மருதாணி தாவரவியல் பெயர் : Lowsonia inermis L. குடும்பம் : Lythraceae ஆங்கிலம் : Henna வளரிடம் : இத்தாவரம் மத்திய கிழக்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவினைச் சார்ந்தது. வளரியல்பு : நல்ல மணமுள்ள புதர் அல்லது சிறியமரமாகும். 6மீ உயரமுள்ளது. சில முட்கள் கொண்டது. இலைகள் தோல் போன்றவை, முட்டை வடிவம், மலர்கள் பசும் மஞ்சள் அல்லது வெண்மை நிறத்தினது, நறுமணம் கொண்டவை, நுனி மஞ்சரிகளாக அமைந்துள்ளன, கனிகள் அமுங்கியவை, கோணவடிவின, விதை பல எண்ணிக்கையிலானவை. மருத்துவப் பயன்கள்
: முழுத்தாவரம், இலைகள், பட்டை மலர்கள் மற்றும் கனிகள் பயனுள்ளவை.
தலைவலி மற்றும் தலைவலிக்கு முழுத்தாவரமும் அரைக்கப்பட்டு பற்றுப் போடப்படுகிறது.
இலைகள் தசையிறுக்கும் தன்மையின; குருதிப் போக்கினைத் தடுக்கும், மாதவிடாய்
சுலபமாய் இருக்க உதவும், தொண்டைக் கரகரப்புக்குக் கொப்பளிப்பு நீராகும்.
இலைச்சாறு வயிற்றுப் போக்கு மற்றும் சீதபேதியினைக் கட்டுப்படுத்தும். |