தொழிற்கூடம்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

தொழிற்கூடம் என்பது ஆங்கிலத்தில் “Industry” என்று அழைக்கப்படுகின்றது. பழங்கால மக்கள் மண் மற்றும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி தங்களது வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைச் செய்தனர். இவை செய்பொருட்கள் எனப்படுகின்றன, Artifacts, அதாவது செயற்கையாகச் செய்யப்பட்ட ( Artificially made ) பொருட்கள்.

வரையறை

கைவினைப்பொருட்கள், கற்கருவிகள், மணிகள், அணிகலன்கள் மற்றும் பிற பொருள்கள் செய்யக்கூடிய முறைமை. தொழிற்கூடம் எனப்படுகின்றது.

தமிழகத்தில் பழங்காலத்திலிருந்து பல தொழிற்கூடங்கள் செயல்பட்டு வந்துள்ளன. பழங்கற்காலத்தில் அச்சூலியன் அல்லது சென்னைத் தொழிற்கூடத்தில் செய்த கற்கருவிகள் சென்னைக்கு அருகே கிடைக்கின்றன. இரும்புக் காலத்தில் இரும்புத் தொழிற்கூடம் சிறந்து விளங்கியது.

சங்கு வளையல் தொழிற்கூடம்

சங்ககால வாழ்விடங்களில் சங்கு வளையல்கள் செய்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. முழுமையான சங்குகள், அறுத்து எடுக்கப்பட்ட சங்கு வளையல்களின் கழிவுகள் மற்றும் உடைந்த சங்கு வளையல்கள் கிடைக்கின்றன. இவை சங்குத் தொழிற்கூடம் செயல்பட்டது என்பதை உணர்த்துகின்றன. அரிக்கமேடு, அழகன்குளம், கொற்கை ஆகிய இடங்களில் இதற்கானச் சான்றுகள் காணப்படுகின்றன.

பிற தொழிற்கூடங்கள்

இதுபோல மணிகள் செய்யும் தொழிற்கூடம், கண்ணாடி (பளிங்கு), மணி, வளையல் தொழிற்கூடம் இரும்புத் தொழிற்கூடம், பானைத் தொழிற்கூடங்கள், செப்புப் படிமங்கள் செய்யும் தொழிற்கூடங்கள், தமிழகத்தில் செயல்பட்டு வந்துள்ளன.

இத்தொழிற்கூடங்களின் அடிப்படையில் தொல்லியல் பண்பாடுகள் வரையறுக்கப்படுகின்றன.

மேற்கோள் நூல்

Renfrew C. and Paul Bahn. Archaeology: Theory and Methods.