புளிச்சக்கீரை தாவரவியல் பெயர் : Hibiscus cannabinus L. குடும்பம் : Malvaceae ஆங்கிலம் : Mesta வளரிடம் : இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். இதிலிருந்து கிடைக்கும் நார்களுக்காகப் பயிரிடப்படுகிறது. வளரியல்பு : செங்குததாக வளரும் ஒரு பருவக் குறுஞ்செடி, 4மீ உயரம் கொண்டது. தண்டின் நுனியிலுள்ள இலைகள் கைவடிவத்தில் 5-7 பிளவுகளுடன் காணப்படும். கீழே உள்ள இலை இதய வடிவானவை, விளிம்புகள் பற்கள் போன்றவை. தாவரம் முழுவதும் சுரப்புகளை உடைய தூவிகள் மூடியிருக்கும். மலர்கள் இலைக் கோணத்தில் அமைந்தவை, மஞ்சள் வண்ணம், கனிகள் வெடிகனிகள் முட்கள் கொண்டவை, நுனி கூரானது, விதைகள் கருஞ்சிவப்பு. மருத்துவப் பயன்கள் : இலைகள் வயிற்றுப்போக்கைத் தூண்டும். கனிகளின் சாறு சர்க்கரை மற்றும் மிளகுடன் சேர்த்து மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்களுக்கு மருந்தாகிறது. விதைகள் பால் உணர்வு தூண்டிவி. வலியைப் போக்க மேல் பூச்சாகிறது. |