முதலாம் சந்திரகுப்தர் காசுகள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

சந்திரகுப்தர் குப்த வம்சத்தின் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவராவார். குப்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் இவரது தந்தை கடோத்கஜர் என்று கருதினாலும் இவரே இவ்வம்சத்தைத் தோற்றுவித்தார் என்பதே பெரும்பாலான வரலாற்றறிஞர்கள் கருத்தாகும்.

காலம் :: பொ.ஆ 320

முதலாம் சந்திரகுப்தர் அரசருடன் ராணியின் உருவமும் பொறிக்கப்பெற்றுள்ள தங்கக் காசுகளை வெளியிட்டுள்ளார். இவ்விதம் அரசருடன் ராணியின் உருவம் பொறிக்கப்பெற்ற காசுகளை மட்டுமே இவர் வெளியிட்டுள்ளார் என்று கருத்தும் உள்ளது ஆனால் முதலாம் சமுத்ரகுப்தர் தமது தாய் தந்தையின் நினைவாக இக்காசுகளை வெளியிட்டுள்ளார் என்றும் கருதுகின்றனர். ஆனால் இக்காசுகளில் சந்திர குப்தர் என்ற பெயருடன் அவரது ராணி குமாரதேவியின் பெயரும் இடம்பெறுவதால் இதை முதலாம் சந்திரகுப்தரது காசுகளாவே கொள்ளலாம்.

உலோகம்: தங்கம், வெள்ளி

எழுத்து்:பிராமி

மொழி்:சமஸ்கிருதம்