|
மெய்க்கீர்த்தி முனைவர் மா.பவானி மெய்க்கீர்த்தி என்பது அரசர்களின் புகழ் அதாவது கொடை மற்றும் போர்ச் சிறப்புக்கள் பற்றிக் கூறும் பாடல் வகையாகும். பெரும்பாலும் இவை அகவற்பாவில் அமைந்திருக்கும். மெய்க்கீர்த்தி என்பதற்கு அபிதாபசிந்தாமணி "சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுளால் குல முறையில் செய்த கீர்த்தியைக் கூறுவது" என்று குறிப்பிடுகிறது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி "அரசனது புகழ் வரலாறுகளைக் கூறி, அவன் தேவியுடன் வாழ்க என்று வாழ்த்தி, அவன் இயற்பெயருடன் ஆட்சி ஆண்டைக் கூறும் பாடல் வகை " என்று கூறுகிறது. கல்வெட்டின் ஓரு பகுதியாக்க் குறிப்பாகத் தொடக்கத்தில் மெய்க்கீர்த்தி காணப்படும். வட மொழியில் இவை பிரஸஸ்தி என்று அழைக்கப்பெறுகிறது. இந்தியாவில் குப்தர் வம்ச அரசர்கள் காலந்தொட்டு பிரஸஸ்தி வழக்கிலிருந்துள்ளது. முதலாம் சமுத்திர குப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு முழுக்க முழுக்க இவரது புகழையும் போர்ச் சிறப்புக்களையும் பாடும் ஒரு பிரஸஸ்தி கல்வெட்டாகும். இதை எழுதியவர் ஹரிசேனர் என்ற புலவர் ஆவார். தமிழகத்தைப் பொறுத்தவரை சோழ மன்னன் முதலாம் இராஜராஜன் காலந்தொட்டே கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தி எழுதும் வழக்கம் வந்துள்ளதாகப் பரவலான கருத்து உள்ளது. ஆனால், இவர்களுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பல்லவர்களது செப்பேடுகளில் பெரும்பாலும் பல்லவ மன்னர்களின் குலத்தின் சிறப்பும் அவர்கள் படையெடுத்து வெற்றி பெற்ற ஊர்களின் பெயர்களும் சமஸ்கிருதத்தில் கூறப்பெறுகின்றன. அதற்குச் சிறிது காலம் முற்பட்ட பொ.ஆ7, 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியரது கல்வெட்டுக்களிலும் பாண்டியர் பல ஹிரண்யகர்ப்ப, கோ ஸகஸ்ர யாகங்களையும் அக்ரஹாரம் பல செய்த அபரிமிதமான செயல்களைச் செய்தவர்கள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மேலும் முற்காலப் பாண்டியர் செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியில் மெய்க்கீர்த்திகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுடன் வடமொழியில் அமைந்த பிரசஸ்திப் பகுதிகளும் காணப்படுகின்றன. முதலாம் இராஜராஜன் காலத்துக்கு முற்பட்ட மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் சிறுசிறு தொடர்களாக இருந்தன. அவை பின்வருமாறு "தெள்ளாற்று
எறிந்து இராச்சியமுங் கொண்ட" - நந்திவர்ம பல்லவன்
மெய்கீர்த்திகளின் அமைவு ஒவ்வொரு அரசர்களின் கல்வெட்டுக்களிலும் மெய்க்கீர்த்தி ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும் . காட்டாக, சோழ மன்னர் முதலாம் இராசராசனின் மெய்க்கீர்த்தி 1. திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தொடக்கத்தில் மன்னர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட மெய்க்கீர்த்தி மரபு பின்னர் குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள், வணிகக்குழுக்கள், வேளாளர் போன்றோரது கல்வெட்டுக்களிலும் இடம்பெறத் தொடங்குகிறது. |