மணிவரகு சாமை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Panicum miliaceum L.

குடும்பம் : Gramineae

வளரிடம்: மலைகள், இந்தியா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா மற்றும் சமவெளிப் பகுதிகளிலும் பயிராகின்ற தானிய வகை.

வளரியல்பு : தண்டுகள் 60 செ.மீ நிமிர்ந்தவை. பேனிகிள்கள் குறுகியவை. பட்டைக் கூம்பு போன்றவை. 20 செ.மீ கிளைகள் அடியில் மாற்றடுக்கிலும், நுனியில் எதிர்மாற்று அடுக்கிலும் உள்ளன. சிறுகதிர்கள், குட்டையான கணுவிடைப் பகுதிகளால் பிரிந்துள்ளது. மேல் உமியில் 11-நரம்புகளுண்டு. மேல் லெம்மா வழவழப்பானது.

மருத்துவப் பயன்கள் :கணைய நீரைச் சுரக்கச் செய்து இரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் குளுக்கோசைப் பிரிக்கச் செய்கின்றது. சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இவ்வரிசியிலிருந்து பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. முன்னோர்கள் வீட்டுக் கூரைக்காக இல்வரகு வைக்கோலைப் பயன்படுத்தினர்.