தட்டை மீன்கள் (Flat Fishes)
எருமை நாக்கு மீன் (Psettodes erumai)

முனைவர் ச.பரிமளா
பேராசிரியர் மற்றும் தலைவர்
தொல்லறிவியல் துறை
எருமை நாக்கு மீன்

இந்தியாவின் மேலை, கீழை, கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் தட்டை மீன்கள் (Flat fishes) பிடிக்கப்படுகின்றன. இம்மீன்களின் உடல் தட்டையாக மெலிந்திருப்பதாலும் கொழுப்புப் பொருள் மிகக் குறைவாக இருப்பதாலும் இவை வெயிலிலும், வெப்பத்திலும் எளிதாக உரைவைக்கப்பட்டுப் பெருமளவில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மண்ணோடு மண்ணாக இம்மீன்கள் புதையுண்டு வாழ்வதால் மற்ற உயிரினங்களை எளிதில் ஏமாற்றி உணவாக்கிக் கொள்கின்றன. சூழ்நிலைக்கேற்றவாறு இவை வண்ணங்களை ஒரு பச்சோந்தியைப் போல உருமாற்றிக் கொள்வதால் மிக எளிதாகத் தம் எதிரிகளிடமிருந்து தப்பித்து விடுகின்றன.

இம்மீன்கள் மண்ணில் புதைந்து தம் உடலின் பக்கங்களை மெல்ல மெல்ல அசைத்து அலையைப் போல் மேல் எழும்புவது பார்ப்பதற்கு மிகவும் அழகிய காட்சியாகும்.

இதுவரை ஏறத்தாழ 6 குடும்பங்களின் கீழ் 117 பேரினங்களும் 538 சிற்றினங்களும் அடையாளமறியப்பட்டுள்ளன. இம்மீன்களில் செட்டோடிடே (Psettodidae) குடும்பத்தைச் சார்ந்த எருமை நாக்கு மீன்களும், சைனோகிளாசிடே (Cynoglossidae) குடும்பத்தைச் சார்ந்த நாக்கு மீன்களும் (tongue soles) தட்டைமீன் வளத்தில் வணிக, பொருளாதாரச் சிறப்பு மிக்கவைகளாகத் திகழ்கின்றன.

இம்மீன்களைப் புதியதாகப் பிடித்து அன்றன்றே பயன்படுத்துவதைவிட இவற்றை பக்குவமாய்ப் பதப்படுத்தி பிற்காலத்தில் தேவைக்கேற்ப உள்ளது.