ஆடு
(Sheep)

முனைவர் ச.பரிமளா
பேராசிரியர் மற்றும் தலைவர்
தொல்லறிவியல் துறை
ஆடு

குளம்புடைய விலங்குகள் பிரிவைச் சார்ந்த ஆடுகள் முழுக்க முழுக்க தாவரங்களையே உண்டு வாழ்கின்றன. ஆடுகளில் வெள்ளாடுகள், செம்மறியாடுகள், மலையாடுகள் என்று பல வகைகள் உள்ளன. பழங்காலத்திலிருந்தே ஆடுகளை மந்தை மந்தைகளாக வளர்த்து, மேய்த்து, பட்டியில் அடைத்துப் பழக்கிய மனிதர்கள் அவற்றின் இறைச்சி, தோல், பால் முதலியவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மக்களால் மிக விரும்பி உண்ணப்படும் உணவுகளில் ஆட்டு இறைச்சியும் அடங்கும். மிகவும் சாதுவான விலங்குகளான ஆடுகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் ஆட்டிடையர்களால் பரம்பரை பரம்பரையாக வளர்க்கப்பட்டுள்ளன. போவிடே (Bovidae) குடும்பத்தைச் சார்ந்த ஆடுகள், பார்த்தல், கேட்டல் , மோந்தறிதல் ஆகிய மூன்றிலும் திறன் பெற்றவையாகும். புற்களை, இலை, தழைகளை அசைபோட்டு உண்ணுவதற்கேற்ற கடைவாய்ப் பற்களைப் பெற்றுள்ளன.

தென்னாசிய, ஆப்பிரிக்கா நாடுகளில் பரவலாகப் பரந்து காணப்படும் ஆடுகளுடன் தொடர்புடைய மலை செம்மறியாடு (mountain sheep) மலை வெள்ளாடு (mountain ghoat) பைசான் (Bisan) ஆகியவை அமெரிக்காவிலும் காணப்படுகின்றன.