திருவதிக்குன்னம்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

திருவதிக்குன்னம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும்.

அமைவிடம்

இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில் உள்ளது. இவ்வூர் விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் சுமார் 23 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரின் அருகில் மண்டகப்பட்டு, எண்ணாயிரம், எசாலம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர்கள் உள்ளன.

தொல்லியல் சிறப்புகள்

இவ்வூருக்குக் கிழக்கே ஓர் அழகிய மலை உள்ளது.
திருவதிக்குன்னம் மலையின் தோற்றம்

அம்மலையின் வடக்கே உள்ள தோட்டத்தில் பெருங்கற்கால/இரும்புக்கால வாழ்விடம் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இங்கு கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள், கருப்புப் பானை ஓடுகள் மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள் கிடைக்கின்றன.

இங்கு பல்லவர், சோழர் மற்றும் விசயநகரக் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.

மலைக் கோவில்
திருவதிக்குன்னம் மலைக்கோவில்

இங்குள்ள மலையின் மீது ஓர் அழகிய சோழர் காலக் கோயில் உள்ளது.

இக்கோயிலில் இரண்டாம் இராசாதிராசனின் கல்வெட்டு உள்ளது. இக்கோயில் தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது.
திருவதிக்குன்னம் மலைக்கோவில் பக்கவாட்டுத்தோற்றம்

இவ்வூரின் மையப்பகுதியில் சேட்டை (ஜேஷ்பாதேவி) எனப்படும் பெண் தெய்வச் சிற்பம் காணப்படுகின்றது.
திருவதிக்குன்னம் மலைக்கோவிலின் தரைப்படம்

இது பல்லவர்காலச் சிற்பவமைதியில் உள்ளது.
திருவதிக்குன்னம் சேட்டை சிற்பம்