தர்ப்பைப் புல்

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Phragmites karka (Retz.) Trin ex Steudal.

குடும்பம் :Gramineae

வளரிடம் : கடலோரப் பகுதிகள், ஆற்று ஓகரங்கள், சமவெளிகள், இந்தியா, ஆசியா, பாகிஸ்தான் போன்ற இடங்களில் தானாகவே வளர்கின்றது.

வளரியல்பு :தண்டுகள் நாணல் போன்றவை, நிமிர்ந்தவை, 4 மீ உயரம், இலைத்தாள்கள் நீண்டவை, மலர்கள் 4-10,மையச் சிறுகாம்பு இணைப்புடையது, கணுவிடைப் பகுதிகளில் நீள் உரோமங்கள் உள்ளன. வளமான லெம்மாக்களில் அடிக்கட்டையுள்ளது. நுனி நீண்டுள்ளது. மகரந்ததாள்கள் 3.

மருத்துவப் பயன்கள: இந்துக்களின் சமய, சடங்குகளில் முதன்மையாகப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக இந்துக்களின் கோவில் கும்பாபிசேகங்களில் விசேசப் பொருட்களில் இதுவும் ஒன்றாகக் கருதுகின்றது.