|
ஓமம் தாவரவியல் பெயர் : Trachy & permum ammi (L) Sparaggue. குடும்பம் : Apiaceae ஆங்கிலம் : Ajonwan, caraway வளரிடம் :
இந்திய வட ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த இத்தாவரம் இரு பருவச் செடியாகும்.
2 அடி உயரம் வளரக்கூடியது. இத்தாவரம் பெரிதும் மணமூட்டும் பொருளாக ரொட்டி
தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். மருத்துவப் பயன்கள் : இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது. வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன் படைத்தது. கனியிலிருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. ஜீரணத்தையும் வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்துகிறது. குழந்தைகளின் குடல்வலி, வயிற்றுக் கோளாறுகளுக்குத் தக்க மருந்தாகும். இது ‘ஓமவாட்டர்’ எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறது. சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள், குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தனம், மனநோய் ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. |