ஆடுதொடா / ஆடாதொடை தாவரவியல் பெயர் : Adhatoda zeylanica Medicus. குடும்பம் : Acanthaceae ஆங்கிலம் : Sea holly வளரிடம் : இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். வளரியல்பு : தண்டுடைய நிமிர் வளர் சிறு புதர்ச்செடி, சிறு காம்புகளையுடைய, முட்டைவடிவ, மலர்களைக் கொண்ட தொடர்ச்சியற்ற நுணி. ஸ்பைக் வகை மஞ்சரிகளில் நீல நிற மலர்கள் உள்ளன. பூக்காம்புச் செதில்கள்நீண்டு பரந்திருக்கும். அல்லிவட்டம் உட்புறத்தில் சிறு உரோமங்கள் கொண்டது. கனிகள் தட்டையாகப்பட்ட முட்டை வடிவம் உடையவை, உரோமங்களற்ற காப்சூல்களாக உள்ளன. விதைகள் தட்டையாகப் பட்டவை, நீள் உருளை வடிவம் கொண்டவை. மலர்களும் கனிகளும் மார்ச்-ஆகஸ்டு மாதத்தில் நிறைந்து காணப்படும். மருத்துவப் பயன்கள் : முழுத் தாவரத்தின் சாறு மூச்சுத் திணறல் நோயையும், பசியின்மையையும் குணப்படுத்தும். இலையின் ஒற்றடம் கீழ்வாதம் மற்றும் நரம்பு வலியைக் குணப்படுத்தும். வேர் கபம் வெளியேற்றும், இருமல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு மருந்தாகப் பயன்படும். பாலில் வேகவைத்த இலைகள் வெள்ளைப்படுதல் மற்றும் பலவீனத்தைப் போக்கும். |