வெட்டுக்காயப்பூண்டு

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Tridax procumbens Linn.

குடும்பம் : Asteraceae

ஆங்கிலம் : Mexican Daisy

வளரிடம் : இந்தியா முழுவதும், வீனாக உள்ள இடங்கள், சாலையோரங்கள், புதர்கள் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

வளரியல்பு : ஓராண்டு அல்லது பல்லாண்டு வாழும் சிறுசெடி, எதரிலையடுக்கம், நீள் உருளை முதல் நீண்ட இலைகள், பெரிய பற்களை உடையது. நீண்ட காம்புகளுடைய ஹெட்டிரோகேமஸ் சிரமஞ்சரிகளில் மலர்கள் அமைந்துள்ளன. கதிர் சிறுமலர், பெண் மலர், வளமானது, குழாய் வடிவமானது, லிம்ப் நீண்டது, 5 பாகல்கள் கொண்டது மகரந்தபை அடிப்பை சிறுபை போன்றது. கனி முக்கோண அல்லது முட்டைவடிவமானது. பழுப்பு நிற அக்கீன்கள்.

மருத்துவப் பயன்கள் : இலைகள் வயிற்றுப் போக்கையும் சீதபேதியையும் குணப்படுத்தும், மார்புக்குச் செல்லும் காற்றுக் குழாய் அடைப்பு நீக்கும். சாறு இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும், இரத்தம் சொட்டும் காயங்களுக்கு மிகவும் பயனுள்ளது.