பெரிய தகரை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Cassia sophera L.

குடும்பம் : Caesalpiniaceae

ஆங்கிலம் : Senna Sephera

வளரிடம் : இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவிக் காணப்படுகிறது.

வளரியல்பு : பசும் கிளைகளை உடைய அடர்ந்த புதர்ச்செடி, இரு சிற்றிலைகளில் முடியும், சிறகு கூட்டிலை, சிற்றிலைகள் 6 - 7 சோடிகளில் உள்ளன. நீள் உருளை, ஈட்டி வடிவம் உடையவை, மலர்கள் சிறியவை, மஞ்சள் நிறம். கனிகள் நீர்த்ததும்பி, விதைகளுக்கிடையே தட்டையாக்கப்பட்டிருப்பது.

மருத்துவப் பயன்கள் : முழுத்தாவரம் விதை, தண்டு, பட்டை மற்றும் வேர் இருமலுக்கு நல்ல மருந்து. கபத்தை வெளியேற்றும். அதிக மார்புச் சளியை வெளியேற்றும், தோல் வியாதியைக் குணப்படுத்தும். இலைகள் பூச்சிகளை அகற்றும். குறிப்பாக, படர்தாமரை, இச்சாறு மேகவெட்டை நோயைக் குணப்படுத்தும்.