மஞ்சள்

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Curcuma longa L.

குடும்பம் : Zingiberaceae

ஆங்கிலம் : Turmeric

வளரிடம் : மஞ்சள் இந்தியாவினைச் சார்ந்தது. தென் ஆசியாவிலும் காணப்படும். தரையடித்தண்டு மூலம் வளர்க்கப்படுகிறது.

வளரியல்பு : பல பருவம் வாழும் குறுஞ்செடி 80 செ.மீ உயரம் வளரக்கூடியது. தண்டு தரையடியில் காணப்படும். இலைகளுடன் கூடிய தண்டு உருண்டையானது. இலைகள் ஈட்டி வடிவானது. கரும்பச்சை வண்ணம் கொண்டவை. மடலினுள் மைய நரம்பு தடித்தது. மலர்கள் மஞ்சரியாகக் காணப்படுகின்றன. பெரும்பாலும் தரையடித் தண்டினால் இனப்பெருக்கம் செய்யப்படுவதால் விதைகள் அரிதாகவேயுள்ளன.

மருத்துவப் பயன்கள் : இந்தி சமையலில் முக்கிய நறுமணப்பொருள், இந்திய மருத்துவத்திம் சிறந்த மருந்து. வீக்கங்களைப் போக்கும், வயிற்று வலியினைக் குறைக்கும் மஞ்சளிலுள்ள கர்குமின் என்னும் பொருள் பாக்டிரிய எதிரியாகச் செயல்படுகிறது. 1987 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சீன ஆய்வுகள் மஞ்சளுக்கு கொலஸ்டிரால் அளவினைக் குறைக்கும் திறன் உள்ளதை உறுதி செய்துள்ளனர். புற்று நோய்க்கு ஆளாகக் கூடியவர்களுக்குத் தடுப்பாக பயன்படும் எனவும் தெரிகிறது. ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் மஞ்சள் காமாலை, ஜீரணக் கோளாறுகள் வயிற்றில் அமிலம் ஆகியவற்றினைப் போக்கப் பயன்படுகிறது. வாந்தி மயக்கத்தினைத் தடுக்கும். ஆஸ்துமா, படை மற்றும் மூட்டுவலிகளுக்கும் பயன்படுகிறது. தோல் நோய் சொரியாசிஸ் மற்றும் காளான் நோய் athlete foot க்கும் மருந்தாகிறது. மூல நோய்க்கு மருந்தாகிறது. மஞ்சள் பசையுடன் எலுமிச்சைச் சாறு, சால்ட் சேர்த்து சுளுக்கு மற்றும் சிராய்ப்பு, காயங்களுக்குப் பூசப்படுகிறது.