வௌவால் மீன்
மிருதுவான தசைப் பகுதியையும், முட்கள் அதிகமற்ற உடலையும் உண்பதற்கு மிகுந்த சுவையும் உடைய இம்மீன்கள் அதிக விலை கொடுத்து மக்களால் விரும்பி வாங்கப்படும் மீன்களுள் ஒன்றாகும். நீள்வட்டமான அல்லது நீள் சதுரமான, அழுத்தமான தட்டையான இம்மீன்கள் பார்ப்பதற்கு வௌவாலை ஒத்த தோற்றங்கொண்டிருப்பதால் வௌவால் மீன்கள் என்று சிறப்பாக அழைக்கப்பெறுகின்றன. சின்னஞ் சிறிய செதில்கள் உடலைப் போர்வை போல மூடியிருக்கும். மிக எளிதாக தூய்மை செய்து உண்ணலாம். எனவே, வெண்ணெய் மீன்கள் (Butter fishes) என்றும் அழைக்கப்பெறும். இம்மீன்கள் மீன் அங்காடிக்கு வந்து சேர்ந்தவுடன் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. அதிகமாக கிடைக்கும் காலங்களில் பதப்படுத்தப்பட்டு பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிழக்குக் கடலோரப் பகுதிகளில் விசாகப்பட்டிணம்,
சென்னை, தஞ்சை, தூத்துக்குடி, மேற்குக் கடலோரத்தில் கேரளப்பகுதியில் அதிக
அளவில் வௌவால் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. |