அன்னாசி

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Ananas cosmosus (L) Merr.

குடும்பம் : Bromeliaceae

ஆங்கிலம் : Pine apple

வளரிடம் : மலைப் பகுதிகளில் பரவலாக்க் காணப்படுகின்றன. அமெரிக்கா அதிக அளவில் பயிரிடப்படுபவை. தமிழ்நாட்டில் கொல்லி மலைவாழ் மக்கள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றனர்.

வளரியல்பு : குட்டையான தண்டுடைய நிலத்தாவரங்கள், இலைகள் ரோசா இதழ் அடுக்கமானவை, நீளமான மற்றும் முட்கள் போன்ற விளிம்பு நோக்கிய பற்கள் உடையவை. மஞ்சரி உச்சியில் இலைகள் உடைய தண்டில் அமைந்தது, சீரானவடிவானது. மலர்கள் காம்பிலிகள்,சிவப்பு, இருபாலானவை. புல்லிகள் குட்டையானவை. அல்லிகள் பரவலாக இணைந்தவை. அடியில் 2 சிலிர்கள் உடையன. மகரந்ததாள்கள் 6, புல்லிகளுடன் ஒட்டியிருக்கும், கீழ்மட்டச் சூலகம், கனி ஒரு இணை கனி.

மருத்துவப் பயன்கள்: நுண்புழுக்கொல்லுதல், வியர்வை சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல், குருதிப் பெருக்கத்தைத் தணித்தல். மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய மருத்துவப் பயன்களுடையது. இப்பழம் மாதவிலக்கைத் தூண்டும். ஆகையால் கருவுற்றலர் உண்ணாதிருத்தல் நலம். அதிக அளவில் உண்டால் தொண்டைக் கட்டும்.