வேப்ப மரம்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.


வேப்பமரம்

இந்தியாவில் மட்டும் 25 மில்லியன் மரங்கள் உள்ளதாக ஆய்வில் கிடைத்த செய்தி ஆகும். இதில் 32 க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனிதனை வாழவைக்கும் அமுத சுரபியாகும். தாவரவியல் பெயர் அசாடிரக்டா இன்டிகா (AZADIRACHTA INDICA Adv.Juss ). தாவரக்குடும்பம் மீலியேசி (Meliaceae).

வளரியல்பு :

இந்தியா முழுவதும் பரவி காணப்படும். ஜூன் – ஜூலையில் கனிகள் உருவாகும். மார்ச்சு – ஏப்ரலில் பூக்கள் பூக்கும். பல்லாண்டு வாழும் மரம் இது. கருவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல வகைகள் இருந்தாலும், கருவேம்பையே பொதுவாக வேம்பு எனக் கூறப்படுகிறது. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரையிலும் முதிர்ந்து வளரும் தன்மைக் கொண்டது.

பயன்கள் :

இதன் எண்ணெய் உணவுக்கும், விளக்கெரிக்கவும், தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலை முக்கியமாகக் கொசு விரட்டியாகப் பயன்படுகிறது. இயற்கை பூச்சுக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. இலையை அரைத்துக் களிம்பாக்கிப் புண்களை ஆற்றவும், கட்டி வீக்கங்களைக் கரைக்கவும் வைத்துக் கட்டுவார்கள். பட்டை ஜுரத்தைப் போக்கவும் பயன்படுகிறது. எண்ணெய் மூலம், பலவீனம், கருத்தடை, தோல்நோய்கள், குஷ்டம், மூட்டுவலி, பொடுகு, புண், அம்மை, புற்றுநோய், பாம்புக்கடி ஆகிய பிரச்சினைகளுக்குப் பயன்படுகிறது.

நோக்கீட்டு நூல் :

‘வளம் தரும் மரங்கள்’ பி.எஸ்.மணி மற்றும் கமலா நாகராஜன், நியு செஙசுரி புக் ஹவுஸ், சென்னை (1992).