அழகர் கோயில்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை



அழகர் என்ற விஷ்ணுவிற்கான கோயிலைக் கொண்டது அழகர் கோயில்.

அமைவிடம்

இது மதுரைக்கு 12கி.மீ வடக்கே அமைந்துள்ளது.

சிறப்பு

சுந்தரராஜன் என்ற கள்ளழகரின் கோவில், அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ‘பரமசுவாமி’ என்றழைக்கப்படும் கள்ளழகர் தம் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்காக வைகையாற்றில் இறங்கிவரும் நிகழ்வு இன்றும் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சுந்தரவல்லி நாச்சியார், ஆண்டாள், சுதர்சனன் மற்றும் யோக நரசிம்மருக்குத் தனி சன்னதிகள் உள்ளன.

அழகர்கோயிலின் பாதுகாவலராக விளங்கும் கருப்பண்ண சுவாமியின் திருக்கோயிலை 18 படிகளைக் கடந்து அடையலாம்.

இங்குள்ள கள்ளழகர் கோயிலில் 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுகளும், விஜயநகர நாயக்கர் கல்வெட்டுகளும் உள்ளன. கோயில் நாயக்கர் காலத்தில் புணரமைக்கப்பட்டதால் சில பழங்காலக் கல்வெட்டுக்கள் இடம் மாறி உள்ளன. மேலும், இப்பகுதி சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியரின் ஊராக ‘இரணியமுட்டம்’ என்றும் கருதப்படுகின்றது. இங்கு பல தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் ஒன்று “மதிரை” என்று குறிப்பிடுகின்றது. இங்கு உப்பு வணிகன், மதிரை பொன்கொல்லன், கொழு வணிகன், அறுவை வணிகன் பற்றிய குறிப்புகள் உள்ளன.