இன்புறா (சாயவேர்) தாவரவியல் பெயர் : Oldenlandia umbellate L. குடும்பம் : Rubiaceae ஆங்கிலம் : Chay root வளரிடம் : சமவெளிகள், கடற்கரைப் பகுதிகள், ஆற்றும் படுக்கைகள், தமிழகமெங்கும் தானே வளர்வது. மழைக் காலத்தில் எல்லா இடங்களிலும் காணப்படும். வளரியல்பு : நேரான சிறு செடி. இலைகள் மெலிந்த ஈட்டி வடிவானவை. விளிம்பு உள்பக்கம் சுருண்டிருக்கும். மலர்கள் சிறியவை. மஞ்சரி காம்புடைய சிரமஞ்சரித் தொகுப்பு. புல்லிகள் முனை மழுங்கிய அல்லிகள் இளஞ்சிவப்பு தோய்ந்த வெண்மை,மகரந்ததாள்கள் ஒன்று வெளிநோக்கியவை. கேப்சியூல் விதைகள் வலை நரம்பு அமைப்புடையவை. மருத்துவப் பயன்கள:
கோழையகற்றியாகச் செயற்படக்கூடியது. இலைச் சாறைத் தடவி வர
சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் நீங்கும். வேரை நிழலில்
உலர்த்தி பொடி செய்து சிறிதளவு அரிசி மாவில் கலந்து அடைசெய்து சாப்பிட கபரோகம்
தீரும். |