டிரபீசியக் கருவி்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

டிரபீசிய வடிவத்தில் அமைந்த நுண்கற்கருவியாகும் இது.

நுண்கற் கருவிகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன: அ) ஜியோமிதி (geometric) வடிவமுடையவை மற்றும் ஆ) ஜியோமிதி வடிவமற்றவை (non-geometric). டிரபீசியக் கருவி ஜியோமிதி வடிவமுடைய வகையில் அடங்கும்.

டிரபீசியக் கருவி

டிரபீசியக் கருவிகள் மரக்குச்சிகளிலும், எலும்புகளிலும் பதித்து கதிர் அறுவாள் போலப் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் அகன்ற முனையில், மிக நுண்ணிய, செதில்கள் எடுக்கப்பட்டு வெட்டும் முனை உருவாக்கப்படுகின்றது. அதன் குறுகிய, தடித்த எதிர் முனை கைப்பிடிகளில் பதிப்பதற்குப் பன்படுத்தப்படுகின்றது.

இக்கருவிகள் இந்தியாவின் தொல்பழங்கால இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.