மருத மரம்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

இதற்கு ஆற்று மருது, நீர் மருது, வெண் மருது என்னும் பெயர்கள் உண்டு.

தாவரவியல் பெயர் : டெர்மினேலியா அர்ஜீனா (Terminalia arjuna Roxb Wight & Arn.)
குடும்பம் : காம்ப்ர்டேசி (Combretaceae)

வளரியல்பு :
மருத மரம்

30-60 மீ உயரம் வளரக்கூடிய மரமாகும். அடிமரத்தின் சுற்றளவு 7-10 மீ இருக்கும். மரப்பட்டை வெண்சாம்பல் நிறம் கொண்டிருக்கும். இலைக்காம்பு 2 செ.மீ நீளம் இருக்கும்.

பயன்கள் :
மருத விதை

இதன் பட்டை குடல் புண்ணிற்குப் பயன்படுகிறது. மற்றும் பல் சொத்தைக்குப் பயன்படுகிறது.

ஒற்றைத் தலைவலி, தசைப் பிடிப்பு, உடல் பருமன் போன்றவற்றிற்கும் இம்மரம் பயன்படுகிறது.

மஞ்சள் காமாலை, காசநோய் போன்றவற்றிற்கும் இதன் மரம் பயன்படுகிறது.