பெருங்கடம்பனூர் பெருங்கடம்பனூர் ஒரு வரலாற்றுச் சிறப்பு பெற்ற ஊராகும். அமைவிடம் இவ்வூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திற்கு மேற்கே 4 கி.மீ தொலைவில் உள்ளது. தொல்லியல் சான்றுகள் இந்த ஊரில் பெருங்கற்கால/இரும்புக்கால வாழ்விடமும், ஈமச் சின்னங்களும் கிடைத்துள்ளன. இங்கு ரூலட்டட் மற்றும் வடஇந்திய பானை வகையின் துண்டுகள் கிடைத்துள்ளன. இந்தியாவின் பிற பகுதிகளுடன், இவ்வூர் தொடர்பு கொண்டிருந்ததென்பதை இது காட்டுகிறது. இங்கு ஈமத் தாழிகள் காணப்படுகின்றன. இவ்வூரைப் பற்றிய குறிப்பு முதலாம் இராசராசனின் கல்வெட்டுகளில் உள்ளன. இவ்வூர் இடைக்காலத்தில் ஷத்திரிய சிகாமணி வளநாட்டில் உள்ள அளநாட்டில் இருந்தது. மேற்கோள் நூல் V.Selvakumar 2008
Sangam Age Settlements of Kaviri Natu. CICT Project Report. |