சங்ககாலம்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

சங்ககாலம் என்பது தமிழக வரலாற்றில் சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்ட காலத்தைக் குறிக்கும். இது வரலாற்றுத் துவக்கக் காலம் எனத் தொல்லியியலாளர்களால் அழைக்கப்படுகின்றது. இக்காலத்தில்தான் தமிழகத்தில் எழுத்து (தமிழ் பிராமி, தமிழி) மற்றும் காசுகள் பயன்படுத்தப்பட்டன. நகரங்கள், துறைமுகப்பட்டினங்கள் தோன்றின. இது செவ்வியக் காலம் (Classical Period) எனவும் அழைக்கப் பெறுகிறது.

காலம்

இக்காலம் பொ.ஆ.மு. 300 லிருந்து பொ.ஆ. 300 வரையான காலம் என்று கருதப்படுகின்றது. அண்மைக்காலத்தில் நடத்தப்பெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் வரலாற்றுக் காலம் பொ.ஆ. 500இல் தோன்யிறிருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது.

ஆய்வுச் சான்றுகள்

இக்காலத்திற்குக் கீழ்க்கண்ட ஆய்வுச் சான்றுகள் உள்ளன.

தொல்லியல்

1. பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்

2. தொல்லியல் வாழ்விடங்கள்

3. நடுகற்கள் 4. காசுகள்

இலக்கியம்

1. சங்கத் தமிழ் இலக்கியம்

2. பெரிப்பளஸ், டாலமி, பிளினி குறிப்புகள், மகாவம்சம்

கல்வெட்டியல்

1. கல்வெட்டுகள் (தமிழ் பிராமி/தமிழி, அசோகன் பிராமி)

2. மட்கல எழுத்துப்பொறிப்புகள்

3. காசுகளில் எழுத்துப்பொறிப்புகள்

மேற்கோள் நூல்

இராசன், கா. 2003. தொல்லியல் நோக்கில் சங்ககாலம். உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்.