வெப்பாலை தாவரவியல் பெயர் : Wrishtia tinctoria R.Br. குடும்பம் :Apocynaceae ஆங்கிலம் : Indigo Plant வளரிடம்: இந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. வளரியல்பு :வெப்பாலை சிறிய அல்லது பெரிய புதர் செடி. கொப்புகள் மஞ்சள் அல்லது கருஞ்சிவப்பு வண்ணங்கள் கொண்டவை. லேடக்ஸ் சுரப்பிகளுக்கான வெண்புள்ளிகள் அமைப்பு காணப்படும். இலைகள் நீள் வட்ட முட்டை வடிவின. நுனி நீண்டது. மலர்கள் மணமிக்கவை. வெண்மை நிறம், கொத்தாக நுனியில் அமைந்தவை, அல்லி வட்டம் புல்லி வட்டம் போன்று இருமடங்கு நீளம் கொண்டது. அல்லி இதழ்களின் நீண்ட வளரிகள் (கோரோனா) காணப்படும் விதைகள் நீளவடிவின. தாவரப் பகுதிகளில் லேடக்ஸ் சுரப்பிகள் காணப்படும். மருத்துவப் பயன்கள் : இலைகள் பல்வலிக்கு மருந்தாகின்றன. பட்டை சீதபேதி தடுக்கவல்லது. விதைகள் வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிரானவை. வயிற்றுப்போக்கினைத் தீர்க்க வல்லது. வயிற்று உப்புசம் நீக்கவும் வல்லது. விந்துகளின் இயக்கத்திற்கு வலிவு தர பயன்படுத்தப்படுகிறது. |