கோவைக்காய்

முனைவர் ம.செகதீசன்,

பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

வழக்குப் பெயர் : கோவை

தாவரவியல் பெயர் : Coccinia indica W.

குடும்பம் : Cucurbcitaceae

வளரும் இடம் : தமிழகம் முழுவதும்.

பயன்படும் பாகம் : இலை, காய், கிழங்கு.

மருத்துவப் பயன்கள் : உடல் சூடு, கண் எரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவற்றிற்கு இதன் இலை பயன்படுத்தப் படுகின்றது.
மதுமேகத்தைத் தடுக்கும் ஆற்றல் இதன் காய்களுக்கு உண்டு.
ஆஸ்துமா, இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவற்றைத் தீர்க்கும் குணம் கோவை கிழங்குச்சாறுக்கு உண்டு.