முள்ளுக்கீரை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Amaranthus spinosa L.

குடும்பம் : Amaranthaceae

ஆங்கிலம் : Prictly amaranth

வளரிடம் : இந்தியாவில் மேற்கு வங்காளம், மற்றும் மலபார் பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது; பயிர் நிலங்கள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் வளர்கிறது.

வளரியல்பு : பரவி வளரும் முள்ளுடைய குறுஞ்செடி தண்டு 30 செ.மீ முதல் 60செ.மீ உயரம் வரை காணப்படும். இலைகள் சிறியவை; முட்டை அல்லது நீள்வட்ட வடிவானது; மலர்கள் ஒரு பாலின; ஆண் மலர்கள் அதிகமாக உருவாகின்றன; மலரடிச்செதில் பூவிதழிளைக் காட்டிலும் பெரியது; கனிகள் வெடி கனி.

மருத்துவப் பயன்கள் : இத்தாவரம் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுவது; தோலினை மிருதுவாக்கும்; குடல் வலிக்குச் சிறந்த மருந்தாகும் இலையின் பசை கட்டிகளுக்கு பூசப்பட்டு சீழ் சேர்தலைத் துரிதப்படுத்துகிறது. வேர் கோனோரியா, எக்ஸிமா, கூடுதல் அல்லது தொடர்ந்த மாதவிடாய்ப்போக்கு, மற்றும் வீக்கங்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.