓரிடத்தில்
இருக்கவேண்டும்.
மரண பயம்
மனிதனுக்குப் பலவகையான நிலைகளில் பயம் உண்
டாகிறது. வயிற்றுப் பசிக்குப் பயந்து சாகிறான். மானத்
திற்குப் பயப்படுகிறுன். வறுமைக்குப் பயப்படுகிறான்.
இந்தப் பயங்களை எல்லாம் பெரிய வள்ளல்களால் தீர்த்
துத்கொள்ளலாம். யாரிடமேனும் சோறு வாங்கியுண்டு
பசியினால் உண்டாகும் பயத்தைப் போக்கலாம். உழைத்து
வேலை செய்து பணம் சம்பாதித்து வறுமையினால் வரும்
பயத்தைப் போக்கிக்கொள்ளலாம். நல்ல மருத்துவரை
அண்டி சோயினால் வரும் பயத்தைப் போக்கிக்கொள்ள
லாம். திருடர்களால் வரும் அச்சத்தைக் காவலர்களாலும்
விலங்குகளால் வரும் அச்சத்தை ஆயுதங்களாலும் போக்
கிக் கொள்ளலாம்.. இப்படி உலகத்தில் மனிதனுக்கு
உண்டாகும் அச்சங்கள் பலவாக இருப்பதுபோல அவற்
றைப் போக்கிப் பாதுகாத்துக்கொள்ளும் உதவிகளும் பல
வாக இருக்கின்றன. ஆனால் இப்படி வரும் பயங்களுக்கு
எல்லாம் மேலான பயமாக, யாராலும் மாற்ற முடியாத
அச்சமாக இருப்பது மரண பயம். யமனால் உண்டாகும்

==#==
பயபக்தி 65
துன்பத்தை உலகிலுள்ள யாராலும் நீக்க முடியாது.
தொல்காப்பியம்,
!* மாற்றும் கூற்றம் ”
என்று யமனைச் சொல்கிறது. எதனாலும் மாற்ற முடியாத
யமன் என்பது பொருள். இன்ன காலத்தில் இன்னவ
னுடைய உயிரை அவன் உடம்பினின்றும் பிரிக்க வேண்டு
மென்ற வரையறையைச் செய்துகொண்டு அந்தக்
காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதனால் கூற்றுவ
னுக்குக் காலன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்தக்
காலத்திற்கு அணுவளவு முன்போ, பின்போ இல்லாமல்
உயிரைப் பிரித்துக்கொண்டு போகிறவன் அவன். அவனால்
உண்டாகும் பயத்தை உலகத்திலுள்ள யாராலும் தீர்க்க
முடியாது. காலனுக்குக் காலனாக இருக்கும் ஒருவன்தான்
போக்க முடியும். ஆகையால் காலனிடத்தில் பயமும்,
அதுகாரணமாகக் காலகாலனிடத்தில் பக்தியும் உண்டாக
வேண்டும். அப்படி உண்டான பக்திதான் பயபக்தி
என்று சொல்லப் பெறுவது. அருணகிரியார் வேளைக்
காரன் வகுப்பில், ’
”ஆனபய பக்திவழி பாடுபெறு முத்தியது
வாகமிகழ் பக்தசன வாரக்காரனும்”
என்று பக்தர்களைப் பற்றிச் சொல்லும்போது பயபக்தி
என்ற தொடரை ஆள்கிறார்.
’மரணம் வந்துவிடுமே’ என்று பயந்து பக்தி. செய்யும்
நிலை மிகச் சிறந்தது. அப்போதுதான் அந்தப் பக்தி
ஆழ்ந்து முறுகியதாக இருக்கும். ஈம் இறைவனிடத்தில்
ஓரளவு பக்தி பண்ணுகிறோம். ஆனால் பயபக்தி செய்வ
இல்லை. மரணத்தில் நாம் உண்மையான பயத்தைக்
கொள்ளவில்லை.
8

==#==
66 உள்ளம் குளிர்ந்தது
அறிவும் உணர்வும்
மரணம் துன்பமுடையது என்பதை நாம் அறிவோம்.
ஆனால் எவ்வாறு உணரவேண்டுமோ அப்படி உணருவது
இல்லை. அமெரிக்க ராட்டில் நூறு வீடுகள் எரிந்து
விட்டன என்று பத்திரிகையில் பார்க்கிறோம். அந்தச்
செய்தி ஒரு கண கேரம் இரக்கத்தை உண்டாக்கினாலும்
பின்பு வெறும் செய்தி அளவாக முடிகிறது. ஆனால் அடுத்த
வீட்டில் தீப் பிடித்துக்கொண்டுவீட்டது என்று ஒருவன்
சொன்னால் சாம் அதைச் செய்தியாகக் கேட்டு நின் றுவிடுவ
தில்லை. உடனே பரபரப்பு அடைந்து, ’௩ம் வீட்டுக்கும்
அது வந்துவீடுமே!! என்று அஞ்சி நெருப்பை அணைப்ப
திற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்ய ஓடுவோம். அது
தான் உண்மையான பயம். மரணத்தைப் பற்றிய செய்தி
நமக்குத் தெரியும். ஆனால் அது நம்முடைய குலையில்
ஊடுருவி அச்சத்தை உண்டாக்கவில்லை.
ஒரு மனிதன் ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்குப்
பார வண்டியை ஏற்றிச் செல்கிமுன். அதனால் வரும்
கூலியினால் பிழைத்துக் கொண்டிருக்கிறான். அவன் வாரத்
திங்கு ஒரு முறை தன்னுடைய மாடுகளைக் குளிப்பாட்டச்
செல்வது வழக்கம். அப்படி ஒரு ராள் மாடுகளை ஓட்டிக்
கொண்டு தண்ணீர்த் துறைக்குப் போய்க் கொண்டிருக்
கிரன். அப்போது பல ஆண்டுகளாகப் பாராமல் இருந்த
மைத்துனன் அக்கரைச் சீமையிலிருந்து வருகிறான். அவ
னைக் கண்டவுடன் காளை மாட்டுக்காரனுக்கு எல்லை
யில்லாக் களிப்பு உண்டாகிறது. பாதி வழியிலேயே மாடு
களைத் இருப்பிக்கொண்டு வீட்டுக்குப் போய்க் கொட்டி
விலே கட்டிவிட்டு அவனோடு பேசப் போகிருன். அடுத்த
வாரம் குளிப்பாட்டிக் கொள்ளலாமென்று நின்று
விடுகிறான்.

==#==
பயபக்தி 6?
மற்றொருவன் நாள்தோறும் நீராடும் பழக்கம் உடை
யவன். மூன்றுவது வகுப்பில் டெல்லிக்குப் பயணம்
செய்கிறுன். போகிற வழியில் நல்ல வசதி இல்லாமையி
னால் நீராட முடிகிறது இல்லை. ஏதோ கடைத்ததைப்
பசிக்கு உண்டு, இரண்டு மூன்று மாளைக் கழித்து டெல்லி
போய் இறங்கின பிறகு நீராடுகிறுன். இன்னும் ஒருவன்
காவல் படித்துக்கொண்டிருக்கிறுன். அது துப்பறியும்
நாவல்.  கதையிலே இன்னும் துப்புத் துலங்கவில்&லை.
தப்புத் துலங்கும் கட்டம் உள்ள அத்தியாயம் வருகிறது.
அப்போது தாகமாக இருக்கிறது. தண்ணீர் குடிப்பதற்
காக அருகில் உள்ள பையனைப் பார்த்து, ’ரீர் கொண்டு
வா’ என்று சொல்கிறான். அவன் கொண்டுவந்து நிற்கும்
போது இவன் அந்த அத்தியாயத்தை முடித்துவீடலா
மென்று தலையைக் குனிந்தபடியே படித்துக் கொண்டிருக்
கிரான், படித்து முடித்த பிறகே . தலையை சரிமிர்ந்து
பார்த்துத் தண்ணிரை வாங்கிப் பருகுகிறான். இன்னும் ஒரு
வன் சாப்பிட்டுவீட்டுக் கையைக் சழுவப் போகிறான்.
இடையில் ஒரு தந்தி வருகிறது. அவனுக்கு மிக
வேண்டிய ஈண்பன் ஒருவன் இறந்துவீட்டதாக அந்தத்
தந்தி சொல்கிறது. அதைக் சுண்டு கண்ணீர் விட்டுக்
கொண்டு கையில் நீர்வீட்டுக் கழுவாமல் அரைமணி மேரம்
நிற்கிறான்.
இப்படி உள்ள அத்தனை பேர்களுக்கும் தண்ணீர்
அவசியம். ஆனால் காளைமாட்டுக்காரனுக்கு ஒரு வாரம்
தண்ணீர் காத்திருக்கலாம். டெல்லி செல்கிறவனுக்கு
மூன்று நாள் காத்திருக்கலாம். கை கழுவுகிறவனுக்கு
ஒரு மணி நேரம் காத்திருக்கிறது. நீர் வேட்கை இருக்கிற
வனுக்குக் கால் மணி நேரம் காத்திருக்க றது.
வேறு ஒருவனுக்குத் தலையில் கெருப்புப் பிடித்துக்
கொள்கிறது. ”ஜயோ தண்ணீர், தண்ணீர்!” என்று ஓடு

==#==
68 உள்ளம் குளிர்ந்தது
கிருன், அப்போது அவன் அருகில் ஒருவன் வந்து,
*”உனக்கு அல்லா என்றால் பிரியம் ஆயிற்றே! இந்தா
இதை உண்ணூ” என்றால் உண்ணூவானா ? தண்ணீர்
தண்ணீர் என்று கதறிக்கொண்டு ஓடுவரான்,. அவனுக்கு
அடுத்த கணத்தில் தண்ணீர் வேண்டும்,. அதுபோல்
இறைவனிடத்தில் பக்தி உண்மையாக முறுக வேண்டு
மானால் மரண பயம், தீப் பிடித்தவனுக்கு உண்டான
உணர்ச்சியைப் போல இருக்கவேண்டும். உள்ளீரலில்
அந்தப் பயம் பற்றிக்கொள்ள வேண்டும். அப்பொழுது
தான் இந்தக் கணத்திலேயே இதற்கு மாற்றுத் தேட
வேண்டுமென்ற ஆர்வமும், வேகமும் உண்டாகும். நாமோ
அப்படிக் கவலைப்படுவதில்லை. மரண பயத்தைப் போக்
கும் வழியை நாடுவதில்லை. மாட்டுவண்டிக் காரனைப்
போலவும் மற்றவர்களைப் போலவும் இருக்கிறோம்.
என்று வருமோ?
நாம் எவ்வளவோ காரியங்களை மேற்போட்டுக்
கொண்டிருக்கிறோம். அவற்றை எல்லாம் ஒரு விதமாகக்
குறிப்பிட்ட காலத்தில் நரிகழும்படி செய்யலாம். ஆனால்
மரணம் என்பது எந்த சேரத்தில் ஈமக்கு வருமோ தெறி
யாது. யமனுடைய வாய் திறந்து கொண்டிருக்கிறது.
எப்போது அதை மூடிப் பல்லால் உயிரைக் குடித்துத்.
இன்புறுத்துவானோ, தெரியாது.
”யார்அறிவார் சாமாளும் வாழ்மாளும்”
என்பர் ஞானசம்பந்தர். எந்தக் கணமும் நாம் இறந்து
போகலாம். ஆகையால் ஒவ்வொரு கணமும் மரணத்தின்
வாயிலில் இருப்பதாக எண்ணி உணர்ந்து உண்மையான
அச்சத்தை அடையவேண்டும். அச்சத்தைப் போக்கும்
பெருமான் முருகன். அவருடைய திருவருளினால் மரண
பயம் போகும் என்பதை ஈன்றுகத் தெளிந்து அவனை நம்பி

==#==
பயபக்தி 68
அவன்பால் அன்பு செய்யவேண்டும். இப்படி அன்பு
கொண்டு அது முறுகினால் சிறந்த பக்தியாகும். இதையே
அருணகிரியார் சொல்ல வருகிறார்.
*”எம்பெருமானே, எத்தனையோ பேர் கோயிலுக்குச்
சென்று உன்னைத் தொழுகிறுர்கள். அவர்களில் பல
வகையினர் இருக்கிறுர்கள். பரம்பரையாக வந்த பழக்கம்
என்று கருதிக் கோயிலுக்குப் போய் உன்னைத் தொழு
வார் சிலர். அயலார் மதிக்கிறுர்கள் என்ற எண்ணத்தி
னால் தொழுவார் சிலர். கோயிலில் கிடைக்கும் பிரசாதம்
முதலியவற்றை எண்ணித் தொழுபவர் சிலர். பிறர்
செய்யும் நிர்ப்பர்தத்தினால் சென்று கோயிலில் தொழுவார்
சிலர். இப்படி உன் அருள் நிறைந்த பாதங்களைக்
கும்பீடுகிறவர்கள் பல வகையாக இருக்கிறுர்கள்.
அவர்கள் எல்லாம் உண்மையாக உள்ளை த் தொழுபவர்கள்
ஆகமாட்டார்கள். இந்த உயிருக்கு ஒரு காலத்தில்
மோசம் வந்துவிடும், ரீச்சயமாக மரணம் என்ற ஒன்று
நம்மை அறியாமலே வந்து சேரும் என்ற பயத்தை
உண்மையாக உணர்ந்து, உன்னுடைய பாதங்களை யார்
தொழுகிறுர்களோ அவர்களே மெய்யான பக்தி உடை
யவர்கள். அப்படி நான் செய்யவில்லையே! பயபக்தியுடன்
உன் திருவடியைத் தொழவேண்டுமென்ற Beware
எனக்கு இல்லையே!” என்று இரங்குகிறார்.
ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன்
அருள் பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின் நிலேன்.
ஆவிக்கு மோசம்
பொருளுக்கு மோசம் வருமென்று, வீடு கட்டிக்
குதவு அமைத்து அதற்குத் தாழ்ப்பானும் போடுகிறோம்
பெட்டி வாங்கிப் பூட்டுகிறோம்; பூட்டுக்கு மேல் பூட்டுப்

==#==
20 உள்ளம் குளிர்ந்தது
போடுகிறோம்; ஒரு வீட்டுக்கு இரண்டு பூட்டுகள்
போட்டுப் பாதுகாக்கிறோம். இவை போதாவென்று:
கருதி வீட்டில் நாயையும், காவல்காரனையும் வைக்கிறோம்.
இவையும் போதா என்று கருதி ஊரில் போலீஸ்காரனை
வைத்திருக்கிறோம். இவ்வளவும் நாம் சேமித்த பொரு
ளுக்கு மோசம் வரக் கூடாது என்பதற்காகச் செய்யும்
காரியங்கள். நாம் பெற்ற பொருள்களுக்குள்ளேயே
மிகச் சிறந்தது உயிர். ஈம்மை நாமே இழந்துவிடக்
கூடாது. இந்த உயிரினால் வருகின் ற நன்மைகளை எவ்லாம்
பெருமல் உடம்பை வீட்டுப் பிரிந்து போனால் உடம்பை
எடுத்ததன் உண்மையான பயன் உண்டாகாது. மரணம்
அடையும்போது, செய்யவேண்டிய காரியங்களைச் செய்து
விட்டோம் என்ற மன ரிறைவு இருந்தால், துன்பம்.
வராது, ஆகவே உடம்பு இருக்கும்போதே மரண பயத்,
தைப் போக்குவதற்குரிய நெறியில் ஒழுக வேண்டும்.
ஆவிக்கு மோசம் வருமென்ற உணர்ச்சி வேண்டும்..
அதற்குப் பெரிய சாத்திரங்களைப் படிக்க வேண்டிய
அவசியம் இல்லை. உலகத்தில் பிறந்த யாவருக்கும் இந்த.
உடம்பில் உயிர் நில்லாது என்ற உண்மை ஈன்றாகத்.
தெரியும். கடவுள் இல்லையென்று சொல்லுவார் இருக்
கிருர்கள். சொர்க்க நரகங்கள் இல்லையென்று சொல்கிற.
வர்களும் இருக்கிறார்கள். மோட்சம் இல்லையென்று
சாதிப்பவர்கள் இருக்கலாம். புண்ணிய பாவம் தர்மம்
முதலாயின என்று இல்லையென்று சொல்கிறவர்களும்
இருக்கலாம். ஆனால் உடலிலிருந்து உயிர் போகாது:
என்று சொல்கிறவர் யாரும்’. இல்லை. இது யாவரும்:
அறிந்த உண்மை. உயிர்போகும்போது ஈரம் தத்தளித்து
மிகவும் வருக்துவோம். அத்தகைய வருத்தம் வரக்
கூடாது என்று கருதி அதற்கு முன்பே இறைவன் திரு.
வருளைப் பெறவேண்டுமென்ற உறுதியோடு பக்தி செய்ய

==#==
பயபக்தி 71
வேண்டும். அந்தப் பக்திக்கு மூலமாய் இருப்பது, ’யமன்
வந்து உயிரைக் கொள்ளை கொள்ளுவானே!” என்ற பயம்.
உயிருக்கு மோசம் வருமே என்ற பயம் அழுத்தமாக
உண்டாகி, அதன் பயனாக இறைவனுடைய திருவடிகளைச்
சேவிக்க வேண்டும். ”அப்படிச் சேவிப்பது ஒன்று உண்டு
என்பதையே நான் நினைக்கவில்லை” என்று அருணகிரியார்
சொல்கிறார்.
முன்னை வினை
அதற்குக் காரணம் என்ன! ஈல்லதை ரீனைப்பதற்கும்
ஒரு தவம் வேண்டும். பூர்வ புண்ணியம் இருந்தால்தான்
நல்ல எண்ணங்கள் ஈமக்கு எழும்.
”தவமும் தவமுடையார்க் காகும்”
என்று திருவள்ளுவர் கூறுவர். இறைவனிடத்தில் அன்பு
செய்வதற்குக் காரணமாக இருக்கும் ’பயம் நமக்கு
உண்டாக வேண்டுமானால் அது பலகாலப் பழக்கத்தினால்
வரவேண்டும். முன் செய்த பாவம் அத்தகைய பழக்கம்
உண்டாகாமல் தடுக்கும். எனவே, ””உன்னிடத்தில்
பக்தி செய்து ஈலம் பெறுவதற்குத் தடையாக இருக்கிற
வினை, ஆவிக்கு மோசம் வரும் என்பதை அறியாமல்
இருக்கும்படி செய்கிறது. அந்த வினையை நீ இர்த்து
அருளவேண்டும்” என்று முருகனை வேண்டுகிறார்.
ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கன் றநிலேன்; விளை தீர்த்தருளாய்!
உயிருக்கு மோசம் என்பது யமனால் வரும் மரணம்.
அதனைத் தீர்ப்பது இறைவனுடைய பாதம். அது அருள்
வடிவமாக இருக்கின்றது. இறைவனுடைய அருள்
மருளைப் போக்கும். ஆவிக்கு வருகின்ற துன்பத்தைப்

==#==
7 உள்ளம் குளிர்ந்தது
போக்கும். ஆகையால் மரண பயத்திற்குப் பாதுகாப்பான
ஆண்டவனுடைய பாதங்களை அருள் பதங்கள் என்று
சொன்னார்.
”சரகாது எனையே சரணங் களிலே
காகா கமனார் கலகம் செயும்காள்”
என்று அநுபூதியில் பாடுகிறார்.
திருத்தணி
இப்போது நாம் பார்க்கும் வீண்ணப்பத்தைத் திருத்
தணியில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைப்
பார்த்துச் சொல்கிறுர் அருணகிரியார். அந்தத் திருத்தணி
மாமலையில் என்ன வளம் இருக்கிறது என்பதையும்
சொல்கிறார். அங்கே நீர் நிலைகள் பல உண்டு, வாபீ கூப்
தடாகங்கள் என்று சேர்த்துச் சொல்வார்கள். பல வாவி
கள் அங்கே இருக்கின்றன. திருத்தணிக்குக் காவித் திருமலை
என்று ஒரு பெயர். அங்குள்ள ஒரு வாவியில் காவி மலர்
தினந்தோறும் பூக்குமாம். காவி மலருக்குக் ’கல்லாரம்’
என்று ஒரு பெயர், காவி மலர் பூப்பதனால் கல்லார மலை
என்று அதற்கு ஒரு பெயர் உண்டு. அதனால் அங்கே
இருக்கிற பெருமானுக்குச் செங்கல்வராயன் என்று
பெயர். செங்கல்வம் என்பது செயங்கழு நீர்ப்பூவுக்கு ஒரு
பெயர். அத்தகைய வாவி சிறந்து விளங்குவது திருத்தணி.
அதோடு ல வளமும் பொருந்திய ஊர். ஆதலால்
வாவிக்கு அருகில் விசாலமான் வயல்கள் ஊரைச் சுற்றி
இருக்கின் றன.
ஆண்டவன் எழுந்தருளியிருக்கும் இடமாகையால்
ve = பெரியார்கள் வந்து அங்கே . தங்குவார்கள்.
கல்ல எண்ணங்கள் அலை அலையாக எங்கும் சூழும்படியாக
அவர்கள் தங்கியீருப்பார்கள். எண்ண அலைகள் சூழ்ந்த
குளிர்ந்த சூழ்நிலை குளிர்ச்சியை உண்டாக்கும். . கோபம்

==#==
பயபக்தி 78
உள்ளவன் இருந்த இடத்தை அவன் எழுந்தவுடன்
தொட்டுப் பார்த்தால் சுடும். அதுபோல் அன்பு உடைய
வர்களுடைய உடம்பு குளிர்ந்து இருக்கும். சிறந்த பெரிய
வர்கள் அன்பு உடையவர்களாக ஓரிடத்தில் தங்கியிருர்
தால் அவர்கள் தங்கும் இடம் ஓரளவு குளிர்ச்கியுடைய
தாக இருக்கும். அவர்கள் மூச்சுக் காற்றில் வெப்பம் அதிக
மாக இராது, அவர்களுடைய குளிர்ந்த எண்ண அலைகள்
நம்மைச் குழ்ந்தால் தண்மை உண்டாகும். இதனை இன்
றும் உலகில் பிரத்தியட்சமாகப் பார்க்கலாம். பசுமையே
இல்லாத இடத்தில் சில பெரியவர்கள் வாழ்ந்திருப்பார்கள் .
அவர்கள் வாழும் சூழ்நிலை பசுமை ரீர்ம்பியதாக இருக்கும்.
இவ்வாறு உள்ளம் குளிர்ந்து, கண் குளிர்ந்து, அன்பால்
கிறைந்த பெரியவர்கள் முருகனைக் கும்பிட்டு வாழும் இட
மாதலால் திருத்தணிகை ஈரம் ரிரம்பியதாக இருக்கிறது.
ஆதலால் மழை பொழிகின்ற மேகங்கள் அங்கே வரும்,
வந்து மழை பொழியும். மழை பொழிவதால் நீர்’ வளம்
நிரம்பியிருக்கும். அதனால் வாவீகளும் வயல்களும் வளம்
சிறந்து விளங்கும். அத்தகைய திருத்தணி மாமலையில்
முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கிறாள்.
துவஜம் கட்டினவன்
அவன் எந்தக் காரியத்தையும் நினைத்ததை நினைத்தபடி
முடிக்கிறவன். ஒன்றை மனத்தில் சங்கற்பம் பண்ணிக்
கொண்டு, ’இதை முடித்துத்தான் மறுகாரியம் பார்ப்பேன்’
என்றால் அதற்கு இரண்டு அடையாளம் சொல்வது
உண்டு. காப்புக் கட்டிக் கொண்டிருக்கிறுள் என்றும்,
துவஜம் கட்டிக் கொண்டிருக்கிறுன் என்றும் சொல்வ
துண்டு. ’இந்தக் காரியத்தைச் செய்துவீடுவேன்’ என்று
காப்புக்கட்டிக் கொண்டிருக்கிறுன் என்றும், ’இதனை
அடியோடு ஒழித்துவீடுவேன்* என்று துவஜம் கட்டிக்

==#==
24 உள்ளம் குளிர்ந்தது
கொண்டிருக்கிறுன் என்றும் சொல்வது உலக வழக்கு.
துவஜம் கட்டுவது என்பது பெரும்பாலும் பொல்லாததை
அழிக்கும் வீரத்தைச் சட்டி நிற்கிறது. முருகப்பெருமான்
திருத்தணி மாமலையில் சேவல் கொடியைக் கட்டியிருக்
கிரான், அடியார்களுக்குத் தீங்கு செய்பவர் யாராக இருர்
தாலும் அவர்கள் யாவரையும் அழித்துவிடுவேன் என்று
துவஜம் கட்டிக்கொண்டிருக்கிறுன். அந்தத் துவஜந்தான்
சேவல்,. அதனுடைய பெருமையைக் குந்தர் அலங்காரத்
தில் பல இடங்களில் ஈரம் பார்த்தோம்.
குக்குடத் துவஜன் ஆகிய ஆண்டவன் திருத்தணி
மாமலையில் வாழ்கிறுன். பூவுலகத்தில் உள்ள மலையில்
அவன் துவஜம் கட்டிக்கொண்டு வாழ்ந்தாலும் அவன்
தேவலோகத்திலுள்ள தேவர்களுக்கும் தலைவனாக இருக்
Sager. தேவர்கள் தம்முடைய தலையில் மாணிக்கத்தைப்
போல அணிந்து வழிபடுகிற பெருமான் அவன். அப்படி
இருந்தும் ஆருயீர்களைக் காப்பாற்றும் பொருட்டு இந்த
உலகத்திற்கு எழுந்தருளி வந்து, குளிர்ந்த சுழ்ரீலையை
உடைய திருத்தணி மாமலையில் அவன் வாழ்கிறுன்.
வள்ளியெம்பெருமாட்டியை மணந்து கொண்ட இடம்
இந்தத் திருத்தணி மாமலை, மணத்திற்கு ஏற்ற வளமுடைய
மலை அது, தேவர்களுக்குச் சிகாமணியாக இருக்கிற .
பெருமான், தேவலோகத்தில் ஒரு - சல்யாணத்தைப்
பண்ணிக்கொண்டாலும் அதைவீடச் சிறந்த கல்யாணம்
ஒன்றைத் திருத்தணிகையில் பண்ணிக்கொண்டான். அது
அவன் பெரும் கருணையைக் காட்டுகிறது. *தேவர்களுக்கு
எல்லாம் சிகாமணியாக இருக்கிறவனே, திருத்தணி
’ மாமலையில் வாழும் சேவற் கொடி உடையானே, இந்த
உயிருக்கு மோசம் வருமே, மரணம் வந்துவீடுமே என்று
பயந்து, அதுகாரணமாக உன் திருவடிகளைச் சேவிக்கின்ற
நினைப்பு இல்லாமல் இருக்கிறேனே! முன்னைப் பிறவியில்:

==#==
பயபக்தி #
செய்த பாவந்தான் நான் இப்படி இருப்பதற்குக் காரணம்.
அந்தப் பாவத்தை நீ தீர்த்து அருளவேண்டும்” என்று
இந்தப் பாட்டில் ஈமக்காக அருணகிரியார் வேண்டிக்.
கொள்கிறார்.
*
ஆவிக்கு மோசம் வருமாறு
அறிந்துஉன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின் நி
லேன்வினை தீர்த்தருளாய்:
வாவித் தடவயல் சூழும்
திருத்தணி மாமலைவாழ் _
சேவல் கொடிஉடை யானே,
அமரர் சிகாமணியே!
[உயிருக்கு ஈஷ்டம் வரும் வண்ணத்தை உணர்ந்து உன்
அருள்வடிவான தஇருவடியைப் பணிய வேண்டும் என்று ரான்
கினைக்கவில்லை; இதற்குக் காரணமான பாவத்தைப் போக்கி:
அருள்புரிவாய்; பொய்கையோடு சேர்ந்த விசாலமான வயல்கள்
சுற்றியுள்ள திருத்தணிகை யென்னும் பெருமையையுடைய மலையில்:
வாழும், சேவற்கொடியை உடைய பெருமானே, தேவர்களுக்குச்
சிகாமணி போன்றவனே!
வருமாறு - வரும் ஆற்றை. சேவிக்க என்று - சான் சேவிப்பே
னாக என்று; சேவிக்க; வியங்கோள். வினை - பாவம். வாவித்
தடவயல் - வாவியோடு கூடிய தடவயல், . சிகாமணி - முடியின்
மேல் அணியும் மணி; என்றது சென்னியால்  வச்திக்கும் உயர்
வுடையாய் என்றபடி]
மரணத்திலே பயமும் அது காரணமாக அதைப்
போக்கிக்கொள்ள முருகனிடத்தில் ஆழ்ந்த பக்தியும்
உண்டாக வேண்டும் என்பது கருத்து.

==#==
இருதலைக் கொள்ளி எறும்பு
வாழ்க்கைச் சித்திரம்
சில பத்திரிகைகளில் குழந்தைகளுக்காகச் சில சித்தி
ரங்கள் வரும். சுற்றிச் சுற்றி வருகின் ற சில கோடுகளைப்
போட்டு, உள்ளே இருக்கும் ஒருவன் கோட்டையைத்
தாண்டி வெளி வருவதற்கு வழி கண்டு பீடியுங்கள் என்று
போடுவார்கள். ஐந்தாறு வழிகள் வெளியே வருவதற்கு
இருப்பது போலத் தோன்றும். ஆனால் ஒரு வழியைத்
தவிர மற்றவையெல்லாம் எங்கேயாவது ஓரிடத்தில் போய்
நீன்றுவீடும்படி அமைந்திருக்கும். சரியான வழி, பலவிடங்
களில் சுற்றிச் சுற்றிப் போய்க் கடைசியில் வெளியில்
வரும்படி அமைந்திருக்கும். அத்தகைய சித்திரத்தைப் |
பத்திரிகைகளில் பார்த்திருக்கிறோம்.
மனிதன் வாழ்நாள் ஒரு வகையில் அந்தச் சித்தி
ரத்தைப் போன்றதுதான். அந்தச் சித்திரத்திலே வெளி
யில் வருவதற்கு ஒரு வழியாவது இருக்கும். ஆனால் ஈம்
வாழ்க்கைச் சித்திரத்தில், வெளியில் வர வழியே இல்லை.
வெளியில் வரவேண்டுமெள் ற ஆசை உடையவனுக்குக்கூட
வழி தெரியாமல் சுழன்று சுழன்று வரும்படியாக அமைந்
திருக்கிறது இந்தச் சித்திரம். அதற்குக் காரணம் ஈம்
மனந்தான். . போன போன இடங்களில் எல்லாம் பதிந்து
கொண்டு எந்த இடத்தில் இருந்தும் மீள ஓட்டாமல் மனம்
பற்றை வளர்த்துக் கொள்கிறது.
நட்பும் பகையும்
நீரம் வாழ்கின்ற காலம் மிகக் குறைவு. அந்தக்
காலத்திற்குள் நாம் தெரிந்து கொள்ளும் செய்திகள் பல.

==#==
இருதலைக் கொள்ளி எறும்பு ??”
எதனைத் தெரிந்து கொண்டாலும் தெரிந்து கொள்ளாவிட்
டாலும் நம்முடைய முடிந்த முடிபாகிய லட்சியத்திற்கு
அறுகூலமான வழியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
ரெயில் வண்டியில் ஏற வந்தவன் ரெயில்வே ஸ்டேஷனில்
கண்ட ஈண்பனோடு பேசிக் கொண்டே இருந்தால், வண்டி
வந்து நிற்பது கூட மறந்துவிடும். வண்டி நிற்கிற வரைக்
கும் அவனோடு பேசலாமே என்று ஆரம்பித்தவன் வண்டி
புறப்பட்ட பிறகும் பேச்சுச் சுவாரசியத்தில் அதை
மறந்து ரிற்பான். இப்படித்தான் இந்த உலகத்தில்
தோன்றிய மனிதன் இருக்கிறுள். தன்னுடைய சரீரத்தைக்
காப்பாற்றுவதற்குப் பலபேருடைய துணையை ராடுகிறான்.
இதனை வளர்ப்பதற்கும் சுகம் பெறுவதற்கும் பல செயல்
களைச் செய்கிறான். மாளுக்கு நாள் பல பேருடைய தொடர்
பும்ஏற்படுகின் றது. இந்தத் தொடர்பினால் ஈட்பும் பகையும்
விளைகின் றன. ஈட்புக் - காரணமாக மகிழ்ச்சியும்,
பகை காரணமாக அச்சமும் துன்பமும் அடைகிறான்.
** உலகத்தில் இருக்கும்போது ஏதாவது செயல் செய்யத்
தானே வேண்டும்?! மற்றவர்களோடு பழகத்தானே
வேண்டும் ?’” என்ற கேள்விகள் எழலாம். பழகுவது
வேறு, பதிவது வேறு. பிள்ளைப்பூச்சி சேற்றிலே பல
காலம் ஊர்ந்து கொண்டிருந்தாலும் சேறு ஒட்டாமலே
வளைய வருகிறது. அதுபோல் ஈம் எல்லாவற்றோடும்
பழகிக் கொண்டிருந்தாலும் அவற்றோடு ஒட்டாமல் வாழப்
பழகவேண்டும். நம்முடைய லட்சியம் இன்னதென்று
தெரிந்து வாழவேண்டும்.
பற்றின்றி வாழ்தல்
சமுதாயத்திற்கு வேண்டிய காரியங்களைச் செய்து
கொண்டு, . அவ்வப்போது கமக்குத் துணையாகின் றவர்
களோடு அன்பு செய்து வாழ்வது தவறு அன்று, அனால்
அப்படி வாழ்கின்ற இடத்திலும், பழகுகின் ற மனிதர்

==#==
78 உள்ளம் குளிர்ந்தது
கணிடமும் பற்று வைத்து, எந்தக் காலத்திலும் பிரியாமல்
இருக்க வேண்டுமென்ற உணர்ச்சியைக் கொள்வது
ஆபத்தை உண்டாக்கும். ஈம்மோடு பிறப்பிலே தொடர்ந்து
வந்து இறக்கும் வரைக்கும் இருக்கும் இந்த உடம்பே வாழ்
நாள் முடிந்தவுடன் நம்மைப் பிரிந்து விடுகிறது ; அல்லது
நாம் இதைப் பிரிந்து விடுகிறோம். அப்படி இருக்க, பிறந்த
பிறகு தொடர்ந்த தொடர்புகள் ஈம்மோடு ஓட்டிக்
கொண்டிருக்குமா ? ஓட்டிக்கொண்டிராதவற்றை மனத்
இதிலே பற்றிக் கொள்வதுதான் பற்று: அப்படிப் பற்று
வளர்வதனால் மனத்திலே துயரம் மிகுகிறதேயன்றி
அமைதி உண்டாவதில்லை.
!’ யாதனின் யாதனின் ரீங்கியான் கோதல்
அதனின் அதனின் இலன் ”
என்பது திருக்குறள். பல வகையான பற்றுக்களை உள்
ளத்தில் ஏற்றிக்கொண்டு எந்தப் பக்கம் திரும்பிஞலும்
சேற்றிலே அமிழ்வது போலப் பரசத்திலே  அமிழ்ந்து
கொண்டிருக்கிறோம். என்றைக்காவது சிறிது உணர்வு
வந்து அவற்றிலிருந்து வீடுபட வேண்டுமென்றால் முடிவ
இல்லை; எந்தப் பக்கத்திலும் ஈம்மை அழுத்துகின் ற பாசம்
இருப்பதைப் பார்க்கிறோம். பாசத்தை வீட்டு ரீங்குவதற்கு
ஒரு சிறிய வழிக்டக் காணாமல் திண்டாடுகிறோம்.
பற்றினால் அமைதியின்மை
கல்யாணம் பண்ணிக்கொண்டு மனைவியோடு வாழ்
கிறவன் சிறிது நேரம் கடவுளை எண்ணலாம் என்றால்,
மனைவியோடு பேசிவிட்டு அவள் தூங்கும்போது எண்ண
லாம் என்ற மீனைவு வருகிறது. மனைவியோடு பேசி அவள்
அதரங்கின பிறகோ, ’நாமும் தூங்கிவிடலாம் ; rion EGS
தியானம் பண்ணிக்கொண்டால் போகிறது’ என்ற நினைவு
வருகிறது. மறுநாள் எழுந்தாலோ கடைகண்ணிக்குப்

==#==
இருதலைக் கொள்ளி எறும்பு 78
போகிற வேலை முன்னாலே வந்து நிற்கிறது. ’ இன்று இரவு
அவசியம் நாம் தனித்திருந்து தியானம் பண்ண வேண்டும்’
என்று நினைக்கிறோம். அந்த இரவு நமக்கு வேண்டிய
நண்பர் ஒருவர் வந்துவிடுகிறுர். ’அவர் தினக்தோறுமா
வருகிறார் ? இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வருகிற
வரோடு பேசாமல் என்ன செய்வது? தியானம் எங்கே
போகிறது ? நாளைக்குப் பண்ணிக் கொள்ளலாம்’ என்று
மறு நாளைக்கு ஒத்திப் போடுகிறோம். அடுத்த |காள் மக்கு
உடம்பு சரியில்லாமல் போய்வீடுகிறது! சிறிது ஜுரம்
வருகிறது. அன்றைக்கும் தியானம் செய்ய முடிவதில்லை.
இப்படியாக ஓவ்வொரு நாளும் நரம் அமைத்துக் கொண்ட
பற்றுகள் காரணமாகச்.சிறிது சேரம் ஓய்வாகவும், அமைதி
யாகவும் இருக்க வழி பிறப்பது இல்லை. மற்,றவற்றைத்
தள்ளிப் போடுவதில்லை. இதை மாத்திரம் எளிதிலே
தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறோம்.
இப்படியின்.றி எந்தக் காரியம் இருந்தாலும் இல்லா
விட்டாலும் இறைவனை த் தியானம் பண்ணுவது அவசியம்
என்ற உணர்ச்சி இருந்தால் எப்படியாவது அந்த நேரத்தில்
தனிமையை பாடுவோம். வீட்டிலே தக்க இடத்தில்
அமர்ந்து சுவையான உணவை உண்ணும் ஒருவன் கடுமை
யான வேலையில் ஈடுபட்டு வீட்டுக்குப் போக முடிவதில்லை
யானால், தான் பணிபுரியும் அந்த இடத்திற்குச் சோற்றை
வருவித்து உண்ணுகிறான். வண்டியில் பயணம் செய்
கிறவன் வண்டி ஓடும்போதே ஏதாவது வாங்கி உண்ணு
கிருன். ஓட்டத்தில் இருக்கிறவன் ஓடும்போதே எதை
யாவது கிடைத்ததைக் கொண்டு வயிற்றை ரிரப்புகிறுன்.
மற்றக் காரியங்களில் ஈடுபடுகிறபோது உண்ண வேண்டிய
அவசியம் இல்லையென்று அதை ஒதுக்க முடியாது. அது
இல்லாவிட்டால் காரியம் செய்யவே முடியாது. எப்படி
யாவது உண்ணுவதற்கும், உறங்குவதற்கும் நேரத்தைக்

==#==
80 உள்ளம் குளிர்ந்தது
கண்டுபிடித்துக் கொள்கிறான். உண்ணுவது முயற்சீ
யினாலே வருவது; உறங்குவது தானே வந்துவிடுகிறது.
இறைவனைத் துதிப்பதற்கும், தியானம் செய்வதற்கும்
ஒருவனுக்கு உண்மையான சிரத்தை இருந்தால் எந்த
நிலையிலும் உணவைப் போகிற இடத்தில் பெற்று உண்ணு
வது போல அவற்றைச் செய்துவீடுவான். அப்படிச் செய்
யாமல் இருப்பதற்குக் காரணம் மற்றப் பொருள்களில்
வைத்த பற்றுத்தான்.
பற்று வைத்தவன் சிறிதே உணர்வு வந்தபோது,
எந்தப் பக்கம் வந்தாலும் அவன் வெளியே வர முடியாத
படி அந்தப் பற்று அவனுக்குத் தடையாக இருப்பதைக்
காண்கிமுன். இடப்பக்கம் போனால் மனைவி வந்து AD
கிருள். வலப்பக்கம் போனால் மக்கள் வந்து நிற்கிறுர்கள்.
இவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்வதையே கடமை
யாகத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறுன். அதனால் இறை
வனைத் தியானிக்கும் கடமையைச் சற்றே தள்ளி வைக்கப்
பார்க்கிறுன். இப்படியேதான் பொழுது போய்க் கொண்
டிருக்கிறது. துணிவு இல்லாமல், பற்றின பற்றை ஈழுவ
விடுவதற்குரிய தைரியம் இல்லாமல், எந்த ரிமிஷத்திலும்
தனியாக வந்து அமர்ந்து கொள்வதற்குரிய பழக்கம் இல்
லாமல் திண்டாடுகிறான்.
இருதலைக் கொள்ளி எறும்பு
இதற்கு எதையாவது உவமை சொல்லலாமே!
இருதலைக் கொள்ளிக்கு இடையில் அகப்பட்ட எறும்பு
திண்டாடுவது போல ஈம் திண்டாடுகிறோம். இருதலைக்
கொள்ளி எறும்பு போல என்பது ஒரு பழமொழி,
இரண்டு பக்கமும் தீ எரிந்து கொண்டிருக்கும் கொள்ளி
யின்டையே அகப்பட்ட எறும்பு எந்தப் பக்கமும் போக
முடியாது. கீழே குதித்து. விடலாம்.. ஆனால் ஓரு

==#==
இருதலைக் கொள்ளி எறும்பு 81
மூங்கிலில் இரண்டு பக்கமும் தீப் பிடித்துவீடுகறது.
அந்த மூங்கிலுக்குள்ளே ஓர் எறும்பு அகப்பட்டுக் கொள்
கிறது. அப்போது இரண்டு பக்கத்திலும் போக
முடியாது; தீ இருக்கிறது. வெளியில் குதிக்கவும்
முடியாது. சுற்றிலும் மூங்கில் குழாய் இருக்கிறது.
அந்த எறும்பு உய்வதற்கு வழியே இல்லை.. அப்படித்
தான் நாம் சம்முடைய பற்றுக்களை வளர்த்துக் கொண்
டிருக்கிறோம். ”
முத்தொள்ளாயிரப் பாடல்
இருதலைக் கொள்ளியினுள் அகப்பட்ட எஏறும்பைப்
பல புலவர்கள் எடுத்து ஆளுகிறார்கள். முத்தொள்ளாயிரம்
என்ற நூலில் ஒரு தலைவி தன் நிலையைப் பற்றிச் சொல்லு
கிருள். சோழன்மேல் காதல் கொண்டவள் அவள், அவ
னுடைய பேரழகைக் கண்டு தன் உள்ளத்தை இழந்தாள்.
அவனிடம் நேரே சென்று தன் காதலைச் சொல்லலாம்
என்றுலோ நாணம் வந்து தடுக்கிறது. அவளை அடைந்து
இன்புரு விட்டாலோ பெண்மைக்குரறிய ஈலம் அழிந்து
போய்விடும். இப்படி இரண்டு பக்கத்திலும் அவளுக்குச்
சங்கடம் இருக்கிறது. எதையும் செய்ய முடியாமல்
கிண்டாடுகிறுள். இரவு முழுவதும் இருதலைக் கொள்ளி
எறும்பு போலவே இரண்டு தலையிலும் உள்ள துன்பத்தை
எண்ணி அவள் நெஞ்சு சுழலுகிறது. இரண்டு தலைப்பிலும்
கொள்ளியாக இருக்கும் மூங்கில் குழாய்க்குள் அகப்பட்ட
எறும்புபோலத் தன்னுடைய நெஞ்சம் அங்கும் இங்கும்
போய்த் திறந்த வழி காணாமல் திண்டாடுகிறதாக அவள்
சொல்கிறாள்,
”! காண்ஒருபால் வாங்க ஈலன்ஓருபால் உள்கெழப்பக்’
கர்மருதோட் கள்ளிக்கென் கண்கவற்ற = யாமத்து
இருதலைக் கொள்ளியின் உள்ளேறும்பு போலத்
இரிதரும் பேருமென் செஞ்சு.”
6

==#==
88 உள்ளம் குளிர்ந்தது
மணிவாசகர் வாக்கு
இந்த உவமையையே மணிவாசசப்பெருமான் ஆளு
கிருர், - இறைவனைப் பிரிந்து பிரபஞ்சம் என்னும்
சேற்றுக்குள் சுழன்று எந்தப் பக்கமும் போய் விடுதலை
யைப் பெற முடியாமல் நிற்கிறோம். அதற்கு இருதலைக்
கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பை உவமிக்கிறார்.
எம்பெருமானே, இருதலைக் கொள்ளியின் உள்ளே
இருக்கும் எறும்பு போல, உன்னைப் பிரிந்து எந்தப்
பக்கமும் செல்ல முடியாதபடி ஈரான் துன்புறுகின்றேன்.
என்னை இப்படி வீட்டுவீட்டிருக்கலாமா?** என்று
அலறுகிறார்.
*! இருதலைக் கொள்ளியின் உள்ளறும் பொத்து கினைப்பிரிக்த
விரிதலை யேனை விடுதிகண்டாய் ; வியன் முவுலருக்கு
ஒருதலை வா, மன்னும் உத்தர கோசமங் கைக்குஅரசே,
பொருதுஅலை முவிலை வேல்வலன் ஏக்திப் பொலிபவனே.”
அருணகிரியார் பாடல்
இவற்றை எல்லாம் இப்போது நாம் மனத்தில்
பதித்துக் கொண்டால் அருணகிரி நாதப் பெருமான்
சொல்கிற ஒரு பாட்டுக்கு விளக்கம் பெற உதவியாக
இருக்கும். அவரும் இருதலைக் கொள்ளி எஏறும்பைச்
சொல்கிறார். ஆனால் அந்த இரு தலையும் இன்னவை என்று
சட்டிக் காட்டவில்லை. ’இருதலைக் கொள்ளியின் ஈடுவி
லுள்ள எறும்பு போல நான் குலைந்து கொண்டிருக்கிறேன்;
அதனால் எனக்கு உண்டான துயரம் வளர்ந்து வருகிறது.
அதனை ஓழிக்க வேண்டும்’ என்று முருகனிடத்தில் பிரார்த்
இக்கிறுர்.
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்து அருள்வாய், ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே!

==#==
இருதலைக் கொள்ளி எறுப்பு 88
இந்த உவமையைச் சற்றே விரித்துப் பார்க்கவேண்டும்.
இரண்டு பக்கமும் கொள்ளி உள்ள ஓரிடத்தில் எறும்பு
நிற்பது போல ரான் நிற்கிறேன் என்று சொல்கிறார்.
அந்த இரண்டு தலைகள் எவை? பலவற்றைச்
சொல்லலாம்.
இரு தலை
இறப்பு பிறப்பு என்ற இரண்டும் ஈம்முடைய வாழ்க்
கையின் இரண்டு தலைப்பிலும் உள்ளவை. கொள்ணியின்
ஒரு தலைப்பாகிய பிறப்புத் துன்பத்திலிருந்து வெளிப்
பட்டு வந்திருக்கிறோம். மறுபக்கத்தில் இறப்பு என்னும்
துன்பம் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் ஈடுவில் உள்ள
வாழ்க்கையில் நின்று குலைகிறோம். இப்படி ஒரு பொருள்
சொல்லலாம்.
சென்ற பிறவியில் நாம் செய்திருக்கும் புண்ணிய
யாவங்கள் இந்தப் பிறவியில் வந்து பயனைத் தருகின் றன.
இவற்றை ஊழ்வினை என்றும் பிராரப்தம் என்றும் சொல்
வார்கள், அதன்படி நம்முடைய அநுபவங்கள் அமை
கின்றன. ஆனால் இந்த வாழ்க்கையில் ஈமக்குரிய குருவி
கரணங்களை எல்லாம் கொண்டு பல செயல்களைச் செய்
கிறோம்., முன்னைப் பிறவியில் சாம் செய்த செயல்களின்
விளைவாகப் புண்ணிய பாவங்கள் நமக்குக் கிடைத்
தன. அவற்றின் பயனைச் சுகமாகவும் துக்கமாகவும்
இந்தப் பிறவியில் அடைகிறோம். முன்னை வினையின்
விளைவு இது; இந்த அறுபவம் அன்றி, புதிய செயல்
களைச் செய்கிறோம். அந்தச் செயல்களின் பயன் அடுத்த
பிறவியில் கிடைக்கும். எனவே இந்தப் பிறவியில் முன்னை
வினைப்பயனால் வரும் அநுபவமும், புதுச்: செயல்களினால்
வரும் புண்ணிய பாவங்களும் இருக்கின்றன. ”இந்த.
இரண்டுக்கும் நடுவில் நாம் குலைந்து நிற்கிறோம்.

==#==
84 உள்ளம் குளிர்ந்தது
அநுபவம் இப்படி வருகிறதே என்று பார்த்தால்
அதற்கு மூலகாரணம் முன்னை வினை என்று தெரிகிறது.
அந்த அநுபவத்தை மாத்திரம் அறுபவித்துச் செயல்
இல்லாமல் இருக்கலாமே என்றால், நம்முடைய மன லை
அதற்கு அமைந்ததாக இல்லை. ஏதாவது செய்து
கொண்டே இருக்கிறோம். இப்படி முன்னை வினையின்
விளைவுக்கும், இப்போது செய்யும் செயலுக்கும் இடையில்
நீன்று திண்டாடுகிறோம். இதுவும் இருதலைக் கொள்ளி
எறும்பின் ரிலைதான்.
நம்முடைய வாழ்கச்கையில் ஈமக்கே சில சமயங்களில்
சில எண்ணங்கள் தேரன்றுவது உண்டு. வேறு’
சிலருடைய அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்கிறோம்.
திண்மையான மனம், தன்னுடைய எண்ணத்தில்
சிறந்தன இருந்தாலும் பிறர் உபதேசங்களில் சிற்ந்தன
இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும். அது இல்லாத
வனுக்குப் பிறர் உபதேசம் செய்கிறபோது ஈல்லதாகத்,
தோற்றும். அடுத்தபடி அதற்கு மாமுகத் தன்
எண்ணமே சிறந்ததாகத் தோற்றும். இப்படி ஈம்முடைய
அறிவுக்கும், பிறருடைய உபதேசத்திற்குமிடையே ரீன் று
இதுவோ அதுவோ என்று சந்தேகப் பிறவிகளாகத்
திண்டாடுகிறோம். ஒரு பக்கத்தில் ஈம்முடைய எண்ணங்
கள் இருக்கின்றன. மற்றொரு பக்கத்தில் பிறருடைய
உபதேசம் இருக்கிறது. இருதலைக் கொள்ளியிடை
எறும்பு போல, இன்னதுதான் செய்வது என்று தெரி
யாமல் அப்போது திண்டாகிறோம். . எண்ணத்தில் திண்மை
இல்லாமையினால் வந்த விளைவு இது. இப்படியும் இருதலைக்
கொள்ளி எறும்பு நிலை ஒன்று உண்டு.
இழைவனுடைய. திருவருளைப் பெறவேண்டுமென்று
முயலும்போது கூடப் பல சமயங்களில் இப்படி இரண்டு.
வேறு எண்ணங்கள் வந்து மோதுகின்றன. இறைவ,

==#==
இருதலைக் கொள்ளி எறும்பு 88
னுடைய திருநாமத்தைச் சொல்லித் திருவுருவத்தைக் கண்டு
பக்தி செய்ய வேண்டுமென்று ஈம்முடைய பெரியவர்கள்
சொல்லியிருக்கிறார்கள். ’நாம் அதை நம்பி வருகிறோம்.
ஆனால் ஒரு சாரார், இறைவன் குணம் குறி கடந்தவன்,
அவனுக்கு விக்கிரகம் கூடாது என்று சொல்லுகிறார்கள்.
நம்முடைய முன்னோர்கள் சென்ற நெறியும்,’ புதிய
அறிவாளிகள் சொல்லும் நெ.றியும் ஒன்றுக்கொன்று மாறு
பாடாகத் தோற்றுகின்றன. அவற்றின் நடுவில் ரீன்று
இன்னது செய்வது என்று தெரியாமல் நாம் திகைக்கிறோம்.
இது ஒருவகை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை.
தர்ம சங்கடங்கள்
உலக வாழ்க்கையில் எத்தனையோ தர்ம சங்கடங்கள்
உண்டாகின்றன. இரண்டு வகையான தர்மம் ஒன்றுக்
கொன்று எதிராக நிற்கும்போது தர்ம சங்கடம்
எழுகிறது. ஒரு பாம்பு இரையை உண்ண வருகிறது.
அப்போது பாம்பை அடித்தால் அதைக் கொன்றவர்
ஆகிறோம், அடிக்காமல் இருந்தால் ’ இரையாகி
பிராணியைச் கொலை செய்ததுபோன்ற துயரம் வருகிறது.
இந்த இரண்டுக்கும் நடுவில் நின்று திகைக்கிறோம். தர்ம
சங்கடமான நிலை அப்போது வருகிறது.
இப்போது எங்கே பார்த்தாலும் விஞ்ஞானத்தைப்
பற்றிய பேச்சாக இருக்கிறது. . மனிதன் வாழவேண்டு
மானால் விஞ்ஞானத்தின் முயற்சியும், தொழில் முயற்சியும்
சிறந்து நிற்கவேண்டுமென்று அரசியல் தலைவர்கள்
சொல்லிக் கொண்டிருக்கிறுர்கள். வாழ்க்கை கன்ழமு௧
முன்னே நினால்தான் சமுதாயம் . முன்னேற , முடியும்
என்பதை அவர்கள் வற்புறுத்துகிருர்கள். அதே சமயத்தில்
நம்முடைய ஞான நூல்கள், ஒவ்வொருவனும் தன்னுடைய
ஆன்மா கடைத்தேறும் வழியைப் பார்க்கவேண்டுமென்று

==#==
86 உள்ளம் குளிர்ந்தது
சொல்கின்றன. விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் ஆகிய
இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியாக நிற்கின் றன
என்று தோன்றுகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில்
இன்னது செய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறோம்.
’ பல இரட்டைகள்
இப்படியல்லாமல் வேறு இரட்டைகளும் மோதுவது
உண்டு. இரண்டு பேரை ஆகிரியராகக் கொண்டாலும், ’
இரண்டு பேரை மனைவிகளாகக் கொண்டாலும், இரண்டு;
கடையில் கணக்கு வைத்துக் கொண்டாலும், இரண்டு
பேரைத் துணையாகக் கொள்ள நேர்ந்தாலும், இரண்டு
வீட்டுக்கு விருந்து சாப்பிட வருவதாகச் சொன்னாலும்,
இரண்டுபேரின் உரைகளைப் பார்த்துக்கொண் டிருந்தாலும்
எதை மேற்கொள்வது என்ற திண்டாட்டம் வரும்.இவை:
களும்ஒருவகையில் இருதலைக் கொள்ளியினீடையே உள்ள
எறும்பு போன்ற நிலையை உண்டாக்குகின் றன. இப்படிப்.
பார்த்தால் எறும்பின் நிலை பல பலவாக வருகின் றதைப்
பார்க்கலாம். வாழ்வு முழுவலும் சில இரட்டைகளுக்கு
நடுவில் ரீன்று திண்டாடுகிறோம். சில நாட்களில் வேறு
சில இரட்டைகளின் நடுவில் திண்டாடுகிறோம்.எப்படியோ
ஈமக்கு இந்தத் திண்டாட்டம் விடுவதே இல்லை. இது போக.
வேண்டுமானால் ஈம் மனம் திண்மையுடன் இருக்கவேண்டும்.
இறைவனுடைய திருவடிப் பற்று ஒன்றுதான் அந்தத்
திண்மையை உண்டாக்கும். எந்த வேலையைச் செய்தாலும்
திருடனுக்குத் திருட்டிலே கண் இருப்பது போலவும்»
யாரிடம் காதல் செய்தாலும் பரத்தையர்களுக்கு
வருமானத்தில் ஆசை இருப்பது போலவும், எத்தனைதான்
பேசிக் கொண்டு வந்தாலும் கார் ஓட்டுகிறவனுக்குக் கைச்.
சக்கரத்தில் மோக்கம் இருப்பது போலவும், உலகில் எப்படி.
வளைய வந்தாலும் எத்தனை பேர்களிடம் பழகினாலும்

==#==
இருதலைக் கொள்ளி எறும்பு 87
எத்தனை முயற்சியில் ஈடுபட்டாலும் சாம் ஆன்மவிடுதலை
என்ற குறிக்கோளை மறந்துவிடாமல் இருக்கவேண்டும்,
இல்லையானால் பற்றுக்களில் ஆழ்ந்து துன்புற நேரும்.
அப்போது  கொள்ளித் தலையில் எறும்பு போன்ற
நிலை ஈமக்கு வரும். அப்படி வந்த பிறகு அதை மாற்ற
வேண்டுமானால் மனத்தைத் துயரம் இல்லாமல் வைக்க
வேண்டும். அதற்குத் தக்க வழி இறைவனுடைய திருவருளை
எண்ணி எங்குவலுதான். இறைவனை உறுதியாக
உள்ளத்தில் ஈட்டுவீட்டால் வேறு வகையான பற்றுகள்
அங்கே வந்து துன்பத்தைத் தாரா,
பற்று நீங்க வழி
நாம் இறைவனை அடைய வேண்டும். பற்றுக்கள்
எல்லாம் அற்முல் இறைவனை அடைய முடியும்.
** அற்றது பற்றெனில் உற்றது வீடு ”
என்று ஆழ்வார் சொல்வார். பற்றோ அறுவதாக இல்லை.
என்ன செய்வது? பற்றுக்கள் அறுவதற்கும் இறைவனைத்
தியானம் பண்ணவேண்டுமென்று வள்ளுவர் சொல்கிறார்.
பற்று அறுவதற்கு இறைவனைப் பற்றிக் கொள்வது
ஒன்று. பற்று அற்றபின் இறைவன் அருள் அநுபவம்
உண்டாவது வேறு,
” பற்றுக பற்றற்றுன் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு ”
என்பது திருக்குறள். சமுத்திரத்தில் அலை ஓய்ந்த பிறகு
நீராடுவோம் என்று இருந்தால் என்றைக்கும் நீராட
முடியாது. அதுபோல் பற்று எல்லாவற்றையும் அறவே
விட்டுவிட்டு இறைவனைப் பற்றிக் கொள்ளலாம் என்றால்
அது ஈடவாத காரியம், கங்கையில் போய் நீராடுகிறவனுக்கு
அழுக்கான வேட்டி இருக்கிறதே என்ற கவலை வேண்டுவ

==#==
88 உள்ளம் குளிர்ந்தது
இல்லை. அங்கேபோய் வேட்டியையும் துவைத்துக் கொள்
ளலாம் ; நீரிலும் ஆடலாம்; தாகத்தையும் தணித்துக்
கொள்ளலாம். ஆற்றங்கரைக்குச் சென்று தண்ணீர்
குடிக்க எண்ணும் ஒருவன் சேற்றுக் கையோடு போகிறான்.
அந்தக் கையினாலே தண்ணீரைக் குடிக்க . முடியாது.
ஆகையால் முதலில் அந்தத் தண்ணீரில் கையைக் கழுவிக்
Garages. பின்பு அந்தத் தண்ணீரை அருந்து
கிருன், அதுபோல் இறைவனைப் பற்றிக் கொள்வதனால்
சேறுபோல் இருக்கிற பற்று முதலில் போகும். பின்பு
அவனோடு ஒன்றுபடலாம். இந்த எண்ணத்தோடுதான்,
*’ பற்றுக பற்றற்றுன் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு ”
என்று சொன்னார். பற்று இல்லாமல் வாழ்கிறவர்களுக்குப்
பற்றைப் பற்றிக் கவலைஇல்லை. நஈரள்தோறும் பற்றுக்களைப்
பெருக்கிக் கொண்டு தொட்ட தொட்ட இடங்களில்
எல்லாம் மனத்தைப் பதித்து ஒன்றிலிருந்தும் பிரிய
முடியாது வாழ்கின்ற கமக்கு அந்த நிலையினின்றும்
மீள் வதற்கு வழி ஒன்றே ஒன்றுதான். அது இறைவனைப்
பற்றிக் கொள்வது.
ஆகையால் அருணகிரிநாதர், ”இருதலைக் கொள்ளி
எறும்பு போல இருக்கும் என்னை நீ வந்து காப்பாற்ற .
வேண்டும்; என் உள்ளத் துயரத்தை நீக்க வேண்டும் ”
என்று இறைவனைப் பற்றிக்கொண்டு வேண்டுகிறார்.
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய்.
திருச்செந்தூர்
--- இந்த விண்ணப்பத்தை அவர் இருச்செந்தூரில் உள்ள
எம்பெருமானிடத்தில் சமர்ப்பிக்கிறுர். திருச்செந்தூரை

==#==
இருதலைக் கொள்ளி எறும்பு 89
எண்ணும்போது அதன் கடற்கரை நினைவுக்கு வருகிறது.
எப்போலும் அலை மோதுகின்ற கடற்கரையில் .செந்தில்
ஆண்டவன் எழுந்தருளியீருக்கிறுன். அந்த ஊருக்கே
அலைவாய் என்று பெயர். அங்குள்ள கடற்கரை அழகியது.
முத்துக்களை அலைகள் கொண்டுவந்து கொழிக்கின் றன.
கோடிக்கணக்கான முத்தங்களை அங்கே கொண்டு வந்து
சேர்க்கின்றன. திருச்செந்தூரில் எம்பெருமானுடைய
சந்நிதானத்தில் நின்ற அருணகிரிசாதப் பெருமானுக்கு
இப்படி ஒரு கற்பனை தோன்றுகிறது.
: ஒரு கோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே 1
வள்ளிக்கு வாய்த் தவனே! மயில் ஏறிய மாணிக்கமே!
எம்பெருமான் வீரனாக வேலாயுதத்தைக் கையில்
வைத்திருக்கிறுன். சூரபன்மனைச் சங்காரம் செய்வதற்
காகத் திருச்செந்தூரிலிருந்து Prange தேவரைத் தூது
அனுப்பினான். அங்கே படைவீடு கொண்டான். அங்கே
இருந்துதான் யுத்தத்திற்குப் புறப்பட்டான். ஆகவே அவன்
அங்கே போர் வீரனாக எழுந்தருளியிருந்தான். பின்பு
வெற்றி யபிவேகமும் அங்கே நடை பெற்றது. ஜயத்தைக்
கொண்டாடியமையால் ஜயந்தி என்ற பெயர் அதற்கு
உண்டாயிற்று. முருகன் வீரனாக, சேவகனாக அங்கே எழுந்
தருளியிருக்கிறான்.
தெள்ளிக் கொழிக்கும் கடல்செந்தில் மேவிய சேவகனே!
அலைகள் முருகப்பெருமானுக்குக் கோடிக்கணக்காக
முத்தங்களைக் கொண்டு தருகின்றனவாம். கடற்கரையில்
அலை மோதும்போது கரை குலைவதை நாம் பார்த்திருக்
கிறோம். ஆனால் ’ இங்கே அருணகிரிநாதப் பெருமான்
அதைச் சொல்லவில்லை. அலைகளால் கலம் விளைகிறது.
என்று சொல்கிறுர்.. . அலைகள் கோடிக்கணக்கான

==#==
80 உள்ளம் குளிர்ந்தது
முத்தங்களை கொண்டு வந்து சேர்க்கின்றனவாம்.
நம்முடைய உள்ளத்தில் கூடத் துயர் அலை மோதும்போது
நாம் கவலை அடைகிறோம். மணல் கரையாக ஈம் உள்ளம்
இருப்பதுவே காரணம். அப்படியின்றி இறைவனுடைய
திருக்கோயிலாக இருக்குமானால் உலக வாழ்க்கையில்
வந்து வந்து மோதுகின்ற ௬௧ துக்கமாகி ற அலைகளிலிருந்து
கிடைக்கின்ற அரிய முத்தங்களாகிய உண்மைகளைத்
தெரிந்து கொள்ளலாம்.
சேவகன்
அங்கேயுள்ள எம்பெருமான் சேவகளாக, பெரு
வீரனாக இருக்கிறான். வீரம் உடையவனை அழகிய
பெண்கள் நாடி வருவார்கள். வீரம் உடையவனைக்
காதல் செய்ய விரும்புவது அழகிகளின் இயல்பு. - இங்கே
வீரத்தினால் சூரபன்மாவை அழித்த எம்பெருமான் வள்ளி
நாயகனாக விளங்குகிறான். வீரரில் சிறந்த வீரஞாகிய
ஆண்டவன் பேரழகு உடையவன். அவனுக்குள்ள
செல்வத்துக்குக் குறைவு இல்லை. அவனே அறிவிற்
சிறந்த ஞான மூர்த்தியாக இருக்கிறான்.. ஆடவருக்கு
வேண்டிய எல்லா ரலங்களும் ஒருங்கே பொருந்திய அந்தப்
பெருமானை மணவாளனாக அடைய வேண்டுமென்றால்
எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும். வள்ளியம்
பெருமாட்டி அந்தத் தவம் உடையவள். அவளுக்கு அவன்
காதலனாக வாய்த்தான். பேரழகியாகிய வள்ளி பெருங்
கருணையுடைய எம்பெருமானை அடைந்தது நமக்குத்
தைரியம் ஊட்டுகின்ற. செயல்,. வீரத்தினால் சிறப்புப்
பெற்ற செந்தூர் ஆண்டவன், காதலுடைய வள்ளிக்கு
மணவாளனுகி, மயில்மேல் ஏறி ஓளி வீச வருகிறான்.
மயிலேறிய மாணிக்கமாக விளங்குகிறுன். அவனுடைய
திருக்கோலம் அவனுடைய வெற்றிச் சி.றப்பையையும்
காதல் சிறப்பையும் பேரழகையும் காட்டுகிறது.

==#==
இருதலைக் கொள்ளி எறும்பு 82
௬டல் செந்தில் மேவிய சேவகளனே 1
வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே?!
மாணிக்கம்
மாணிக்கம் தானே ஒளி வீசும்: அது சுயம்பிரகாச
மானது. ஆண்டவன் என்றைக்கும் மாருத தேச
உடையவன். அவன் செக்கச் செவேல் என்று இருக்கிறான்.
மாணிக்கம் பச்சையின் நடுவில் இருந்தால் பின்னும்
விட்டுவிளங்கும். இங்கே முருகப்பெருமான் பசுக்தோகை
மயில்மேல் ஏஜி வருகிறான். மரகுதத்தில் மாணிக்கம்:
பதித்தது போல இருக்கிறது அந்தக் காட்சி, மயிலேறிய:
மாணிக்கமாக அவனைப் பார்க்கும்போது அவன் அழகு நீம்
கண்ணை விட்டு மறைந்துவிடாமல் ஈம் மனத்திலும்
நிற்கிறது. அந்தப் பெருமானைப் பார்த்து, ”எம்பெரு.
மானே, என் உள்ளத் துயரை ஓழித்தருள வேண்டும்”
என்று வேண்டுகிறார் அருணைமுனிவர்.
பல அலைகள் மோதினாலும் திண்மையான அலைவாயில்
திருக்கோயில் கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்
Beer. அதுபோல் அவன் திருவடியைப் பற்றிக்கெர்ண்
டால் ஆயிரம் ஆயிரம் துயர் அலைகள் வந்து மனத்தில்
மோதினாலும் சற்றும் தளர்ச்சி அடையாமல் இருக்கலாம்.
இந்த இரண்டையும் ஒருங்கே நினைத்து இணைத்ததைப்
போல இந்தப் பாட்டைப் பாடுகிறார்.
%
கொள்ளித் தலையில் எறும்பது
போலக் குலையும்என்றன்
உள்ளத் .துயரை ஒழித்து அரு
ளாய்ஒரு கோடிமுத்தம்

==#==
82 உள்ளம் குளிர்ந்தது
தெள்ளிக் கொழிக்கும் கடல்செந்தில்
மேவிய சேவகனே !
வள்ளிக்கு வாய்த்தவ னே!மயில்
ஏறிய மாணிக்கமே !
[இருதலைக் கொள்ளிக்கு கடுவான இடத்தில் அகப்பட்ட
எறும்பைப் போல இன்ன நெறியில் செல்வது என்று தெரி
யாமல் மனம் குலையும். அடியேனுடைய உள்ளத்திலுள்ள
துயரத்தை நீக்கி மின் திருவருளை வழங்க வேண்டும்; ஒரு
கோடி முத்துக்களை அலைகள் எடுத்து வந்து குவிக்கும் கடலின்
கரையில் உள்ள திருச்செந்தூரில் விரும்பித் தங்கும் பெரு
வீரனே! வள்ளிக்கு உரிய காதலனாக வாய்த்த பெருமானே!
மயிலின்மேல் ஏறிப் பவனி வரும் ஒளியும் சிவப்பும் உள்ள
மாணிக்கம் போன்றவனே! ’
கொள்ளித் தலையில் என்பது இருதலைக் கொள்ளியிடையே
என்ற பொருளைக் குறிப்பால் புலப்படுத்தியது. எறும்பது:
அது, பகுதிப் பொருள் விகுதி. குலையும் என்பது என் என்பது டும்
சேரும்; உள்ளம் என்பதனோடும் சேரும், ஒரு கோடி என்பது
அளவில்லாததைச் சுட்ட வந்த வாய்பாடு. தெள்ளி - தெளி
வாக எடுத்து. கொழிக்கும்-கொண்டுவந்து குவிக்கும். சேவகம் -
வீரம். வள்ளிக்குத்  தவப்பயஞல் கிடைத்தவன், மற்ற
வருக்குக் கிடைப்பதற்கரியவன் என்பதை ’வாய்த்தவன்* என்பது
குறிக்கிறது. வள்ளிக்கு அதிருஷ்டம் அடித்தது என்று சொல்வது
போலச் சொல்கிறார்.
மாணிக்கம் நவரத்தினங்களில் தலைமையானது. இயல்
யசன ஒளியை உடையது. இண்மையானது.  சிவப்பானது,
us அணிகளினிடையே கலந்து நின்றாலும் தனிச் சிறப்புடன்
விளங்குவது, எப்போதும் விலை மதிப்புக் குறையாமல் இருப்பது.
மன்னரின் முடிமேல் சிறந்து நிற்பது. குப்பையில் கடந்தாலும்
மதிப்புக் குன்றுதது. இத்தனை இயல்புகளையும் முருகனோடு
சார்த்தி உவமையை விரித்துச் சொல்ல இடம் உண்டு,]

==#==
மெய்த் துணை
அஞ்சாமையும் அச்சமும்
கோழைகள் எதற்கும் அஞ்சுவார்கள், வீரர்கள்
எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்று பொதுவாகச் சொல்
கிறோம். ஆனால்: வீரர்களும் அஞ்சுகின் ற நிகழ்ச்சிகள்
உண்டு. அஞ்சுவதற்கு உரியனவற்றைக் கண்டு ௮ஞ்சுவது
PG Baw இயல்பு.
”அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்”
என்று வள்ளுவர் சொல்வார். வாழ்க்கையில் எத்தனையோ
இன்பங்கள் வருகின்றன. அந்தத் ’துன்பங்களைக் கண்டு
நாம் அஞ்சுகிறோம். துன்பங்கள் பலவர்ஞலும் ஒரு
வாறு பசி, பகை, பிணி என்ற மூன்றுக்குள் அடக்க
லாம். பழங்காலத்தில் மக்களைக் காப்பாற்றிய
அரசர்கள் பகையும், பசியும், பிணியும் தவிர்ந்து
குடிமக்கள் ஈல்வாழ்வு பெறும்படி செய்தார்களாம். ராம்
அஞ்சுவதற்குரிய பொல்லாதவர்கள் யாராக இருந்தாலும்
அவரைப் பகை என்பதில் அடக்கிவிடலாம். உடம்
புக்கு வருகின்றது நோய். வயிற்றுக்கு வருகிறது. பச.
பகையையும் நோயையும் இல்லாமல் ’ பண்ணினாலும்
பசியை இல்லாமல் பண்ண முடியாது. உடம்பு ஆரோக்
கியமாக இருப்பதற்குப் பசி அறிகுறி என்று நினைக்
கிறோம். பசியைப் போக்குவதற்கு உணவைத் தேட
வேண்டியிருக்கிறது. இப்படி மனிதன் அஞ்சுவதற்குரிய
பல நிகழ்ச்சிகள் வாழ் நானில் இருந்து கொண்டிருக்
கின்றன. அஞ்சாமல் வாழ்வதற்குரிய வகை இந்த மனிதப்
பிறவியில் இருப்பதாகத் தெரியவில்லை,

==#==
94 உள்ளம் குளிர்ந்தது
அஞ்சுவதற்குரியன வந்தாலும் அஞ்சாமல் இருக்கும்
மன நிலை உள்ளவர்களும் இருக்கிறார்கள். பகையைக்
கண்டு அஞ்சாமல், தம்முடைய வீர மீடுக்கைக் காட்டு
வதற்கு ஏற்ற வாய்ப்பு இது என்று எண்ணிக் கொதித்து
எழுகின்ற வீரர்கள் இருக்கிறுர்கள். பிணியைக் கண்டு
அஞ்சாமல், அதனைப் போக்குவதற்குரிய மருத்துவர்கள்
இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் வாழ்கின்றவர்களும்
இருக்கிறார்கள். ஆகவே அச்சத்தைத் தருவனவற்றைக்
கண்டு அஞ்சாமல் இருப்பதற்கு, அவற்றால் வரும் துன்
பத்தைப் போக்கிக்கொள்ள முடியும் என்ற மன நிலையே
காரணம். ஞானம் பெற்ற ஜீவன்முக்தர்கள் எதற்குமே
அஞ்சமாட்டார்கள்.
அஞ்சுவது யாதொன்றும் இல்லை ; அஞ்ச வருவதும் இல்லை??
என்பது அப்பர் திருவாக்கு.
மரணம்
எல்லாருமே அஞ்சுவதற்குரிய நிகழ்ச்சி ஒன்று
உண்டு. அதுதான் மரணம். மரணத்திற்கு மிகப்பெரிய
வர்களும் அஞ்சுவார்கள் என்பதை முன்பே சில முறை
பார்த்திருக்கிறோம். இறைவனுடைய திருவருளைப் பெற்ற
வர்கள் மிகத் திண்மையான நெஞ்சு பெறுவார்கள். கடைசி
அச்சமாகிய மரண பயம் கூட அவர்களுக்குப் போய்விடும்.
காரணம், மரணத்தினால் தமக்கு விடுதலை வரும் என்ற
உறுதிப்பாடு இருப்பதுதான். இந்த உடம்பை வீட்ட
பிறகு இறைவனுடைய திருவடியை அடையும்படி சம்ப
வீக்கின் ற மரணம் மரணம் அன்று. வேறு உடம்பில் புகு
வதற்கு இப்போது மரணம் நேருமானால் அதுதான் அஞ்சு
வதற்குரியது. அனீதத்தான் மரணம் என்று சொல்ல
வேண்டும். . மெய்ஞ்ஞானிகள் தாம் பெறவேண்டியதைப்
பெற்று இனிப் பிறவி எடுக்காத வகையில் நின்றால், அவர்

==#==
மெய்த்துணை 88
களுக்கு இந்த உடம்பிலிருந்து பிரியும் மரணம் விடுதலைக்கு
வாசலாக உதவுவது. அது மரணம் ஆகாது. அவ்வாறின்றி
உலகத்தில் பற்றுக்களில் ஆழ்ந்து இந்த உடம்பை வீடு
வதற்கு மிகவும் வருந்தி இறந்து போகிறவர்கள் வேறு
பிறவியை எடுக்கிறுர்கள். அவர்களுடைய இறப்புத்தான்
மரணம் ஆகும். இந்த வேறுபாட்டைப் பற்றியும் முன்பு
பல முறை சிந்தித் திருக்கிறோம்.
அருணகிரி நாதர் மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்.
அவருடைய உறுதிப்பாட்டைப் பலபடியாகக் கந்தர் அலங்
காரத்தில் சொல்வதிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.
**”௭மனுக்கு நான் அஞ்சமாட்டேன்” என்று சொல்வார்.
** ளமனே, ஈன் உனக்கு அஞ்சமாட்டேன்” என்று வேறு
வகையில் சொல்வார். !”௭மனே, என் முன்னாலே aur;
உன்னை என்ன செய்கிறேன் பார் ” என்று அறைகூவும்
முறையிலும் சொல்வார். இப்படிச் சொல்கின் றவருடைய
உள்ளம் எவ்வளவு உறுதியானது! பயத்தைப் போக்க
வேண்டுமானால் நாமும் தைரியத்தோடு இருக்க வேண்டும்.
அஞ்சாமைப் பயிற்சி
என்னுடைய சிறு வயதில் ஒரு பெரியவர் எனக்கு
நல்ல உபதேசம் செய்து வந்தார். அவர் பய உணர்ச்சியைப்
பற்றிச் கில யோசனைகளை எனக்குச் சொன்னார். ”பயம்
தோன்றும்போதெல்லாம் அந்தப் பயத்திற்கு மூலகாரண
மான பொருளை # தொலைத்துவிடுவதாகப் பாவனை பண்
ணிக்கொள். அப்போது பயம் போய்விடும்” என்று
சொன்னார். அந்த உபதேசத்தைக் கேட்ட காலத்தில்
எனக்குப் பதினைந்து பிராயம் இருக்கும். பூச்சாண்டி.,
பேய், பிசாசு என்று கேட்டுக் கேட்டுப் பயம் கொள்ளும்
பருவம் அது, அந்தப் பெரியவர் . செய்த - உப
தேசத்தினால் எனக்கு ஒரு துணிவு. எழுந்தது. . அவர்

==#==
96 உள்ளம் குளிர்ந்தது
சொல்கிற முறையைப் பரீட்சை பண்ணிப் பார்க்கலாம்
என்று எண்ணினேன். பிசாசு வருவதாகப் பயம் வந்தால்
கையில் ஒரு வாள் இருப்பதாக எண்ணி, அந்த வாளை
எடுத்து அதை வெட்டுவதாக நான் பாவனை செய்வேன்.
இந்தப் பழக்கத்தினால் தைரியம் எனக்குச் சிறிது
உண்டாயிற்று.
எங்கள் ஊரில் ஆற்றங்கரையில் மயானம் இருக்கிறது,
அங்கே இரண்டு மூன்று பனைமரங்கள் நிற்கும். ஊருக்குப்
புறம்பான இடம் அது. என்னுடைய தைரியத்தைச்
சோதிப்பதற்காகப் பாதி ராத்திரியில் எழுந்து ஆற்றங்
கரைக்குச் செல்வேன். முதலில் பயம் குடலைக்
குழப்பும். பின்பு அந்தப் பனைமரங்களைப் பார்க்கும்போது
பிசாசுகள் கெடிய உருவம் எடுத்து வந்து ரிற்பன போலத்
தோன்றும். ””உன்னைத் தொலைத்து விடுகிறேன் பார் ”
என்று வெளிப்படையாக உரக்கச் சொல்லிக் கொண்டு,;
கையில் கத்தி இருப்பது போல எண்ணி, ”இதோ வெட்டி
விட்டேன்” என்று சொல்வேன். இப்படிப் பயிற்கி பண்
ணினதால் என்னுடைய மனகசுக்குத் தைரியம் மிகுதி
யாயிற்று.
அருணகிரியார் செய்த உபகாரம்
பெரியவர்கள் காலனால் வருகின்ற அச்சத்தைப்
போக்குவதற்குக் . காலகாலனைப் . பற்றிக் கொள்ள
வேண்டும் என்று சொன்னதோடு, காலனால் எந்தப்
பயமும் உண்டாகாது. என்பதை வற்புறுத்திச் சொல்லி
யிருக்கிறுர்கள். . இத்தகைய பாடல்களை நாம் பல
முறை பாராயணம் பண்ணியும், மனனம் செய்தும்
சொல்லி வந்தால் கமக்கு மரண பயம் ஒருவாறு
நீங்கும். புலி அடிப்பதைவிடக் கிலி அடிப்பது அதிகம்
என்பது பழமொழி, யமன் ’ வருவதற்கு முன்னாலேயே
அவனை எண்ணிச் சாவதில் பயன் இல்லை. இறைவன்

==#==
மெய்த்துணை a7
திருவருள் ஈம்மைக் காப்பாற்றும் என்ற தைரீயத்தோடு,
எமனை அழறைகூவி அழைக்கும் பாடல்களையும் பயின்று
வந்தால் ஈம் மனம் திண்மை பெறும் என்பதில் சந்தேகம்
இல்லை. ஆகவே அருணகிரீகாத சுவாமிகள் நமக்குத் தந்த
பெரிய வரம் இத்தகைய பாடல்கள் . என்பதை நினைவு
கொள்ள வேண்டும். அநுபவத்தில், பலமுறை சொல்லிப்
பார்த்தால் இதனைத் தெரிந்து கொள்ள லாம்.
மன இயல் அறிஞர் கருத்து
இதை எமுதிய போது ’ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ என்ற
பத்திரிகையில் உள்ள கட்டுரை ஒன்றைப் படிக்க
நேர்ந்தது. பாவனையினால் ஈலம் பெறலாம் என்பதை ஒரு
மன இயலறிஞர் அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.
சான் அறிந்த சிறந்த மருந்து’ என்ற தலைப்பிட்டு அந்தக்
கட்டுரையை எழுதியிருக்கிறார்.! அவர் ஐந்து விதமான
மனப் பயிற்சிகளைச் சொல்கிறார். (1) உன்னுள் மறைக்
திருக்கும் சக்தியை உண்மையாகக் கருதி நம்பிக்கை வை:
(8) அதனிடம் புகலடைவதற்கு வீருப்பங் கொள் ; (8)
பிரார்த்தனை செய் (4) அமைதியும் மெளனமும் பயில்;
(5) ஈன்மை உண்டாகும் என்று பாவனை செய் என்பன
அந்த ஐந்தும், ஐதாவதை ’அஆட்டோ ஸஜ்ஜெஷன்’ ( &#40-
ஐய98880102) என்று சொல்வார்கள். இதனால் நன்மை உண்
டாகும் என்பதை உதாரணங்களால் அவர் விளக்குகிறார்.
”ஒரு சமயம் ஒரு வியாபார நிலையத்தில் விற்பனைக்
கலைஞராக இருந்த ஒருவர் நம்பிக்கையினால் ஈலம் பெற்றது
எனக்குத் தெரியும். இயல்பாகவே அவர் சங்கோசப்
பிராணி. ஆனால் அவர் ஈல்ல பாவனை செய்யும் பழக்கத்தி
னால் ஆச்சரியமான நன்மையைப் பெற்றுர். ஏதாவது ஒரு
1. ‘The best. prescription I know’ by Dr. Smiley
Blanton in Reader’s Digest for October, 1963, p. 132.
7

==#==
98 உள்ளம் குளிர்ந்தது
விஷயத்தில் அவர் சம்பந்தப்பட்டால் அவர் தம்முடைய
உச்சுவாச ரீச்சுவாசத்தை நிதானமாகக் கவனிப்பார். ஓவ்
வொரு தடவையும் வெளியில் மூச்சு விடும்போது கெடுத
லான பகுதிகளை வெளியே தள்ளிவீடுவதாகப் பாவனை
செய்வார் ; அப்படியே நல்லவற்றை உள்ளே இழுத்துக்
கொள்வதாக எண்ணுவார். ’நான் சங்கோசத்தை வெளியே
தள்ளிவீடுகிறேன்; நம்பிக்கையை உள்ளே வாங்குகிறேன்”
என்று சொல்லிக் கொள்வார்} ’பயங்கொள்ளித் தனத்
தைத் தள்ளிவிடுகிறேன்.; உறுதியை உள்வாங்குகிறேன்.
தோல்வியைத் தொலைத்து விடுகிறேன்; வெற்றியை ae
கொள்கிறேன்* என்று தாமே சொல்லிக் கொள்வார்.
”அவர் உள் இழுத்ததும் வெளியில் விட்டதும்
வெறும் மூச்சுக் காற்றுத்தான். ஆனால் அவருடைய அடி
மனம், மேல் மனம் எண்ணிய இந்த எண்ணங்களை ஏற்றுக்
கொண்டு அவர் விரும்பிய பண்புகளை மலரச் செய்தது”
என்று எழுதுகிறார்.
ஈம்முடைய பெரியவர்கள் நமக்கு உறுதிப்பாடு உண்
டாவதற்காகப் பாடிய பாடல்கள் இத்தகைய பயிற்சியைச்
செய்ய உதவுகின்றன. இந்தக் காலத்து மன வி..
ஞானிகள் மனத்தின் இயல்புகளை எவ்வளவு நுட்பமாகத்
தெரிந்து கொண்டிருக்கிறுர்களோ அதைவிட நுட்பமாக
அறுபூதிமான்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். விஞ்
ஞானிகள் உண்மைகளைப் புதிது புதிதாகக் கண்டு
பிடித்துச் சொல்லும்போது. ஈம் முன்னோர்கள் கூறிய
கருத்துக்களுக்கு அவை விளக்கங்களாக இருப்பதைக்
காண்கிறோம்.
காலன்
_ கந்தர் அலங்காரத்தில் நூறு பாடல்கள் அமைந்த
பெருமாலைக்குக் குஞ்சம் போல ஆறு பாடல்கள் இருப்
பதைப் பார்த்தோம். அந்த ஆறு பாடல்களில் கடைசிப்

==#==
மெய்த்துணை 99
யாடலை இப்போது பார்க்கப் போகிறோம். நம்முடைய
வாழ்வின் கடைசிக்குப் பயன்படும் பாடலாகவும் அது
இருக்கிறது. யம பயத்தைப் போக்குவதற்கு அமைந்த
அற்புதமான பாட்டு ௮து, முருகப்பெருமானுடைய தரு
வருள் துணை மக்கு இருக்கும்போது யமனுக்கு ஏன் அஞ்ச
வேண்டுமென்ற உணர்ச்சியைத் தருவது அது. ”ஆறு
முகவன் வேலும், அஞ்சேல் என்ற திருக்கரமும் எனக்கு
மெய்த்துணை. ஆகவே orer காலனுக்கும் அஞ்சமாட்டேன்”
cag agora நாதர் இந்தப் பாடலீல் சொல்ல
வருகிறார்.
பயத்திற்குக் காரணமான காலனை வருணிக்கிறார்.
அஞ்சுவதற்குரிய ஆயுதங்களும்,உருவமும் அவனிடம் இருக்
கின்றன. அவன் சூலத்தை ஏந்தி வருகிறான். கள்ளுக்
குப் பயந்து ஓடி ஒளித்துக் கொள்ளலாம். காவலலுக்கும்
பயந்து ஓடி ஒளித்துக் கொல்ளலாம். ஆனால் யமனுக்குப்
பயந்து ஓடி ஒளித்துக்கொள்ள முடியாது. காற்றுக்குள்
நுட்பமாக நுழைந்தாலும் அவன் அங்கே வந்து சேருவாள்.
இப்படி நம்மைத் தொடர்ந்து வருகின்ற காலனுக்குப்
பயப்படாத நிலை , இறைவனுடைய திருவருளால்தான்
உண்டாகும். ”நான் காலனுக்கு அஞ்சமாட்டேன் ”
என்று அருணகிரி நாதர் சொல்கிறார்.
சூலம் பிடித்து எமபாசம் ௬ழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்கு ஒரு காலும் அஞ்சேன்.
முன்பும் சூலத்தையும்,பாசத்தையும் அருணகறீராதீர் நீனைப்
பூட்டி யிருக்கிறுர். சூலத்தினால் குத்தி, பாசத்தினால் இறுக்
கிக் கட்டிக்கொண்டு போகிறானாம். இறந்து போகின் றவன்
துடிதுடித்து வாயில் நுரை கொப்புனிக்க, கண் பிலுங்க
அவஸ்தைப் படுவதைப் பார்த்து, எமன் சூலத்தால்
குத்தி, கயிற்றினால் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுக்
கிருன் என்ற உருவகம் உண்டாயிற்று என்று தோன்று

==#==
100 உள்ளம் குளிர்ந்தது
கிறது. எப்படியானாலும் மரணத்துக்கு மூலகாரணமாக
உள்ள சக்தியைக் காலன் என்று சொன்னார்கள். அதற்குச்
சிறிதும் அஞ்சாமல், திருவருளைத் துணையாகக் கொண்ட
வர்கள் இருப்பார்கள்.
அஞ்சாமைக்குக் காரணம்
அருணகிறி ராத சுவாமிகள் அந்தத் தைரியத்தைக்
கொண்டவர். காலனுக்கு அஞ்சேன் என்று சொன்ன
பி.றகு அதற்குரிய காரணம் இன்னது என்று சொல்ல
வருகிறார். மற்ற இடையூறுகள் வரும்போது உலகில்
உள்ளவற்றைத் துணையாகக் கொள்ள முயல்கிறோம். அவை
எல்லாம் மெய்த் துணையாக இல்லாமல் பொய்த் துணையாக
மாஜிவீடுகின் றன. அப்படியின்றி, பெரிய துன்பமாகிய
மரண பயத்தைப் போக்குவதற்கு : மெய்யான துணை
எனக்கு இருக்கிறது என்று சொல்கிறார். - முருகப்பெரு
மானுடைய வேலும், அஞ்சேல் என் ற திருக்கரமும் மெய்த்
துணையாக உள்ளனவாம். Gay, பாசமும் ஆகிய
இரண்டையும் கொண்டுவரும் காலனுக்கு எதிரே வேலும்
திருக்கரமும் ஆகிய இரண்டும் உதவுகின் றனவாம்.
ஆலம் குடித்த பெருமான்
முருகனைப் பற்றிச் சொல்லும்போது அவன் சிவ,
குமாரன் . என்று சொல்கிறார். யமனாவது ஓவ்வோர்
உயிரையும் தனித்தனியே Gag Gag காலத்தில்
கொண்டு போகிறான். அன்று ஒருநாள் பாற்கடலில் ஒரு.
பெரிய யமன் போன்ற பொருள் எழுந்தது. அதுதான்
ஆலகால விஷம்,. அமுதத்தை உண்டு சாவாமல் வாழலாம்
என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த தேவர்களுக்கு முன்
அவர்களின் உயிரை ஒருங்கே குடிக்கும் ஈஞ்சு எழுந்தது.
முப்பத்து முக்கோடி தேவர்களின் உயிரையும் ஒருங்கே
போக்கும் வகையில் அது எழுந்தது. அந்தச் சமயத்தில்

==#==
மெய்த்துணை 101
அந்த ஈஞ்சைச் சிவபெருமான் எடுத்து விழுங்கிவீட்டான்.
முருகப்பெருமான் அவனுடைய குமாரன். அந்தக் குடும்பம்
(முழுவதுமே உயிரைக் கொள்ளை கொள்ளும் பொருள்களை
விழுங்கும் . பேராற்றல் உடையது என்பதை இப்படிக்
குறிப்பிடுகிறார். சிவன் நஞ்சை விழுங்கினான்; முருகன்
\யமனையே விழுங்கி விடுவான்.
அறுமுகவன்
’பாற்கடலில் அன்று எழுந்த விஷத்தைக் குடித்த
கிவபெருமானுடைய குமாரன் இத்தகைய துணிவை
எனக்குத் தருகிறான்’ என்று அருணகிரியார் சொல்கிறார்.
*அவன் ஆறுமுகம் உடையவன். எந்தப் . பக்கத்திலிருந்து
எனக்குத் துன்பம் வந்தாலும் அந்தப் பக்கத்திலிருந்து
எதிர்த்து எனக்கு கலம் செய்கின்றவன். நான்கு திசை
களும், மேல் கீழ் என்ற திசைகளும் சேர்ந்து ஆறு
திசைகள் உண்டு. எந்தத் திசையிலிருந்து எப்படித்
இன்பம் வந்தாலும், அந்தத் திசையை நோக்கி
யுள்ள அவனது திருமுகம் எனக்கு வரும் துன்பத்தை
நீக்கிவீடும்’ என்று நினைக்கும் படியாக அறுமுகவன்
என்று சொல்கிறார்.
கடல்மீது எழுந்த
. ஆலம் குடித்த பெருமான் குமாரன், அறுமுகவன்.
வேலும் கையும்
அவனுடைய கையில் இருப்பது வேல், அதை வீசிக்
காலனைச் சங்காரம் பண்ணீவீடுவான். வேல் நான் பயப்
படுவதற்குக் காரணமாகிய காலனைக் கொல்லும். கையோ
எனக்கு அஞ்சேல் என்று அபயத்தைக் காட்டும்.’ பயப்
படாதே என்று ’ வாயினால் மாத்திரம் சொல்லிவிட்டு
ஈம்மைக் காப்பாற்றுவதற்குரிய காரியங்களைச் செய்யாமல்:

==#==
208 உள்ளம் குளிர்ந்தது
இருக்கும் வரர்த்தை வீரர்களைப் போன்றவன் அல்ல
அறுமுகவன். அவன் ஒருகையால் அஞ்சேல் என்று
சொல்லிக் கொண்டே மற்றொரு கையில் எல்லாப் பயத்தை
யும் போக்குகின் ற வேலாயுதத்தை வைத்திருக்கிறான்.
”’ பயந்த தனி
வழிக்குத் துணைவடி வேலும்செங் கோடன் மயூரமுமே ”;
என்று நமக்கு உறுதுணையாக ஒரு பாடலில் வேலையும்
சொல்லியிருக்கிறார். அந்த வேல் ஈமக்கு வரும் பயத்தைப்
போக்கி, நெஞ்சில் தைரியத்தைத் தரும்.
அக்த வேல் காலனைக் குத்த வேண்டும் என்பதுகூட
இல்லை. அதற்கு அவசியமே இராது. ஈம் உள்ளத்தில் அறு:
முகவனுடைய வேலும், அஞ்சேல் என் ற திருக்கரமும் தியா
னத்தில் இருக்குமானால் ஈம் பக்கத்தில் காலன் வரமாட்
டான். அந்தத் துணை இருப்பதனால் காலனால் உண்டா
கின்ற அச்சமே மமக்கு வராது. நோய்க்கு மருந்து உண்பது
வேறு; நோய் வராமல் காப்பாற்றுவதற்குரிய உணவுகளை
அருந்துவது வேறு, முன்னையது சோய் நீக்கம்; பின்னையது
கோய் வராமல் பாதுகாத்தல், இங்கே சொல்வது பாது
காப்பு. ’காலன் என்னைச் சாட வரும்போது, முன்பு சிவ
பெருமான், காலால் அவனை உதைத்தது போல, ஆண்டவன்
வேலால் சங்காரம் பண்ணுவான்” என்று எண்ணிச் சொன்
னது அன்று இது. ’வேலையும், திருக்கையையும் நம்பி இருக்
கின்ற என் நிலை அறிந்து காலன் என் பக்கம் வரமாட்
டான். ஆகவே அவனுக்கு அஞ்ச வேண்டியதில்லை’ என் ற
குறிப்பையே இது கொண்டிருக்கிறது.
ஈமக்கு அச்சம் வராமல் காப்பாற்றி, நெஞ்சைத்:
திண்மையுடையதாக ஆக்கி, .மேலும் மேலும் ஆண்டவ
னிடத்தில் நம்பிக்கையும் . அன்பும் உறுதியாக உண்
டாகும்படி செய்வன. . முருசப்பெருமானுடைய. வேலும்,

==#==
மெய்த்துணை 108
திருக்கையும். அவை இரண்டும் ஈம்முடைய நல்வாழ்வுக்கு
வகை செய்கின்றவை. ஆறுமுகத்தையும் வேலாயுதத்
தையும் அபயகரத்தையும் தியானம் பண்ணப் பண்ண ஈம்
மனத்திலிருந்து அச்சம் போய்விடும். காலனுக்கும்
நாம் அஞ்சாத திண்மை உண்டாகும்.
*
சூலம் பிடித்துஎம் பாசம்.
சுழற்றித் தொடர்ந்துவரும்
EM VT HOT SS PH ST NICH
சேன்,கடல் மீதுஎழுந்த
ஆலம் குடித்த பெருமான்
குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே
நமக்குஒரு மெய்த்துணையே.
[குலத்தை ஒரு கையில் பற்றிக்கொண்டு, உயிரை உடம்
பினின்றும் பிரித்துக் கொண்டு போவற்காக அதனைத் தொடர்ந்து
வருகிற காலனுக்கு ஒரு சமயத்திலும் அஞ்சமாட்டேன்; பாற்
கடலின்மீது தோன்றிய ஆலகால ஈஞ்சை விழுங்க அமரர்களைக்
காப்பாற்றிய சிவபிரானுடைய திருக்குமாரனும் ஆறுமுகமுடைய ”’
பெருமானுமாகிய , முருகனுடைய வேலாயுதமும், அஞ்சேல் என்று
குறிக்கும் திருக்கரமும் அஞ்சுகின்ற அடியார்களாகிய மக்கு
ஒப்பற்ற மெய்த்துணையாக இருக்கின்றன.
ஒருகரலும் என்றது மரணம் வருவதற்கு முன்பும், அது வரும்
போதும் என்று கொள்வதற்குரியது. கடல் - பாற்கடல். ஆலம் -
நஞ்சு. அஞ்சாமையைச் சொல்லும் பாடலாதலின் - திருக்கை
என்பதற்கு அபயகரம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
வேலும் அதைப் பிடித்த கரமும் என்று கூறுவது அத்துணைச் சிறப்
பன்று. இறைவனோடு சார்த்தப் பெற்றிருக்கும் வேலாயுதமும்,
அதனருகில் உள்ள அபயகரமும் என்று பொருள் கொள்ளலாம்.
ஈமக்கு என்றது கருணையினால் முன்னிலையாராகிய ஈம்மையும் eer
படுத்திச் சொன்ன உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. ஒரு -
quupp. வேலும் இருக்கையுமாகிய மெய்த்துணை உண்டு என்றும்
கூறலாம். ஆறுமுகத் திருக்கோலத்தில் ஒரு வலக்கரத்தில் வேலும், .
மற்றொரு வலக்கரத்தில் அபயமும் இருக்கும்; ஆதலின் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே என்றார்.]

==#==
பயன்
வாக்கினால் வரும் குற்றம்
வாக்கினால் உண்டாகின் ற குற்றங்கள் நான்கு
வகை என்று சொல்லும், நீதி நூல். பிறருடைய
உள்ளம் புண்படும்படி பேசுவது, உண்மை அல்லாததைச்
சொல்வது, பிறர் இல்லாதபோது அவருடைய குறையை
மற்றவர்களிடம் எடுத்துச் சொல்வது, எந்தப் பயனும் இல்
லாமல் வீண் வார்த்தைகளைப் பேசுவது என்ற இந்த
நான்குமே அந்தக் குற்றங்கள். இவற்றை முறையே இன்னா
சொல்லுதல், பொய் பேசுதல், குறளை கூறுதல், பயனில
சொல்லுதல் என்று சொல்வார்கள். இந்த நான்கையும்
ஒழித்து நாம் பேசவேண்டும். மனிதன் மற்ற உயிர்களுக்
குக் கிடைக்காத வாக்கைப்பெற் றிருக்கிறுன். அதனால்தான்
மற்றப் பிராணிகள் வாய் இல்லாத பிராணிகளாக இருக்க,
அவன் வாய் உள்ள பிராணியாக நிற்கிறுன். அந்த
வாயைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமானால் அவன்
குற்றம் இல்லாமல் பேசவேண்டும்.
வாக்கின் பெருமை
உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் தங்கள் தங்கள்
கருத்தைப் பிறருக்கு மொழிகளால் தெரிவிக்கிறார்கள்.
சில விலங்கினங்கள் தம்முடைய given sib
கருத்தைத் தெரிவிக்கிறது உண்டு. விலங்கைவிடப் பற
வைகள் இன்னும் சிறப்பாகத் தெரிவிக்கும். - ஆனாலும்
நுட்பமான கருத்துக்களை விரிவாகச் சொல்லுகின்ற’
ஆற்றல் மனிதனுக்குத்தான் அமைந்திருக்கிறது. சொற்
களைச் சொல்வதற்கு ஏற்ற உறுப்புகள் அவனிடம்

==#==
uw or 105
பொருந்தி இருக்கின்றன. எழுத்தொலி உண்டாவதற்கு
இன்றியமையாத கருவிகள் இன்னவை என்று இலக்கண
நூல்கள் கூறுகின்றன. மார்பு, கழுத்து, மூக்கு, தலை ஆகிய
நான்கு இடங்களிலும் தோன்.றிய எழுத்துக்கள் இதழ்,
நாக்கு, பல், மேல்வாய் ஆகிய கருவிகளால் வெவ்வேறு
ஒலியாக வருகின்றன. இவைகள் எல்லாம் சொல்லின்
இவியைப் பொறுத்த அமைப்புகள் ,
மனிதன் உள்ளத்தில் ரினைந்ததைச் சொல்லிலே
சொல்லும் ஆற்றல் பெற்றிருக்கிறுன். இது மிக அருமை
யாக வந்த ஒன்று. அருமையாகக் கிடைத்ததை நல்ல பயன்
உள்ள காறியத்தில் ஈடுபடுத்த வேண்டும். பொற்கிண்ணம்
ஒருவனுக்குக் கிடைத்தால் அதைப் போற்றிப் பாதுகாத்து
அதில் பாலும் சோறும் இட்டு உண்பான்) அல்லது உயர்ந்த
விலைக்கு விஜற்பான். அப்படியின்றி ஒரு சிறு குழந்தையின்
கையில் அதைக் கொடுத்தால் பக்கத்து வீட்டுப் பைய
னுடன் விளையாடும்போது கோபம் வந்தால் அந்தக்
கஇண்ணத்தைத் தூக்கி ஏறியும். ஆண்டவன் திருவருட்
பெருமையை நான் ஈன்கு தெரிந்து கொள்ளவில்லை யென்று
புலப்படுத்த வந்த மணிவாசகப்பெருமான்,
”மழக் கையிலங்குபொற் கண்ண மென்றலால்
அரியை என்றுனைக் கருது கின்றிலேன்”
என்று சொல்கிறார். . நமக்குக் கிடைத்த வாக்கு
அல்லது பேச்சைப் பொற்கிண்ணத்தைப் போல, மாணிக்
சத்தைப் போலப் பாதுகாக்க வேண்டும். அவைகளையாவது
பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால்
மனிதப் பிறவி வாய்த்தும் ஊமையாகப் போய்விட்டால்
அவன் பேச்சைப் பெறுவது இயலாத காரியம். இனி
அடுத்த பிறவியில் பெற்றால்தான். இவ்வாறு அருமை
யாகக் கிடைத்த பேச்சை மிகச் சிறந்த பயன் உடைய
தர்கவும், புண்ணியம் தருவதாகவும் செய்யவேண்டும். ’

==#==
106 உள்ளம் குளிர்ந்தது
பெரியவர்கள் திருவாக்கு
தினந்தோறும் பேசுகின்ற பேச்சே இப்படி
இருக்க வேண்டுமென்று ஆன்றோர்கள் போதித்திருக்
agisa. uo காலத்திற்கும் நிற்கின்ற சொற்களைச்
சொல்லுகின்ற பெரியவர்கள் இருக்கிறுர்கள். அவர்கள்
பேசியவற்றைத்தான் இன்றைக்கு உபதேசமாகவும்,
நல்லுரையாகவும் கொள்கிறோம். ஞானசம்பந்தர் முதலிய
பெருமக்கள் திருவாக்காக இன்று கிடைத்திருப்பன திரு
முறைகள். பெரியவர்கள் பாடிய பாடல்களை wore
ளுடைய திருவாக்கு என்று சொல்கிறோம். திருவாசகம்,
திருவாய்மொழி என்ற நூற் பெயர்கள் திருவாக்கு என்ற
பொருளையே உடையவை. மற்றப் பேச்சைவிட அவர்கள்
பாடிய பாடல்கள் மிகச் சிறந்த அமைப்பை உடையன
வாகும், பலகாலம் நிற்கும் தன்மை உடையனவாகவும்,
பல்லாயிர்க் கணக்கான மக்களுக்குக் காலம் கடந்து, இடம்
கடந்து பயன் தருவனவாகவும் இருக்கும்;
திருவாக்கின் பயன்
அந்தப் பயன் இன்னது என்று அறுபவித்தவர்
கள் தாம் உணர்வார்கள். ஆனாலும் இதனால் இன்ன பயன்
என்று தெரிந்து கொள்வதற்குச் சில குறிப்புகளை ஆசிரியர்
களே அமைப்பார்கள். நூலுக்குப் பொதுப் பாயிரம்
என்றும் சிறப்புப் பாயிரம் என்றும் இரண்டு வகை
உண்டு. அவற்றில் சிறப்புப் பாயிரம் என்பது குறிப்
பீட்ட நூலைப்பற்றிய செய்திகளைத் தருவது. . அது சிறப்
பான எட்டுக் கூறுகளைச் சொல்வது; சிறப்பில்லாத
மூன்றையும் சொல்வது உண்டு என்று இலக்கண நூல்கள்
கூறுகின்றன. ஆக்கியோன் பெயர், நூல் வந்த வழி, நூல்
வழங்கும் எல்லை, நூலின் பெயர், நூல் அமைந்த யாப்பு,.
நூலில் உள்ள பொருள், நூலைக் கேட்கும் தகுதி:

==#==
பயன் 102
உடையோர், நூலால் உண்டாகும் பயன் என்பவை
எட்டுச் சிறப்பான கூறுகள். நூல் உண்டான தற்குக்
காரணம், நூல் அரங்கேற்றிய இடம், நூலின் காலம்
என்பன சிறப்பு இல்லாதவை. சிறப்பான எட்டுக் கூறு.
களில் கடைசியாக வைத்திருப்பது பயன். பொதுவாக
எல்லா நூல்களுக்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்
னும் நான்கையும் பெறுதல் பயன் என்று சொல்வார்கள்.
ஆனாலும் அந்தப் பயனுக்கு வகையான சில பயன்கள்
உண்டு. சட்ட நூலைக் சுற்றவனுக்குச் சட்ட அறிவு
பெறுவது பயன். இசை நூல் கற்றவனுக்கு:இசை பற்றிய
அறிவு உண்டாவது பயன், அதுபோல் இறைவனுடைய:
துதி நூல்களைப் படிக்கின் றவர்களுக்குப் பக்தி உண்டாதல்
பயன்,
இப்படி அந்த அந்த நூல்களுக்கு ஏற்ற பயன்கள்
உண்டு. பாடம் சொல்பவர்கள் அவற்றைப் புலப்படுத்து
வார்கள், நூலுக்குரிய பயன் இன்னது என்று அந்த நூலை
இயற்றிய ஆசிரியரே சொல்வதும் உண்டு. இதனை வட
மொழியில் பலசுருதி என்று சொல்வார்கள். கம்பரரமா
யணத்தின் பயனைச் சொல்ல வந்த கம்பர்,
”சாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழிய தாக்கும் வேரியங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
’ குடிய சிலைஇ ராமன் தோள்வலி கூறு வோர்க்கே!*
என்று சொன்னார். தேவாரத்தில் ஞானசம்பந்தரும், சுந்தர
மூர்த் தி சுவாமிகளும் ஓவ்வொரு பதிகத்தின் இறுதியிலும்,
இந்தப் பதிகத்தைப் பாடினால் இன்ன பயன் உண்டாகும்
என்று சொல்லியிருக்கிறார்கள். முதல் திருப்பதிகத்தில்,
** ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம் பக்தன் உரைசெய்த
திருமெறியதமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே”
என்று பயனைச் சொல்கிறார் ஞானசம்பந்தர். ஒவ்வொரு:

==#==
208 உள்ளம் குளிர்ந்தது
யதிகத்தின் கடைசியிலும் உள்ள பயனைத் திருக்
கடைக் கர்ப்பு என்று சொல்வது வழக்கம், எல்லா நூல்
களிலும் வெளிப்படையாகப் பயனைச் சொல்லா வீட்டா
லும் அது குறிப்பாகப் பெறப்படும்.
அலங்காரத்தின் பயன்
அருணகிரீகாத சுவாமிகள் குந்தர் அலங்காரம் என்ற
ஓர் அரிய மாணிக்க மாலையை நமக்குத் தந்தார். காப்புப்
பாடல் ஒன்றும், நூலில் உள்ள பாடல் நூறும், பொங்கி
வழிந்த பாடல்கள் ஆறும் ஆகிய நூற்றேழு பாடல்களை
நாம் பார்த்தோம். இனி ஒரு பாடல் எஞ்சி நிற்கிறது.
அதுவும் சேர்ந்தால் அழகான ஜப மாலையில் 108 குத்தி
ராட்ச மணிகள் அமைந்ததுபோல 208 பாடல்கள் அமைர்
இருப்பதைக் காணலாம். இப்போது பார்க்கப் போகிற
பாடல் கந்தர் அலங்காரத்தின் பயனாக உள்ளது.
கந்தர் அலங்காரத்தைப் படிப்பதனால் ஈமக்கு உண்டா
கும் பயன் முருகப்பெருமானீடத்தில் பக்தி உண்டாகி
உள்ளம் கெகிழ்வது, உள்ளத்தில் உள்ள தளர்ச்சி
போய் உறுதிப்பாடு உண்டாதல், தமிழ் இன்பம் நுகர்
அலல் முதலியன என்று சொல்லலாம். இவற்றுக்கும் மேலே
அருணகிரியார் வேறு சில பயன்களைச் சொல்கிறார். ”கந்தர்
அலங்காரம் முழுவதும் படிக்க வேண்டும் என்பதில்லை.
இந்த நூறு பாடல்களில் ஒரு பாட்டைப் படித்தாலே
இன்ன இன்ன பயன் உண்டாகும்” என்ற முறையில்
இந்தப் பாட்டை அமைக்கிறார்.
மூன்று வகைப் பயன்
கந்தர் அலங்காரத்தைப் பாடியதற்கு மூன்று வகை
யான பயனைச் சொல்லலாம். ஒரு பயன் பாடியவரைச்
சார்வது; மற்றொன்று பாட்டுடைத் தலைவனுக்குக் கிடைப்

==#==
பயன் 10௫
பது; பின்னும் ஒரு பயன் படிப்பவரைச் சார்வது. அரசர்
களையும், பிற தலைவர்களையும் புகழ்ந்து பாடினால் பாடிய
புலவனுக்கு ஊதியம் கிடைக்கும். பாடப்பெற்ற தலை
வருக்குப் புகழ் கிடைக்கும். அதனைப் படிக்கிற.
வர்களுக்குத் தமிழ் இன்பம் கிடைக்கும்.
இங்கே கந்தர் அலங்காரத்தைப் பெற்றவன் முருகள்.
அவனுக்கு இந்த அலங்காரத்தால் ஏதேனும் பயன்
உண்டா என்றால், அப்படி ஒன்றும் இருப்பதாகத் தோன் ற.
வில்லை. அநாதி காலம் முதல் வேதம் முதலிய நூல்கள்
எல்லாம் அவனுடைய புகழைச் சொல்கின்றன. அப்படிச்
சொல்வதனால் அவனுடைய புகழ் புதிதாக விரியவில்லை.
சொல்லாமல் விட்டால் அவன் புகழ் குறைந்து போவதும்
இல்லை. முருகனைப் பற்றிய எண்ணம் பல மனிதர்களுக்கு
உண்டாவதனால் முருகனுக்கு லாபம் எதுவும் இல்லை.
அந்த மக்களுக்குத்தான் லாபம் உண்டு. ஆகவே பாட்டு
டைத் தலைவனாகிய முருகனுக்குக் கந்தர் அலங்.
காரத்தால் பெரிய பயன் ஒன்றும் இல்லையென்றே.
சொல்லலாம். -
இந்த அற்புதமான நூலை இயற்றிய அருணகிறீ .
நாதருக்கு ளஏள்தேனும் பயன் உண்டா என்பதைப்
பார்க்கலாம். அருணகிரி சாதர் இந்தப் பாடலைப் பாடி
அதனால் முருகப்பெருமானுடைய திருவருளைப் பெற்றிருக்.
கலாம். ஆனாலும் பாடல் பாடாமலே அந்தப் பிரா
னுடைய திருவருளைப் பெறும் தகுதி அவருக்கு உண்டு.
இந்தப் . பாட்டைப் பாடினார் என்ற புகழ் அவருக்கு
உண்டாவது ஒருவகை லாபந்தான். ஆனால் அதை,
அவர் எதிர்பார்க்கவில்லை. கந்தர் அலங்காரம் பாடின
தன் முக்கியமான நோக்கம் தமக்குப் புகழ் வரவேண்டும்.
என்பது அன்று. அவர் புகழாசைக்கும் மேற்போனவர்.

==#==
410 உள்ளம் குளிர்ந்தது
நமக்குப் பயன்
குந்தர் அலங்காரம் பாடியதன் உண்மையான பயன்
படிக்கின்ற ஈமக்குக் கிடைக்கும் ஈன்மைதான். வாயில்லாப்
பூச்சிகளான மக்கள் இறைவனைத் தெரிந்து கொள்வதற்
கும், தம்முடைய குறைகளைத் தெரிந்து கொள்வதற்கும்
உரிய வல்லமை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்குத்
தங்கள் குறைகளை எம்பெருமானிடம் எடுத்துச் சொல்வ
தற்குரிய ஆற்றல் இல்லை. . ஆகவே இறைவனுடைய
பெருமையை உணர்த்தி, மக்களுடைய குறைகளையும்
எடுத்துச் சொல்லி, அவனிடத்தில் எப்படி அணுகி
விண்ணப்பம் செய்வது என்பதையும் காட்டவேண்டு
மென்ற நோக்கத்தில் பெருங்கருணை வள்ளலாகிய
அருணகிறீயாதப் பெருமான் இந்த நூலை Qu pei.
தம்முடைய உள்ளத்தில் கந்தப்பிரானால் கிடைத்த இன்ப
.உணர்ச்சி பொங்கிவர, பரந்து நின்ற தம் அறிவு துணை
செய்ய, இதைப் பாடினார் என்று சொல்லலாம். ஆனால்
அதைவிட மக்களிடத்தில் உள்ள பெருங் கருணையினால்
சொன்னார் என்பதே பொருத்தம், ஆகையால் இந்த
மூலைப் பாடியதால் வரும் பயன் இன்னது என்பதைச்
சொல்ல வந்தவர் முருகப்பெருமான் அடையும் புகழ்
என்றோ, நான் இறைவனுடைய அருள் அநுபவம் பெற்றது
.என்றோ சொல்லவில்லை.. இதனைப் படிக்கின்றவர்கள்
இன்ன பயனைப் பெறுவார்கள் என்றே சொல்கிறார்.
அருணகிரியார் கால நிலை
அருணகிரியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் ராட்டில்
முடியுடை மூவேந்தர்கள் ஆட்சி இல்லை. அவருடைய கால
மாகிய பதினைந்தாவது நூற்றாண்டில் எங்கே பார்த்தாலும்
சிற்றரசர்கள் வாழ்ந்தார்கள். சின்னச் சின்னத் தலைவர்கள்
, மகாராஜா என்ற பட்டம் போட்டுக் கொண்டு தம் ஆணை

==#==
பயன் 111
யைச் செலுத்தி வாழ்ந்தார்கள். செல்வத்தால் உண்டாகும் .
போகங்களை  அநுபவித்து இந்திரியங்களின் பசியைத்
தீர்க்கவேண்டுமென்று அவர்கள் எண்ணியிருந்தார்கள்.
புகழுக்கு ஆசைப்பட்டார்கள். அதுகாரணமாகப் புலவர்
கள் அவர்களை ஈச்சிப் பாடி இன்புற்றார்கள். இறைவனைப்
பாடாமல் மனிதனைப் பாடும் துறையில் ஈடுபட்டிரும்
தார்கள். பார காவியங்களைப் பாடும் ஆற்றல் இல்லாமல்
கின்னச்சின்னப் பிரபந்தங்களைப் பாடிச் கொண்டிருக்
தார்கள். பணம் பெருத்த இடத்தில் திருவருள் இல்லா
வீட்டால் மற்றக் குறைபாடுகள் எல்லாம் தாமே வந்து
சேரும். செல்வத்தைப் புலன் நுகர்ச்சியிலே செலவிடுவார்.
கள். ஆகவே, அரசர்கள் நீதி முறைகளை மறந்து தம்முடைய
ஆணையைப் பெருக்கினார்கள். தம்முடைய குடும்பத்தினர்
சுகமாக இருக்க விரும்பினார்கள். நீதியை மறந்து, ஓழுக்
சத்தை மறந்து எத்தனையோ தவறுகளைச் செய்தார்கள் .
வேந்தரால் வரும் அச்சம்
டடிமக்களுக்குப் பிறரால் வருகின்ற அச்சத்தைப்
போக்குவது அரசர் கடமை. தம்மாலும், தம்முடைய
உறவினர்களாலும், அதிகாரிகளாலும், விலங்குகளாலும்,
திருடர்களாலும், பகைவர்களாலும் வரும் பயத்தைப்
”போக்கிச் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும். அப்படி
இல்லாமல் கொடுங்கோல் மன்னர்கள் தம்மைக் கண்டு
ளல்லோரும் அஞ்சும்படி செய்வார்கள். அதுமட்டு மன்று.
சிற்றரசர்கள் அங்கங்கே வாழ்ந்து கொண்டிருந்ததால் எப்
போது பார்த்தாலும் ஒருவருக்கொருவர் சண்டையீட்டுக்
கொண்டே இருப்பார்கள். ஒருவரைக் கண்டால் மற்
நொருவருக்குப் பொருமை,. ஒரு நாட்டில் ஈடைபெறும்
சண்டையினால் அந்த நாட்டிலுள்ள மக்களுக்கும் துன்பம்
உண்டாகும். போர் நிகழும் காலத்தில் மக்களுடைய
வாழ்வில் பலவகையான அவலங்கள் உண்டாவதை நாம்

==#==
112 , உள்ளம் குளிர்ந்தது
அநுபவத்தில் உணருகிறோம். ஒரு காரணமும் இல்லாமல்
தங்களுடைய சொந்த ஈலனை எண்ணி அரசர்கள் பிற அர
சர்களோடு போரிட்டுக் கொண்ட காலம் அது. எந்தச்
சமயத்தில் எந்த மன்னன் எந்த மன்னனை அடிப்பானோ,
எப்போது போர் வந்துவீடுமோ என்று மக்கள் அஞ்சி
இருந்தார்கள். மன்னருக்கும் மன்னருக்கும் ஒற்றுமை
வளரவில்லை.. அவர்களுக்குள் எப்போதும் காழ்ப்பும்,
பொருமையும் வளர்ந்து கொண்டே வந்தன. அதனால்
அவர்கள் துன்பப்பட்டதோடு அல்லாமல் அவர்களுடைய
ஆட்சிக்குக் கீழ் அடங்கிய மக்களும் துன்பப் படும்படி
செய்தார்கள் . வாழ்க்கை முழுவதுமே இத்தகைய பயத்தை
வைத்துக் கொண்டு மக்கள் வாழ்ந்தார்கள். ஆகவே,
குடிமக்களுடைய உள்ளத்தில் இருந்த அச்சங்களுள் பெரிய
அச்சம் வேந்தருக்கு அஞ்சும் ,அச்சம். அத்தகைய அச்சத்
தைக் கந்தர் அலங்காரம் படிக்கிறவர்கள் போக்கிவிடுவார்
களாம். முதலில் இந்தப் பயனைச் சொல்கிறுர் அருணகிரி
யார். ”தமக்குள்ளே கோபித்துப் பொருகின்ற வேந்தர்
களுக்கும் அஞ்சமாட்டார்கள்’ என்று தொடங்குகிறார்.
௪லம் காணும் வேந்தர் தமக்கும் அஞ்சரர்.
இறைவனுடைய திருவருளை நம்பி அவனைத் துதித்து
வாழ்கின்றவர்களுக்கு உள்ளம் சாந்தி பெற்றிருக்கும்
ஆதலின் அவர்களுக்கு இத்தகைய அச்சம் இராது.
மரண பயம்
இனி அடுத்தபடி, இம்மையின் முடிவாகிய நிலைக்கு
வருகிறுர். இந்த வாழ்வின் முடிவில்தான் நமக்கு மரணம்
வருகிறது. அதைப் பற்றித்தான் சென்ற பாட்டில் பார்த்
தோம், = கையில் ஆயுதங்களை ஏந்தியபடி எருமை
மாட்டு வாகனத்தில் ஏறிக்கொண்டு நம்மோடு சண்டையிட
வருபவனைப் போல எமன் வருகிறான். சண்டையீடும்

==#==
பயன் 118
போதுதான் ஆயுதங்களைப் பிடிப்பது வழக்கம். அவன்
ஆய்தங்களைத் நுக்கி எறிந்துவிட்டு வந்தாலும் நாம்
எதிர்க்கப் போவதில்லை... ஆனால் அவனோ சண்டைக்கு
வருபவனைப் போலத்தான் வருகிறான். கந்தர். அலங்கார
நூலைக் கற்றவர்கள் அருணகிரீராத சுவாமிகளின் அற்புத
மான பாட்டின் சிறப்பினால் எமனுக்கும் அஞ்சமாட்
டார்கள்.
யமன் சண்டைக்கு அஞ்சார்.
இம்மையின் இறுதியில் உண்டாகும் அச்சம் இது.
நரகத் துன்பம்
அடுத்தபடி மறுமையில் உண்டாகும் அச்சத்தைச்
சொல்ல வருகிறுர். இம்மை, மறுமை, வீடு என்று மூன்றைச்
சொல்வார்கள். இம்மை என்பது இசுவாழ்வு. மறுமை
என்பது சொர்க்க ஈரசு வாழ்வு. வீடு என்பது எல்லா
வற்றையும் கடந்த, என்றைக்கும் மாருத இன்ப வாழ்வு.
மறுமையாகிய சொர்க்கமும் நரகமும் முறையே புண்ணியத்
தாலும் பாவத்தினாலும் கிடைப்பன. சொர்க்கமாக
இருந்தால் ஈமக்கு அச்சம் இல்லை. ஆனால் ஈரசமாயின்
அச்சம் உண்டாகும். இந்த உடம்பை வீட்டுச் சென்றால்
எந்த நரகத்திற்குப் போவோமோ என்ற சுவலை அலங்
காரம் படிப்பவர்களுக்கு இல்லையாம். ஈரகத்தைக் குமி
என்று சொல்வார்கள். அது தனக்குள் வீழ்ந்த ஆருயிர் களை
அமிழ்த்தித் துன்புறுத்துவதஞல் அப்படிச் சொன்னார்
கள். அது ஒரே இருளாக இருக்கும். ஈரகத்திற்கு
இருள் என்றும் ஒரு பெயர் உண்டு. சொர்க்கமோ ஒளி
மயமாக இருக்கும். சொர்க்க போசத்தை நுகர்பவர்கள்
தேவர்கள். சொர்க்க லோகத்துக் குடிமக்களாகிய அவர்
கள் ஒஓளிபடைத்த - திருமேனியை உடையவர்கள்.
தேவர் என் ற சொல்லுக்கே ஒளிபடைத்தவர் என்பது
$

==#==
114 உள்ளம் குளிர்ந்தது
பொருள். சொர்க்கம் என்பது விளக்கத்தோடு இருக்
கும். அங்கே இருளே இல்லை. அங்கு இருக்கும் ஜேவர்
கள் இமைப்பது இல்லை; தனூங்குவதும் இல்லை. ஆனால்
நரகமோ அதற்கு நேர்மாறாக இருப்பது. அங்கே வெளிச்
சமே இல்லை. இருள் மண்டிக் கிடக்கும். பள்ளங்கள்
நிறைந்தது. . எப்போதும் அழுகையும் துயரமும் இருட்டும்
நிறைந்த இடம் ௮து. தண்டனையை அநரறுபவிக்கின் ற
பெரிய ராடு அது. அது என்றைக்கும் துலங்காது. அத்
தகைய குழிக்குப் பக்கத்திலே கூடப் போகமாட்டார்கள்
அன்பர்கள் .
* நரகத்தில் இடர்ப்படோம் ”
என்று அப்பர் சுவாமிகள் சொல்வார்.
இந்த உலகத்தில் பல வகையான குற்றங்களைச் செய்து
பாவத்தை  ஈட்டியவர்களுக்குத்தான் ஈரகக்குழிக்குப்
போகும் ரிலை உண்டாகும்.. முருகப்பெருமானுடைய
திருவருளால் தம்முடைய மனத்தை அமைதி பெறச் செய்து
எண்ணங்களில் நன்மையும், உரையில் நேர்மையும்,
செயல்களில் தீங்கு இல்லாத் தன்மையும் பெற்றவர்களுக்கு
இம்மை கடந்த மறுமையில் துன்பமே இல்லை. கந்தர்
அலங்காரத்தைப் படிப்பவர்கள், அந்த வகையில் பயிற்சி
பெறுவதால் அவர்களுக்கு இம்மை மாறி மறுமை வரும்
போது நரகக் குழிக்குச் சென்று துன்புறுதல் இல்லை,
துலங்கா நரசக்குழி அணுகார்.
இம்மையில் உள்ள பெரிய அச்சத்தையும், இம்மை
யின் இறுதியில் உள்ள மரண அச்சத்தையும் போக்கும்
கந்தர் அலங்காரம் என்றார்.
நோயால் வரும் துன்பம்
இனி, இந்த வாழ்வில் எத்தனையோ துன்பங்
கள் நமக்கு வருகின் றன. அவற்றை ஆதியாத்மிகம்,

==#==
ude 146
ஆதி தெய்விகம், ஆதி பௌதிகம் என்ற்! சொல்வார்கள்.
தாபத்திரயம் என்று சொல்லுவதும் அவையே. பிற
உயிர்களால் வரும் துன்பம் ஆதியாத்மிகம். உயிர் இல்
லாத பொருள்களால் வருவது ஆதி பௌதிகம், இயற்
கையாக வருவது ஆதி தெய்விகம். இந்தத் தாபத்திரயங்கள்
இந்த உலக வாழ்வில் ஈம்மை அணுகா, முருகப்பெருமா
னுடைய திருவருள் கிடைக்குமானால் தாபத்திரயம் இல்
லாத இகலோக வாழ்வு ஈமக்கு உண்டாகும். அந்த
அருளைப் பெறுவதற்குரிய சாவியாக இருப்பது குந்தர்
அலங்காரம். இந்த உடம்போடு இருக்கும்போது முக்கிய
மாக நமக்கு வேண்டியவைகள் செல்வம், ரோய் அற்ற
வாழ்வு:
* மதிவேண்டும், கின்கருணை ரிதிவேண்டும், நோயற்ற
’ வாழ்வினால் வாழவேண்டும்”
என்று இராமலிங்க வள்ளலார் கந்தகோட்டத்து முருகனை
வேண்டுவார். அருணகிரி சாதப்பெருமான் திருப்புகழில்,
” தருணமிதையாமிகுத்த களமதுற : கீள்சவுக்கிய
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு”
வேண்டும் என்று சொல்கிறார். மனிதன் பெறுகின்ற
பேறுகளில் நோய் அற்ற வாழ்வே தலை சிறந்தது.. . ஆனக்
யினால் . நோயினால் வருகின்ற அச்சம் சுந்தர் அலங்
காரத்தைப் பாராயண்ம் செய்கின்றவர்களுக்கு. வராது
என்று அடுத்தபடி சொல்கிறார்.
- துட்ட தோய் அணுகரர்,
நோயில் எளிதில் தருகின்ற நோய் உண்டு; . தீராத வியா
தியும் உண்டு; அசாத்திய ரோகம் என்று சொல்வன
அவை, அவற்றையே, ’துட்ட சோய்’ என்று சொன்னார்.
விலங்கின் அச்சம்.
பிற மனிதர்களால் வரும் துன்பம் இராது என்று
சொல்வதற்கு, வேந்தரால் வரும் துன்பம் இராது என்று

==#==
116 உள்ளம் குளிர்ந்தது
சொல்லிவிட்டார். ஆகவே தனியாக வேறு மனிதர்களைச்
சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேந்தர் என்றாலும்
உபலட்சணத்தால் எல்லா வகையான மனிதர்களையும்
கொள்ளலாம். விலங்கினங்களால் வரும் துன்பம் இல்லை
என்பதை அடுத்தபடி சொல்ல வருகிறார். காட்டில் வாழ்
கின்ற விலங்கினங்களால்தான் மனிதர்களுக்குத் துன்பம்
உண்டாகும், புலி, கரடி, யானை என்பவை மனிதனைத்
துன்புறுத்தும் விலங்கினங்கள். கந்தர் அலங்காரத்தைத்.
தெரிந்து கொண்டவர்களுக்கு அந்த விலங்கினங்களாலும்
துன்பம் இல்லையாம்.
கலங்கார் புலிக்கும் குரடிக்கும் யானைக்கும். .
தமிழ் நாட்டில் சிங்கம் அதிகமாக இல்லையாதலால் அதைச்
சொல்லாமல் புலி, கரடி, யானை என்று சொன்னார்.
கற்று அறிந்தவர்
இந்தப் பயனைப் பெறுகின்றவர்கள் யார் ? குந்தர்
அலங்காரத்தைப் படித்து, ’அதில் உள்ள செய்யுட்களை
ஈன்றாக உணர்ந்து, அருணகிரியார் கரீட்டும் சாதனங்களைப்
பயின்று, மனத்தை அடக்கி, பின்பு இறைவனுடைய
திருவருளைப் பெற்றவருக்கே இந்தப் பயன் வரும் என்று
சொல்லவில்லை. அலங்கார நூற் கவிகளில் ஒன்றையாவது
ஈன்கு கற்று அறிந்தவருக்குக்கூட இந்தப் பயன் உண்டா
கும் என்று சொல்கிறார்.
சந்தன் நன்னூல், அலங்காரம் னூற்றுள் ஒரு கவிதான்
கற்று அறிந்தவரே. ’
கந்தனுடைய அலங்காரம், ஈல்ல நூலாகிய அலங்காரம்;
கந்தனைச் சொல்லாலே அழகு படுத்தும் நூலுக்குக்
கந்தர் அலங்காரம் .என்ற பெயர் வந்தது. இது ஈல்ல
பயனைத் தரும். ஆதலால் நல்ல நூல் ஆயிற்று. இங்கே
நூல்.. என்பழு ,பனுவல் என்ற பொருளில் வந்ததி!

==#==
பயன் 117
பழங்காலத்தில் நூல் என்பது இலக்கணம் ஒன்றுக்குத்
தான் பெயராக இருந்தது. பிற்காலத்தில் எல்லா வகை
யான பனுவல்களுக்கும் வந்தது. அருணகிரியார் காலத்தி
லேயே ’நூல் என்ற பெயர் இலக்கண இலக்கியங்கள்
எல்லாவற்றையுமே குறித்ததனால், இந்தப் பிரபந்தத்தை
நூல் என்று சொன்னார்.
நன்னூல் என்று தம்முடைய நூலைத் தாமே சொல்ல
லாமா என்ற கேள்வி எழும். முருகப்பெருமானுடைய
புகழைச் சொல்வதனால் இது நல்ல நூல் என்பதில் ஐயம்
இல்லை. கங்கையில் உள்ள தண்ணீரை ஒரு மன்னன்
தங்கக் கிண்ணத்தில் எடுத்து வருகிறான். வேறு ஒரு
செல்வன் வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்து வருகிறான்.
பின்னும் ஒரு வியாபாரி வெண்கலக் கிண்ணத்தில் எடுக்
கிறுன். ஓர் ஏழை மண் சட்டியில் எடுத்து வருகிறான். எடுக்
கின் ற பாத்திரங்கள் வெவ்வேறுக இருந்தாலும் தூயன
வாக இருந்தால் எடுத்துவரும் கங்கை எல்லாவற்றிலும்
ஒன்றுதான்.. அதுபோல் பாடுபவர்களுடைய நீலை எப்படி;
இருந்தாலும் தூய்மையான மனத்தோடு பாடினால் கந்தப்
பிரானுடைய புகழ் எப்போலும் நன்மையையே தரும்.
ஆகையால்,
கந்தன் நன்னூல் அலங்காரம்
என்று சொன்னார். தாம் பாடியதனால் ஈல்ல நூல் என்ற
எண்ணத்தில் சொல்லவில்லை; கந்தனுக்கு அலங்காரமாக
இருப்பதால் இது ஈல்ல நூல் ஆயிற்று என்று சொன்னார்.
இதனை நூறு என்ற வரையறையுடன் பாடினார்.
ஆகையால்,
தூற்றுள் ஒரு கவிதான் கற்று அறிதந்தவரே
என்று பாராயணம் செய்பவருடைய முறையைச் சொல்
கிருர். கற்றல் வேறு, ஓதுதல் வேறு, படித்தல் வேறு.
ஒரு முறை படிப்பது படித்தல், பல முறை படித்தல்’

==#==
8 உள்ளம் குளிர்ந்தது
ஓதுதல், பொருள் தெரிந்து படித்தல் சுற்றல். பொருளில்
உள்ள’ கருத்தை நன்கு. உணர்ந்தது, அதனைப் பிறருக்கும்
சொல்கின் ற ஆற்றல் பெற்று, அதன்படி ஒழுகுகின் றவர்கள்
அறிந்தவர்கள். இங்கே அறிந்தவர் என்பது ஓதி. உணர்ந்
தவர் என்றே பொருள் செய்வதற்குரியது. சர்க்கரையைப்
பற்றித் தெரிந்து கொள்வது வேறு} அதன் சுவையை
உணர்ந்து கொள்வது வேறு. அந்த வகையில் ஒரு கவியை
யாவது பலகாலம் படித்து அதன் பொருளை எல்லாம் நன்கு
தெரிந்து, உள்ளத்தில் பதித்துத் தெளிந்து, பிறரையும்
தெளிவிக்கும் ஆற்றல் பெற்று, அதனால் பெறக்கூடிய
ஒழுக்கத்தில் நின்று பயன் பெறுவதையே கற்று அறிதல்
என்று இங்கே சுருக்கமாகச் சொல்கிறார்.
ஒரு கவி
ஒரு பாட்டைக் கற்ற மாத்திரத்தில் இத்தகைய ற்:
பயன்கள் எல்லாம் எப்படிக் கிடைக்கும்? மனிதர்களுடைய:
வகழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல குணத்தை மேற்,
கொண்டாலேயே மற்ற கல்ல குணங்கள் எல்லாம் அது,
னோடு, சாரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்..
”மெய்யையே பேசிய அரிச்சந்திரனுக்குப் பிற குணங்கள்
எல்லாம் தாமே வந்து. அமைந்தன. அகிம்சையை மேற்
கொண்ட காந்தியடிகளுக்கு மற்றக் குணங்கள் எல்லாம்;
கீறம்பி இருந்தன. ’
”கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்’?
என்று தாயுமானவர் சொல்கிறுர். அருணகிறீநாதப்.
பெருமான் உலகத்தார் உய்யும்பொருட்டுப் பாடிய கந்தர்
அலங்காரத்தில், ஓவ்வொரு - பரட்டும்: சிறந்த கருத்தைக்
கொண்டது. மனிதர்களுடைய குற்றங்களை எடுத்துச்
கொல்லி, இன்ன வகையில் அவுற்றினிஸ்றும். நீங்க வஈழு
வேண்டுமென்யதைப். பல, ,யாடல்கள்... சொல்கின்றன

==#==
பயன் 119
முருகப்பெருமானுடைய . பெருமையைக் காட்டி அவ
னுடைய கருணைக்கு ஆளாகவேண்டு மென்ற எண்ணம்
உண்டாகும்படி சில பாடல்கள் சொல்கின்றன. எந்தப்
பாட்டைப் படித்தாலும் அந்தப் பாட்டில் ஈடுமணியாக
ஒரு கருத்து இருப்பதைக் காணலாம். அந்தக் கருத்தையே
நம்முடைய வாழ்நாளில் குறிக்கோளாகக் கொண்டு ஒழுக
வந்தோமானால் அதுகாரணமாக மற்றப் பண்புகளும் தாமே
வந்து அமையும். ஆகையால் ஒன்று கற்றமுலும் நன்கு கற்க
வேண்டுமென்ற கருத்தோடு இப்படிச் சொல்கிறார்.
ஒரு கவி சுற்முலே போதும், மற்றவை வேண்டாம்
என்பது இதன் பொருள் அல்ல. மிகப் பசித்தவன் தனக்
குச் சோறு வேண்டுமென்று கேட்கிறான். ”ஐயா, ஒரு
கவளம் தாருங்கள்” என்று சொல்கிறான். அளவு குறிப்
பிட்டு அவன் சொன்னாலும் ஒரு கவளம் மட்டும் போதும்
என்பது அவன் கருத்து அன்று. வயிறு நிறையச் சோறு
போடுகிறேன் என்றால் அவன் மறுப்பானா அப்படி ஒரு
பாட்டுக்கே இத்தனை பயன் இருக்கும்போது நூறு பாடல்
களையும் படிக்கிறவர்கள் பெரும் பயன் அடைவார்கள்
என்பது சொல்லாமலே விளங்கும்.
முடிந்த பயன் .
அந்தப் பெரும் பயன் என்ன? இந்தப் பாடலில்
இம்மை வாழ்வில் குறைகள் நீங்கும் என்றும், எம பயம்
நீங்கும் என்றும், மறுமை வாழ்வில் ஈரகம் அணுகாது
என்றும் சொன்னார்.. ஆனால் அதற்குமேற்பட்ட பெரும்
பயனும் ஒன்று உண்டு. அதுதான் வீடு அடைதல். இந்தப்
பாட்டில் அந்தப் பயனைச் சொல்லவில்லை.
இந்தப் பாட்டின் அமைப்புத் தனி முறையில் அமைநர்
இருக்கிறது. பயன் என்பது இது கிடைக்கும் என்று
சொல்வது, ஆனால் இவை வாரா என்று அருணகிரியார்

==#==
190 உள்ளம் குனிர்ந்தது
சொல்கிறார். குற்றம் நீங்கும், குணம் சாரும் என்று ’
இரண்டையும் சேர்த்துச் சொல்வதும் உண்டு. இந்தப்
பாட்டு முழுவதிலுமே இது வராது, அது வராது என்று
சொல்கிறார். வெந்தர் அச்சம் போகும், எமனுடைய அச்சம்
போகும், ஈரகக குழி அச்சம் போகும், துட்ட நோய் அச்சம்
போகும், விலங்குகளின் அச்சம் போகும் என்று ஐந்து
அச்சத்தைச் சொல்கிறார்.. இவை போகும் என்பதைச்
சொன்னவர் இன்னது வரும் என்று சொல்லவில்லை.
இருள் நிரம்பிய ஓரிடத்தில் இருக்கிறவனுக்கு இருள்
போய்வீடும் என்று சொன்னாலே போலுமானது.. ஒளி
வரும் என்பது அதற்குள் அடங்கிக் கிடக்கிறது.
பசித்தவன் ஒருவனைப் பார்த்து உன் பசியைப் போக்கு
கிறேன் என்றால், சோறு தருகிறேன் என்பதுதான்
பொருள். அப்படி அச்சம் நீங்கும் என்றால், அதிலிருந்து
அச்சம் இல்லாத அநுபூதி கிடைக்கும் என்ற குறிப்புப்
பொருனை மரம் தெரிந்துகொள்ளவேண்டும். உலக வாழ்
வில் ஜுன்புறுகிற மக்களுக்கு முதலில் துன்ப daa
வேண்டும். பின்பு இன்ப ஆக்கம் வேண்டும். துன்புறுகற
வர்களே மிகுதியாக இருக்கிற உலகத்தில், ””உனக்குத்
அன்பம் போய்வீடும்” என்று சொல்ல வேண்டியதுதானே
அவசியம்? இரக்கம் உடையவர்கள் முதலில் அதைத்தான்
சொல்வார்கள்.
அபய வரதம்
ஆண்டவன் திருக்கரங்களில் இரண்டில் ஒன்று ௮ப
யத்தையும் மற்றொன்று வரதத்தையும் காட்டுகின்றன.
வலக்கை அபயத்தையும், இடக்கை வரதத்தையும் காட்டு
கின், றன. அபயம் என்பது அஞ்சேல் என்ற குறிப்
புடையது வரதம் என்பது என் திருவடியை அடைந்தால்
அருள் பெறலாம் என்று காட்டுவது. அருள் தான்
மூக்கியம். ஆனால் மக்களுக்கு முதலீல் அச்சம் போக

==#==
பயன் 121
வேண்டும். பின்புதான் அருளினால் பயன் க்ண்டாகும்.
வயிற்று வலிக்காரனுக்குச் சோற்றைக் கொடுத்தால்
பயன் இல்லை. முதலில் வயிற்று வலியைத் தீர்த்துப்
பின்பே உணவை அளிக்க வேண்டும். அச்சம் உடைய
வனுக்கு அரிய பொருள் கிடைத்தால் அதன் பெருமை
தெரியாமல் உதறித் தள்ளிவீடுவான். அது குறித்தே
முதலில் நாம் காண வலக்கையினால் அஞ்சேல் என்பதைக்
காட்டுகிறான் இறைவன். வலக்கைதானே சிறந்த கை?
அந்தக் கையை முதலில் பார்க்க வேண்டும். அதைப்
பார்த்து அவனை அணுகினால் ஈம்முடைய அச்சத்தை அவன்
முதலில் போக்கிவிட்டுப் பின்பு நாம் இன்பம் அடைகிற
இடம் இங்கே இருக்கிறது என்பதைக் காட்டுவான்.
ஆண்டவனுடைய இடக்கை அவன் திருவடியைச் சட்டிக்
காட்டி, அதை அடைந்தவருக்கு அருள் செய்யும். அருள்.
செய்வது இடத்திருக்கரம். இடத்திருக்கரத்துக்கு முன்பே
துன்பத்தினை நீக்கி முதலில் பயன் தருவது அபயம் காட்டும்
திருக்கரம்.
இந்தப் பாட்டு ஈமக்கு அபயம் அளிக்கிறது. அஞ்சா
மையைத் தருகிற கந்தப்பெருமானுத்குரிய அலங்காரமாகிய
இந்த நூலைப் படிக்கிறவர்கள் அபயத்தைப் பெறுவார்கள்.
அதற்கு அடுத்தபடி அவர்களுக்கு வரதமும் இடைக்கும்
என்பதைக் குறிப்பால் பெறலாம்.
உண்மை நிகழ்ச்சி
இங்கே என்னுடைய சொந்த அநுபவம் ஒன்றைச்
சொல்ல விரும்புகிறேன். இந்தப் பாட்டின் கடைசியில் .
உள்ள,
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும்
என்பதற்கு விளக்கமாக அந்த ரிகழ்ச்சி அமையும் என்று
ier 583 par.

==#==
122 உள்ளப் குளிர்ந்தது
சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் இலங்கைக்குச்
சென்றிருந்தேன். பலமுறை அந்த நாட்டுக்குப் போயிருக்
கிறேன். இந்த முறை வேலணை என்ற இடத்தில்
இருமுறை மகாளடு கடந்தது; அதில் கலந்துகொள்ளப்
போயிருந்தேன். பெரிய கூட்டம். வேலணை என்பது
இலங்கையின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தில் இருப்
பது. யாழ்ப்பாணத்திலும், கீழ்மாகாணமாகிய மட்டக்
களப்பிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கைத்
தமிழர்களுக்குத் தமிழ் இலக்கியங்களிலும், திருமுறை
களிலும், இலக்கியச் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும்
மிகுந்த ஆர்வம் உண்டு. திருமுறை மகாராடு ஈடநர்தபோது
இலங்கை முழுவதிலுமிருந்து பல அன்பர்கள் வந்து
கலந்து கொண்டார்கள்.. மட்டக்களப்பில் உள்ள தமிழர்
களும் வந்து விழாவில் நீகழ்ந்த சொற்பொழிவுகளைக்
கேட்டு இன்புற்றார்கள்.
இலங்கைக்குச் செல்கிறவர்கள் பெரும்பாலும்
யாழ்ப்பாணத்தில் பல சொற்பொழிவுகளை ரீகழ்த்திவீட்டு
இலங்கையின் தலைககராகிய கொழும்புக்குச் சென்று வந்து
விடுவது வழக்கம். கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்
கனப்புக்குப் போய் அங்குள்ள தமிழர்களைக் கண்டு
சொற்பொழிவு ஆற்றி வருவது அரிது. ஆகையால் அங்
குள்ள தமிழர்களுக்குக் கொஞ்சம் ஏக்கம் இருக்கும்.
மட்டக்களப்பாகிய கிழக்கு மாகாணத்தில்தான் திருக்
கோணமலை. என்ற பாடல் பெற்ற சிவத்தலம்
இருக்கிறது.
திருமுறை விழா ஈடந்து கொண்டிருந்தபோது மட்டக்
களப்பிலிருந்து வந்த தமிழர்கள் என்னை அணுக, ”விழா
முடிந்தவுடன் நீங்கள் எங்கள் ஊருக்கு வரவேண்டும்;
வந்து சொற்பெர்ழிவு ஆற்ற வேண்டும். அங்கே பாடும்
மீன்கள் உள்ள வாவி இருக்கிறது” என்றார்கள்.. நாள்

==#==
நியன் 128
வருவதாக ஒப்புக்கொண்டேன். மட்டக்களப்பை முன்
ஞலே நான் பார்த்தது இல்லை. ஆதலால் அந்த இடத்
தைப் பார்க்கும் பயனும் நமக்குக் கிடைக்கும் ’ என்ற
எண்ணத்தில் ஒப்புக்கொண்டேன்.
வேலணையில் திருமுறை விழா முடிந்த பிறகு ஒருநாள்
புறப்படுவது என்று திட்டமாயிற்று. அன்று அமாவாசை,
எனக்கு மிகவும் வேண்டியவரும் என்னுடைய இளைய
சகோதரர்போல் இருப்பவரும் ஆகிய இராசேரந்திரகுருக்கள்
என்பவர் யாழ்ப்பாண நகரத்திற்கு அருகில் நீர்வேலி என் ஐ
கஊளறில் வாழ்கிறார். எனக்குச் சொந்தமான வீடு ஒன்று
அங்கே இருப்பது பேரலவே மான் கருதுகிறேன். அவரும்
அவரது குடும்பத்தினரும் என்னையும் தம் குடும்பத்தில்:
ஒருவனாக எண்ணி உபசரிக்கும் பேரன்பு உடையவர்கள்.
அமாவாசை அன்று அவர் வீடு சென்று நீராடித் தர்ப்பணம்
செய்து உணவு கொண்டு அங்கிருந்து மட்டக்களப்புக்குக்
காரில் புறப்படலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்.
எங்களுடைய. காறியாலயத்திலிருந்து இலங்கைக்கு ஓர்
அன்பர் வந்திருந்தார். அவரையும் துணையாக அழைத்துக்
கொண்டு போவதாக உத்தேசம் இருந்தது. குறிப்பிட்ட
ஈசனில் உணவு கொள்வதற்கு ஒருமணி ஆயிற்று. அப்பால்
மட்டக்களப்பு அன்பர்களும், சானும், என்னுடைய காரி
ய௱லய©:அன்பரும் ஒரு காரில் புறப்பட்டோம். எங்களுடன்
திருவாளர் பொ, கிருஷ்ணபிள்ளை என்ற தமிழ்ப்புலவரும்.
வந்தார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
பல ஊர்களைக் கடந்து பொலன்னருவா என் ற ஊருக்கு.
வந்து சேர்ந்தோம். பழங்காலத்தில் அரசர்கள் ஆண்ட
இடம், அது. பல .அருமையான சின்னங்களை இன்றும்
அந்த நகரில் பாதுகாத்து வருகிறார்கள். அங்கே ’நங்கள்
வரும்போது. மாலை நேரம் ஆகிவிட்டது. கதிரவன் மேல்:
இசையில் மறைந்தான். அப்போது கார் ஓட்டியவர் ஓன்று

==#==
124 உள்ளம் குளிர்ந்தது
சொன்னார்; ”இங்கே தங்கி உணவு கொண்டு. இரவு
இங்கேயே உறங்கிவீடலாம். மிக விடியற்காலையில்
எழுந்திருந்து இங்கேயிருந்து புறப்பட்டுப் போகலாம்.
இன்னும் நூறு மைல்களாவது பேரகவேண்டி.
யிருக்கும்” என்று சொன்னார். என்னுடன் வந்தவர்கள்
அதற்கு இசையவில்லை. . ”மட்டக் களப்பீல் உள்ள
நண்பர்கள், இவர்கள் வருவார்களோ, வரமாட்டார்களோ
என்ற ஐயப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்களது ஆவல்
கட்டுக்கடங்காமல் இருக்கும். இங்கே தங்காமல் எப்படி
யாரவது அங்கே போய் விட்டால் ஒரேயடியாக இளைப்பாறஜிக்
கொள்ளலாம்” என்று வற்புறுத்தினார்கள், அதுவும் சரி
என்று சாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம்.
நாங்கள் உரையாடிக்கொண்டே போனோம். எங்க
ளுடன் வந்த பண்டித கிருஷ்ணபிள்ளை ஈன்றாகப் படித்த
வர். சிறந்த ரசிகர், அவர் பலவற்றைச் சொல்ல, நானும்
தமிழ் சம்பந்தமான பல கருத்துக்களை சொல்லிக் கொண்டு
வந்தேன். பின்பு திருப்புகழ் சில பாடினேன். சுந்தர்
அலங்கார நுட்பங்களைச் சொல்லத் தொடங்கினேன். சில
பாடல்களில் உள்ள ஈயங்களைச் சொன்னவன்), பேச்சில்
பொழுதைக் கழிப்பதை விட்டுவிட்டுக் கந்தர் அலங்காரப்
பாடல்களையே சொல்லலானேன். அந்தப் பாடல்களை வாய்
விட்டுப் பாடத் தொடங்கியவுடனே எனக்கு உணர்ச்சி
விஞ்சியது. . மற்றவர்கள் கேட்கிறுர்களோ, இல்லையோ
என்பதைக் கவனியாமல் கான் உணர்ச்சி வசப்பட்டுப்
பாடிக்கொண்டே இருந்தேன். கல்ல வேளை! மற்றவர்கள்
அமைதியாகக் கேட்டு வந்தார்கள்.
நாங்கள் பெரிய காட்டுக்கு ஈடுவில் போய்க் கொண்டி
ருக்தோம். இலங்கையில் உள்ள காடுகள் மைல் கணக்கில்
நீண்டு இருக்கும். இரண்டு பக்கமும் மரங்கள் ஓங்கி.
உயர்ந்து சுவர் எடுத்தது போல வளர்ந்திருக்கும்.. அவற்றிற்’,

==#==
பயள் 126
கிடையில் சாலை செல்லும். வளைவே இல்லாமல் ஒரே
கேர்கோட்டைப் போல அந்தச் சாலை இருக்கும். காடுகளில்
யானைகள் சஞ்சாரம் செய்வது உண்டு. அமாவாசை
இருளில் அத்தகைய சாலை வழியே நாங்கள் போய்க்
கொண்டிருந்தோம்.
கார் போய்க்கொண்டிருந்தது. வரவர அதன் வேகம்
மிகுதியாயிற்று. கார் ஓட்டி ஏதோ முணுமுணுத்துப்
பேசினார். நான் அதைக் கவனிக்கவில்லை, நான் அலங்காரப்
பாட்டில் கருத்தாக இருந்தேன். அருணகிரீகாத சுவாமிகளு.
டைய திருவடியில் நின்று கந்தர் அலங்காரத்திலே உள்ளத்
தைப் பறிகொடுத்துப் பாடிக் கொண்டிருந்தேன். கார் தலை
தெறிக்கும் வேகத்தில் போய்க்கொண் டிருந்தது.
என்னுடைய ஈண்பர்கள் ஏதோ பேசிக்கொண்டதாக
நினைப்பு இருக்கிறது. ஆனால் இன்ன பேசினார்கள் என்று
தெரியவில்லை.. நான் பாடப் பாட அவர்கள் கேட்டுக்
கொண்டிருந்தார்கள்.
நெடுந்தூரம் போன பிறகு ஓர் ஊர் வந்தது.
எதிரே வேறு ஒருவர் கார் ஓட்டிக்கொண்டு வந்தார்.
அவரிடத்தில் எங்களுடைய கார் ஓட்டி ஏதோ சொன்னார்.
வந்தவர் காரை மேலே ஓட்டாமல் ரிறுத்திவிட்டார்.
கடைசியில் கார் மட்டக்களப்பை அடைந்தது. அங்கே
உள்ள நண்பர்கள் நாங்கள் தங்குவதற்கு. ஓர்
அழகான இடத்தை ஒழுங்கு பண்ணியிருந்தார்கள்.
அங்கே சென்று கை காலைச் சுத்தி செய்துகொண்டு
Botimp எடுத்து இட்டுக்கொண்டேன். சுந்தர்
அலங்காரம் சொல்லிவந்தமையினால் எனக்கு ஒருவகையான
களர்ச்சி உண்டாகி இருந்தது. முருகா என்று சொல்லி.
நெற்றி நிறைய நீற்றை இட்டுக்கொண்டேன்.. அப்போது
கார் ஓட்டி பணிவுடன் வந்து என் காலீல் நெடுஞ்சாண்

==#==
126 உள்ளம் குளிர்ந்தது
கிடையாக வீழ்ந்து வணங்கினார்! எழுந்து, ””திருகிறு
கொடுங்கள்” என்று கையை கீட்டினார்.
”’நான் துறவி அல்லவே! மடாதிபதியும் அல்லவே!
ஆதி சைவராக இருந்தாலும் திருநீறு கொடுக்கலாம். நான்
உங்களைப் போன்ற சாமான்ய ஆசாமி. விபூதியை நீங்களே
எடுத்துக் கொள்ளுங்கள்” என்று விபூதிப் பையை
அவரிடம் ரீட்டினேன். .
அவர், - ”” இல்லை, இல்லை; உங்கள் கையினால்
கொடுங்கள். அப்போதுதான் எனக்குத் திருப் தியாக
இருக்கும்” என்று சொன்னார்.
”ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?” என்று கேட்டேன்.
”உங்கள் கையினால் வாங்கவேண்டுமென்று எனக்குத்
தோன்றுகிறது. காரணம் இருக்கிறது, சொல்கிறேன்.
முதலில் கொடுங்கள்” என்றுர்.
அவர் விருப்பப்படியே அவருக்குத் திருகிறு கொடுத்து,
பையைச் சுருட்டி வைத்துக் :கொண்டேன்; ”என்ன
சொல்ல வருகிறீர்கள்?” என்று கேட்டேன்.
*”அது பெரிய விஷயம்; கேளுங்கள்” என்று அவர்
ஆரம்பித்தார்.
”நாம் காட்டின் வழியே வரும்போது கார் மிசமிக
வேகமாக வந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று
அவர் கேட்டார்.
-, கார் எங்கும் நிற்காமல் நல்ல வேகத்துடன் வந்த
தாகத்தான் எனக்குத் தோன்றியது” என்றேன். .
*நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்பது எனக்குத்
தெரியும். நான் இவ்வளவு வேகத்தில் எப்போதும் காரை
விட்டது இல்லை. அவசியமும் சேர்ந்தது இல்லை. இன்றோ
உயிருக்குப் பயந்து இத்தனை வேகத்தில் விட்டேன்”
என்று அவர் சொன்னார்.

==#==
பயன் 127
அப்படிச் சொன்னவுடன்தான் ஏதோ அபாய ரீகழ்ச்சி
கிகழ்ந்திருக்க வேண்டுமென்ற . எண்ணம் எனக்குத்
தோன்றியது. ”நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று
கேட்டேன். ’
இரண்டு இடங்களில் வந்த ஆபத்தினின்றும் நீங்கி
நாம் உயிர் பிழைத்தோம். அதற்குக் காரணம் நீங்களே”
என்று அவர் சொன்னார்.
அப்போதும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
*”சொல்லுங்கள்*’ என்றேன்.
**நான் பொலன்னருவாவிலேயே சொன்னேன்; அங்கே
தங்கிவீட்டு விடியற் காலையில் போகலாம் என்றேன்.
இவர்கள் கேட்கவில்லை. நாம் வந்த இடம் அடர்ந்த காடு. .
யானைகள் உள்ள இடம். அநேகமாக இரவில் யாரும்
அங்கே காரை ஓட்டிக்கொண்டு போகமாட்டார்கள்.
யானைகள் கூட்டம் கூட்டமாகச் செல்வதும் உண்டு;
தனியாகச் செல்வதும் உண்டு. அவசியம் நேர்ந்து காரை:
ஓட்டிக்கொண்டு செல்லும்போது, யானைகள் வருவது
தெரிந்தால் காரின் விளக்கை அணைத்துவிட்டுக் காரை
அங்கேயே நிறுத்திவிடுவார்கள். யானைக் கூட்டம் போன
பிறகுதான் காரை ஓட்டிச் செல்வது வழக்கம். இவற்றை
எல்லாம் அறிந்தே இப்போது போகவேண்டாம் என்று
சொன்னேன்.”
”நடந்ததைச் சொல்லுங்கள்” என்று ரான் தூண்
டினேன்.
”அதைத்தான் சொல்ல வருகிறேன். கார் வந்து
கொண்டிருந்தபோது பக்கத்தில் மளுக் என்று ஒரு யானை
ஒரு மரத்தின் கிளையை ஓடித்தது எனக்குக் கேட்டது.
யானைதான் கிளையை ஓடிக்கிறது என்பதை ஈன் அநுப
வத்தரல் உணர்ந்தேன். என்ன செய்வது என்று சற்றே

==#==
188 உள்ளம் குளிர்ந்தது
தடுமாஜினேன். வண்டியை நிறுத்திவீட்டு யானை போன
பிறகு ஓட்டலாமா என்ற எண்ணம் வந்தது. நீங்கள் அப்
போது முருகனைத் துதித்துப் பாடிக் கொண்டிருந்தீர்கள்.
அந்தப் பாட்டு என் காதில் விழுந்து கொண்டிருந்தது.
எல்லாவற்றையும் மறந்து நீங்கள் பாடும்போது எனக்கும்
கொஞ்சம் உணர்ச்சி உண்டாயிற்று. முருகன் காப்பாற்று
வான், காரைச் செலுத்தலாம் என்று எண்ணி வேகமாக
விட்டேன். ஒருவாறு அந்த இடத்தைக் கடந்து அப்பால்
வந்துவிட்டேன். ஆனால் பின்னால் வருகிற ஆபத்து அப்
போது தெரியவில்லை.”
”என்ன, | மறுபடியும் ஆபத்தா?” என்று யான்
கேட்டேன்.
ஆம். இது முன்னதைவிட மிகவும் கடுமையான
ஆபத்து. ஆணும் பெண்ணுமாகிய இரண்டு யானைகள்
சேர்ந்திருக்தால் அதைக் கலைக்கிறவனுக்கு உண்டாகும்
ஆபத்தைச் செரல்ல முடியாது, அப்படி இரண்டு யானை
கள் சாலைக்கு அருகில் மரத்துக்குப் பின்னாலே நின்று
கொண்டிருந்ததை நான் வாசனையால் உணர்ந்தேன்.
இதுவும் எங்களுக்கு அநுபவம், இந்த முறை நிச்சயம்
நம்முடைய காருக்கு ஆபத்து என்று எண்ணினேன்.
யானை தன்னுடைய காலால் பந்தைத் தள்ளுவதுபோலக்
காரை உருட்டிவீடும். கார் வேகத்தைவிட உங்கள் பாட்டு
வேகம் மிகுதியாக இருந்தது. ஆண்டவன் உங்கள் வரயி
லாக அப்போதும் எனக்குத் தைரியத்தைக் கொடுத்தான்.
என் உள்ளம் நடுங்கினாலும் கை நடுங்கவில்லை. இறுகச்
சக்கரத்தைப் பிடித்தேன். உங்கள் பாட்டுக் காது
வழியாகப் புகுக்று தைரியத்தை ஊட்டியது. எப்படி
ய௱வது இதைத் தாண்டிவிட வேண்டுமென்ற எண்ணத்
தில், - ஓட்ட முடியாத வேகத்தில் காரை ஒட்டினேன்.
நல்ல வேளையாக அக் கண்டத்தையும் தாண்டிவிட்டோம்.”

==#==
பயன் 120
”ஏதோ ஓரிடத்தில் வேறு யாரிடமோ{பேசினீர்களே!”
என்று கேட்டேன்.
”ளஇரே ஒருவர் காயீல் வந்தார். போகிற வழியில்
யானை இருக்கிறது என்று எச்சரீக்கை செய்தேன்.”
”ஷங்கள் ஏதோ அலியா என்றல்லவா சொன்னீர்கள்?”
என்று கேட்டேன்.
”சிங்களத்தில் அலியா என்றால் யானை என்று
பொருள். இப்படி ஈம்முடைய பயணத்தில் உங்களால்,
உங்களுடைய பக்திச் சிறப்பினால், எனக்குத் தைரியம்
உண்டாயிற்று. நாம் பிழைத்தோம்” என்று. சொல்லி
முடித்தார் கார் ஓட்டி,
அவர் ’ சொன்னதைக் கேட்டவுடன் என்னால்
பேச முடியவில்லை. என் கண்களில் . நீர் முட்டியது.
தொண்டை அடைத்துக் கொண்டது. என்னுடைய
உள்ளம் : அருணகிரி நாதப் பெருமானுடைய பரம்
உபகாரத்தை எண்ணி . உருகியது. உடனே பேச
வேண்டுமென்று எண்ணியும் என்னால் பேச முடியவில்லை.
சிறிது சேரம் கழித்துப் பேசினேன்; ”ஐயா, உங்களால்
எனக்கும் அருணகிறீநாதப் பெருமானுடைய திருவாக்கின்
சிறப்புப் புலனாயிற்று. கந்தர் அலங்காரத்தின் பயனைச்
சொல்லும்போது,
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன்னூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவி தான்கற் ற.நிந்தவரே”
என்று சொல்லியிருக்கிறுர்.. அதை வெறும் சொல்லளவில்
நான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது எத்தனை
பொருளுடையது என்பதை உங்கள் வாயிலாக இன்று
அறிந்தேன். முருகனுடைய திருவருள் இன்று எனக்கு
இந்த உரையை உணர்த்தியது. என்றைக்கும் இதை நரன்
மறக்கமாட்டேன்” என்று சொன்னேன்.

==#==
180 உள்ளம் குளிர்ந்தது
வாழ்வில் அமையும் பயன்
இந்த அற்புதமான நிகழ்ச்ச அருணகிரீகாதப் பெரு
மான் பாடிய இந்தப் பாடலுக்கு ஒரு ஈல்ல விளக்கத்தைத்
தந்தது என்று நான் சொல்வதைப் படிக்கிற அன்பர்கள்
ஓப்புக்கொள்வார்கள் என்றே ரினைக்கிறேன். இது கட்டுக்
கதை அல்ல. அநுபவத்தில் மான் கண்டது. என்னுடன்
வந்த அன்பர்களும் இதை உணர்வார்கள்,
தெய்வத் தன்மை நிறைந்த பெறியவர்களுடைய திரு
வாக்கில், சொல்லுக்குக் காணுகிற பொருளை விட அநுபவத்
தில் காணுகிற பொருள்தான் சிறந்தது. மற்றவர்களின்
பாடல்கள் எல்லாம் சொல்லுக்குரிய பொருளோடு
அமைந்துவிடும். இன்னும் சற்றுச் சிறப்பாக Borger
அதற்குமேலே சற்று உணர்ச்சியைத் தரும். பின்னும்
சென்று வாழ்க்கையில் சிரிய பயனைக் கொடுக்க
வேண்டுமென்றால் அந்தச் சொல் மிகச் சிறப்பாக
இருக்கவேண்டும். அப்போது ’ அதற்குச் சொல் என்ற
பெயர் இல்லை. அதுதான் மந்திரம். பாரதியார் கூட,
””மக்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்”
என்று சொல்லி இருக்கிறுர் அல்லவா?
மந்திரம் என்ற சொல்லுக்குத் தன்னை நினைப்பாரு
ow துன்பத்தைப் போக்குவது என்பது பொருள்.
இலக்கிய இன்பத்தோடு மாத்திரம் நில்லாமல், பக்தி
உணர்ச்சியை வழங்குவதோடு அமையாமல், சிறந்த வள
வாழ்க்கையையும் அருளாளர்களுடைய திருவாக்கு ஈமக்குக்
கொடுக்கும் என்பதைத் திருமுறைகளைப் பாராயணம்
செய்த பல பெருமக்கள் உணர்வார்கள். திருமுறை அரு
விய அருளாளர்களைப் போலவே கந்தர் அலங்காரத்தை
ஈமக்கு வழங்கிய அருணகிரீநாதப் பெருமானும் சிறந்த
அவதார புருஷர். ஆகையால் அவருடைய திருவாக்கும்

==#==
பயன் 181
சொல் கடந்து, பொருள் கடந்து, உணர்ச்சி கடந்து, வாழ்க்
கையில் நற்பயனைத் தருவதாக அமைந்திருக்கிறது.
ஆகவே, அவர் பாடுகின்ற இந்தப் பயன், சொல்லளவில்
மில்லாமல் நூற்றுக்கு நூறு உண்மையான மீகழ்ச்சியாக
அறழுபவத்தில் காண்பதற்குரியது.
*
சலம்காணும் வேந்தர் தமக்கும்அஞ்
சார்;யமன் சண்டைக்கு அஞ்சார்;
துலங்கா நரகக் குழிஅணூ
ari; yw நோய் அணுகார்:
கலங்கார் புலிக்கும் கரடிக்கும்
யானைக்கும்; கந்தன் நன்னூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவி
தான்கற் றறிந்தவரே,
[தமக்குள்ளே பகையை உண்டாக்கும் கொடுங்கோல் மன்னர்
களுக்கும் அஞ்சமாட்டார்கள்; யமன் மரண காலத்தில் வந்து துன்
புறுத்தும் சண்டைக்கும் அஞ்சமாட்டார்கள்; ஒளியற்ற ஈரகுமென்ற
துன்பக்குழியின் பக்கத்தில்கூடப் போகமாட்டார்கள்) தீர்வதற்கரிய
கொடிய கோயை அடையமாட்டார்கள்; புலி கரடி யானை ,
இவற்றுக்கும் கலங்கமாட்டார்கள் ; கந்தளைப்பற்றிய ஈல்ல நூலாகிய
இக்த அலங்காரத்தில் உள்ள நூறு கவீகளுக்குள் ஒரு கவியை
யேனும் சுற்று அதன் வழி ௰ற்க அறிந்தவர்கள்.
சலம் - பகை, தமக்கும் என்றது உயர்வு சிறப்பும்மை.
வேந்தருக்கே அஞ்சார் என்றால் மற்றவர்களுக்கு அஞ்சாமை
சொல்லவேண்டியதில்லை. துலங்கா - ஒளியற்ற} துலக்கும். ஒளி.
கரகக்குழி: ””எரிவாய் ஈரகக் குழியும்”* என்று முன்பும் ஒரு பாட்டில்
கூறினார். தான்: அடை,
அறிந்தவர்  அஞ்சார், அஞ்சார்,  அணுகார், கலங்கார்
என்று முடியும். ]

==#==
182 உள்ளம் குளிர்ந்தது
பிறருக்கு அச்சத்தை உண்டாக்கும் எதுவும் முருக
னுடைய அடியார்களுக்கு அச்சம் விளைவிக்க முடியாது.
என்பது இதன் கருத்து.
இந்தப் பாடலோடு கந்தர் அலங்காரம் நிறைவேறு
கிறது ; பயனுள்ள நூலாக நிறைவேறுகிறது. saps
தழைத்து வளர்ந்த பபழமரத்தின் உச்சியில் கனி கனிந்து
இலங்குவதைப் போல இந்த அருள் நூலின் முடிவில் ஈம்
முடைய அச்சத்தைப் போக்குவதாகிய பயனைத் தரும்
இப்பாடல் அமைந்திருக்கிறது.
இப்படிச் சொல்வதற்கு அருணகிரியாருடைய உள்
ளத்தில் எத்தனை உறுதிப்பாடு இருக்க வேண்டும்!’
முருகன் ரீச்சயமாக அருள் செய்வான் என்ற துணிவில்
எழுந்த பாடல் இது. மக்கும் அந்தத் துணிவு வர
வேண்டும். ”! துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வார் ”
என்பது திருமந்திரம்.

