ஆடுதீண்டாப்பாளை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Aristolochia bracteolate Lam.

குடும்பம் : Aristolochiaceae

வளரிடம் : சமவெளிகள், கடற்கரையோரங்கள், தரிசு நிலங்கள் மற்றும் சாலையோரங்களில் காணப்படும்.

வளரியல்பு : நிலம்படிந்து பெரும்பாலும் வளர்ச்சி குறைந்த சிறுசெடி, இலைகள் இதயம் சிறுநீரக வடிவானவை. அடியிலிருந்து 5. நரம்புள்ளவை. பூவடிச் செதில்கள் இதயம்–உருண்டை வடிவானவை. மலர்கள் கருஞ்சிவப்பு விதைகள் இதய வடிவானவை.

மருத்துவப் பயன்கள:எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையன. வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறு கால வலியை மிகுக்கும் மருந்தாகவும் பயன்படும். வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை தீர்ந்து சுகப்பேறு ஆகும்.