சிவனார் வேம்பு தாவரவியல் பெயர் : Indigofera aspalathoies Vahl.ex DC. குடும்பம் :Fabaceae வளரிடம் : சமவெளிகள், கடற்கரைகள், சரளை மண் நிலங்கள், புல்மேய்விடங்கள், முட்புதர்களில் பரவலாகக் காணப்படும். தமிழகத்தில் பண்படுத்தப்பட்ட தரிசு நிலங்கள் மற்றும் மணற்பாங்கான ஆற்றங்கரையோரங்களில் அதிகமாகக் காணப்படும். வளரியல்பு : துணைக் குறுஞ்செடி 75 செ.மீ இலைகள் கைவிரல்கள் போன்று சிற்றிலைகளானவை. அல்லிகள் வெளி நோக்கியவை, பாட் உருட்டானது. பூக்கள் சிவப்பு நிறம், கொத்தான காய்கள், சிவப்பு நிறத்தண்டு. செடி பிடுங்கிய உடனே உலர்ந்தது போல எரியும் தன்மையுடையதலால் அன்றெறித்தான் பூண்டு எனக் கிராம புறத்தில் குறிப்பிடுவதுண்டு. மருத்துவப் பயன்கள:
செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. தாது எரிச்சல் தணித்தல்,
வீக்கக் கட்டிகளைக் கரைத்தல், நஞ்சு முறித்தல் ஆகியன. செடியின் வேர்ப் பொடியுடன்
கற்கண்டு தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர ஆயுள் நீடிக்கும். தொழுநோய் குணமடையும்.
வேரால் பல் துலக்கவோ அல்லது வேரைத் துப்பவோ செய்தால் வாய்ப்புண், பல்வலி
குணமாகும். செடியை அப்படியே வேக வைத்து தண்ணீரில் குளித்துவர தோல் வியாதி
மற்றும் சொரி குணமடையும். |