திருக்கை மீன் (Ray Fish)

முனைவர் ச.பரிமளா
பேராசிரியர் மற்றும் தலைவர்
தொல்லறிவியல் துறை

தட்டையான உடலும் நீண்ட வாலும் இம்மீன்களைப் பிற மீன்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. கைபோன்று வாலினை வீசி தம் இரையைப் பிடிப்பதால் திருக்கை என்று பெயர் பெற்றுள்ளன. வால் புறத்தே அமைந்துள்ள முள் நச்சுத் தன்மை மிக்கவை. கடலின் அடிமட்டத்தில் பெரும்பாலும் வசிப்பதால் இறால், நண்டு, சிப்பிகளை உணவுக்காக வேட்டையாடுகின்றன. இவை மற்ற மீன்களைப் போன்று முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்காமல், சிறு சிறு மீன் குட்டிகளை ஈனும் தன்மையுடையவை.

திருக்கை மீன்