பேரையூர்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

சோழர் காலச் சிவன் கோவிலான நாகநாதசாமி கோவில் உள்ள இடம் பேரையூராகும்.

அமைவிடம்

இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சிறப்பு்

இங்குள்ள நாகநாதசாமி கோயில் இராசேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று இங்குள்ள கல்வெட்டுகள் வழியாக அறியலாம். பின்னர், பிற்காலப் பாண்டிய மன்னர்களால் 12–13 நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு அம்மன் சன்னதி விஜயநகர மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கே சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், பல்லவராயர்கள் மற்றும் தொண்டைமான் மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

மேற்கோள் நூல்

ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, சென்னை, அரசு அருங்காட்சியகம்