அதிமதுரம்

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Glycyrrhiza glabra L.

குடும்பம் : Fabaceae

வளரிடம் : இமயமலை பகுதிக்கு உட்பட்ட பகுதிகள்.

வளரியல்பு : சிறுசெடி 1.8 செ.மீ உயரம். தடித்த கிளைத்த வேர்கள் சிவந்து அல்லது மஞ்சள் நிறம் வெளிப்புறத்தில். ஒரு சிற்றிலையில் முடியும் சிறகு கூட்டிலை, 4-7 ஜோடி சிற்றிலைகள், மலர்கள் கோண ஸ்பைக்குகளில் அமைந்துள்ளன. பேப்பிலினேஷியஸ், வெளிர் ஊதா-ஊதா நிறமுடையவை, தட்டையான வெடிகள், விதைகள் 2-5, சிறுநீரக வடிவம் தட்டையானவை, அடர்ந்த சாம்பல் நிறமுடையவை. மலர்கள் மார்ச், கனிகள் ஆகஸ்ட்டு.

மருத்துவப் பயன்கள் : வேர்ப்பொடி-இருமல், தொண்டைக்கம்மல், சுவாசக் கோளாறுகள், சிட்ரஸ் சாறுடன் கலந்து மூக்கடைப்புக்கு மருந்தாகும். தேனுடன் கலந்து மஞ்சள் காமாலைக்குப் பயன்படுகின்றன. இஞ்சி மற்றும் பாலுடன் கலந்து சோர்வுக்குப் பயன்படும். உயிர்சாறு அல்லது கசாயம் மிதமான பேதி மருந்தாகவும், சிறுநீரகக் கோளாறுகளுக்கு, மார்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கும் நல்ல மருந்தாகப் பயன்படுத்துகின்றன.