மணித்தக்காளி / மணத்தக்காளி தாவரவியல் பெயர் : Solanum nigrum L. குடும்பம் : Salanaceae ஆங்கிலம் : Black nightshade வளரிடம் : இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும் தாவரம். சமயலுக்குப் பயன்படும் கீரை வகை என்பதால் வளர்க்கப்படுகிறது. வளரியல்பு : நன்கு கிளைத்து வளரக்கூடிய குறுஞ்செடி. ஒரு பருவச்செடி, இலைகள் முட்டை அல்லது நீள்வட்ட வடிவிலானவை, மஞ்சரி இலைக் கோணத்திற்கு வெளியே தோன்றுகின்றன. மலர்கள் வெண்மை நிறத்தின; கனிகள் கோள வடிவிலான கருஞ்சிவப்பு அல்லது கருமை நிறமுடையவை. விதைகள் சிறியவை. மருத்துவப்
பயன்கள் : இச்செடியின் அனைத்துப் பகுதிகளும், மருத்துவப்
பயன் கொண்டவை. உடல் நலத்தினைத் தோற்றுவிக்கக் கூடியவை. சிறுநீர் போக்கினைத்
தூண்டும். மலச்சிக்கலை அகற்றக்கூடியவை. நெஞ்சுப்பை எரிச்சல் அகற்ற வல்லது.
வியர்வை தூண்டுவி, செடியின் சாறு கல்லீரல் மற்றும் கணையத்தின் வீக்கம் மூல
நோய், பால்வினை நோய், நீர்க் கோர்வை ஆகியவற்றைக் குணப்படுத்தும். |