கப்பலவாடி

 

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை


கப்பலவாடி ஒரு தொல் பழங்காலத் தொல்லியல் இடமாகும்.

அமைவிடம்

இந்த ஊர் கிருஷ்ணகிரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தொல்லியல் சான்றுகள்

இப்பகுதியில் முதலில் கற்காலக் கருவிகளை பி.நரசிம்மையா கண்டுபிடித்தார். அவர் இங்கு கிடைத்த கருவிகள் புதிய கற்காலத்திற்கு முந்தியவையாக இருக்கலாம் என்று கருதினார். இக்கருவிகள் கீழைப்பழங்கற்காலம், இடைப்பழங் கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். இங்கு கைக்கோடரிகள், வெட்டிகள், சுரண்டிகள் ஆகிய கருவிகள் கிடைக்கின்றன.

மேற்கோள் நூல்

தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி). 2005 தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.