குருக்கம், பிர்மதண்டு

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Argemone mexicana L.

குடும்பம் : Papaveraceae

ஆங்கிலம் : Mexican Poppy

வளரிடம் : அமெரிக்காவில் மெக்ஸிக்கோவினைச் சார்ந்த இந்த தாவரம் இந்தியாவில் தரிசு நிலங்களில் களைச் செடியாக வளர்கிறது.

வளரியல்பு : செங்குத்தாக வளரும் ஒரு பருவக் குறுஞ்செடி, ஒரு மீ உயரம் வளரக்கூடியது. மஞ்சள் வண்ணத்தில் பால் போன்ற (latex) சுரப்பி கொண்டது. இலைகள் வெண்மையாக நரம்புகளுடன் உள்ளன. மடலின் ஒரம் வெட்டப்பட்டது. முள்கள் கொண்டவை. மலர்கள் ஒளிரும், மஞ்சள் வண்ணத்தவை, கனிகள் வெடிகனி, நுனிதுளை மூலம் திறக்கின்றன. விதைகள் கருப்பு நிறம் கொண்டவை.

மருத்துவப் பயன்கள் : வேரினைக் கசக்கி தேள்கொட்டிய இடத்தில் தடவினால் வலி குறையும், மலர்களுக்கு இருமலைப் போக்கும் சக்தி உள்ளது. விதைகள் மற்றும் எண்ணெய் மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போக்கும், வாந்தியைத் தூண்டும். சளி போக்கும், எண்ணைய் மேல் பூச்சாகத் தோல்வியாதிகள் மற்றும் தலைவலிக்கு மருந்தாகிறது. ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். மஞ்சள் பால் (latex) மருக்களை நீக்க உதவும்.