படங்கான் மீன் (Guitar Fish)

முனைவர் ச.பரிமளா
பேராசிரியர் மற்றும் தலைவர்
தொல்லறிவியல் துறை
படங்கான் மீன் மீன்

திருக்கை மீன்களின் குடும்பத்தைச் சார்ந்த படங்கான் மீன்கள், ஓர் இசைக் கருவியை ஒத்த தோற்றம் கொண்டிருப்பதால், இவை விணை மீன்கள் (guitar fishes) என்றும் அழைக்கப்பெறுகின்றன.

தட்டையான உடலமைப்பையும், கூரிய முகப்பகுதியையும் கொண்டிருக்கும் இம்மீனின் கண்கள் இரண்டும் பக்கவாட்டில் அமைந்திராமல் உடலின் மேற்புறத்தில் அமைந்திருக்கின்றன. நீரின் அடிமட்டத்தரையில் வாழ்வதற்கேற்ற உடலமைப்புக் கொண்ட இம்மீன்கள் 9 பேரினங்களின் கீழ் 48 இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும் இம்மீன்களை எளிதில் இனங்கண்டறியவியலா வண்ணம் மண்ணில் புதையுண்டு வாழும் தன்மையுடையவை. இவை தரைப் பகுதியில் கிடைக்கும் புழுப் பூச்சிகளை உண்டு வாழ்கின்றன. இம்மீனை எல்லாத் தரப்பு மக்களும் மிக விருப்பமான மீன் உணவாக விரும்பி உண்ணுவதில்லை எனலாம்.