வல்லாரை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Centella asiatica (L) Urban.

குடும்பம் : Apiaceae

ஆங்கிலம் : Indian penny wort

வளரிடம் : இந்தியா மற்றும் தென் அமெரிக்காவைச் சார்ந்த இத்தாவரம் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. ஆற்றங்கரைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் நன்கு வளரக்கூடியவை.

வளரியல்பு : இது ஒர் ஓடு கொடி, கனுக்கலில் வேர்கள் உருவாகின்றன. விதை அவரைவிதை வடிவம், ஏழு பிரதான நரம்பமைப்புவுடையது. மலர்கள் வெண்மை, கனிகளும், விதைகளும் பக்க வாட்டில் தட்டையானவை.

மருத்துவப் பயன்கள் : இத்தாவரத்தின் அனைத்துப் பகுதியும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. உடலின் வலு அதிகரிக்கவும் வைரசு நோய்க்குப்பின் உடல் தேறவும் உதவுகிறது. மூட்டு வலி போக்குகிறது. சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுகிறது. புண்கள் ஆறுதலின் பொழுது திசுக்களைச் இது சரிசெய்ய ஆக்ஸிகரண எதிர்ப் பொருள்களின் அளவு அதிகரிக்கச் செய்கிறது. இதே பொருள் இனப்பெருக்க ஆற்றலைக் குறைக்க்க் கூடுமெனவும் கருதப்படுகிறது. இந்தியாவில் தொழுநோய், தோல் புண்கள் மற்றும் தோல் நோய்களை சரிபடுத்தப் பயன்பட்டது. இத்தாவரத்தினை சக்தியளிக்கும் டானிக் மற்றும் நினைவாற்றல் மற்றும் கவனத்தையும் ஈடுபாட்டினையும் அதிகரிக்கப் பயன்படுத்தினர். பசுமை அலைகள் குழந்தைகளின் வயிற்றுப் போக்கினைத் தடுக்கப் பயன்படுத்தப்பட்டது. அடி வயிற்றுக் கோளாறுகள், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஆகியவற்றினைக் குணப்படுத்த உதவுகிறது. இதிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட எண்ணெய் பொருள் முடி வளர்தலை ஊக்குவித்து தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்ணை ஆற்ற சூரணமாகவும் கட்டுப்போடவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.