கெளுத்தி மீன் (Cat Fish)

முனைவர் ச.பரிமளா
பேராசிரியர் மற்றும் தலைவர்
தொல்லறிவியல் துறை

கெளுத்தி மீன்களின் நிறம், வடிவம் அமைப்பு இவற்றைக் கொண்டு இவை இருங்கெளுத்தி, வெண்கெளுத்தி, பொன்கெளுத்தி, நெடுந்தலைக் கெளுத்தி, குறுத்தலைக் கெளுத்தி, பொரிக் கெளுத்தி என்று பெயர் பெறுகின்றன. வாய்புறத்தைச் சுற்றி மீசை போன்ற நீண்ட தொட்டுணரிழைகளைப் பெற்றிருப்பதால் இவை பூனை மீன்கள் (Cat Fishes) என்றும் அழைக்கப்பெறுகின்றன. நீர்மட்டத்தில் நீந்தாமல், தரைப்புறத்தே வாழும் தகவமைப்பு பெற்றவை. குளம், ஆறு, ஏரி, கழிமுகப்பகுதிகள், கடல் என்று அனைத்து நீர் நிலைகளிலும் காணப்படுகின்றன.

கெளுத்தி மீன்