பவள மல்லிகை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Nyctanthes arbortristis L.

குடும்பம் : Oleaceae

ஆங்கிலம் : Night jasmine

வளரிடம் : இந்தியா முழுவதிலும் காணப்படும். சிறிய புதர்ச்செடி அல்லது மரம் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.

வளரியல்பு : மணமிக்க மலர்களைக் கொண்ட சிறிய புதர்ச்செடி இலைகள் முட்டை வடிவிலானது. அடிப்பகுதி வட்டமானது. மலர்கள் காம்பற்றவை, புல்லி வட்டம் தலைகீழ் முட்டை வடிவானது, அல்லிவட்டகுழல் உருளை வடிவானது. ஆரஞ்சு வண்ணம கொண்டது. இதழ்கள் வெண்மையானவை, விதைகள் செங்குத்தானவை மற்றும் தட்டையானது.

மருத்துவப் பயன்கள் : விதைகள் மற்றும் பட்டை மருத்துவப் பயன்கொண்டவை. முழுத்தாவரமும் பழங்குடியினர் மருத்துவத்தில், வயிற்றுப்போக்கு, மட்டான மாதவிடாய்ப் புண்கள் ஆகியவற்றினைக் குணப்படுத்துகிறது. இலையின் சாறு குடற்பூச்சிகளைப் போக்க வல்லது. பித்தபேதி தடுக்கும். வியர்வை தூண்டுவி; சிறுநீர்த் தூண்டிவி, சத்து மருந்து . இலை சாறுடன் தேன் கலந்து கொடுக்க நாள்பட்ட காய்ச்சல் போக்கப்படுகிறது. சர்க்கரையுடன் குழந்தைகளுக்குக் கொடுக்கும்பொழுது குடல் புழுக்கள் வெளியேறும். இலை சாறுடன் இஞ்சி கலந்து உட்கொண்டால் தொடர்ந்து விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணமடையும். இலையின் கசாயம் இடுப்பு வாதத்திற்குக் குறிப்பிடத்தக்க மருந்தாகும். மூட்டு வலிக்கு எதிராக செயல்படுகிறது. இரத்தப் போக்கினைக் கட்டுப்படுத்தும். மலமிளக்கி, பட்டை இருமல் போக்க வல்லது.