விராலி

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Dodonnaea angustifolia L.

குடும்பம் : Sapindaceae

வளரிடம்:தமிழகமெங்கும் புதர்க்காடுகளில் வளர்கிறது. வறண்ட தரிசு நிலங்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் சாலையோரங்களிலும் காணப்படுகிறது.

வளரியல்பு :குறுஞ்செடி 3 மீ உயரம் வரை வளரும் தன்மை, இலைகள் நீள்வட்டம், தலைகீழ் ஈட்டி வடிவானவை. சுரப்பிப் புள்ளிகள் காணப்படும். மஞ்சரி ரெசீம் சிலவேளைகளில் பேனிக்கிள்கள் ஆண்மலர்கள் வளர்ச்சி பெற்றது. வட்டத்தட்டு வளர்ச்சிப் பெறாதது. மகரந்ததாள்கள் உரோமங்கள் அற்றவை. பெண் மலர் வட்டத்தட்டு சிறியவை, விதைகள் கோள வடிவானவை.

மருத்துவப் பயன்கள் : காய்ச்சல் தணித்தல், உடல் உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகியவை மருத்துவப் பயன்களுடையது.