அரசலாபுரம் அமைவிடம் : விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம்.
கல்வெட்டுப்பாடம் 1. முகையுரு மேற்சேரி செய்தி: முகையுருவைச் சேர்ந்த மேற்சேரிக்காகச் சண்டையிட்டு வெற்றிப்பெற்ற பின் இக்கோழிக்கு உருவம் செதுக்கப்பெற்றுள்ளது (கருக்கிய - செதுக்கப்பட்ட). சிறப்பு: தொன்மைத் தமிழகத்தில் காளைச் சண்டையைப் போல் கோழிச் சண்டையும் நிகழ்ந்துள்ளதை விளக்கும் முதல் கல்வெட்டு. |