வண்டு கொல்லி

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Casri a aluta L.

குடும்பம் : Caesalpiniaceae

ஆங்கிலம் : Ring worm senna

வளரிடம் : தோட்டங்களில் வளர்க்கப்படும். சில சமயங்களில் மேற்கு வங்காளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பாகங்களில் காட்டில் வளரும்.

வளரியல்பு : மெல்லிய உரோமங்களை உடைய புதர்ச்செடி, சிறு காம்புகளையுடைய தனி இலைகளைக் கொண்டது. மியுக்ரோனேட் அல்லது அப்டியூஸ் நுனி கொண்டு கெட்டியான நயத்தோடு மழமழத்திக்கான மேற்புறத்தையும், அடியில் சிறு உரோமங்களையும் கொண்டது. ரெசீம்கள் 1.3-2.5செ.மீ நீளமுடைய காம்புகள் உடையவை. மலர்கள் பெரியவை; மஞ்சள் நிறமுடையவை. சமமற்ற மகரந்தத்தாள்கள் உடையவை. கனிகள் நீண்டு, மெல்லிய படலம் போன்று, வெடித்துச் சிதறக்கூடியவை. 10.2-20.4செ.மீ நீளமுடையவை, விதைகள் 50 அதற்கு மேல்.

மருத்துவப் பயன்கள் : மலர்களின் சாறு மார்புச் சளிக்கு மருந்தாகும். இலையின் கசாயம் எலும்பிச்சை சாற்றோடு கலந்து தோல் வியாதிகளுக்குத் தடவலாம். நன்மை பயக்கும்.