திருக்களம்பூர்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

திருக்குறும்பூர் என்றழைக்கப்பட்ட திருக்களம்பூரில் பிற்காலப் பாண்டியர்களால் எழுப்பப்பட்ட சிவன் கோயில் உள்ளது.

அமைவிடம்

இது புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது.

சிறப்பு

இங்கு அமைந்துள்ள கதலிவனேஸ்வரர் கோவில் எனும் சிவன் கோயில் பிற்காலப் பாண்டியர்களால் (12 – 13 ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. இங்கு 10 – 11ஆம் நூற்றாண்டுகளில் ஜேஷ்டா (சேட்டை) வழிபாடு நடைபெற்றதாகத் தெரிக்கிறது. இங்குள்ள கோவிலில் பல அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்கு 12 கல்வெட்டுகள் உள்ளன. சடையவர்மன், முதலாம் குலோத்துங்கன், சடையவர்மன் இரண்டாம் வீரபாண்டியன், விஜயநகர மன்னன் இம்மடி நரசிம்மன் ஆகியோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

இக்கோயிலின் அருகே குலசேகரஈச்வரமுடையார் என்னும் சிவன் கோவில் உள்ளது.

மேற்கோள் நூல்

ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, சென்னை, அரசு அருங்காட்சியகம்