கொடிவேலி

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Plumbago zeylanica L.

குடும்பம் : Plumbaginaceae

ஆங்கிலம் : Ceylon Leadwort

வளரிடம் : வெம, துணை வெம பிரதேசங்கள் மற்றும் தமிழகமெங்கும் புதர்காடுகளில் காணப்படுகிறது.

வளரியல்பு : கூர்முனையுடைய பளபளப்பான பசிய இலைகளையும் உச்சியில் கொத்தான பூக்களையும் உடைய செடி. பூ வெள்ளை, சிவப்பு, கருப்பு ஆகிய நிறங்களில் காணப்பெறும். இலைகள் எதிர் அல்லது மாற்று அடுக்கமானவை. ரெசீம்கள் 6-7 செ.மீ சுரப்பியிலுள்ள உரோமங்கள் குறிப்பிடத்தக்கதாகும்.

மருத்துவப் பயன்கள: இதன் மருத்துவக் குணங்கள், வியர்வை பெருக்குதல், முறைநோய் தீர்த்தல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் பெருகுதல், மாதவிலக்கைத் தூண்டுதல், உடலில் பட்ட இடத்தைக் கொப்பளிக்கச் செய்தல், உமிழ்நீர் சுரப்பித்தல், தாது அழுகலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவையாகும்.